சனி, 10 பிப்ரவரி, 2018

முருகன் குழல் ஊதுபவன் திருமுருகாற்றுப்படை மாயோன் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

26/10/17
பெறுநர்: எனக்கு
Chembiyan Valavan , Viswanathan Chozhlan மற்றும் 10 பேருடன் இருக்கிறார்.
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் முதலாவதாக வைக்கப்பட்ட நூல்
திருமுருகாற்றுப்படை. தமிழில் இன்றிருக்கும் சமய இலக்கியங்களுக்க
ு எல்லாம் முந்தியது. மூத்தது. முத்தமிழ் முதல்வனான முருகனைப் பாடுவது.
முருகக் கடவுள் குன்றுதோறும் ஆடும் இயல்பைப் பாடும் பொழுது முருகனுக்கும்
குழலுக்கும் உள்ள தொடர்பை நக்கீரர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்
கொடியன், நெடியன், தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,
குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,
மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,
குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று
"குன்றுதோறு ஆடலும்"
=====================
அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக நக்கீரர் குறிப்பிட்டிருப்பது
குன்றுதோறாடல். இன்றைக்கு திருத்தணி ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடப்
பட்டாலும் உலகில் இருக்கும் குன்றுகளையெல்லாம் ஐந்தாம்படை வீடாகக்
குறிப்பிடுகிறார் நக்கீரர்.
அப்படி குன்று தோறும் இருக்கும் முருகனின் இயல்புகளை விளக்கும் வரிகளில்
ஒளிந்திருக்கிறது தமிழர்களின் இசையறிவு.
இந்த பாடலில் தமிழர் இசை அறிவு பற்றி குறிப்பிட்டு சொல்லும் பாடல் வரி
“குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்”.
======================================
குழலன் – குழல் வைத்துக் கொண்டிருப்பவன் என்று பொருள் அல்ல. குழல்
ஊதுவதில் மிகச் சிறந்தவன் என்று பொருள். அழகு நிறைந்தவனை அழகன் என்பது
போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.
கோட்டன் – கோட்டு வாத்தியம் என்னும் நரம்பிசைக் கருவியையும்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.அதில் சிறந்து விளங்கியவன் என்றும் பொருள்
கொள்ளலாம். இல்லை கோடு என்பது கொம்பினைக் குறிக்கும். ஊதுகொம்பினை
எக்காளம் என்றும் அழைப்பார்கள். அந்த இசைக்கருவியில் சிறந்தவன் முருகன்.
இன்னொரு பொருளாகவும் கொள்ளலாம்.
"***** குறும் பல்லியத்தன் ******"
=============================
மிகமிகக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டிய சொல்.
பல்லியம் = பல் + இயம். பலவிதமான இசைக்கருவிகளைக் கொண்டு இசை அமைப்பவன்.
அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் Orchestration என்று சொல்லப்படும் இசைக்கோர்ப்பு.
முருகன் ஒரு இசையமைப்பாளன், இசைக்கடவுள். இசை தொடங்குவதும் வளர்வதும்
அடங்குவதும் முருகனிடத்தில். அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக்
கொண்டாடியிருக்க
ிறது தமிழ்.
Orchestra என்ற சொல்லோ கருத்தோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்குலக
நாடுகளில் இருந்திருக்குமா என்பதே ஐயம். அந்த நிலையில் பல்லியம் என்ற
சொல் சங்கத்தமிழில் இடம் பெற்றிருப்பது தமிழிசை அந்தக் காலத்தில்
செழித்திருந்ததையே காட்டுகிறது.
பல்லியத்திலும் இரண்டு வகை உண்டு. குறும் பல்லியம். நெடும் பல்லியம். இவை
பல்லியத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் எண்ணிக்கையை வைத்துச்
சொல்லப்படுகின்றவை.
இசைக்கருவிகளை வைத்து இசையமைத்து விட்டார் முருகன். அவரே பாடியும்
விடுவார். ஆனால் Chorus வேண்டாமா? பின்னணியில் பலகுரல்கள் கூடியெழுந்து
முன்னணியில் பாடுவதைச் செறிவாக்க வேண்டாமா?
அதற்குதான் இருக்கிறார்கள் ”நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு”.
யாழ் முதலான இனிய நரம்பிசைக் கருவிகளைப் போன்ற இன்னொலி கொண்ட பாடகர்கள்
முருகனோடு இருக்கிறார்கள். முருகன் இசையமைக்கும் போது அவர்களும் கூடிப்
பாடுகின்றவர்கள்.
இந்த பாடல் வரிகளின் அர்த்தம் உலகின் முதல் இசை அமைப்பாளனாக முருகன்
இருந்து இருப்பாரோ என்று எழும் ஐயத்தை உருவாக்குகின்றது . .
20 அக்டோபர், 08:51 AM · பொது

வைணவம் மாலியம் திருமால் முருகர் சேயோன் வழிபாடு கடவுளர் இலக்கியம் மதம்
இசைக்குடி இசை இசைக்கருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக