திங்கள், 5 பிப்ரவரி, 2018

திருநெல்வேலி எழுச்சி துப்பாக்கிச்சூடு ஆஷ் முதல் வேலைநிறுத்தம்

aathi tamil aathi1956@gmail.com

23/10/17
பெறுநர்: எனக்கு
வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள்
கொந்தளித்தனர்.திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து
நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும்
சேதப்படுத்தப்பட்டன.மண்ணெண்ணெய் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு
நாட்கள் இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது.காவல்
நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் வ.உ.சி.
கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை.
கடைகள் மூடப்பட்டன. கோரல் நூற்பாலை மற்றும் "பெஸ்ட் அண்ட் க்ம்பெனி"
தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள், முடி
திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள்
போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல்
அரசியல் வேலை நிறுத்தம்.1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச்
19-ஆம் நாள் வரை நடைபெற்றது. பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக்
கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. காவல்துறையினர் துப்பாக்கிச்
சூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வை
திருநெல்வேலி எழுச்சி என்று கூறுகிறார்கள்.

போராட்டம் வஉசி தொழிலாளர் ஆங்கிலேயர் வாஞ்சிநாதன் கலவரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக