செவ்வாய், 10 ஜூலை, 2018

மியான்மர் தமிழ்மொழி தொடர்பு வேர்ச்சொல் எழுத்துரு பர்மா தமிழி

aathi1956 aathi1956@gmail.com

பிப். 26
பெறுநர்: எனக்கு
தூய தமிழ்ச்சொற்கள்

மியன்மார் பயணக் குறிப்புகள்.

மியன்மாவிற்கு சென்றிருந்தபோது முகநூல் நட்பில் இருக்கும் ஐயா இரா. உலகநாதன் அவர்களின் அழைப்பை ஏற்று பிலிகான் கிராமத்திற்கு தம்பிகள் அமுதன், விஜேய் மற்றும் அகத்தியனுடன் சென்று அவரை சந்தித்தேன். சோழ அரசர்களுக்கும் மியன்மா நாட்டிற்கும் உள்ள பல அரிய செய்திகளை அவர் நம்மோடு பகிர்ந்துக்கொண்டார். அனைத்து வரலாற்று, பண்பாட்டு, மொழி செய்திகளும் நம்மை வியக்க வைத்தது. அன்றுமுதல் இன்றுவரை மியன்மா நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் நிலவி வருவதை ஐயா இரா. உலகநாதன் அழகாக நம்மிடம் எடுத்துரைத்தார்.
"தமிழ் மொழிக்கு எழுத்துருவில் ஏறத்தாழ 2500 ஆண்டு வரலாறு இருக்கிறது. பேச்சுருவில் ஏறத்தாழ 5000 ஆண்டுப்பழக்கம் இருக்கிறது. மியன்மார் என்கிற பர்மிய மொழி தமிழ்மொழிக்கு அந்நிய மொழி அல்ல. தமிழிலிருந்த பிரிந்த ஒரு கிளை மொழிதான் பர்மிய மொழி” - ஐயா இரா. உலகநாதன்.
உண்மையிலேயே நமது தாய்மொழி நம் அனைவரையும் வியக்கவைக்கிறது. இதை இக்கால தலைமுறையினருக்கு நாம் எடுத்து சொல்ல வேண்டும்.
சனி, 09:06 AM க்கு

மூத்தகுடி முதல்மொழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக