திங்கள், 10 பிப்ரவரி, 2020

ராஜீவ் காந்தி மரணம் ஜெயலலிதா வெல்ல உதவியதா இல்லை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:57
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வசந்தன்

நாமும் 1993 க்கு முன்பாக எதையும் பேச வேண்டாம் என்று பார்த்தால் திமுக நண்பர்கள் எதையாவது பேசி மற்றவர்களை பழைய தகவல்களை எடுக்க வைத்து விடுகிறார்கள். 
இதோ தேதிவாரியாக எல்லோரும் தகவல்கள் கொடுக்கிறார்கள்.

1989 ஜனவரி - சட்டமன்றத் தேர்தல்
அதிமுக ஜெ, ஜா என்று பிளவு
திமுக 150 இடங்களில் வெல்கிறது

1989 பிப்ரவரி
ஜெ ஜா அணிகள் ஒன்றாக இணையும் வேலைகள் நடக்கின்றன. 
ஜெயலலிதா சார்பாக சசிகலா நான்கு முறை ஜானகி அம்மையாரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 
இரு பக்கமும் பேச்சுவார்த்தை நடந்து கட்சி ஒன்றாகிறது. 
ஜெயலலிதா தலைமைப் பொறுப்புக்கு வருகிறார்

1989 நவம்பர் - பாராளுமன்றத் தேர்தல்
அதிமுக அணி 38 இடங்களில் வெற்றி
திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லை. 
திமுக அணியில் சிபிஐ மட்டும் ஒரே ஒரு இடத்தில் வெற்றியடைகிறது

1990 ஜூன் - பத்மநாபா மரணம்

1991 ஜனவரி - திமுக ஆட்சி கலைப்பு
புலிகளைக் காரணம் காட்டி கலைக்கிறார்கள்.
 கலைப்பதற்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கிறது. 
கவர்னர் மறுக்கிறார். இருந்தாலும் கலைக்கிறார்கள்.
ஆக உண்மையில் கலைக்கப்பட்டது ஈழப் பிரச்சினைக்காக அல்ல. 
வழக்கம்போல ஈழப் பிரச்சினையின் மீது பழி போட்டு டில்லி, திமுக ஆட்சியைக் கலைக்கிறது. 
உண்மையில் திமுகவினர் கலைப்பதற்கு நெருக்குதல் கொடுத்த காங்கிரஸ் மீதுதான் கோபம் அடைய வேண்டும்

1991 மே - ராஜீவ் மரணம்

1991 ஜூன் - சட்டமன்றத் தேர்தல்
அதிமுக வெற்றி பெறுகிறது. 
அந்தத் தேர்தலிலும் ராஜீவ் மரணத்திற்குக் காரணம் திமுக என்று காங்கிரஸ் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. 
மரணமடைந்த ராஜீவின் படங்களை ஒட்டி வாக்கு கேட்கிறது. 
திமுக தோற்றுப் போகிறது.
 இப்பவும் திமுகவினர் யார் மீது கோபப்பட வேண்டும்? 
மரணத்திற்குக் காரணம் திமுக என்று பொய்ப் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் மீதா இல்லையா?

சரி, 2ஜி வழக்கில் என்ன நடந்தது? காங்கிரஸ் ஆ.ராசவைக் கைவிட்டது. 
அவர் மட்டுமே குற்றவாளி போல் காட்டியது. அறிவாலயத்திற்குள்ளே சிபிஐ யை அனுப்பி திமுகவின் இமேஜை டேமேஜ் செய்தது. இப்பொழுதும் திமுகவினர் யார் மீது கோபப்பட வேண்டும்? காங்கிரஸ் மீதுதானே?

ஆனால் திமுகவினர் காங்கிரசை விட்டுவிட்டு ஊரில் உள்ள அனைவரையும் திட்டுகின்றனர். ஈழ மக்களைத் திட்டுகின்றனர். 
தங்கள் தோல்விக்குக் காரணம் புலிகள் என்று புலிகளைத் திட்டுகின்றனர். எல்லோரையும் திட்டுகின்றனர். நடந்தது என்ன?

காங்கிரஸ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் அழித்தது. அதன் பெயரைச் சொல்லி திமுகவையும் தோற்கடித்தது.

சுருக்கம்:
பிரிந்து கிடந்த அதிமுக ஒன்றான உடனேயே 1989 நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுகவால் ஒரு இடத்தில்கூட வெற்றியடைய முடியவில்லை. அப்பொழுது பத்மாநாபாவும் உயிரோடு இருந்தார். ராஜீவும் உயிரோடு இருந்தார்.

அனுதாப அலை அதிமுக பிளவு சசிகலா தேர்தல் திமுக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக