செவ்வாய், 10 அக்டோபர், 2017

திருமுருகன் காந்தி ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு கூட்டத்தில் குளறுபடி

Why I am Not a May17 Member
''ராஜபக்சேயின் வருகையும், இந்தியாவைக் காக்க அலறித்துடித்த மே பதினேழும்''
444. 2௦14 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து
கொள்வதற்காக ராஜபக்சே இந்தியாவிற்கு வர இருப்பதை எதிர்த்து மே பதினேழு
இயக்கம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 2௦14 மே 25 ஆம் தேதியன்று வள்ளுவர்
கோட்டத்தில் நடத்தியது.[161], அப்பொழுது அங்கு வந்திருந்த பல்வேறு
அமைப்புகளின் பிரதிநிதிகளும் பேசினார்கள். அங்கு பேசிய பலரும் ராஜபக்சேவை
அழைத்தது தவறு, ராஜபக்சே கொடுங்கோலன் என்கிற ரீதியில் தான் பேசிக்
கொண்டிருந்தார்கள். அப்பொழுது பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த
தோழர் கெளதம்[162] பேச வந்தார். அவர் மிக அழகாக, அறிவு பூர்வமாக தனது
கருத்தினை பதிந்தார்.
445. சார்க் (SAARC) நாடுகளின் தலைவர்களை அழைக்கின்றோம், அதன்
அடிப்படையில் ராஜபக்சே வையும் அழைத்திருக்கின்
றோம் என்று இந்திய அரசிற்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் பேசிக்
கொண்டிருந்த பொழுது அதற்கான் மறுப்பாக தோழர் கெளதம் சார்க் அமைப்பினுடைய
விதிகளை மேற்கோள் காட்டி, அந்த விதிகளின் படி ராஜபக்சேவை அழைத்தது தவறு
என்று மிக அழகாக வாதிட்டார்.
446. இதை தான் மே பதினேழு இயக்கம் தனது அடிப்படை நோக்கமாக கொண்டிருந்தது.
அதாவது ஒரு அறிவுபூர்வமான பார்வையினை கொண்ட சமுதாயமாக வர வேண்டும் என்று
விரும்பியது. இந்த அறிவுபூர்வமான பார்வையை மக்களிடம் எடுத்து சொல்ல
வேண்டும். மக்களும் அறிவு பூர்வமாக மாற வேண்டும் என்பது தான் மே பதினேழு
இயக்கத்தினுடைய செயல்பாடாக இருந்தது. அதன் அடிப்படையில் தான் நாம்
செயல்பட்டு கொண்டிருந்தோம். அங்கு பேசிய தோழர் கெளதம் அது போன்ற ஒரு
பார்வையினை தான் மிக அழகாக வைத்தார். அப்பொழுது இவர் பேச பேச
தொடர்ச்சியாக இந்தியா செய்த தவறுகள், இந்தியா செய்து கொண்டிருக்கும்
தவறுகள் அம்பலமாகி கொண்டிருந்தன. அங்கு கூடியிருந்த தோழர்களுக்கு இருந்த
பார்வையை மாற்ற கூடிய பேச்சாக தோழர் கௌதமினுடைய உரை இருந்தது.
447. அது கண்டு பொறுக்க முடியாத அருள், வேகமாக வந்து என்னிடம் “நிறுத்திர
சொல்லிறவா” என்று கேட்டார். அன்று மிக தெளிவாகவே எனக்கு புரிந்தது.
மக்களுக்கு அறிவு பூர்வமான விடயம் போக கூடாது என்று மிக தெளிவாக இவர்கள்
இருக்கிறார்கள் என்று புரிந்தது. நான் அதற்கு தலையை மட்டும் ஆட்டினேன்.
அவர் உடனடியாக சென்று கௌதமை தொட்டு, போதும் நிறுத்தி கொள்ளுங்கள் என்று
கூறினார். மே பதினேழு இயக்கம் தனது Youtubeசேனலில் தோழர் கௌதமின்
உரையையும் ஏற்றியிருந்தது. சிறப்பாக பேசிக் கொண்டிருந்த கௌதமை நிறுத்தச்
சொல்லி அருள் சொல்வது அந்தக் கானொளியில் மிகத் தெளிவாக தெரியும். உங்கள்
அமைப்பின் youtube சேனல் நீக்கப்பட்டிருப்பதால், அந்தக் காணொளி தற்பொழுது
இணையத்தில் இல்லை. தோழர் செந்தில் தன்னிடம் இருக்கும் backup லிருந்து
இந்தக் காணொளியை பதிவேற்றினால், ஒரு அறிவுபூர்மான உரையை தடுத்து, அதன
மூலம் இந்தியாவை காக்க இவர்கள் முயன்றது நன்றாக தெரியும். பிரேமன் மக்கள்
தீர்ப்பாயத்தின் போது திருமுருகன் மீதான கோபத்தை வெளிகாட்டிய அருள்,
அதற்கு பிறகு எப்படி மாற்றப்பட்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்.
448. அந்த மிக முக்கியமான உரையை நிறுத்த சொன்னதற்கு இவர்கள் கூறிய காரணம்
“மற்றவர்களும் பேச வேண்டும், இந்த ஆர்பாட்டம் மிக நீண்ட நேரமாக போய்
கொண்டிருக்கிறது. முடித்து கொள்வோம்” என்று கூறினார்கள். ஆனால் அதற்கு
பிறகு திருமுருகன் தான் பேசினார். நான் அதனை குறிப்பிடுவதற்க
ு முன்பு இன்னொரு சம்பவத்தை குறிப்பிட்டுவிடுகிறேன். கௌதமின் உரை
பாதியில் முடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த தோழர் ஒருவர் (பெரும்பாலான
போராட்டங்களில் பங்கெடுக்க கூடிய தோழர் அவர் எப்பொழுதுமே கோரிக்கை
அடிப்படையில், கோரிக்கை சரியாக இருந்தால் வந்து பங்கெடுக்க கூடிய தோழர்
அவர். நீங்களும் பல இடங்களில் அவரை பார்த்திருப்பீர்கள்.) அவர் கெளதமின்
உரை பாதியில் முடிக்கப்பட்டதை பார்த்தவுடன் கோபம் கொண்டு என்னிடம் வந்து
சண்டை போட்டார். “அந்த பையன் எவ்வளவு அழகாக பேசிட்டு இருக்கிறான் நீங்கள்
எதற்கு பாதியில் நிறுத்த சொன்னீங்க” என்று கோபப்பட்டார். அதற்கு நான்,
இல்லை தோழர் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது அதனால் நிறுத்த வேண்டியதா
போயிற்று என்றேன். அதற்கு அவர் “என்ன நேரம் குறைவா போச்சு ? இங்க
இருக்கிறவன் எல்லாம் என்ன பேசினான்? இந்த பையன் பேசிறத விடயத்தை கேட்க
தான் எல்லாரும் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் இப்படி செய்தீர்கள்
என்றால் நீங்களும் மற்ற அமைப்பு மாதிரி தான் இருக்குறீங்க” என்று மிக
கடுமையாக திட்டிவிட்டு போய் அமர்ந்து கொண்டார்.
449. அதற்கு பிறகு திருமுருகன் வந்து பேசினார். திருமுருகன் பேசியதை
செந்தில் வெளியிட்டால் பாருங்கள் தோழர்களே. சீமான் பேசியது
போன்றிருக்கும். சீமான் பேசுவதில் வெறும் ஆவேசம் இருக்கும் உள்ளடக்கம்
இருக்காது. திருமுருகன் அன்று பேசியதிலும் “ராஜபக்சே அன்று அழைத்ததில்
எப்படி தவறு என்பதை பற்றி எந்தவிதமான தர்க்கமும் இல்லை, தகவலும்இல்லை”
மேலோட்டமாக பேசக்கூடிய சாதாரணமான பேச்சு. சற்று சத்தம் எழுப்பி கோபமாக
பேசிவிட்டால் போதும் என்பதாக தன்னுடைய பாணியை மாற்றி கொண்டு சீமான் போல
பேசிவிட்டு சென்றார்.
450. அன்று கெளதம்பேசி திருமுருகன் பேசாமல் இருந்திருந்தால் கூட குடி
முழுகி போயிருக்காது. ஏனென்றால் கௌதமின் உரை அவ்வளவு சிறப்பானது. ஆனால்
அப்படிப்பட்ட உரையை மக்கள் கேட்க கூடாது என்று விரும்புவதாக தான் மே
பதினேழு இயக்கம் மாறுகிறது. இப்பொழுது யோசித்து பாருங்கள் தோழர்களே. அதன்
பிறகு எங்காவது தோழர் கெளதம்மிற்கு வாய்ப்பு அளிக்கப்படிருக்
கிறதா என்று.? ஏன் தோழர்களே ?? கௌதமுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவர்
ஆதாரங்களை எடுத்து வெளியில் வைத்து, மற்றவர்கள் இந்தியாவினுடைய உண்மை
முகத்தை புரிந்துகொள்வார்கள் என்று அச்சமா ?
451. இதில் இன்னொரு விடயத்தையும் கூட நீங்கள் கவனிக்கலாம் தோழர்களே.
அன்று ராஜபக்சே வந்தவுடன் அதற்கு எதிராக ஆர்பாட்டம் செய்த மே பதினேழு
இயக்கம் இந்த வருடம் இலங்கையினுடைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா
இந்தியாவிற்கு வந்தபொழுது எந்த எதிர்ப்பும் காட்டவில்லையே. இலங்கையினுடைய
அதிபரை இந்தியாவுக்கு அழைத்தால் ஒவ்வொரு முறையும் பிரதமரின் இல்லத்தை
முற்றுகையிடுவேன் என்று கூறிய திருமுருகனின் இம்மீடியட் பாஸ் (Immediate
Boss) வைகோவும் மொளனம் காத்து பதுங்கிகொண்டாரே. அப்படியென்றால்
இனப்படுகொலை என்பதே நடக்கவில்லை, அதில் மைத்திரி பாலசிறிசேனாவுக்கு பங்கு
இல்லை என்று கூற வருகிறார்களா ? சிந்தியுங்கள்தோழர்களே.
- தமிழர்.திரு.உமர்
நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை? – உமரின் ஆவணத்தில் உள்ள சில
குறிப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக