|
திங்., 6 ஆக., 2018, பிற்பகல் 7:17
| |||
பதிவர்: Arul Rathinam
"மோடியுடன் தமிழக பத்திரிகையாளர்கள் ரகசிய சந்திப்பு: மறைக்கப்படும் மர்மம் என்ன?"
-------------------
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட், NEET, பினாமி ஆட்சி உள்ளிட்ட பிரச்சினைகளில் பாஜக அரசு எதிர்ப்பை சந்திக்கும் சூழலில் - தமிழக பத்திரிகையாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை மர்மமாக சந்தித்துள்ளனர்.
கடந்த 30.7.2018 திங்கள் மாலை 7 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியினை தமிழக ஊடக முதலாளிகள், முதன்மை ஆசிரியர்கள், நிர்வாக ஆசிரியர்கள் என 22 பேர் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது!
தினமலர் முதலாளிகள் ஆதிமூலம், ரமேஷ், கோபால்ஜி, விகடன் முதலாளி சீனிவாசன், இந்து ராம், குமுதம் வரதாஜன், தினமணி வைத்தியநாதன், புதிய தலைமுறை கார்த்திகை செல்வன், நியூஸ் 18 குணசேகரன், மற்றும் தந்தி டிவி, பாலிமர் டிவி, நியூஸ் 7 - என தமிழகத்திலிருந்து வெளியாகும் முன்னணி தினசரிகள், வார இதழ்கள், புலனாய்வு பத்திரிகைகள், டிவி நிறுவனங்களாக இருக்கும் ஊடக ஜாம்பவான்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை செய்துள்ளனர்.
இவர்களுடன் பாஜகவின் கே.டி. ராகவன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர் (இந்த சந்திப்பில் சன் டிவி குழுமம், நக்கீரன், ஜெயா டிவி உள்ளிட்ட மிகச்சில தமிழக ஊடகங்கள் கலந்து கொள்ளவில்லை).
-------------------
"மர்மம் என்ன?"
-------------------
இந்திய பிரதமர் தமிழக பத்திரிகையாளர்கள் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால், தமிழக பத்திரிகையாளர்களுடனான பிரதமரின் திடீர் சந்திப்பு குறித்து எந்த ஊடகமும் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடாதது தான் மிகப்பெரிய மர்மமாக உள்ளது!
பத்திரிகை சுதந்திரம் என்பது செய்தியை வெளியிடுவது மட்டுமல்ல. வாசகர்கள் முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்வதும் "பத்திரிகை சுதந்திரம்" தான். தமிழக ஊடக உலகத்தை பாதிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு குறித்து வாசகர்களுக்கு செய்திகளை அளிக்காமல் இருப்பது - பத்திரிகை சுதந்திரத்துக்கும் கருத்துரிமைக்கு
ம் எதிரான செயல் ஆகும். இது ஒரு ஜனநாயகப் படுகொலை. பத்திரிகை சுதந்திரத்தை அப்பட்டமாக பறிக்கும் செயல்.
The right to freedom of expression includes the right to receive information. As a public watchdog and a powerful pillar of democracy the press’ role is to scrutinise and to disseminate information of public interest. The protections for journalists.. are not there for the benefit of media organisations or individual journalists – they are there to protect people's fundamental right to receive information of public interest.
-------------------
"விடை தெரிய வேண்டிய கேள்விகள்"
# நாட்டின் பிரதமரை, அவரது அலுவலகத்தில் சந்தித்தவர்கள் - அதனை ஒரு பரபரப்பு செய்தியாக வெளியிடாமல், மூடி மறைப்பது ஏன்?
# ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களை ஒரு பிரதமர் இவ்வளவு ரகசியமாக சந்தித்திருப்பது எதற்காக?
# தமிழக பத்திரிகையாளர்களை அழைத்து விருந்து வைத்து, தனக்கு சாதகமாக செயல்படும்படி கேட்டுக்கொண்டாரா? இல்லை தனக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என கட்டளையிட்டாரா? இந்தச் செயல்மூலம் ஊடக சுதந்திரத்தில் மோடி தலையிடுகிறாரா?
# இதற்கெல்லாம் தமிழக ஊடகவியலாளர்களும் துணை போய்விட்டார்களா?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக ஊடகங்கள் பதில் சொல்ல வேண்டும்! அதன் மூலம் people's fundamental right to receive information of public interest எனும் அடிப்படை உரிமையை காக்க வேண்டும்.
(நன்றி: தோழர் புகழேந்தி முருகு)

பத்திரிக்கை தொலைக்காட்சி பாஜக அரசியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக