சனி, 10 பிப்ரவரி, 2018

சுதந்திராபுரம் அகதி முகாம் ஈழத்தமிழர் ஓரளவு முன்னேற்றம் புதுக்கோட்டை

aathi tamil aathi1956@gmail.com

27/10/17
பெறுநர்: எனக்கு
ஜோதிஜி. திருப்பூர்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Submit #
அகதியா? அவலமா?
ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிரச்சனை, கலவரங்கள், கோரங்கள் என்று
தினசரிகளில் வாசித்து முடிக்கும் போது அப்போது எனக்கு உடனடியாக
நினைவுக்கு வருகின்றவர்கள் என்னுடன் ஆரம்பப் பள்ளியில் படித்த என் ஈழ
நண்பர்களே.
1980 ஆம் ஆண்டு தான் பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள். ஈழத்தில்
நடந்த கலவரங்களினால் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து பல இடங்களில்
வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நான் வாழ்ந்த கிராமத்திற்கு அருகே பலரும்
வந்து சேர்ந்திருந்தனர்.
இன்று வரையிலும் என் பழைய நண்பர்களை நினைத்துக் கொள்வதுண்டு.
ஒவ்வொரு சமயத்திலும் தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் ஈழத்தில் நடந்த
போர்களைப் பற்றி செய்திகளாக வரும் பொழுது இவர்களின் மனோநிலை எப்படி
இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. எத்தனை வருடங்கள் என்றாலும்
அவர்களின் “தொப்புள் கொடி உறவுகள்” குறித்து நினைத்துப் பார்ப்பார்களா?
அங்கு தங்கள் சொந்தங்கள் எப்படி இருப்பார்கள்? என்ற பதைபதைப்பு
அவர்களிடம் இருக்குமா? என்று யோசிப்பதுண்டு.
ஆனால் நான் படித்த பள்ளியின் தொடக்க வகுப்புகளில் ஒரு நாள் திடீர் என்று
பசங்களும் பொண்ணுகளும் திமுதிமுவென்று அத்தனை பெஞ்சுகளிலும் வந்து
ஆக்ரமித்தனர். நல்ல உயரமும் வேகமான பேச்சும் இருந்த காரணத்தால் தேர்வு
ஏதும் இல்லாமலே வகுப்புத் தலைவர்கள் ஆனார்கள். அவர்களின் தமிழ்
உச்சரிப்பு மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தது. நானும் அவர்களின்
கூட்டணியில் கலந்து விட்ட பிறகு எனக்கு சுவாரசிய பள்ளிப் பருவமாக
அமைந்தது.
அவர்கள் உருவாக்கும் கற்பனை காட்சிகள், எம்.ஜி.ஆர் திரைப்பட சாகசங்கள்
அத்தனையும் சேர்த்து என்னை அவர்களின் பின்னால் செல்ல வைத்தது. அவர்கள்
அத்தனை பேர்களுக்கும் அன்று எம்.ஜி.ஆர். தான் கடவுள்.
சிவாஜியைப்பற்றி பேசினால் பிடறி பேந்து விடும். அன்று அவர்கள் அத்தனை
பேருக்கும் எம்.ஜி.ஆர். ஆதர்சன கடவுளாக ஏன் இருந்தார்? என்பது எனக்கு
அன்று புரியவில்லை. இன்று மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வியலில்
மக்கள் திலகத்தின் பங்களிப்பு குறித்து அறிந்து கொண்ட பிறகு ஆச்சரியமாக
உள்ளது.
என் அம்மா திடீரென்று ஒருநாள் என்னிடம் கேட்டார். எங்கு பார்த்தார்கள்?
எப்படி தெரிந்து கொண்டார்கள் எனக்குத் என்பதெல்லாம் தெரியாது?
” என்னடா இலங்கை அகதிகள் அதிகமாக பள்ளிக்கூடத்தில் வந்த சேர்ந்து
இருக்கிறார்கள் போல”? என்று கேட்ட போது கூட இலங்கை சம்மந்தபட்ட விசயங்கள்
எதுவும் புரியவில்லை.
எப்போதும் போல இலங்கை என்றால் அப்துல் ஹமீது, ராஜா, திரைப்பாடல்களின்
தொகுப்பு, நல்ல தமிழ், கரகரப்பு இல்லாத அலை சேவை என்று மிக உயர்வான
எண்ணத்தில் வாழ்ந்த காரணமும் ஒன்று.
கல்லூரி படிப்பு முடித்து, திருப்பூர் வந்து சேர்ந்தேன். ஏற்றுமதி
துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கணினி தொடர்பு வழியே திடீர்
என்று ஈழத்தமிழர்கள் உள்ளே வரும் போது அவர்கள் அறிமுகம் செய்து
கொள்வதற்கு முன்னே அவர்களின் ஆழகான தமிழ்ப் பெயர்கள் அவர்கள் எந்த
நாட்டைச் சேர்ந்தவர் என்பதை உணர வைத்துவிடும். காரணம் அந்த மாதிரியான
தமிழ் பெயர்கள்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் நினைத்தே பார்க்க முடியாத தமிழ்.
ஈழத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த அலங்கோல வாழ்க்கை தந்த பயத்தில்
பரிதாபமாய் தமிழ்நாட்டிற்கு வந்த என் நண்பர்களின் குடும்பம் இன்றைய
சிவகெங்கை புதுக்கோட்டை மாவட்டத்திறகு நடுவில் கோடு பிரிக்கும் இடத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசு வசிப்பிடம் அமைத்து
கொடுத்து இருந்தது.
அதனை தொடக்கத்தில் காலணி என்று அழைத்தார்கள். பிறகு சுதந்திரபுரம் என்று
பெயர் மாறியது.
அத்தனை பேர்களிடமும் காலணி என்றால் அடிக்க வருவார்கள். குறுகிய காலத்தில்
அதற்கு சுதந்திரபுரம் என்று பெயர் சூட்டி இன்று பேரன் பேத்தி கூட நாற்பது
வயதிற்குள் பெற்று பலரும் தாத்தவாக மாறியுள்ளனர்.
எங்கும் போக விருப்பம் இல்லாமல் அதே இடத்தில் இன்று வரையிலும் உழன்று
கொண்டுருக்கிறார்கள்.
எங்கள் வகுப்பிற்கு தலைவனாக இருந்த வை.சிதம்பரத்தை ஒவ்வொரு முறையும்
ஊருக்குச் செல்லும் போது பார்ப்பேன்.
“என்னப்பா? எப்பவாவது உன் தாத்தா ஊரை நினைத்து பார்ப்பதுண்டா” ? என்று கேட்பேன்.
அவன் எங்கள் ஊரில் உள்ள அரிசி ஆலைகளிலிருந்து அரிசி வாங்கி தமிழ்நாட்டில்
உள்ள பல ஊர்களுக்கு அனுப்பிக் கொண்டிருப்பவன். ஊரில் இருந்து அரிசி லோடு
ஏற்றி திருப்பூருக்கு அனுப்ப ஆவணங்களை சரி பார்த்துக்கொண்டுருந்தவன்,
“திருப்பூரில் நாலு கடை தெரிஞ்சா அறிமுகப்படுத்துடான்னா இப்படி போட்டு
அறுத்து எடுக்கிறியே” ? என்றான்.
இன்று அரிசியுடன் மரக்கட்டை தொழிலும் செய்து கொண்டு இருக்கின்றான்.
ஊர்ப்பக்கம் உள்ள காடுகள் மற்றும் யூகப்லிட்ஸ் மரங்களை மொத்தமாக விலைபேசி
அவற்றை கட்டைகளாக மாற்றி லாரியில் பல ஊர்களுக்கு அனுப்பிக் கொண்டும்
இருக்கின்றான். குத்தகைகாரராக நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து
கொண்டுருக்கின்றான்.
நான் குறிப்பிட்ட சிதம்பரம் மட்டுமல்ல. எனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான
ஈழத்தில் இருந்து வந்த இளைஞர்கள், பழக்கத்தில் இல்லாத அந்தப் பகுதியில்
வாழ்ந்து கொண்டிருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அத்தனை
பேர்களும் அவர்களின் தினந்தோறும் உண்டான வாழ்க்கை போராட்டத்தில் தான்
கவனம் கொண்டு வாழ்ந்து இருக்கின்றார்கள்.
எங்கள் ஊரில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் தான் ஒவ்வொரு
குடும்பத்தினரும் பணிபுரிந்தனர். தொடக்கத்தில் இந்த அரசி ஆலைகள் அவர்கள்
அத்தனை பேர்களுக்கும் வருமானம் தந்து கொண்டிருந்தது.
இன்று நவீன சாதனங்கள் உள்ளே வந்து அத்தனை அரிசி ஆலைகளும் வெளிநாட்டு
இறக்குமதி சாதனங்கள் மூலம் சரக்கு வாகனங்களில் ஆயிரக்கணக்கான அரிசி
மூட்டைகளை தினந்தோறும் பல ஊர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
பலருக்கும் வேலை குறைந்து கிடைத்த வேலைகளைச் செய்து
கொண்டிருக்கின்றார்கள். “மாடர்ன் ரைஸ் மில்” என்ற நவீன சித்தாந்தம்
அவர்களின் வாழ்க்கையையும் அழ வைத்துக்கொண்டு இருக்கின்றது.
ஊரில் இருந்து நான்கு மைல்கள் தூரத்தில் அவர்கள் வாழ்ந்த சுதந்திரபுரம்
இருந்தாலும், அதிகாலையில் அவசர அவசரமாக வந்து ஆலைகளுக்கு முன்னால்
வரிசையில் நிற்பதும், அன்றாட வேலையில் தன்னை, தங்களை தேர்ந்தெடுக்க
பேசிக் கொண்டுருப்பதையும் பார்க்கும் போது அவர்கள் கதைத்த கதைகள் கண்ணீர்
வாழ்வியலாக எனக்குத் தெரியும்.
ஆனாலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் பெரிதாக இல்லை. காரணம் பெரிதான
ஆசைகளும் இல்லை. அதே சுதந்திரபுரத்தில் இன்று எல்லா நடிகர்களுக்கும்
ரசிகர் மன்றம் இருக்கிறது.
அவர்களின் மொத்த வாழ்க்கை முறைகளும் மாறிவிட்டது. பிறக்கின்ற
குழந்தைகளின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்து இன்று த்ரிசா தொடங்கி ஸ்ரீ
யில் முடிகின்றது.
மூன்று வேளையும் நிம்மதியாக உணவு கிடைக்காதா? என்று ஏங்கும் வாழ்க்கை
அமைந்தவர்கள் எங்கே போய் வாழ்வுரிமையைப் பற்றி யோசிக்க முடியும்?
இவர்கள் வாழ்க்கை பரவாயில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அகதிகள் முகாம் என்ற
பெயரில் தினந்தோறும் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும்
அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளினால் தினந்தோறும் நரக வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருக்கும் எத்தனையோ முகம் தெரியாத ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம்
குறித்து எவர் சிந்திக்க முடியும்?
ஈழத்தில் உள்ள தமிழர்களின் அழிவுக்கு அங்கே உள்ள ஆட்சியாளர்கள் தான்
காரணமெனில் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தவர்களுக்கு கால் நூற்றாண்டு
காலம் ஆன போதிலும் நல்லதொரு வாழ்க்கையைக் கூட அமைத்துக் கொடுக்க இங்குள்ள
ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாமல் இருப்பது தான் கொடுமையின் உச்சம். எந்த
நீதிமன்றத்தில் போய் முறையிட முடியும்?
தமிழ்நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஈழத்
தமிழரின் சார்பாளனாகத் தான் சிதம்பரத்தைப் பார்க்கின்றேன்.
வாழ்க்கையின் நிதர்சனத்திற்காகவே இதை குறிப்பிடுகின்றேன். இவர்களும்
அட்டைப் புழுவாகவே வாழ பழகிக்கொண்டனர்.
சர்வதேச அளவில் அகதிகளின் ஓப்பந்தத்தில் இன்று வரையிலும் இந்தியா
கையெழுத்து இடாமல் இழுத்துக் கொண்டு வந்து கொண்டுருக்கிறது என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன? இந்தியாவில் திபெத்தில் இருந்து வந்தவர்கள் ராஜவாழ்க்கை
வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் இயல்பான
வாழ்க்கை கூட அமையவில்லை.
அரசியல், திரை உலகம், எழுத்தாளர்கள், பத்திரிக்கை உலகம், பதிவு உலகம்
என்று ஐந்து முனைகளும் ஈழப் பிரச்சனையை பற்றி அவரவருக்கு உண்டான காரண
காரியங்களோடு, அக்கறையோடு, அக்கறையின்மையோடு அணுகிக்கொண்டு இருந்தாலும்
இன்று வரையிலும் எந்த நம்பிக்கை முனையும் ஈழத் தமிழர்களுக்கு
கிடைத்தபாடில்லை.
தமிழர்களிடத்தில் ஒற்றுமையில்லை. ஒன்றுபடவில்லை.
விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதப்போராட்டம் என்பதை மேலோட்டமாக
பார்ப்பவர்களுக்கும், ஈழத்தை குறிவைத்து தங்களின் வணிக லாபத்திற்கு கழுகு
பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளைப் பற்றியும் இந்த
கட்டுரைகளின் வாயிலாக சில தகவல்களாவது உங்களால் தெரிந்து கொள்ள முடியும்
என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
ஏன்? என்ன காரணங்கள்? யார் பின்னால் உள்ளவர்கள்? வெளியே தெரியாதவைகள்
என்ன? புரிய வைத்தது என்ன?
இந்த ஐந்து புரியாத பூதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள பயணிப்பதே இதன் நோக்கம்.

ஈழம் தமிழகம் ஒற்றுமை அகதி ஏதிலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக