வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நீதிக்கட்சி கொண்டுவந்த இடஒதுக்கீடு பட்டியல் சாதி பலன் மிக்குறைவு

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 6 ஜூலை, 2018, பிற்பகல் 12:29
பெறுநர்: எனக்கு
ஆனந்த பா ஸ்ரீநிவாஸ்
திராவிட புருடாக்களில் இது தான் பெரிய புருடா. நீதிக்கட்சி இட ஒதுக்கீட்டை கொண்டுவர வில்லை அதன் ஆட்சியில் வகுப்பவாரி பிரதிநிதித்துவம் முன்மொழியப்பட்ட
து இதன் பின்னணியே வேறு . பிரிட்டிஷ் அரசு அதன் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மாண்டேகு சேம்ஸ்போட்டு சீர்திருத்தத்தின் கீழ் இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை கொண்டு வந்த்து. அதாவது பிரிட்டிஷ் அரசு நேரடி அதிகாரத்திலும் பதவிகளில் இந்தியர்களும் இருப்பர். இந்த முறையில் நடைபெற்ற தேர்தலில் முதன்முதலில் நீதிகட்சி வென்று சென்னை மாகாண அரசை கைபற்றியது. அதிகார போட்டி சிக்கல்களை தவிர்க்க பிரிட்டிஷ் அரசே கொடுத்த ஐடியா தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம். நீதிக்கட்சியை சார்ந்த தணிகாசலம் செட்டியார் அதை முன்மொழிந்து தீர்மானம் கொண்டுவந்தார் அதிலும் பலே மோசடி தான். அதாவது பிரதிநிதித்துவமானது பிராமணர் , பிராமணர் அல்லாத இந்துக்கள் , இந்திய கிறித்துவர் , முகமதியர் , ஐரோப்பிய ஆங்கிலோ இந்தியர், ஏனையோர் என வகைபடுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மோசடியும் கூட தீர்மானத்தோடு சரி சட்டமாக்கப்பட வில்லை. இரண்டாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையும் இதே போல புஸ்வானம் தான். மூன்றாவது பொதுத்தேர்தலுக்கு பிறகு நீதிகட்சியின் ஆதரவோடு இயங்கிய சுயராஜ்ய கட்சியை சேர்ந்த முத்தையா முதலியார் ஒருவழியாக வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை வெளியிட்டார் அதிலும் வகுப்புவாரி நியமன உறுப்பினர்களில் எண்ணிக்கை மோசடி தான். பிராமணர்-2 பிராமணர் அல்லாத இந்துக்கள்-5 முகமதியர் -2 கிறித்தவர்-2 ஆங்கிலோ இந்தியர்-2 ஏனையோர்-2 என்பது தான்.
இந்த ஏனையோர் என்பதில் தான் பழங்குடியினர் , பட்டியல் சமூகத்தவர் எல்லாம் அடக்கம். மக்கள் தொகையில் பெரும்பான்மையான வகுப்பினருக்கு மோசடி செய்த இந்த அயோக்கிய தனத்தை தான் திராவிட கும்பல் இன்று வரை சாதனையாக சொல்லி ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றனர். திராவிட கும்பலை சேர்ந்த எவனாவது இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பற்றிய புள்ளிவிவரத்தை தருவானேன் ? வெறுமனமே தந்தை பெரியார் புடுங்கினார் என மேம்போக்கு பேசி உண்மையை சிந்திக்க விடாமல் செய்வதே சித்தமாக இருக்கின்றனர். திராவிட ஆட்சியாளர்களும் ஈவெரா வழி வந்தவர்கள் என்பதால் அவரை மேலும் மேலும் புனித பிம்பமாக்கி வைத்துள்ளனர்.

வகுப்புவாரி பிரநிநிதித்துவம் திராவிடம் ஜஸ்டிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக