|
வெள்., 17 ஆக., 2018, முற்பகல் 10:25
| |||
விசயக்குமார் கோவிந்தன்
அந்தக் காலத்தில், மன்னர்கள் தங்களின் கோட்டைகளைப் பாதுகாக்கப் பலவிதமான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.
அவற்றில் முதலாவது, கோட்டைக்கு வெளியே ஓடும் ஆழமான அகழி - அதில் நீந்தித் திரியும் பசித்த முதலைகளைத் தாண்டினால்தான், கோட்டையை நெருங்கவே முடியும் !
அகழியை அடுத்து, கோட்டையின் மதில் சுவரில் பொருத்திய அயில் கதவம், எயில் கதவம் ஆகிய கதவுகளைச் சந்திக்கவேண்டும்.
'அயில்' என்பது ஈட்டி அல்லது சூலாயுதத்தைக் குறிக்கிறது - கோட்டையின் வெளிச்சுவரில் பொருத்தப்பட்டுள்ள இந்தக் கதவில், நெருக்கமாய்ப் பல ஈட்டி முனைகள் பொருத்தப்பட்டிருக்கும் - முள் படுக்கையைப்போல.
கதவில் ஈட்டி முனைகளைப் பொருத்துவதால் என்ன பயன் ?
எதிரி நாட்டுப் படையினர், தங்களின் யானைகளைக் கொண்டுவந்து இந்தக் கதவின்மீது மோதித் திறக்க முயன்றால், கதவில் உள்ள ஈட்டி முனைகள், யானைகளின் முகத்தில் குத்தும், வலி பொறுக்கமுடியாமல், யானைகள் ஓடிப்போய்விடும் !
ஒருவேளை, இந்த அயில் கதவத்தைத் திறந்து, உள்ளே நுழைந்துவிட்டால், கோட்டையில் உள்புறச் சுவரில், 'எயில் கதவம்' என்ற இன்னொரு வலுவான கதவு காத்திருக்கிறது, இதையும் திறந்தால்தான், கோட்டையினுள் நுழையமுடியும் !
இப்படிப் பாதுகாப்பான ஏற்பாடுகளை, பெரும்பாலான மன்னர்கள் செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால், கொடுமையான, கோபம் மிகுந்த வேலைக் கொண்ட எங்கள் தலைவன் சோழனின்மீது பகை கொண்ட மன்னர்களை, இந்த ஏற்பாடுகள் எவையும் காப்பாற்றமுடியாது !
சோழனின் போர் யானை, யுத்தக் களத்தினுள் மின்னலெனப் பாய்கிறது, அயில் கதவத்தின்மீது பாய்ந்து, அதை உலுக்கித் திறக்கிறது, அதே வேகத்தில் உள்ளே நுழைந்து, வலிமையான எயில் கதவத்தைத் தன்னுடைய தந்தங்களால் குத்திப் பிளந்துவிடுகிறது.
கதவுகள் திறந்ததும், இரு நாட்டு வீரர்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் கடுமையான போர் தொடங்குகிறது. அவற்றினிடையே, சோழனின் போர் யானை கம்பீரமாய் நிற்கிறது. அதன் தந்தத்தில் குத்திய கதவு, அங்கேயே சிக்கிக்கொண்டிர
ுக்கிறது.
கடல்போல் பரந்து விரிந்த படைகளிடையே, இந்த யானையும், கதவும் தனித்து நிற்கிற காட்சியைப் பார்க்கும்போது, பனிக்கடலில், ஒரு பாய்மரக் கலம், ஓய்ந்து நிற்பதுபோல் தெரிகிறது !
அயில்கதவம் பாய்ந்துஉழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயில்கதவம் கோத்துஎடுத்த கோட்டால் பனிக்கடலுள்
பாய்ந்துஓய்ந்த நாவாய்போல் தோன்றுமே; எம்கோமான்
காய்சினவேல் கிள்ளி களிறு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக