|
23/10/17
| |||
Dinakaran
தமிழகம்
2 weeks ago
a month ago
4 weeks ago
3 months ago
2 months ago அரை வட்ட வடிவத்தில் அசத்தல் : பாண்டியரின் பெருமை பேசும் பழங்கால அணை
Monday, 23 Oct, 8.48 am
மதுரை: மதுரைக்கு அருகே, பாண்டிய மன்னரின் புகழ் பாடும் ஆயிரமாண்டு
பழக்கால அணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து 35 கி.மீட்டர் தொலைவில் சோழவந்தான் அருகே குருவித்துறை
உள்ளது. இங்கு வலஞ்சுழியாய் வைகையாறு திரும்பும் இடத்தில் ஸ்ரீவல்லப
சித்திரரத பெருமாள், குருபகவான் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த
கோயில்களுக்கு அருகே, வைகையாற்றின் குறுக்கே கி.பி.1117ல் ஸ்ரீவல்லப
ஜடாவர்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில், கருங்கற்களால் அரைவட்ட வடிவத்தில்
அணை கட்டப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் வைகை வறண்டு கிடக்கிறது.
தென்னை, மருதம், கொன்றை மற்றும் புங்கை மரங்கள் சூழ்ந்த அற்புதமான
நதிப்படுகையாக இப்பகுதி உள்ளது.
ஆற்றுக்குள் இறங்கி நடந்தால் அரையடி ஆழத்திற்கு கால் புதைகிறது; அந்த
அளவிற்கு மணல் வளம் மிக்கதாக உள்ளது. நிலக்கோட்டை பேரணையிலிருந்து வருகிற
வெள்ளம், இந்த அணைக்கு அருகில் இடமாய் சற்றே வளைவாய்த் திரும்புகிறது.
வைகை நீரானது வயல்கள் அல்லது அருகிலிருக்கும் குடியிருப்பிற்குள்
புகாதவாறு, ஸ்ரீவல்லப ஜடாவர்ம பாண்டியன் தடுப்பணையைக் கட்டியுள்ளான்;
அருகிலேயே கால்வாய் ஒன்றை வெட்டி, உபரிநீர் செல்வதற்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளான். நதியின் குறுக்கே சிறந்த பொறியியல் நுட்பத்தில், அரை
வட்ட வடிவத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 500 மீ.,நீளம்
அரைவட்டமாகவும், 9 அடியில் மேலிருந்து கீழே சரிவாகவும் அணையை
அமைத்துள்ளனர்.
ஆற்றின் குறுக்கே நேராக அணை கட்டியிருந்தால் தண்ணீரின் வேகத்தில்
அடித்துச் சென்றிருக்கும். தண்ணீரோடு வரும் மணல், இந்தப் பகுதியில்
தேங்கி விடுவதோடு, வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீரோடு மண்ணும் சேர்ந்து
வெளியேறும் விந்தையான வடிவமைப்பில் அணை கட்டப்பட்டுள்ளது. அணை கட்டி
தடுக்கப்பட்ட தண்ணீர் மீண்டும் வைகையாற்றுக்குள் செல்லும் வகையில்,
மூன்று கண்களைக் கொண்ட மதகு அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வழிந்தோடும்
தளம் கருங்கற்களால் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இந்த
அணையை பராமரிக்கவும், அதன் வரலாற்றை தற்காலத்தினர் அறிந்து கொள்ளும்
வகையிலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் கூறுகையில், 'இந்த அணை தண்ணீரின் வேகத்தை
மட்டுப்படுத்துவற்கான நீரியல் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன்
பாசனத்திற்குப் பயன்படும் வகையில், வாய்க்கால் அமைக்கப்பட்டு, 10 கி.மீ.
தொலைவிலுள்ள சோழவந்தான் தென்கரை கண்மாய்க்கு இங்கிருந்து தண்ணீர் கொண்டு
செல்லப்பட்டிருக்கிறது. நமது நீரியல் வல்லுநர்களால் இந்தக் கல்லணை மிகச்
சிறந்த நீர் மேலாண்மையாகப் போற்றிப் புகழப்படுகிறது'' என்றார்.
விதைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யோகேஷ் கார்த்திக் கூறுகையில்,
''ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கருங்கற்களைக்கொண்டு பொறியாளர்கள்
இல்லாமல் மிகவும் நுட்பமாக அணையைக் கட்டியுள்ளனர். பாண்டியர்களின்
பெருமையை பறைசாற்றும் இந்த அணையை பாதுகாக்க வேண்டும். குருவித்துறை
கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மதுரைக்கும், சோழவந்தான்
பகுதிக்கும் வருகிறவர்கள் இந்த அணைப்பகுதியை பார்வையிட ஏற்பாடு செய்ய
வேண்டும். பொதுமக்கள் இதனை கண்டுகளிக்கும் வகையில், இப்பகுதியை
பொதுப்பணித்துறையினருடன், சுற்றுலாத்துறையினரும் இணைந்து சுற்றுலாப்
பகுதியாக மாற்றிட வேண்டும்'' என்றார்.
வைகை தடுப்பணை நீர்மேலாண்மை தொழில்நுட்பம் கட்டடக்கலை கட்டிடக்கலை கட்டுமானம் பாண்டியர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக