புதன், 8 ஜூலை, 2020

பார்ப்பனர் குலதெய்வம் வழிபாடு உண்டு

aathi1956 aathi1956@gmail.com

வியா., 23 ஆக., 2018, முற்பகல் 11:23
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தமிழ் பார்ப்பனர்களுக்கு குலதெய்வங்கள் இல்லை...எனவே அவர்கள் தமிழர்கள் அல்ல என்று திராவிட இயக்கத்தவர் கூறி வருவது உண்மையா???
.# சென்றவாரத்தில் ஒரு நாள் என்னுடன் கல்லூரியில் படித்த பார்ப்பன சாதியைச் சேர்ந்த எனது நண்பன் ஒருவன் ஹைதராபாத் நகரிலிருந்து தன் குடும்பத்துடன் மதுரை சமயநல்லூரிலிருக்கும் தனது குலதெய்வத்தை வழிபடுவதற்காக வந்திருந்தான். அதன்படி வழிபட்டுவிட்டு ஹைதராபாத் திரும்பிச் செல்லும் முன்னர் என் வீட்டிற்கு வருகை தந்தான்....அப்போது அவன் கூறித்தான் இந்த விபரம் எனக்குத்
தெரியும்…
# இது குறித்து கள ஆய்வு செய்வதற்காக மதுரை சமயநல்லூர் அக்கிரகாரத் தெருவில் அமைந்துள்ள அந்த வீரபத்திர சாமி கோயிலுக்கு நானும் நண்பர் # காளிங்கன் என்பவரும் இன்று நேரில் சென்றோம்... அங்குள்ள சாமியை குலசாமியாக பார்ப்பனர்,பண்டாரம், வண்ணார், பறையர், பிள்ளைமார்,சேர்வை ஆகியோர் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்... அதற்கு பூசாரி ஒரு பண்டாரம் ஆவார்... பண்டாரம் சாதியினர் பூசாரியாக வும், பார்ப்பணர்கள் பக்தர்களாகவும் ஆண்டாண்டு காலமாக வழிபடுகின்றனர்….
# இந்தக் கோயில் மற்றும் தமிழ் பார்ப்பனர்கள் வழிபடும் குலதெய்வங்கள் பற்றிய முழுப்பதிவு இன்னும் மூன்று நாட்களில்...
# திராவிடப் பொய்களை உடைப்போம்…
காளிங்கன் Aathimoola Perumal Prakash
இருளாண்டி சாந்தி கதிர் நிலவன்
விசுவநாதன் கரிகாலன் Kokilan Sachithananthan பேராசிரியர்.தா.மணி

காளிங்கன்
ஆம்... பண்டார சாதிப் பூசாரி பூசிவிடும் விபூதிக்காக பார்ப்பனர்கள் வரிசையில் நிற்பது ஓர் ஆச்சரியமான செய்திதான்.

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழர் ஓர்மையை வலுப்படுத்தும் குல தெய்வ வழிபாடு

Vetri Selvan
முற்றிலும் உண்மையே...
என் வீட்டின் அருகில் 85 வயது பிராமணர் உள்ளார்..
அவருக்கு முனிஸ்வரன் குல தெய்வம் என்று கூறி உள்ளார்....
வீடீயோ பதிவு வேண்டுமெனில் முயற்சி செய்கின்றேன்..

சுப்பிரமணிய சிவா
சகோ, எங்கள் ஊரில் ஒரு வீரன் கோயில் உள்ளது.. அது பறையர்களுக்கும் படையாட்சிக்கும், மற்றும் பல சாதிகளுக்கும் குலதெய்வமாக உள்ளதுு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பார்ப்பனர்கள் வழிபடும் குலதெய்வங்கள் பற்றிய தகவல்கள் கூறுங்கள்...

Bala Murugan
பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இது பல பார்ப்பண கோத்திரங்களுக்கு குலதெய்வமாக உள்ளது. இங்கு உடையார் இனத்தவரே பூசாரிகளாக இருக்கின்றனர். காஞ்சி பெரியவரின் குலதெய்வமும் இதுதான். பார்ப்பண அலப்பறைகள் இங்கு கிடையாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக