|
23/10/17
| |||
Chembiyan Valavan , 4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
திருபரங்குன்ற முருகன் வழி பாடு பற்றி அகனானூற்று பாடல் ஒன்று.
‘‘சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல் சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து"
தமது பகைவனாகிய சூரபன்மாவினைச் சுற்றத்தோடு அழித்துச்
சுடரும் முனையினையுடைய நெடுவேலினை உடையவன் சினம் மிகுந்த முருகன்,
அச்சினம் தணிந்து அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் இடம்
திருப்பரங்குன்றம்.
அகநானூற்றில் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல்
போன்ற சங்க இலக்கியங்களில் . இத்திருத்தலத்திற்கு தண்பரங்குன்று,
தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம்,
சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும்.
247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று ஆகும்.
நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த திருத்தலத்தைப்
பாடி உள்ளனர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு
குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து
அமைக்கப்பட்டுள்ளன. முருகன் , துர்காதேவி , கற்பக விநாயர், பரங்கிநாதர்(
சத்தியகிரீஸ்வரர்(சிவன்)) , பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து கடவுள்
வழிபாடு இங்கு உள்ளன.
ஆரம்பத்தில் உருவ வழிபாடு இன்றி வேல் வழி பாடுமட்டும் பின்பற்ற பட்டு
பின் நாட்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குகைவறை கோவில் திருத்தி
அமைக்க பட்டு இருக்கலாம் என சொல்லப் படுகின்றாது
இன்றும் வேலுக்கு மட்டும் அபிசேகம் செய்து வணங்கும் பழக்கம் திருபரங்குன்றத்
தில் உண்டு.
திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக
அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை.
சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி
என்றும் பெயர் பெற்றார்கள்.
ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள
தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில்
சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு
திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்"
என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்" என்று மருவியது.
அருணகிரியார் தன் பாடல்களில் தென்பரன்குன்றுர
ை பெருமாளே என்று பாடுகிறார்.
திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா
தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.
சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815)
என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி
என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச்
செய்தி தெரிவிக்கிறது.
இலக்கியம் சூரபதுமன் புராணம் முப்பாட்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக