புதன், 14 பிப்ரவரி, 2018

கேட்டலோனியா விடுதலை அறிவிப்பு ஸ்பெயின் சர்வாதிகாரம் தனிநாடு உலக இனங்கள்

aathi tamil aathi1956@gmail.com

29/10/17
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
# கட்டலுனியா (Catalonya) மாநில பாராளுமன்றம் கட்டலுனியாவை
# தனிநாடாக " அறிவித்துக் கொண்ட பிறகு, நேற்று # ஸ்பெய்ன் பாராளுமன்றம்
கட்டலுனியா மாநிலத்தின் "தன்னாட்சி" அதிகாரங்களை நீக்கிவிட்டு,
கட்டலுனியா மாநிலத்தை ஸ்பெய்ன் துணை பிரதமரின் நேரடி ஆட்சிக்குக் கீழே
கொண்டு வந்திருக்கிறது... (இங்கு குடியரசு தலைவர் ஆட்சி மாதிரி)...
கட்டலுனியா விடுதலையை முன்னெடுக்கும் தலைவர்கள் "அமைதி வழியில் மக்கள்
போராட்டங்கள்" நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள்...
கட்டலுனியா"வில் நடப்பதை தொடர்ந்து கவனியுங்கள். ஏனென்றால், சமகாலத்தில்
தமது கண்முன்னே, ஒரு இன மக்களின் தனிநாடு கோரிக்கைக்காக பொது
வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள்..
அதற்குப்பிறகு,
பாராளுமன்றத்தில் (நமது மாநில சட்டமன்றம் மாதிரி) தீர்மானம் நிறைவேற்றி
இருக்கிறார்கள்...
அதற்குப் பிறகும்,
அந்த நாட்டு நீதிமன்றமும் பாராளுமன்றமும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி
ஆட்சியைக் கலைத்து, மாநிலத்தை நேரடி அதிகார வரம்பிற்குள் கொண்டு
வந்திருக்கிறது. ஆனாலும், இதுவரை ஐநா-வோ, அல்லது, மக்களாட்சி பற்றி
பெருமையாக பேசும் எந்தவொரு நாடுமோ இதைப்பற்றி எதுவும் பேசாமல்
இருக்கிறார்கள்....
சமகால சர்வதேச அரசியலை கவனியுங்கள்....
என்னென்ன பிரச்சினைகள் வரும், அதை "கட்டலுனியா" தலைவர்கள் எப்படியெல்லாம்
கையாளுகிறார்கள் என்பதை கவனியுங்கள்....
வரலாறு தான் நமது ஆசான்......
1 மணி நேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக