|
வெள்., 13 ஜூலை, 2018, முற்பகல் 8:44
| |||
இந்த படத்தில் சாக்பீஸால் தரையில் என்ன எழுதியிருக்கிறார்கள் ?
ஒரு காலத்தில் (1992) ஜெய்தாபூர் அணுமின் நிலையத்தை வரவிடாமல் மஹாராஷ்டிரா கடற்கரையில் உள்ள ரத்னகிரி மாவட்டம், தாபோல் கிராம மக்கள் வெற்றிகரமாக தடுத்தார்கள். அந்த என்ரான் (Enron) என்ற அமெரிக்க நிறுவனம் பின்னாளில் ஊழல் செய்து திவாலாகிப்போனது.
லோகமானிய பாலகங்காதர திலக் பிறந்த ஊர் ரத்னகிரி.
ஆனாலும் மீண்டும் அரசாங்கம் இந்த திட்டத்தை ஒரு பிரஞ்சு கம்பெனிக்கு Areva) கொடுத்து, 2,400 குடும்பங்களை காலிசெய்து, மக்கள் மீது திணித்து, நில அபகரிப்பு செய்து (968 hectares) வெற்று நிலத்தை தேவுடு காத்து வருகிறது. 5 வருடமாக அறவழியில் போராடிய மக்களை ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி நுழைந்து வன்முறையாக மாற்றி துப்பாக்கி சூடுவரை கொண்டுவிட்டது. எந்த நேரத்திலும் இந்த அணுமின் நிலையம் கட்டப்படலாம்.
இதே ரத்னகிரி மக்கள்தான் 1992 ஆம் ஆண்டு வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை அங்கிருந்து வெற்றிகரமாக துரத்தியடித்தார்கள். இல்லையென்றால் தூத்துக்குடியைப்போல சட்காவன் (Zadgaon) என்ற ஊரை விழுங்கியிருக்கும்.
விதி ரத்னகிரியை சுற்றியே வருகிறது. ஒரு காலத்தில் பாண்டவர்கள் கொஞ்சகாலம் Viratnagari விராடநாகரியில் இருந்தார்கள். குருஷேத்திர போரிலும் இந்த வீரவத் ரேய் என்ற மன்னன் போரிட்டுள்ளான். என்ன சாபமோ ?
தற்போதைய அரசாங்கம், சவூதி அரேபியாவின் ஆராம்கோ (Aramco’s oil wells in Saudi Arabia) நிறுவனத்தின் மூலம் உலகிலேயே மிகப் பெரிய பெட்ரோலியம் சுத்தகரிப்பு தொழிச்சாலையை ரத்னகிரியில் கட்டவிருக்கிறது. இதற்க்கு 3 லட்சம் கோடி ருபாய் செலவாகும். இது கடனாக பெறப்படும். இதற்கான நில அபகரிப்பு போன மாதம் துவங்கிவிட்டது.
இந்த முறை ரத்னகிரி மக்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தமிழ்நாட்டில் அடிமை துரோகிகள் என்றால் இங்கே அனைவரும் ஊழல் துரோகிகள். எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பேதமில்லாமல் கொள்ளை அடிப்பார்கள். 95% சதவீத மக்களுக்கு பிடிக்காத ஒரு திட்டம் அரசியல் சூழ்ச்சி மூலம் திணிக்கப்படுகிறது.
ஏனெனில் இது இயங்கும்போது நாளொன்றுக்கு 12 லட்சம் பேரல் குரூட் ஆயிலை சாப்பிடும். பிறகு வாந்தி எடுக்கும். சுற்றுசூழல் பாதிக்கும். நிலத்தடி நீர் மாசுபடும். வெப்பமாகும். இது மக்களுக்கு தெரியும்.
நாற்பது வருடமாக பயிரிட்டு தனக்கென ஒரு சந்தையை பிடித்துள்ள அல்போன்சா மாறும் ரத்னகிரி மாம்பழங்கள் முற்றிலும் அழிந்துவிடும். இப்படித்தான் அந்த ஊரில் உள்ள ரானேவின் தந்தையார் 40 வருடங்களுக்கு முன்பு நட்டு வளர்த்த 350 மாமரங்கள் அந்த குடும்பத்துக்கு வருடம் 15 லட்ச ரூபாயை வருமானமாக கொடுக்கிறது. இனிமேல் ரானே என்ன செய்யப்போகிறான்? தெரியாது. அது ஒரு கூட்டுக்குடும்பம்.
இதேபோல 8000 குடும்பங்கள் உள்ளன. இந்த மாம்பழத்தை நம்பி, நேபாளிகள் மட்டும் 1.2 லட்சம்பேர் வேலைசெய்கின்றனர். இவர்களுக்கு வேலை போகும். விஜயதுர்க் என்ற ஊரில் கோயில், குளம்,பள்ளிகள், வீடுகள், கோட்டைகள் எல்லாமே போகும்.
சிவாஜி மகராஜ் இந்த கோட்டையை 1653ல் பிஜப்பூர் ஆதில்ஷா விடமிருந்து கைப்பற்றி விஜயதுர்க் என்று பெயர் சூட்டினார்.
இந்த அரசாங்கத்துக்கு சிவாஜியாவது, திலகராவது, கோட்டையாவது, கோயிலாவது....மண்ணாங்கட்டி.
வரப்போகும் நானார் (Nanar) எண்ணெய் சுத்தகரிப்பு மையம் 15000 ஏக்கரையும் 12.3 லட்சம் மாமரங்களையும் விழுங்கிவிடும். அரசாங்கம் 64000 மரங்கள் என்று சொல்கிறது, ஏனெனில் கால்குலேட்டர் மூலம் ஹெக்டேருக்கு 100 மரங்கள் என்று உத்தேசமாக கணக்கிட்டுள்ளனர்.
கடற்கரையிலும் (Vijaydurg) புதிய துறைமுகம் கட்டப்படும். Ratnagiri Refinery and Petrochemicals Complex Limited (RRPCL). பல்வேறு எண்ணெய் குழாய்கள் 35 கிலோமீட்டருக்கு கடலுக்குள்ளும் வெளியிலும் பதிக்கப்படும்.
எண்ணெய் கசிவு மிதந்துவரும். பக்கெட்டால் அள்ளப்படும். மீன்கள் செத்து விழும். அல்லது உணவே விஷமாகும்.
போராட்டத்துக்கு முடிவு இல்லை. ஆனால் துவக்கம் இருந்தது.
இந்த படத்தில் சாக்பீஸால் தரையில் என்ன எழுதியிருக்கிறார்கள் ? "நாங்கள் நானார் திட்டத்தை எதிர்க்கிறோம்" என்று சாலையில் எழுதிவைத்துள்ளார்கள் அந்த மக்கள்.
இப்போதைக்கு முடிந்தது இவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக