திங்கள், 10 பிப்ரவரி, 2020

முருகன் வாகனம் யானை இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 6 ஆக., 2018, பிற்பகல் 5:27
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# முருகனின் வாகனம் யானை
# குறுந்தொகை (பாடல் 1)
கவிஞர்: திப்புத் தோளார்
திணை: குறிஞ்சி
துறை: தோழி, கையுறை மறுத்தல்
“செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பில் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே”
பொருள்;-
போர்க்களத்தில் எதிரிகளை மிதித்துத் தேய்த்து களத்தை சிவப்பாக்கிய குருதி தோய்ந்த தந்தத்தை உடைய யானையைத் தன் வாகனமாய் வைத்திருக்கும் முருகன் (சேயோன்) மலையில் எங்களுக்கு நிறைய காந்தள் பூக்கள் கிடைக்கும்...ஆகவே தலைவா நீ கொண்டு வந்த பூவை நீயே வைத்துக் கொள்...

கடவுளர் மதம் குறிப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக