திங்கள், 16 மார்ச், 2020

தோழர் ஜீவானந்தம் மண்மீட்பு ஆதரவு இனப்பற்று 1956

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 3:02
பெறுநர்: எனக்கு

# தமிழர்_தலைமைகள்
மொழிவழிமாநிலப் பிரிவினையின் போது ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக் கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.
 "உண்மையான கம்யூனிஸ்ட்டு இப்படி பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது"
.என்று அறிக்கை வெளியிட்டார். இப்படிச் சொன்ன துணிவு மிக்க தோழர் ப.ஜீவானந்தத்திற்கு இன்று பிறந்தநாள்.

“இந்த அவையில் கன்னடர் இருக்கிறார்கள், தெலுங்கர் இருக்கிறார்கள், கேரள தேசத்தினர் இருக்கிறார்கள், ஆனால் நவம்பர் முதல் தமிழர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” -- 1956 மொழிவழி மாநிலப்பிரிவினையின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு ப.ஜீவானந்தம் பேரவையில் பேசியது.
Mathevan Pathmanaban

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக