திங்கள், 10 பிப்ரவரி, 2020

குடகு தமிழர் தொடர்பு பண்டிகை ஆடி18 பொன்னேர் கார்த்திகை விழா

aathi1956 aathi1956@gmail.com

திங்., 20 ஆக., 2018, பிற்பகல் 12:00
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்

குடகர்களும் தமிழர்களும் ஒன்று போல கொண்டாடும் விழாக்கள்
1. புத்தாண்டு
2. ஆடி18
3.கார்த்திகை தீபம்


குடகு நாட்டு மக்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை... நம்மைப் போலவே கார்த்திகை விளக்கீடு தான் மிக உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இது அவர்களின் அறுவடை திருநாள். மனைகளெங்கும் விளக்குகள் ஏற்றி, பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர்...
# கார்த்திகை_விளக்கீடு # குடகு
# புத்தரி

குடகு நாட்டு மக்களும் நம்மைப் போலவே ஆடி 18 கொண்டாடுகின்றனர்.... ஆனால் ஒருமாதம் கழித்து ஆவணி 18ஆக!!!!! மகாபாரத போர் முடிந்து ஆயுதங்கள் கழுவுவதாக இங்கே கதை.... ஆனால், குடகில் உழவை தொழிலை காட்டு விலங்குகளிடமிருந்து காக்க ஆயுதங்களை கழுவி சுத்தம் செய்து பூசனை செய்கின்றனர்!!!
ஆக, நம்முடைய ஆடி18ம், உழவு தொழிலை காக்க காட்டு விலங்குகளை அடித்துவிரட்ட ஆயுதங்களை தயார் செய்யும் திருநாளாகவே இருத்தல் வேண்டும்!!!
# ஆடி18 # குடகுு

குடகு நாட்டு மக்களும் நம்மைப் போலவே சூரிய புத்தாண்டான வருடைப் பிறப்பன்று, பொன்னேர் பூட்டி உழவு தொடங்குகின்றனர்...
# புத்தாண்டு # பொன்னேர் #குடகு
# கொடுவா

கோடவா கோடகர் மண்மீட்பு தொடர்பு பழங்குடி காவிரி காவேரி தலைக்காவிரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக