திங்கள், 16 மார்ச், 2020

ஆசீவகம் உரையாடல் இணையம் நூல் புத்தகம் மதம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 4:24
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# ஆசீவகம்...
# சங்ககாலங்களில் தமிழகத்தில் "ஆசீவகம்" என்ற சமயம் இருந்தது.
#ஆசீவகம், # சமணம் (ஜைனம்) மற்றும்
# புத்தம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் நிலவிய வைதீக எதிர்ப்பு அதாவது அவைதீக சமயங்கள் ஆகும்.
# இந்த ஆசீவகம் தான் ஜைனம் என்று கூறுவோரும் உண்டு...
# ஆனால் ஆசீவகத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படும் "மாக்காலி கோசாலா" என்பவர் புத்தர் மற்றும் மகாவீரரின் சமகாலத்தவர் ஆவார்.
# இவரைப் பற்றியும், இவர் தோற்றுவித்த ஆசீவகம் பற்றிய ஆதாரங்களை பலரும் பாளி மொழியில் எழுதப்பட்ட புத்த சமயநூல்களிலும், ஜைன நூல்களிலுமே தேடுகின்றனர்... ஆனால் ஆசீவகத்தின் வேர் தமிழ் நாட்டிலே தான் இருந்தது என்கிறார் ஏ.எல்.பாஷம் என்ற வரலாற்று ஆய்வாளர்..
#ஆசீவகம்...
# பொருள் ...
# ஆசு +ஈவு+அகம்.
#ஆசு = குற்றம், குறை (ஆசு+இரியர் = ஆசிரியர்... அதாவது குறைகளைக் களைபவர்).
# ஈவு = தீர்வு
# அகம் = இடம், வீடு
#ஆசு+ஈவு+அகம்.=
# அதாவது...குறைகளைக் கூறித் தீர்வு காணும் இடம். அதுவே ஆசீவகத் துறவிகளின் படுக்கைகள் (சமணர்)...
ஆசீவகத் துறவிகளே அக்காலங்களில் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறியுள்ளனர்.
அதனாலேயே அவர்கள் போதனைக் கூடங்கள் பள்ளிகள் எனப்பட்டன்.அதில
ிருந்தே ஆசிரியர் என்ற பெயரும் தோன்றியிருக்கலாம்...

காளிங்கன்
சரி ... மற்சலி கோசலருக்கு முன்னே தமிழர்களுக்கு ஒன்றுமில்லையா?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 1:45 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தொல்காப்பியத்திலேயே ஆசீவகம் பற்றிய குறிப்புகள் உள்ளன...ஏ.எல்.ப
ாஷத்தின் ஆசீவகம் பற்றிய ஆய்வு புத்தகத்தில் இது குறித்து அவர் விளக்கியுள்ளார் என்று கேள்விப்பட்டேன்... அந்தப் புத்தகம் ரு.650...நீங்கள் வாங்கினால் நானும் படித்துக் கொள்வேன்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:04 மணிக்குு

காளிங்கன்
ஐயா . . தொல் தமிழ் மரபு சமணம்
1) ஆசீவகம் (மற்கலி)
2) சைனம் (மகாவீரர் )
3) பவுத்தம் (கெளதமர்)
என்று 3 ஆத மெய்யியல் வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ளதாக தெரிகிறது
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:13 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
மங்கலி கோசலா என்றும் இவர் கூறப்படுகிறார்... அதாவது மங்கலி என்பதும் தமிழ்...கோசலா= கோ சாலை அதாவது மாட்டுக் கொட்டகை... இதுவும் தமிழ்...ஆக மங்கலி கோசலர் ஒரு தமிழ்ப் பெயர் !!!
காளிங்கன்
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஆக. 18 அன்று PM 2:39 மணிக்கு

காளிங்கன்
பாண்டிய ராசன் சட்டத்தரணி
நான் எங்கே மறுத்தேன்?
நான் சொல்வது தமிழர்களுக்கு ஆசீவகத்திற்கு முன்பு இருந்தது சமணம் தான். ஏனென்றால் மற்கலியும் மகாவீரரும் 6 ஆண்டுகள் இணைந்திருந்து மற்கலி ஆசீவகம் என்றும் மகாவீரர் சைனம் என்றும் பிரிந்தார்கள் என்றால் இருவரும் ஒருங்கிருந்தது எந்த சமயம்? அது தான் சமணம். மூல மதம்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:47 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
சமணத்தின் 24 ஆம் தீர்த்தங்கரரே மங்கலி கோசலர் என்கின்றனர்.. இவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் வர்த்தமான மகாவீரர் எனப்படுகிறது...
அப்படியென்றால் மங்கலி கோசலரும் அதற்கு முன்பிருந்த 23 தீர்த்தங்கரரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்கின்றீர்களா?... அப்படியென்றால் மகாவீரர் சமணரில்லையா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:54 மணிக்கு

காளிங்கன்
பாண்டிய ராசன் சட்டத்தரணி
சைனம், சமணம் அல்ல.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 3:16 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
புரிகிறது

விசுவநாதன் கரிகாலன்
ஐயா வைதீகம், அவைதீகம் சற்று விளக்கவும். தங்கள் கூற்றுப்படி பாா்த்தால் வைதீக எதிா்ப்பில் அவைதீகம் வந்ததாக கூறுகிறோ்கள். முதலில் வந்தது வைதீகமா? சந்தேகம் தான் ஐயா.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 1:58 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
அப்படித்தான் தோன்றுகிறது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:40 மணிக்கு

தமிழ்க்கனல்
பாண்டிய ராசன் சட்டத்தரணி ...அப்படி இருக்க வாய்ப்பில்லை ஐயா.....
கடவுள் என்பதை நிலைநாட்டவே வைதீகம் என்ற கருத்தியல் தோன்றியது.....
ஆனால் கடவுள் என்ற கருத்தியல் தோற்றத்திற்கு முன்பே ....மக்கள் வாழ்க்கை முறை சிறப்பாக அமையத்தகுந்த கருத்துக்களை வழங்கியும்....
அவர்கள் மனம் பக்குவப்பட அதாவது நன்கு மனம் சமைக்கப்பட தோன்றியவையே சமயங்கள்.
இவ்வாறான நிலையில் எந்த சமயமும் கடவுள் பற்றி பேச வேண்டிய தேவை எழவே இல்லை...
பின் வைதிகம் தோன்றிய பின் அது மக்களை தவறாக வழிநடத்தியதால் அவற்றை எதிர்த்த சமயங்கள் அவைதீகம் ஆயின

Vetri Selvan
சிவன் முதல் ஆசிவக துறவி என்பது???
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:01 மணிக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
முருகனும்,, பிள்ளையாரும் கூட ஆசீவகத்துறவிகள் எனப்படுகிறது... சித்தர்கள் ஆசீவகர்கள் என்கின்றனர் சிலர்... ஐயனார், சாஸ்தா போன்ற கடவுளர்கள் ஆசீவகக் கடவுள்கள் என்கின்றனர் சிலர்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:42 மணிக்கு
Vetri Selvan
பிள்ளையார் வாதாபியிலிருந்த
ு(மும்பை) சிறுதொண்ட நாயனாரால் தமிழ்நாட்டீற்கு இறக்குமதி செய்யப்பட்டது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 4:05 மணிக்கு
Vetri Selvan
ஐ மரியாதை க்குரிய வார்த்தை அணார் -அண்ணார்
மரியாதைக்கு உரிய பெரியவர்
ஐயனார்.

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2018/
01/1_31.html
ஆசிவகம் பற்றி நூல் அமணர் சமணர் வேறுபாடு பிள்ளையார் வேர்ச்சொல் ஈவு 1
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · ஆக. 18 அன்று PM 2:19 மணிக்கு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_509.html?m=0
ஆசீவகம் மதம் ஐயனார் மெய்யியல் தமிழகம் ஈழம் தொடர்பு
fbtamildata.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · ஆக. 18 அன்று PM 2:20 மணிக்கு

Aathimoola Perumal Prakash
search in google ஆசீவகம் fbtamildata
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · ஆக. 18 அன்று PM 2:23 மணிக்கு

Udaya Kumar
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய இந்திய தத்துவ ஞானத்தில் நிலைத்தனவும் அழிந்தனவும் என்ற நூலை நீங்கள் படித்தால் உங்களது பல்வேறு குழப்பங்களுக்கு விடைகிடைக்குமென நம்புகிறேன் நண்பரே

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழில் மொழிபெயர்க்கப்ப
ட்டுள்ளதா?... இல்லையெனில் புத்தகத்தின் ஆங்கிலப் பெயரைக் குறிப்பிடுங்கள்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:56 மணிக்குு

Udaya Kumar
பாண்டிய ராசன் சட்டத்தரணி ஆம்.

பேராசிரியர்.தா.மணி
ஆசீவகம் பற்றி பேரா.நெடுஞ்செழியன் விரிவான ஆய்வுநூலை
வெளியிட்டுள்ளார்!

பாண்டிய ராசன் சட்டத்தரணி
இல்லை...பாலி, பிராகிருதம், கிரந்தம் ஆகியவை எழுத்துருக்கள் மட்டுமே அமைந்த செயற்கை மொழிகள்...இவை இந்தியா முழுவதும் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்களை எழுதுவதற்காக உருவாக்கப்பட்டவ
ை....இவற்றை உருவாக்கியவர்கள் தமிழர்கள்... ஏனென்றால் மெய்யியல் அனைத்தும் தமிழ்நாட்டில் உருவானவை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:10 மணிக்கு

இருளாண்டி சாந்தி
இந்த குழப்பமான பதில் தேவை இல்லை...? தமிழ், பாலி, பிராகிருதம் தமிழர்களின் மொழிகளா...?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:15 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
இல்லை... ஆனால் தமிழர்களின் பரப்புரத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட மொழிகள்...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:17 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட வடநாட்டில் பல கல்வெட்டுகள் செப்பேடுகள் கண்டுபிடிக்கப்ப
ட்டன.இதனை ஆராய்ந்த ஒரு ஆங்கில ஆய்வாளர் இந்தியாவில் கண்டெடுத்த முதல் எழுத்து வடிவம் அது என்பதால் "பிரம்மன்" என்பதைக் குறிக்கும் வகையில் அதற்கு பிராமி என்று பெயரிட்டார்.அது கி.மு.2 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு....
ஆனால் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் அதே எழுத்துவடிவங்களில் சில மாறுதல்களுடன் எழுதப்பட்ட கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் கண்டறியப்பட்டன.அதற்கு தமிழ் பிராமி என்று பெயர் வைத்தனர்...அதை ஒரு ஐயர் தமிழறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.. முந்தைய எழுத்திற்கு பிந்தைய பெயர் எவ்வாறு வைக்க இயலும்...எனவே இவை தமிழர் பயன்படுத்திய மற்றொரு எழுத்துவடிவம் ஆகவே இதை "தாமிழி" என்றழைக்க வேண்டும் என்றார்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:25 மணிக்கு

இருளாண்டி சாந்தி
என்னாங்க தோழர்... தமிர்களிடையே பரப்புவதற்காக கொண்டு வந்த மொழிகள்... உங்கள் வரலாற்று செய்திகள் உண்மையே. ஆனால் தமிழன் கலப்பு மொழி இனம் என்பதை எதை வைத்து நிறுபிப்பீர்கள். தமிழனின் அன்றும் இன்றும் என்றும் தமிழ்தான் தேசியமொழி. தமிழன் ஒற்றைமொழி தேசத்தவன். பன்மொழி தேசியர் அல்லர்...!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:29 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழன் கலப்பு மொழியன் என்று சொல்லவில்லையே... தமிழ் தான் எப்போதுமே அவனுக்கு தேசிய மொழி, பேச்சு மொழி.... ஆனால் அன்றைய காலகட்டத்தில் உலகிலேயே வெறும் 4 மொழிகள் மட்டுமே எழுத்துக்களைக் கொண்டிருந்தன... அவற்றில் ஒன்று தமிழ்... இந்தியாவில் தமிழ் மட்டுமே எழுத்து மொழி...தமிழன் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களோடு வணிகம், மதப் பிரச்சாரம், அரசாள்கை போன்றவற்றைச் செய்ய சில எழுத்து வடிவங்களை பயன்படுத்தி எழுதினான் அவைதான் பிராமி, பிராகிருதம், கிரந்தம்... சில செயற்கை கலப்பு மொழிகளை பிற எழுத்தற்ற மொழிகளை தமிழுடன் கலந்து உருவாக்கினான் அவை சமஸ்கிருதம், பாலி முதலியன என்பது என் கருத்து
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 3:18 மணிக்கு

Murugu Tamil
பிராமி என்பதே தவறு
புராமி என்பதே வடமோழியில் புரா என்றால் பழைய என்று ம்
நயா என்றால் புதிய என்று ம் பொருள்.புராமி என்பது
பழையதமிழை குறிக்கும்.
பிராமிஎழுத்து என்பது பார்ப்பனர்களால் பரப்ப்பட்டது.வட்ட எழுத்துக்கள் எல்லாம் புராமி வகையை சார்தன.
ஓலைச்சுவட்டில் எழுதிய போதே கிரந்த எழுத்தானது.ஓலைச்சுவட்டில் 0என எழுதினால்■ அதுசதுரத்தைக்காட்டும்.ஓலைச்சுவ
ட்டில் உள்ள நார்கள் எழுத்து வடிவத்தை
மாற்றி உள்ளன.ஈரமான
களிமண் பலகையில் குச்சி யால் எழுதுவது கீறல் என்று ம் சுட்டக்களிமண் பலகையில் பொடிமண் கோலமாவு கொண்டு எழுதுவது தளத்தை விட்டு
எழுந்து நிற்பதால் எழுத்து
என்று ம் பெயர் பெற்றது.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 4:40 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் பிராமி என்று முதலில் பெயர் வைத்தது ஒரு ஆங்கிலேய ஆய்வாளர் தான்... என்னால் ஆதாரத்துடன் நிருபிக்க இயலும்...பிராமி என்று சொன்னது பார்ப்பனர்கள் அல்ல... தமிழ் பிராமி எனச் சொல்லக் கூடாது அதை தாமிழி என்று சொல்ல வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்ததே ஒரு தமிழ் பார்ப்பனர் தான். என்னிடம் ஆதாரம் உள்ளது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 4:45 மணிக்கு

காளிங்கன்
ஆதி பகவனின் இரண்டு புதல்விகளின் பெயர்கள் பிராமி, சுந்தரி என்பது.
பிராமி என்றால் எழுத்து . சுந்தரி என்றால் மொழி.
பாண்டிய ராசன் சட்டத்தரணி
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஞாயிறு அன்று PM 5:24 மணிக்கு

Murugu Tamil
ஆங்கிலேய ஆய்வாளர்கள்
ஆங்கே இருந்து எழுதுவது
கிடையாது. இங்கே வந்து
கள ஆய்வு செய்யும் பொது
பார்பனர்கள் தவறான
பொருள் கூறியிருக்கலாம்.
தனிப்பெரும் செம்மொழித்
தமிழையே திராவிட மொழிக்குடும்பம் என பார்பனர்களின் கூற்றுப்படி
கால்டுவெல் எழுதவில்லை யா?ஆங்கிலேயர் எழுதுவதில் முழுமையான தகவல்கள் இருக்காது.
யார் இந்த ஆதிபகவன்
பிராமி,சுந்தரி இரண்டு சொற்களும் தமிழ் அல்லவே!

இருளாண்டி சாந்தி
ஆசீவகம் தமிழரின் மதம்... ஆனால், தமிழ்மொழி இருக்கும் போது பாலி மொழியில் வந்த புத்தமும், பிராகிருத மொழியில் வந்த சமணமும் எப்படி தமிழர்கள் மதமாகும்.... தமிழர் மதம் என்றால் தமிழர்களின் மொழி பாலி, பிராகிருதமா. சமசுகிருதம் வழிபாட்டு மொழியாக இருக்கும் போதே அது அன்னிய மொழி என்கிறோம். வழக்கொழிந்து போன பாலி, பிராகிருதம் தமிழர்கள் மொழியாக எப்படி இருக்க முடியும். அதனால் மருமை கோட்பாட்டை மறைமுகமாக ஏற்கும் இம்மதங்கள் தமிழர்கள் மதம் அல்ல...? ஆசீவகத்திற்கும் சமணம், பவுத்தத்திற்கும் தொடர்பே கிடையாது....? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.... அக கருத்தை விட்டு புறச்சிந்தனையோட
ு யோசியுங்கள்.... பிராகிருத மொழியை ஏன் தமிழில் மடைமாற்றி தமிழனின் தலையில் திணிக்கும் மடமையை எதிர்ப்போம்..!

பாண்டிய ராசன் சட்டத்தரணி
சமணம்- ஜைனம் குழப்பம் பலருக்கும் உள்ளது.மகாவீரர் தோற்றுவித்தது ஜைனம்.அவரைப் பின்பற்றுபவர்கள் ஜைனர்கள்.. அதைத் தான் பலரும் சமணம் என்று எண்ணுகின்றனர்... சமணம் அல்லது ஆசீவகம் என்பது புத்தர் மற்றும் மகாவீரருக்கும் முந்தையது...ஜைன மொழி தான் பாளி ஆகும்... ஆசீவகம் அல்லது சமணம் தமிழர் மதம் என்றும்.சமணத்தின் மொழி தமிழே என்றும் 60 ஆண்டுகளுக்கு முன்பே மகாலிங்கம் என்ற வரலாற்று ஆய்வாளர் நிறுவியுள்ளார்...
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · சனி அன்று PM 5:24 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
புத்தமும் சமணமுமே இங்கே தான் தோன்றியிருக்க வேண்டும்.. புத்தரும் மகாவீரரும் மங்கலி கோசலரும் கூட இங்கு தான் தோன்றியிருக்க முடியும் என்றே தோன்றுகிறது

பாண்டிய ராசன் சட்டத்தரணி
எனது பதிவில் நான் முடிவாக எதையும் கூறவில்லை... ஒரு ஆய்வு தான்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சனி அன்று PM 5:34 மணிக்கு

காளிங்கன்
ஐயா இருளாண்டி சாந்தி பாலி மொழியை பிராகிருத மொழியை தாய்மொழியாக கொண்ட வெறும் இரண்டு பேரை எனக்கு காட்ட முடியுமா?
அவை இலக்கிய மொழி என்பதை உங்களுக்கு புரிய வைக்க முடியாது போல.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சனி அன்று PM 10:43 மணிக்கு

இருளாண்டி சாந்தி
ஓர் மொழி மக்கள் பயன்பாடு அல்லாது எப்படி இல்கிய மொழியாக இருக்கும். எழுதிய எழுத்தாளர் மட்டும் கண்டுபிடித்தனரோ அம்மொழியை...! சமசுகிருதம் கூட வழிபாட்டு மொழி மட்டுமே. ஆனால் அதை பேச, எழுத முடியும். அது சரி தமிழ் தாய்மொழியாக இருக்கும் போது இலக்கிய மொழியாக வேற்றுமொழி எதற்கு பயன் பட்டது...? வெறும் கல்வெட்டு, இலக்கிய சான்றுகள் ருசிக்க முடியும்... அது மட்டுமே சமூக அரசியல் மாற்றத்திற்கானத
ு அல்ல... எதுவும் சமூக அரசியல் மாற்றத்திற்கான செயல் உத்தியுடன் ஊடே நடைபெற வேண்டும்...?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சனி அன்று PM 11:40 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
செயற்கை மொழி ஒன்றை இலக்கணத்துடன் உருவாக்கிவிட இயலும்.... உலகின் பல பெரிய நாடுகளின் உளவுப் பிரிவுகள் இலக்கண சுத்தமான செயற்கை மொழிகளை உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர்... அவ்வாறு ஜெர்மனி பயன்படுத்திய மொழியை பொருள் கண்டறிவதற்கு அமெரிக்காவிற்கு சில ஆண்டுகள் ஆனது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சனி அன்று PM 11:56 மணிக்கு

காளிங்கன்
ஆங்கிலம் நமக்கு தாய் மொழி இல்லைதானே? ஆனால் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கிற
து அல்லவா? அது போல தான் பாலி, பிராகிருதமும்
இருளாண்டி சாந்தி
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 1:01 மணிக்கு

இருளாண்டி சாந்தி
ஆங்கிலேயன் கொண்டு வந்த மொழி ஆங்கிலம். அவன் மொழியில் பேசினான் நாமும் பேசுகிறோம் சரி. ஆங்கிலேயன் வெளியில் இருந்து வந்தவன் தானே. இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள். தமிழ்மொழி இருக்க பாலி, பிராகிருதத்தை தூக்கி வந்தவன் அன்னியன் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள். நீங்கள் கூறும் அனைத்து நூல்களும் தமிழில் உள்ளது. ஆனால் இலக்கிய மொழி பிராகிருதம், பாலியாம். என்னங்கையா கதை. புத்தம், சமணத்தை நான் புறந்தள்ள வில்லை. ஆனால் அதை தமிழனின் மதம் என்பதையும். ஆசீவகத்தின் நீட்சி என்பதையும் தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்...?
கழுவுலேற்றிய மதம் மனித விரோதி என்றால்...? ஈழத்தில் எம் மக்களை நவீன கழுவிலேற்றிய மதமும் மனித விரோதியே..? இது வேறொரு கண்ணோட்டம்...!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 11:08 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
இருளாண்டி சாந்தி Esperanto (எஸ்பெரண்டோ) என்னும் செயற்கை மொழி கி.பி.19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது..பல்வேறு மொழிகளிலிருந்தும் சொற்களை எடுத்தும்,பல புதிய சொற்களை உருவாக்கியும் இலக்கணம் எழுதப்பட்டு ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்ட மொழி... இதில் எழுத, படிக்க முடியும்...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 11:21 மணிக்குு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
எஸ்பெரண்டோ சமன்ஹாஃப் என்ற போலந்து காரரால் 1887 ல் உருவாக்கப்பட்டது...இம்மொழி 5 உயிர் எழுத்துகளையும், 23 மெய்யெழுத்துகளையும் கொண்டது...இதற்கு ஸ்லாவிக் போன்றதொரு எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஞாயிறு அன்று AM 11:37 மணிக்கு

இருளாண்டி சாந்தி
ஒரு குழப்பமும் வேண்டாம்... தமிழனின் மொழிகள் தமிழ், பாலி, பிராகிருதம் அப்படியா...?

Ganesh Natarajan
https://aaseevagam.wordpress.com/category/1/
1 | ஆசீவகம்
aaseevagam.wordpress.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி அன்று PM 5:44 மணிக்கு

Ganesh Natarajan
https://aaseevagam.wordpress.com/category/ஆய்வு/
ஆய்வு | ஆசீவகம்

பாண்டிய ராசன் சட்டத்தரணி
ஜெர்மனியில் செயற்கை மொழியை ஆயிரக்கணக்கான அவர்களது படையினர் பேசினார்கள், எழுதினார்கள்.... ஒரு செயற்கை மொழியை உருவாக்க முடியும்... யோசித்துப் பாருங்கள்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 12:33 மணிக்கு

இருளாண்டி சாந்தி
பாண்டிய ராசன் சட்டத்தரணி விடுதலைப் புலிகள் கூட சங்கேத வார்த்தைகளால் செய்தி பகிர்வர்... அது மொழி அல்ல... வார்த்தைகள் நேரத்திற்கு நேரம் மாறுபடும். மொழி அப்படி அல்ல..? கறிக்கடை, நகைக்கடை, ஆடு மாடு, வியாபாரிகள் ஒவ்வொரு சங்கேத வார்த்தைகள் பேசுவர். அது மொழி அல்ல. பாலி, பிராகிருதம் தமிழர் மொழி அல்ல..? தமிழ்நாட்டில் புழங்கிய மொழி. ஆங்கிலம், சவுராசிட்டிரம் போல்...?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 12:48 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
Esperanto (எஸ்பெரண்டோ) என்னும் செயற்கை மொழி கி.பி.19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டத
ு..பல்வேறு மொழிகளிலிருந்தும் சொற்களை எடுத்தும்,பல புதிய சொற்களை உருவாக்கியும் இலக்கணம் எழுதப்பட்டு ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்ட மொழி... இதில் எழுத, படிக்க முடியும்...

Murugu Tamil
ஆசீவகம் என்பது இலக்கிய வழக்கு. சீவகம்
என்பதே நடைமுறை வழக்கு. சீவகசிந்தாமணி
சீவகத்தை பற்றியதே.சீவகன்ஏரி தற்போது சீவலப்பேரி என்றபெயரில் நெல்லை
மாட்டத்தில் முக்கூடல்அருகே பொருநை நதிக்கரையில்
பூவில்லுடையார் மலையில் சீவகத்தின்
தலைமைபீடம் உள்ளது.
இங்கே அசோக சக்ரவர்த்தி
யின் வாரிசுகள் சங்கமித்திரை, மகேந்திரன்
கல்வி பயின்ற கல்வெட்டு
மலைமேல் இன்றும் உள்ளது.மேலேநாட்டவர்கள் சீவக அறிஞர்களிடத்தில் பல அறிவு பாடங்களை கேட்டு
சென்றிருக்கிறார்கள்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · ஞாயிறு அன்று PM 4:52 மணிக்கு

Ganesh Natarajan
https://www.aaseevagam.com/கட்டுரைகள்/
கட்டுரைகள் – ஆசீவகம்


புலிகள் யாழ் கைப்பற்றல் தடுத்த இந்தியா செக் நாட்டு உதவி பெற்றுத் தந்தது

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 3:05
பெறுநர்: எனக்கு
ஆயுதங்கள் கொடுத்து முதுகில் குத்திய இந்திய அரசும்
*********************************************
******************************
கைவிட்டு போன தமிழீழமும்.!!
*******************************************
ஈழத்து துரோணர்...........!!!
************************************
1995 யாழ்பாணத்தில் இருந்து புலிகள் பின் வாங்கிய போது சிங்களம் அதை பெரும் வெற்றியாக கொண்டாடி இருந்தன. சர்வதேச ஊடகங்களும் புலிகளால் மீண்டும் எழவே முடியாத இராணுவ தோல்வியாக இதை வர்ணித்தன. ஆனால் புலிகள் முல்லைத்தீவு படை தளம் மீது பெரும் தாக்குதல் மூலம், ஒரே நாளில் 1800க்கு மேட்பட்ட இராணுவத்தினரை கொன்று, ஆட்லறி உட்பட பல பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, பெரும் பாச்சல் ஒன்றை செய்து, சர்வதேசத்திற்கு தங்கள் இராணுவ வலிமையை மீண்டும் நிருபித்தனர் புலிகள்.
அதனை தொடர்ந்து ஜெயசிக்குறு முறியடிப்பு, சத்ஜெய முறியடிப்பு, கிளிநொச்சி படைத்தள அழிப்பு, ஆனையிறவு மீட்பு என புலிகளின் இராணுவ தாக்குதல்கள் உச்சம் பெற்றிருந்த நேரம் அது. 2001ம் ஆண்டு புலிகளின் பார்வை யாழின் மேல் பதிந்திருந்தது. யாழ் குடாவை கைப்பற்றும் திட்டம் தலைவரால் போடப்பட்டு புலிகள் சேனை தயாரானது.
புலிகளின் அதி சிறப்பு அணியொன்று தனம்கிளப்பு, கோயிலா கண்டி கடற்கரைப் பிரதேசங்களில் தரையிறங்கி, அதிரடி தாக்குதல் மூலம் அந்த பிரதேசங்களை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி, புலிகளின் தாக்குதல் படையணிகள் யாழ் நகரை கைப்பற்றுவதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். புலிகளின் படையணிகள் யாழ்பாணத்தினுள் நுழைந்து முன்னேறியது.
அந்த நேரத்தில் புலிகளால் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப் பட்டிருந்த 120MM, 152MM ஆட்லறிகள், அத்தோடு புலிகளாலும் கொண்டு வந்து குவிக்கப் பட்டிருந்த ஆட்லறி மற்றும் அதன் "செல்களால்" யாழ்பாணத்தில் இருந்த இராணுவத்தின் தலைகளில் துல்லியமாக விழுந்தன. யாழின் எந்த மூலைக்கும் புலிகளின் ஷெல் வீச்சு துல்லியமாக இருந்தது. இராணுவம் எங்கும் ஒழிக்க முடியாத நிலையை புலிகள் ஏற்படுத்தினர். இராணுவம் பலாலிக்கு பின்வாங்க தொடங்கியது.
அந்த நேரத்தில் புலிகளின் தாக்குதல் அணிகளும் அதிவேக தாக்குதல் மூலம் சாவகச்சேரி உட்பட அரியாலை வரை முன்னேறிக் கொண்டிருந்தனர். இராணுவத்தினர் பல நூறு பேர் கொல்லப்பட ஏனையோர் ஓட்டம் எடுத்தனர். புலிகளின் விசேட பயிற்சி பெற்ற போராளிகள் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களில் சிறு சிறு அணியாக, ஊடுருவி தாக்குதலையும் மேற்கொண்டு, இராணுவத்தினரின் உளவுரனை சிதைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் 38000இராணுவத்தி
னரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. சிங்கள இராணுவத்தின் போரிடும் மனவுறுதி முற்றாக புலிகளால் சிதைக்கப்பட்டு, கிட்டதட்ட இராணுவத்தினர் சரணடையும் நிலைக்கு தள்ளப் பட்டனர். அந்த நேரத்தில் சிங்கள அரசு இந்திய அரசின் உதவியை நாடியது என்பதை விட, காலில் விழுந்து என்பதே சரியாகும்.
சிங்கள அரசால் இராணுவத்தினரை யாழில் இருந்து கடல் மூலமாக மீட்க உதவும் படி இந்திய அரசிடம் உதவி கோரப்பட்டது. உடனே இந்திய அரசும் புலிகளின் கைகளில் யாழ்பாணம் விழுந்தால் தமிழீழம் இலகுவில் தமிழர் கைகளில் வந்து விடும் என்பதை உணர்ந்து, அதை தடுக்க இந்திய அரசால் நயவஞ்சகமாக ஒரு கோரிக்கை புலிகளிடம் விடப் பட்டது. சிங்கள இராணுவத்தை இந்திய அரசு யாழை விட்டு வெளியேற்ற உதவ போவதாகவும், ஒரு மாதகால அவகாசமும் கோரப்பட்டது.
இந்திய இராணுவத்தினருடனான போர் மற்றும் வேறு சில காரணங்களாலும், இந்திய அரசுடன் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இந்திய அரசுடன் நல்ல உறவை ஏற்படுத்தும் நோக்கில் புலிகளின் தலைமை, இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டத்து. ஆனால் மறுவளத்தால் இந்திய உளவுத் துறையான "ரோ" களத்தில் இறங்கியது.
இது நடந்த காலத்தில் இந்திய அரசு, செக் குடியரசுடன் மிக நெருங்கிய, ராணுவ தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு காரணம் இரசியாவின் ஆயுதங்களையே இந்திய அரசு பாவனையில் வைத்திருக்கின்றது. அதற்கு தேவையான உதிரிப்பாகங்கள், மற்றும் கடற்படை கப்பல்களின் உதிரிப் பாகங்கள் என்பன, ரஷ்யாவால் உரிய நேரத்தில் இந்திய அரசுக்கு கொடுக்க முடியவில்லை.
ஆனால், அதே பாகங்கள் செக் குடியரசிடம் எதுவித பயன்பாடும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்த ரஷ்யா, அவற்றை அங்கிருந்து பெற்றுக் கொள்ளும்படி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவித்திருந்தது. அப்படித்தான், இந்த இரு நாட்டுக்குமான இராணுவத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு காரணம் 2000 ம் ஆண்டில் செக்குடியரசு நேட்டோவில் இணைந்ததே ஆகும்.
2000த்தின் ஆரம்பத்தில் செக். குடியரசு நேட்டோவில் இணைந்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று செக் குடியரசு ராணுவத்திடம் இருந்த MBRLகளை (MBRL - Multi Barrel Rocket Launcher) அகற்றி விட வேண்டும் என்பது.
அதற்காக அவர்கள் அவற்றை அழித்து விடலாம் அல்லது நட்பு, நாடு ஒன்றுக்கு கொடுத்து விடலாம். இது தான் அந்த ஒப்பந்தம். இந்த விவகாரத்தை செக் குடியரசு இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. காரணம், ஆயுதங்களை அழிக்க அவர்கள் விரும்பவில்லை.
உடனே இந்திய அரசு தமது உளவுத்துறை "ரா" மூலமாக அதை சிங்கள அரசுக்கு யாருக்கும் தெரியாமல் பெற்று கொடுக்க காய்களை நகர்த்தியது. அதன் ஒரு கட்டமாக அவசர அவசரமாக செக்குடியரசு RM-70 ரக MBRLகளையும், அவற்றில் உபயோகிக்க 50000 ராக்கெட்டுகளையும் இரண்டு மிகப் பெரிய இராணுவ கார்க்கோ விமாங்களில் காதும், காதும் வைத்தால் போல இந்திய அரசின் செலவில் கொழும்பில் கொண்டு வந்து இறக்கியது.
இந்திய அரசு இலவசமாக அனுப்பி வைத்த ஒரு தொகுதி ஆயுதங்கள் கொண்டு இராணுவஇயந்திரத்தை மீள் ஒழுங்கு செய்த பின் அந்த ஆயுதம் கொண்டு எதிரி தாக்க தொடங்கினான். சிங்கள இராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறையாமல் இந்திய காங்கிரஸ் அரசு தங்கள் பணத்தில் கொண்டு வந்து கொட்டியது.
சிங்களனும் எந்த தடையும் இன்றி தண்ணி போல ஷெல்களை ஏவினான். மீண்டும் உத்வேகம் பெற்றது சிங்கள அரசு இயந்திரம்.
MBRL ஒரு நிமிடத்தில் "40 ரொக்கெற்றுகளை" ஏவும் வல்லமை கொண்ட ஆயுதம். இது ஒரு நாட்டுக்கு எதிரான யுத்தங்களிலேயே பாவிக்க படுபவை. இதை தெரிந்தும் இந்திய அரசு,தானே முன் நின்று சிங்களனுக்கு பெற்று கொடுத்தது. இந்த ஆயுதம் குறிப்பிட்ட பிரதேசத்தை நொடிப் பொழுதில் அழிக்கவல்ல மிகப் பெரும் அழிவு ஆயுதம்.
இதை பெற்றுக் கொடுத்து மீண்டும் தமிழர் முதுகில் குத்தி தனது கோர முகத்தை மீண்டும் காட்டியது இந்திய காங்கிரஸ் அரசு. அதற்கு தமிழ்நாட்டு திராவிட கட்சிகளும் துணை போய் தங்கள் பங்கையும் கற்சிதமாக நிறைவு செய்தனர்.
இந்திய அரசின் துரோகம் கையை சுட்ட பின் தான், புலிகள் போராளிகளின் இழப்பை குறைப்பதற்காக யாழில் இருந்து பின் வாங்க முடிவெடுக்கப் பட்டது. உண்மையில் அன்று யாழ் புலிகளிடம் வீழ்ந்திருந்தால் இன்று தமிழீழ தனியரசு உருவாகி இருக்கும். எம் மக்களின் கனவை இந்திய நடுவண், மாநில அரசுகள் இல்லாமல் செய்து விட்டிருந்தன.
இறுதி யுத்தத்தில் கதுவி(ராடர்) மட்டும் கொடுத்ததாக கூறும் இந்திய அரசு தங்கு தடையில்லாமல் சிங்கள அரசு வாங்கும், ஆயுதங்களுக்கும் பணத்தை தானே செலுத்தி, அவர்கள் கைகளில் கிடைக்க செய்தது. ஆயுதங்கள் கொடுத்தால் வெளித்தெரியும் காசு கொடுத்தால்? தமிழக தமிழனை ஏமாளியாக்கியது ஆளும் வர்க்கம்.
20நாடுகளில் கூட்டு முயற்சியால் அழிக்கப் பட்ட தமிழர் போராட்டத்தில், இந்தியாவின் பங்கு 2000 மாம் ஆண்டே தொடங்கி கச்சிதமாக முள்ளிவாய்க்காளில் நிறைவு செய்யப் பட்டது. யாழ் நகர் அன்று கைப்பற்ற பட்டிருந்தால், குறைந்தது எங்கள் போராட்டமாவது காக்கப் பட்டிருக்கும்..!!
வலிகளுடன் துரோணர்..!!!
4 மணி நேரம் · Facebook for Android ·

போர் ஆயுதம் சர்வதேசம் ஹிந்தியா பாஜக ஈழம்

தோழர் ஜீவானந்தம் மண்மீட்பு ஆதரவு இனப்பற்று 1956

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 3:02
பெறுநர்: எனக்கு

# தமிழர்_தலைமைகள்
மொழிவழிமாநிலப் பிரிவினையின் போது ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக் கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.
 "உண்மையான கம்யூனிஸ்ட்டு இப்படி பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது"
.என்று அறிக்கை வெளியிட்டார். இப்படிச் சொன்ன துணிவு மிக்க தோழர் ப.ஜீவானந்தத்திற்கு இன்று பிறந்தநாள்.

“இந்த அவையில் கன்னடர் இருக்கிறார்கள், தெலுங்கர் இருக்கிறார்கள், கேரள தேசத்தினர் இருக்கிறார்கள், ஆனால் நவம்பர் முதல் தமிழர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” -- 1956 மொழிவழி மாநிலப்பிரிவினையின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு ப.ஜீவானந்தம் பேரவையில் பேசியது.
Mathevan Pathmanaban

கேரளா வெள்ளம் தமிழர் உதவி பாலக்காடு அமைச்சர் நெகிழ்ச்சி

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 2:47
பெறுநர்: எனக்கு
லட்சக்கணக்கில் தமிழர்கள் போன் செய்கிறார்கள்.. உதவிகள் குவிகிறது.. கேரள எம்பி நெகிழ்ச்சி
Updated: Tue, Aug 21, 2018, 11:54 [IST]
திருவனந்தபுரம்: கேரளா மக்களுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள் லட்சக்கணக்கில் தினமும் போன் செய்வதாக பாலக்காடு பகுதியை சேர்ந்த கேரளா எம்பி ராஜேஷ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
கேரளாவில் மீட்பு அணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் இருந்து அங்கு உதவிகள் குவிந்து வருகிறது.
கேரளாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
உதவி
கேரளா வெள்ளத்திற்கு தமிழர்கள் பெரிய அளவில் உதவி செய்தனர். கேரளாவில் வெள்ளம் என்று தெரிந்தவுடன் உதவி செய்ய தமிழர்கள் வேகமாக களமிறங்கினார்கள். பல மாவட்டங்களில் இருந்து உதவி பொருட்களை கேரளாவிற்கு அனுப்பினார்கள். தொடர்ச்சியாக இப்போதும் அனுப்பி வருகிறார்கள்.
அதிகமான பேர் உதவி
அதோடு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளும் கேரளாவிற்கு உதவி செய்ய களமிறங்கினார். கேரளாவிற்கு சென்ற உதவி வாகனங்களில் அதிகமானது தமிழ்நாட்டில் இருந்து சென்றதுதான் என்று அவர்களே சந்தோசமாக பாராட்டி இருக்கிறார்கள். பொருள் உதவி மட்டுமில்லாமல், ஆள் உதவியும் செய்து இருக்கிறார்கள்.
போன் உதவி
இந்த நிலையில்தான் கேரளா எம்பி ராஜேஷ் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ''தினமும் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கில் போன் வந்து கொண்டே இருக்கிறது. வெள்ளம் என்று தெரிந்தவுடன் அதிக மக்கள் உதவி செய்ய களமிறங்கி வந்தனர். தொடர்ந்து எங்கள் பகுதிக்கு அவர்கள்தான் உணவுகளையும், நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகிறார்கள். தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள்'' என்றுள்ளார்.
தவறான கருத்து
மேலும் ''தமிழர்களுக்கு எதிராக இங்கே சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியே தேவையில்லை. இங்கு உதவு செய்பவர்களை கூட அவர்கள் அப்படித்தான் கிண்டல் செய்கிறார்கள். தமிழர்கள் இப்போது செய்யும் உதவியை மறக்க மாட்டோம்'' என்றுள்ளார்.

மனிதநேயம் நிவாரணம் தமிழகம் மலையாளி 

விறகு அடுப்பு பற்றி சிறுகதை நகைச்சுவை

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 2:35
பெறுநர்: எனக்கு
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
அடுப்புச் சாப்பாடு
நந்து சுந்து
____________________
“விறகு மண்டிக்குப் போய் விறகு வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா.
அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார். பின்னாலேயே நானும் அண்ணன்களும் போக வேண்டும். நாங்கள் தான் டெலிவரி செய்யும் மகன்கள். அமேசன்கள்.
விறகு மண்டியில் பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு ஆள் எப்போது பார்த்தாலும் கோடாலி வைத்து விறகுகளை பிளந்து கொண்டே இருப்பார். ஏன் என்ற கேள்வி ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை.
“ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா.
குண்டு என்பது ஒரு எடை அளவு. கடைக்காரரும் விறகை எடுத்து தராசில் வைப்பார்.
நான் அந்த goondas act ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
தராசு என்பது பெரிதாக இருக்கும். குருவாயூர் கோவிலில் துலாபாரம் போடும் தராசை விட பெரிதாக இருக்கும். Large scale தராசு. வலது பக்கம் விறகு கட்டைகளை வைக்க வைக்க அந்த தட்டு இந்திய ரூபாயின் மதிப்பு மாதிரி கீழே இறங்கும்.
“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க...ப
ோன தடவையே எதுவும் சரியா எரியல்லே” என்பார் அப்பா. இது அவரின் சுய சிந்தனை இல்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து கொண்டிருக்கிறார்.
“எடுத்துகிட்டு போய் கொஞ்சம் காய வைச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர்.
‘காயமே இது பொய்யடா’ என்று தெரிந்தும் அந்த விறகை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. ஊரில் ஒரே ஒரு விறகு கடை தான் இருந்தது. வ
இப்போது ஈரம் விளைந்த விறகை வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும்.
கருடாழ்வார் மாதிரி நம்முடைய இரண்டு கைகளையும் நீட்ட வேண்டும். அதன் மேல் விறகுகளை அடுக்கி வைப்பார்கள். விறகுக்கு கீழே கையில் ஒரு சாக்கு போட்டு விடுவார்கள். கையில் விறகு குத்தாமல் இருக்க அது ஒரு சாக்கு அப்ஸார்பர்.
நானும் அண்ணனும் தெருவில் பிரதர் வலம் வருவோம்.
கால் மணி நேரத்தில் விறகுகுண பாண்டியர்கள் வீடு போய் சேர்ந்து விடுவோம். இப்போது இன்ஸ்பெக்ஷன் நடக்கும். அம்மா ஒரு சரியான water diviner.
“இன்னும் விறகுல தண்ணி இருக்கே. ஒரே ஈரம்” என்பார்.
அம்மாவும் பாவம் தான். அந்த விறகை வைத்து எப்படி சமைப்பார்கள்?
விறகு காய வைக்கும் படலம் ஆரம்பிக்கும். மொட்டை மாடியில் விறகு காயப் போட வேண்டும். அதற்கும் நாங்கள் தான் packers and movers. நல்ல வேளை. காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது.
அப்போதெல்லாம் விறகு அடுப்பு விநோதமாக இருக்கும். சாணி பூசி மொழுகி சாணி ராணியாக இருக்கும். மேலே வீபூதி பட்டை வேறு இருக்கும். மண் அல்லது சிமெண்டினால் செய்திருப்பார்கள். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும்.
இந்த மெயின் அடுப்புக்கு பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு இருக்கும். வட்டமாக ஒரு துவாரம் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து சூடு இந்த அடுப்புக்கு இலவசமாக வரும். இந்த அடுப்பிற்கு கொடி அடுப்பு என்று பெயர்.
இந்த auxiliary அடுப்பு பொதுவாக ரசம் செய்யத் தான் உபயோகப்படுத்தப் படும்.
சமைக்கும் போது சதா சர்வகாலமும் அடுப்பு பக்கத்திலேயே ஜெகன் மோகினி பேய் மாதிரி இருக்க வேண்டும். விறகை உள்ளே தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வப்போது விறகு அனைந்து புகை மூட்டம் வரும்.
சச்சீன் படத்தில் ஜெனிலியா வரும் போதெல்லாம் திரை முழுக்க புகை வருமே அந்த மாதிரி கிச்சன் முழுக்க புகை வியாபிக்கும். இப்போது விறகை ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும்.
“டேய். வந்து கொஞ்சம் அடுப்பை ஊதுடா?’ என்பாள் அம்மா.
அண்ணன் போய் ஊதுவான்.
“இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல விறகா வாங்கியிருக்கக் கூடாதா? சரியான கஞ்சம்” என்று அம்மா புலம்புவாள்.
குழல் ஊதும் அண்ணனுக்கு பஞ்சப் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.
குழல் ஊதுவதும் ஒரு டெக்னிக். கொஞ்சம் வேகமாக ஊதி விட்டால் ஆஷ் துரை கிச்சன் முழுக்க பறக்க ஆரம்பித்து விடுவார். வீடு முழுக்க சாம்பல் பள்ளத்தாக்கு ஆகிவிடும்.
விறகிலிருந்து வரும் புகையெல்லாம் சுவற்றில் fixed deposit ஆகும். கிச்சன் சுவர் முழுக்க கறுப்பாக இருக்கும். அந்த கருப்பை எல்லாம் எடுத்தால் Go back daddy என்று நூறு தடவை கறுப்பு கொடி காட்டலாம்.
அப்போதெல்லாம் குண்டு பல்பு தான். நாற்பது வாட்ஸ் பல்பு எரியும். அந்த வெளிச்சம் கரப்பான் பூச்சிகளுக்கே சரியாகப் போய் விடும்.
விறகு அடுப்பில் இன்னொரு பிரச்சினை. வெங்கலப் பானை அடியெல்லாம் கருப்பாகி விடும். அம்மா ராத்திரி உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருப்பாள். அது ஒரு பெரிய night mare. அந்த காலத்தில் பிக் பாஸ் vessel cleaning team எல்லாம் கிடையாது. மும்தாஜும் சென்றாயனும் வந்து பாத்திரம் தேய்த்து கொடுக்க மாட்டார்கள்.
பாத்திரத்தில் கரி பிடிப்பதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வெங்கலப் பானையின் அடியில் அரிசி மாவைக் கரைத்து பூசி விடுவாள் அம்மா. அந்தக்காலத்திலேயே Firewall கண்டு பிடித்திருந்தாள் அம்மா.
சாதம் பொங்கி வரும் போது கஞ்சி overflow ஆகும். அதை அப்படியே விட்டால் அடுப்பு அணைந்து விடும். கஞ்சிக்கு ஏது கண்ட்ரோல் வால்வ்? ஒரே வழி. விறகை பிடித்து வெளியே இழுக்க வேண்டியது தான்.
சமையல் முடிந்து விட்டால் அடுப்பை அணைக்க வேண்டும்.
அதுவும் ஒரு டெக்னிக் தான்.
விறகை வெளியே இழுக்க வேண்டும். அதன் மீது லேசாக தண்ணீரை தெளிக்க வேண்டும்.
‘தண்ணீர் தெளித்து விட்டாச்சு’ என்றால் இனிமேல் பயன் இல்லை என்று அர்த்தம். ஆனால் இந்த விறகில் தண்ணீர் தெளிப்பதே மறுபடியும் உபயோகப்படுத்தத்தான்.
சூடு ஆறிய பிறகு சாம்பலை சேகரிப்பாள் அம்மா. பாத்திரம் தேய்க்க அது தான். அம்மாவின் அம் பார்.
கிச்சனை விட்டு அம்மா வெளியே வரும் போது தலையெல்லாம் சாம்பல் துகள்கள் இருக்கும். கண்கள் சிவப்பாக கன்றிப் போயிருக்கும்.
ஆனால் தட்டில் வெள்ளை வேளேர் என சாதமும் சாம்பாரும் வந்து விழும்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று என் வீட்டில் இருக்கும் கிச்சனைப் பார்க்கிறேன்.
மேடையில் இருக்கும் kitchen accessories ஐ நோட்டம் விடுகிறேன்.
கேஸ் ஸ்டவ் – piped gas உடன், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர், இண்டக்ஷன் ஸ்டவ், காபி மேக்கர், சப்பாத்தி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், சாண்ட்விச் மேக்கர், எலெக்ட்ரிக் கெட்டில்.
இவ்வளவு சாதனங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு ப்ளக் பாயிண்ட் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ப்ளக் பாயிண்டிலும் செல்போன் சார்ஜர் நிரந்தரமாக குடியேறியேறியிர
ுக்கிறது.
ஏனோ எனக்கு அம்மாவின் நினைவு வருகிறது. விறகு அடுப்பு வைத்து புகைகளுக்கு மத்தியில் பத்து பேருக்கு தவல வடை செய்து போட்டது ஞாபகம் வருகிறது.
இதோ இப்போதும் கிச்சனிலிருந்து குரல் கேட்கிறது.
“நைட் டிபனுக்கு என்ன செய்யட்டும்?”
ஒரே ஒரு வித்தியாசம்.
கேட்டது சமையல்காரம்மா
# படித்ததில்_பிடித்தது

பெண் பெண்கள்  பெண்ணுரிமை நினைவுகள் தாய்மை இல்லறம் 

அலோபதி மருத்துவம் மீது விமர்சனம் போலியோ சுகப்பிரசவம் தடுப்பூசி சட்டம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 12:26
பெறுநர்: எனக்கு
மாண்புமிகு தமிழக அரசுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும் அறிவார்ந்த சமூகமக்களுக்கும் எனது பணிவான வணக்கம் .


என்னை என்றும் காக்கும் இறையாற்றல்  துணையோடு என்னை போன்று சாமானிய மக்களுக்கு எழும் சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன்.


ஹீலர் பாஸ்கர் அவர்களின் அனட்டாமிக் தெரப்பி மூலம் பயனடைந்த  மக்களில் நானும் ஒருவன்.

என் சந்தேகங்கள் பின்வருமாறு...


1) இந்திய குடிமகனுக்கு தான் எந்த மருத்துவத்தை தேர்வு செய்யவேண்டும்  தன்னை யார் பரிசோதிக்கலாம், பரிசோதிக்கவேண்டாம்  என்ற முடிவை எடுக்க அவனுக்கு அடிப்படை சுதந்திரம் இருக்கிறதா இல்லையா ??


2) ஒரு பெண் தனது  முழு விருப்பத்துடன் நான் மரபு மருத்துவ முறையை பின்பற்றுவேன் , இயற்கையான முறையில் எனது வாரிசுகளை ஈன்றேடுப்பேன் மற்றும்  எனக்கு  விருப்பம்  இல்லாத ஆங்கில மருத்துவமான அலோபதி  மருத்துவத்தை  எனக்கு எதிர்பாராத விபத்தினால் ஏற்பட்ட ரத்த காயங்களுடன் கூடிய எலும்பு முறிவுக்கோ அல்லது அறுவை சிகிச்சைக்கு மட்டும் போதும், அப்போது நான் அரசு மருத்துவமனையை நாடினால் போதும் என்ற முடிவை எடுக்க உரிமை உள்ளதா இல்லையா ??


3)  ஒரு பெண் தன்  முழு விருப்பத்துடன் வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டப்படி குற்றமா ??


4) இந்திய குடிமகனாகிய  ஒருவர் ஆங்கில மருத்துவமுறையில் மட்டும்தான் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என  ஏதேனும் சட்டம் உள்ளதா ??


5) ஒரு பெண்  தான் கருவுற்ற நாள் முதல் தன்  குழந்தையை ஈன்றடுக்கும் வரை  மாதந்தோரும் ஸ்கேன் செய்யவேண்டுமா ? அப்படி ஸ்கேன் செய்யும் பொது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கதிர்வீச்சு ஆபத்து ஏற்ப்பட வாய்ப்பு  இருக்கும் என்று சொல்கிறார்களே  அது உண்மையா ? அப்படி  ஏற்ப்பட வாய்ப்பு முற்றிலும் இல்லை  என்று கூறமுடியுமா ??


6) ஒரு நாட்டின் குடிமகன் மீது அக்கறை என்ற பெயரில் அவரை கட்டாயப்படுத்தி குறிப்பிட்டு ஒரு மருத்துவ முறையை அவர் மீது திணிப்பது சட்டப்படி குற்றமா இல்லையா ??


மாண்புமிகு தமிழக அரசுக்கும் மதிப்பு மிக்க இந்திய அரசுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும்  என் தாழ்மையான வேண்டுகோள்


மரபு மருத்துவத்தின் பக்கமும் மாற்று மருத்துவத்தின் பக்கமும் மக்கள் ஏன் அதிகமாக ஈர்க்கப்ப்டுகிறார்கள் என்ற புரிதல் இந்த  நேரத்தில் அவசியப்படுகிறது

INDIAN DRUGS COSMETICS  ACT 1995 SCHEDULE  J யின் படி அதில் குறிப்பிடப்பட்ட நோய்களுக்கு  ஆங்கில மருத்துவத்தில் உள்ள மருந்துகளால் முற்றிலும்  குணமாக்க முடியாது என்று கூறப்பட்ட பல நோய்களை மரபு மருத்துவம் குணமாகியது, குணமாக்கிக்கொண்டிருக்கிறது.


அறிவார்ந்த சமூகமக்களுக்கும்  அறிவார்ந்த ஆங்கில மருத்துவர்களுக்கும்  என் வேண்டுகோள் என்னவென்றால் பின் வரும் என் சந்தேகங்களுக்கு உங்கள் அறிவை கொண்டு என் அறியாமையை போக்குங்கள்.

ஒரு மனிதன் ஆங்கில மருத்துவரிடம் வந்தால் அவருக்கு சக்கரை உள்ளதா ரத்த அழுத்தம்  உள்ளதா என்று நவீன கருவிகளின் உதவி கொண்டு கண்டறிகிறீர்கள் வாழ்த்துக்கள் , இப்பொழுது  நீங்கள் கண்டறிந்தது உடலில் உள்ள உறுப்புக்களின் சீரற்ற இயக்கத்தின் வெளிப்பாடு. இப்பொழுது  நீங்கள் உடலின் இயக்கத்தை சரி செய்ய வேண்டுமா அல்லது அதை வெளிப்படுத்த்தும் தன்மையை கட்டுப்படுத்தவேண்டுமா ?? நீங்கள் எதை செய்து கொண்டிருக்கிறீர்கள் ??


அடுத்ததாக நான் எல்லாவற்றையும் CLINICALLY PROVEN SCIENTIFIC FACT BASED ARTICLE  மட்டும் தான்  நம்புவேன் என்று கூரும் மக்களுக்காக....


தடுப்பூசி நல்லது அதை கட்டாயம் போட்டுலொள்ளவேண்டும் என்று நமது அரசும் சுகாதாரத்துறையும் மக்களின் மீது அதீத அன்பு கொண்டு வருங்கால இந்திய வாரிசுகள் ஆரோக்கியமாக இருக்கவென்றும்  என்று சொல்லி நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் .  இன்னொருபுறம் தடுப்பூசி எந்த பயனையும் அளிக்காது அதில் உள்ள வேதிப்பொருள் உடலுக்கு ஆபத்தை தரும் என்று கூறுகிறார்கள்.

இதன் உண்மைத்தன்மையை கண்டறிய நான் முற்பட்டபோது சில ஆய்வறிக்கைகள் எனக்கு கிடைத்தது.


ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி போடும்முன்பு அதை பற்றிய தகவல்  Vaccine Information Statement (VIS). 

குழந்தையின் பெற்றோரிடம் சொல்லவேண்டும், குழந்தைக்கு சில ஒவ்வாமை அல்லது சளி காய்ச்சல் ரத்தசோகை இருந்தால் தடுப்பூசி அப்பொழுது போடக்கூடாது என்று கூறப்படுகிறது .

இதை  எல்லோரும் பின்பற்றித்தான் தடுப்பூசி போடப்படுகிறார்களா  ??


இது ஒருபுறம் இருக்க தடுப்பூசியால் பலன் இல்லை, பின்விளைவுகள் உண்டு  என்று நிறைய SCIENTIFIC FACT BASED ARTICLE உள்ளது அவற்றுள் சில இங்க



http://www.greenmedinfo.com/anti-therapeutic-action/vaccination-hpv-gardisil


http://www.vaccines.net/hepatiti.htm


https://healthimpactnews.com/2014/new-study-hepatitis-b-vaccination-in-france-sparked-a-wave-of-new-cases-of-ms/



Research material on Polio vaccines...



1. Scientific research paper talking about how Polio vaccines cause "Non-Polio" Acute Flaccid Paralysis


https://www.researchgate.net/publication/224971217_Polio_Programme_Let_Us_Declare_Victory_and_Move_On



Research material on small pox vaccines...


https://anonymousnotables.com/2017/11/10/vaccination-proved-useless-and-dangerous/


1. https://www.youtube.com/watch?v=ZQxwalPNxyU


2. https://www.youtube.com/watch?v=zncuOv9VBxw


3. https://www.youtube.com/watch?v=SFQQOv-Oi6U&t=17s


American government's medical arm faking scientific research on vaccines - A testimony by a US congressman


https://www.youtube.com/watch?v=jGRjn_gIJw0


The US government paid 3.8 billion dollars in vaccine compensation from 1989 until 2015


https://en.wikipedia.org/wiki/Vaccine_injury


A cancer virus passed on in a vaccine was used on 98 million Americans in the 1960s


https://www.theatlantic.com/magazine/archive/2000/02/the-virus-and-the-vaccine/377999/


Scientific research paper on the link between Multiple Sclerosis and vaccines


http://n.neurology.org/content/63/5/838.short


மேலே நான்  இணைத்திருக்கும் பதிவுகளை பார்க்கும் பொது என்னை போன்ற சாமானிய மக்களுக்கு எதை நம்புவது என்று தெரியவில்லை.

ஆகையால் இந்திய மெடிக்கல் அஸோசியேஷன்  என் சந்தேகத்தை தீர்க்க முன்வரவேண்டும். தடுப்பூசி நூறு சதம்  பாதுகாப்பானது என்ற உத்திரவாதத்தை எழுத்துப்பூர்வமாக  வெளியீட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றபின்னர் தடுப்பூசியை புரிந்துரைக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நாள்தோறும் தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் இந்த எண்ணையை பயன்படுத்தினால் சொட்டைத்தலையில் முடிவளரும் , இந்த பொடியை குடித்தால் சக்தியும் வளர்ச்சியும் இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும், இந்த  கிரீம் போட்டால் 30 நாளில் வெள்ளை ஆகலாம் இந்த  பானத்தை குடித்தால் உடலில் உற்ச்சாகமும் புத்துணர்வும் வரும் என்று விளம்பரம் செய்பவர்களையும் அந்த விளம்பரம் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள்மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்யாமல் இருப்பது ஏன் ??????????


எனக்கு எழுந்திருக்கும் சந்தேகத்தை யாரேனும் தீப்பார்கள் என்று நம்புகின்றேன்.

உங்களுக்கும் இந்த கேள்விகள் எழுந்து அதற்கான விடை கிடைக்கவில்லை என்றால் இந்த பதிவை பகிர்ந்து விடை தேடுங்கள் .

என்றும் அன்புடன்

கோ .கமல்


இறையாற்றல் என்றும் நல்லவர்கள்  அனைவருக்கும் துணைநிற்க்கட்டும்.

வாழ்க வையகம்!!!

வாழ்க வளமுடன்!!!!

அக்கு ஹீலர் பாஸ்கர் கைது வீட்டிலேயே பிரசவம் 

மருதிருவர் கோட்டை பராமரிப்பின்றி சீரழிகிறது

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 12:22
பெறுநர்: எனக்கு
#நாம்_தமிழர்_பிள்ளைகள்_கவனத்திற்கு....

இன்று, காலை முதல் நண்பகல் வரை
கவலையுடனும் கனத்த நெஞ்சுடனும்
சுற்றினேன்!

மாவீரர்கள் மருதிருவரின் சங்கரபதிக் கோட்டை!காரைக்குடி-தேவகோட்டை சாலையில்.

1700களில் கட்டப்பட்டது.
பராமரிப்பில்லை.
தமிழ் மறவர்கள் நினைவிடம் என்பதால்
திராவிட ஆட்சியரால் புறக்கணிக்கப்பட்டுக்
கேட்பாரற்றுக்க் கிடக்கிறது,

நம்மை அடிமைகொண்ட நாயக்கரின்
அரண்மனைகள் புத்துருவாக்கம்பெற்றுப்
பொலிவுடன் திகழக்காண்கிறோம்.

இந்தக் கோட்டையிலிருந்துதான் மருதிருவர் மற்றும் அறுநூறுபேர்
விலங்கிட்டுக் கைதுசெய்து தூக்கிலிடப்பட்டனர்.

இக்கோட்டை வீரமங்கை வேலுநாச்சியாருடையது.
வரலாறு பலகூறும் மாவீரர்
வாழ்விடம் இது.

மருது மாமன்னர் வெளியிட்ட
ஜம்புத்தீவுப்(இந்தியத் தீவு) பிரகடனத்திற்கு
இணையான வீர அறிக்கை போன்று இதுவரை
வேறெவரும் வெளியிட்டதில்லை.
--------------------------------------------------------------------
(1801இல் திருச்சி கோட்டையில்
ஒட்டப்பட்ட அந்த அறிக்கையின் சுருக்கம்)

"வெள்ளையர் நயவஞ்சகமாக நமது
மண்ணைக் கைப்பறிவிடனர்.

நம் மக்களை நாய்களைப்போல் நடத்துகின்றனர்.என்றாலும் நம் மக்களுக்கு உணர்வு வரவில்லை.

சாவு அனைவருக்கும் உண்டு.எனவே
மக்கள் அனைவரும் போர்க்கோலம்
பூண்டு அயலாரை அழிக்கவேண்டும்.

மாறாக அவர்களுக்குத்தொண்டூழியம்
செய்வோருக்கு மோட்சம் கிட்டாது.

மீசை வைத்துள்ள தமிழர்கள் அவர்களைக் கொன்றொழிக்கவேண்டும்.

இதை ஏற்காதவர்கள்
வைத்துள்ள மீசை என்
அடிமயிருக்குச் சமம்.

அவர்களுடைய பிள்ளைகள்,தங்கள் தங்கள் மனைவியை அயலானுக்குக் கூட்டிக்கொடுத்துப்
பெற்ற ஈனப்பிள்ளைகள்.

அயலாரின் பெயர்கள்கூட இம்மண்ணில்
எஞ்சியிருக்கக்கூடாது.அழிக்கவேண்டும்"
-------------------------------------------------------------------
இந்த அறிக்கை இன்றைய தமிழக அரசியல் அவலத்திற்கும் அப்படியே
பொருந்திப்போவதை,விதி என்பதா?
விபத்து என்பதா!?

இந்தக் கோட்டையைப்போல் தமிழகத்தையும் திராவிடம் சிதைத்துச்
சீரழித்ததை வெட்கமுடன் வெளிப்படுத்துவோம்.தலைகுனிவோம்.
அப்போதுதான் நிமிரமுடியும்!

பதிவு_ ஐயா பேராசிரியர்.தா.மணி அகமுடையார் தேவர் பாளையக்காரர்