aathi1956<aathi1956@gmail.com> | 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 11:31 |
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com> | |
Rajasubramanian Sundaram Muthiah,
இடுகையைப் பகிர்ந்துள்ளார் — Mathi Vanan மற்றும் 47 பேர் உடன். தமிழ்நாட்டுத்தெலுங்கர்: நான் உணர்வால் தமிழன். தமிழர்: அப்போ உணர்வை உள்ளுக்குள்ளே வச்சுக்க வேண்டிதானே? எதுக்கு வெளியே சொல்ற? எதுக்கு என்று அறியனும் என்றால் கீழுள்ள பதிவை பார்க்கவும். கூர்ங்கோட்டவர் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளில் முக்கியமான ஒன்று காலகாலமாக இங்கிருக்கும் தெலுங்கர்களை தமிழர்கள் எனச்சொல்ல வேண்டும் என தொடர்ந்து தமிழ்த்தேசியர்களை கட்டாயப்படுத்துவது ஆகும். ஆனால் உலக நடைமுறை ஒன்றும் அப்படி இல்லை. உதாரணத்துக்கு சீனாவை எடுத்துக்கொள்வோம். தமிழ்நாட்டில் பிறமொழியினரான விஜயநகர அரசு படையெடுப்பதற்கு முன்பாகவே சீனாவை மஞ்சுக்களும் மங்கோலியர்களும் கைப்பற்றினர். அது வரலாற்றில் 1236ஆம் ஆண்டாக பொறிக்கப்பட்டுள்ளது. 2010 கணக்கெடுப்பில் சீனாவின் மக்கட்தொகை 133 கோடிக்கு சற்று அதிகமாகும். அதில் 94 விழுக்காடு பெரும்பாலும் ஹான் சீனப்பூர்வக்குட ிகளும் மற்ற சீனப்பழங்குடிகளும் ஆவர். ஆனால் வந்தேறியவர்களான மஞ்சுக்களும் மங்கோலியர்களும் 1.3 விழுக்காடு உள்ளனர். அதாவது 1 கோடியே 64 லட்சம் பேராவர். 1236ஆம் ஆண்டிலேயே மஞ்சுக்களும் மங்கோலியரும் சீனாவில் படையெடுத்து வென்று வந்தேறிவிட்டாலும் இன்றும் அவர்கள் தங்களை மஞ்சுக்கள் என்றும் மங்கோலியர் என்றுமே அழைத்துக்கொள்கின்றனர். மஞ்சுக்கள் பலர் துங்குசிய மொழிகளையும் மங்கோலியர்களில் பலர் மங்கோலிய மொழியையும் அறியாது ஹான் சீனமான மாண்டரின் சீனத்தை தான் பேசி வருகின்றனர். ஆனால் என்றும் அவர்கள் தங்களை சீனர் என்றோ ஹான் சீனர் என்றோ சொல்லிக்கொண்டதி ல்லை. ஆனால் தமிழ்நாட்டில் 1371ஆம் ஆண்டு படையெடுத்து மதுரையை டெல்லி சுல்தானிய வந்தேறிகளிடம் இருந்து கைப்பற்றிய விஜயநகர வந்தேறிகள் பகுதி பகுதியாக தெலுங்கர்களையும் கன்னடர்களையும் தமிழ்நாட்டில் உட்புகுத்தினர் என்பதே உண்மை. 1236ஆம் ஆண்டு சீனாவில் வந்தேறிய மஞ்சுக்களும் மங்கோலியரும் கூட சீனாவில் மக்களாட்சி மலர்ந்து சீனர்களுக்கு அதிகாரம் கைமாறிய பிறகும் கூட தங்களை மஞ்சுக்கள் மங்கோலியர் என அழைத்துக்கொள்ளு ம் வேலையில் அவர்களுக்கு இரு நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வந்தேறிய பிறமொழியாளர்கள் தங்களை தமிழர்னும் ஆதித்தமிழர்னு தெலுங்கு பேசும் தமிழர்னும் சொல்லிக்கொள்ளும் காரணம் என்ன? என்ன என்றால் விஜயநகர ஆட்சியில் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை மக்களாட்சிக்கு மாறிய பிறகும் இன்னும் தெலுங்கு கன்னடர்களே அனுபவித்து வருவது தான். டெல்லி சுல்தான்கள் படையெடுத்து வந்தாலும் இன்று அவன் கையில் ஆட்சி இல்லை. பரங்கிப்பய படையெடுத்து வந்தாலும் அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இல்லை. சீனாவை மங்கோலிய மஞ்சுக்கள் படையெடுத்து வென்றாலும் அது முடியாட்சி காலத்தோடு முடிந்துவிட்டது. இன்று மக்களாட்சி காலத்தில் சீனாவின் அதிகாரம் சீனர்களுக்கே. ஆனால் தமிழ்நாட்டில் முடியாட்சி காலத்தில் படையெடுத்து வென்றது தெலுங்கு கன்னடருக்கு சரியாகவே கூட இருக்கலாம். ஆனால் மக்களாட்சி மலர்ந்த பிறகும் அதிகாரத்தை தெலுங்கு கன்னடர்களுக்கே தமிழர்கள் விட்டுக்கொடுக்கனும் என்று தமிழர்களை கேட்க பிறமொழியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உலகெங்கும் குடியேறிய தமிழர்கள் தங்கள் தமிழர் என்ற பெயரில் முன்னொட்டாக அந்தந்த பகுதியின் நிலப்பெயரைத்தான் போடுகின்றனர். மாறாக அங்கு வாழும் பூர்வக்குடி பெயரை முன்னொட்டாக சொல்வதில்லை. உதாரணத்துக்கு மலேசியத்தமிழர் என்றால் மலேசியா என்பது நிலம். தமிழர் என்பது இனம். மலேசியாவின் பூர்வக்குடிகள் மலாய். ஆனால் மலேசியா வாழ் மக்கள் தங்களை மலேசியத்தமிழர் என்று சொல்லிக்கொண்டரே ஒழிய மலாய் மக்கள்னு சொல்லிக்கொண்டதில்லை. நியூசிலாந்துத்தமிழர் என்பதில் நியூசிலாந்து நிலம். தமிழர் இனம். நியூசிலாந்து பழங்குடிகள் மாவோரி. நியூலாந்து வாழ் தமிழர்கள் தங்களை நியூசிலாந்து தமிழர் என்கின்றனரே ஒழிய மாவோரிகள்னு சொல்வதில்லை. அமெரிக்கத்தமிழர் என்பதில் அமெரிக்கா நிலம். தமிழர் இனம். அமெரிக்க பூர்வக்குடிகளின் பொதுப்பெயர் செவ்விந்தியர். அமெரிக்கா வாழ் தமிழர் தன்னை அமெரிக்கத்தமிழர்னு சொல்லிக்கொள்வார்களே ஒழிய செவ்விந்தியர்னு சொல்லிக்கொண்டதில்லை. அதனால் தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியாளர்கள் தங்களை வேறுபடுத்தி காட்டிக்கொள்ள தமிழ்நாட்டுத்தெலுங்கர் தமிழ்நாட்டுக்கன்னடர் தமிழ்நாட்டு மலையாளி தமிழ்நாட்டு பட்டாணின்னு சொல்லிக்கொள்ளலா மே ஒழிய தமிழர்னு என்றும் சொல்லிக்கொள்ளாதீர்கள். தமிழ்த்தேசியர்களுக்கு ஆதரவு அளித்து வரும் ராஜசங்கர் ரெட்டி, அரிபிரசாத் ஜங்கமா போன்றோர் தங்களை தெலுங்கர் என்றே சொல்லித்தான் தமிழர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அதேபோல் நீங்களும் இருங்கள்.
இல்லை நாங்க அப்படித்தான் சொல்லுவோம்னு சொல்லிக்கொண்டிருந்தால் உங்களிடம் இருந்து அடித்து பிடித்து தான் அதிகாரத்தை நாங்கள் கைப்பற்ற நேரிடும். அப்புறம் குய்யோ முய்யோன்னு கத்திக்கிட்டு இருந்தா நாங்க பொறுப்பேற்க முடியாது. - தென்காசி சுப்பிரமணியன் ( Rajasubramanian Sundaram Muthiah )
Aathimoola Perumal Prakash
///தமிழ்த்தேசியர்களுக்கு ஆதரவு அளித்து வரும் ராஜசங்கர் ரெட்டி, அரிபிரசாத் ஜங்கமா போன்றோர் தங்களை தெலுங்கர் என்றே சொல்லித்தான் தமிழர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்/// இது என்ன ஆச்சரியம்... ! தலைசுத்துதே...
அடையாளமறைப்பு நல்லதெலுங்கர்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக