செவ்வாய், 3 ஜூலை, 2018

பாத் என முடியும் ஊர்ப்பெயர் பதி வேர்ச்சொல்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 23
பெறுநர்: எனக்கு

Nakkeeran Balasubramanyam
'பதி' என்பதற்குத் தங்குதல், வதிதல் (வசித்தல்) (To settle down, to dwell) என்றும் பொருளிருக்கின்றன. இந்தப் பொருளிலேயே 'மதுரையம்பதி, தில்லையம்பதி, திருப்பதி' போன்று இன்னும் பலவுள. "பதியெழுவறியாப் பழங்குடிகள்" என்று சிலப்பதிகாரத்தி
ல் கூறப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத் தக்கதே.
Abode என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் வதிவிடம், வசிப்பிடம்கூட இச்சொல்லினடியே பிறந்ததே. அவ்வளவு ஏன், நிசாமாபாத், நிசாபராபாத், ஐதராபாத், சிக்கந்தராபாத் (செகந்தராபாத்) அகமதாபாத், அபோதாபாத், ஔரங்காபாத், இசுலாமாபாத் போன்று 'பாத்' என முடியும் பெயர்களைக் கொண்ட எந்த நகரமும் இந்தப் 'பதி' எனும் சொல்லை இணைத்துப் பிறந்தவையே.
இதில் 'பாத்' என முடியும் இந்த நகரப் பெயர்களை, 'ஆபாத்' எனப் பிரித்து, அதாவது நிசாமாபாத் என்பதனை நிசாம் + ஆபாத் (பாரசீக மொழியில் ஆபாத் என்றால் 'நிறுவப்பட்ட' என்று பொருளுண்டு) என்று பிரித்து, நிசாமால் 'நிர்மாணிக்கப்ப
ட்ட' (நிறுவப்பட்ட) நகரம் எனப் பொருள் கூறுதல் பொருத்தமற்றதாகவ
ே படுகிறது. நிசாம் + பாத் (பதி) என்பதை இணைக்கையில் அஃது நிசாமாபாத் (நிசாம் + ஆ + பாத்) என நீட்டிக்கப் பெறுவது இயற்கையே! பதி எனும் சொல்லே நகரைக் குறிக்கையில் ஆபாத் எனக் கூறுவது, அதாவது 'நிசாமால் நிர்மாணிக்கப்பட்டது' எனும் பொருள் தரும் சொல், அவரால் நிறுவப்பட்ட எதையும் குறிக்கலாம்தானே? ஆக, வதிவிடம் எனும் பொருளுடைய 'பதி' எனுஞ் சொல்லே இங்கு பொருத்தமானதாகப் படுகிறது.
இசுலாமாபாத் எனும் நகரை இசுலாம் நிறுவியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

துளிநசைப் புள்
ஐயா வைகுண்டர் வழிபாட்டில் அடங்கும் தாங்கல்கள் 'பதி' என்றே குறிக்கப்படுகிறது.
சுவாமித்தோப்பு பதி
அம்பலப்பதி
முட்டப்பதி
பூப்பதி....
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 50 நிமிடங்களுக்கு முன்பு
Nakkeeran Balasubramanyam
பதி என்பதற்குப் பல பொருளுண்டு நண்பரே. பாதம் என்பதும் (பதித்தலால் பாதம் எனப்பட்டது) ஒரு பொருளே!
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 49 நிமிடங்களுக்கு முன்பு
Mathi Vanan
மக்கள் பதிந்து வாழும் இடம் பதி.
நகர்வது நகர்?
ஊர்ந்து நிலைப்பட்டது ஊர்?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 26 நிமிடங்களுக்கு முன்பு
Mathi Vanan
வகரம் வடக்கு செல்ல செல்ல பகரமாகிறது. அவர்கள் ஆதிக்கம் உருவாகும்போது, ஊர் புர் ஆகிறது.
காஞ்சிவரம் > காஞ்சிபுரம்
நாக்புர் கான்புர் இதெல்லாம்.நாக ஊர் கான ஊர் ஆக இருந்திருக்குமோ?
பட்டி எல்லாம்.பேட் பட் ஆக திரிந்திருக்குமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக