ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
2017-12-13@ 12:44:40 புதுடெல்லி: ராமர் பாலம், கட்டுக்கதை அல்ல என்றும் அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்றும், கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகள் இப்படி பாலமாக தோன்றியதாகவும் மற்றொரு சாரார் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர். ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறுகையில், ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று அவர் கூறியுள்ளார். Tags: ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அமெரிக்க விஞ்ஞானிகள் ramar bridge american scientist adam bridge
Sent from my Samsung Galaxy smartphone.
Last updated : 18:52 (14/12/2017)
`ராமர் பாலம் கட்டுக்கதையல்ல..!’ - விளக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள் ரா மேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. இது மனிதர்களால் கட்டப்பட்டிருப்பது உண்மைதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புராணங்களின்படி வானர படையினரால் ராமர் பாலம் அமைத்ததாகக் கூறப்படுகிறது.இந்தியாவிலிருந் உருவாக்கப்பட்டதுதான் இப்பாலம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ராமர் பாலம் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவிருந்தனர். ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது என்று ஒருத்தரப்பினரும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இந்நிலையில், `ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். இது கட்டுக்கதையல்ல’ என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்றுஅகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியதாவது: ``ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால், அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை'' என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் இ.லோகேஷ்வரி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக