புதன், 7 பிப்ரவரி, 2018

விளைநிலம் அரசு கடன் தருவதில்லை வீடு கட்ட மட்டுமே கார்ப்பரேட் சாதகம்

aathi tamil aathi1956@gmail.com

25/10/17
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah
நேத்து புதியக்கொலைமுறை
த்தொல்லைக்காட்சியில் பாலபாரதி கம்யூனிசம் எதற்காக இந்தியாவில்
புகுத்தப்பட்டதுன்னு மறைமுகமா சொன்னாங்க.
பிஜேபி ஆள் ஒருத்தன் செத்தவர் தன் தேவைக்கு மீறி கந்துவட்டிக்கு அவ்வளவு
பணம் ஏன் வாங்குனார்னு கேட்டான். பதிலுக்கு அம்பானி அதானி போன்ற
வணிகர்களுக்கு மட்டும் வாராக்கடன் இருந்தும் ஏன் அள்ளி அள்ளி
கொடுக்குறீங்கன்னு அங்கேயே கேட்கப்பட்டது.
காவல்துறை அதிகாரி ஒருவர் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றார்.
விழிப்புணர்வு இருந்ததால் தான் காவல்துறை, இ.ஆ.ப. அலுவலகங்களுக்கு
கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் வந்தார்கள்ன்னு அங்கேயே பதில்
கொடுக்கப்பட்டது.
வங்கி அதிகாரி ஒருத்தர் 1990களில் பல அரசு உதவி வங்கிகள் திறக்கப்பட்டன
என்றும் 2004ல் இருந்து அரசு நிதி வங்கிகள் பல மூடப்பட்டதுன்னும்
சொன்னார்.
கம்யூனிசுட்டு பால பாரதி தொழிற்சாலைகளை அரசுகள் திறக்காதது தான் இந்த
தற்கொலைக்கு காரணம் என்றார்.
இதில் பிஜேபிகாரனும் காவல்துறை அதிகாரியும் சொன்னது சரியில்லைன்னு
எல்லாரும் அறிந்ததே. ஆனால் வங்கி அதிகாரி சொன்னதும் பால பாரதி சொன்னதும்
நல்லது போல் தெரிந்தாலும் அவர்களும் பிஜேபி சொல்வதையே வேறு மாதிரி
சொன்னார்கள்.
வங்கி அதிகாரி அரசு நிதி வங்கிகள் பல மூடப்பட்டதுன்னு சொன்னாரே ஒழிய
மானாவரி விலைநிலம் வாங்க அரசு வங்கிகள் கடன் தருவதில்லை என்று எங்கும்
சொல்லவே இல்லை. அரசு வங்கிகள் இப்போ வீடு வாங்கும் கடனை தான் தருகிறது.
வீடுகளை அப்பார்ட்டுமென்டு பிளாட்டுகளாக விற்பதே அம்பானி அதானிகள் தானே
என்பதை வங்கி அதிகாரி சொல்ல மறந்துட்டாரான்ன
ு அவருக்குத்தான் தெரியும். வீட்டுக்கடன் வாங்கு அம்பானி அதானிக்கு
அடிமையாகும் வழியைத்தான் வங்கி அதிகாரி சொல்கிறார்.
பாலபாரதி தொழிற்சாலைகளை ஏன் அதிகம் தொடங்கவில்லைன்னு கேட்டாரே ஒழிய அந்த
கூலித்தொழிலாளிக்கு ஏன் மானவாரி பயிர் நிலம் வாங்க வங்கிக்கடன்
கொடுக்கவில்லைன்னு கேக்கலை. ஊழியனாக அம்பானி அதானிக்கு அடிமையாகும்
வழியைத்தான் பாலபாரதி சொல்லிருக்கார்.
1. ஆக பிஜேபிக்காரன் கந்துவட்டியில் அம்பானி அதானிக்கு அடிமையாகனும்னு சொன்னார்.
2. பாலபாரதி தொழிற்சாலைகளில் கார்ப்பரேட்டு அடிமையாய் அம்பானி அதானிக்கு
எப்டி ஆவதுன்னு சொல்லிருக்கார்.
3. வங்கி அதிகாரி வீட்டுக்கடன் மூலம் எப்படி அடிமையாகனும்னு சொல்லிருக்கார்.
அவ்வளவு தான் வேறுபாடு. முகமூடிக்கருத்தியல்களின் பெயரும் கட்சியும் தான்
மாறுகின்றனவே ஒழிய சராசரி குடிமகன் எப்டி அம்பானி அதானிக்கு அடிமையாவது
என்பதை மூவரும் விதவிதமாக சொல்லியுள்ளனர் என்பதே இவர்களிடமுள்ள ஒற்றுமை..
அதான் நான் சொல்கிறேன். முதலாளித்துவத்தின் முதன்மை பேக்கு ஐடி (Fake ID)
பொதுவடைமை. மறுப்பவர்கள் மாவோ ஆட்சியின் போது ஐந்து கோடி பேர் சீனாவில்
பட்டினி பஞ்சத்தால் இறந்த போது சீனாவில் இருந்து பல மில்லியன் டன்கள்
உணவு ஏற்றுமதி செய்தவர்களுக்கு அந்த பல மில்லியன் டன்கள் உணவு வாங்க
முதல் Capital எங்கிருந்து வந்தது என்ற என் கேள்விக்கு பதிலோடு வரவும்.

கடன் கந்துவட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக