மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார்அவையம்
9-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் - 43 நாள்: 27.07.2017
தொடர் நாள்: 208
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
பெருந்தச்சு நிழல் நாட்கா ட்டியின்படி, கடந்த24-07-2017 அன்று
மறைநிலவு கணக்கிடப்பட்டது. 27-07-2017 அன்றுடன் ஆடி மாதம் முழுமையாக
நிறைவு பெறுகிறது. இன்று மாலை மேற்கு வானில் மூன்றாம் பிறை தோன்ற
வேண்டும். ஆனால் 25-07-2017 அன் றே, அதாவது வளர்பிறையின் முதல் நாள்
மாலையிலேயே பிறை துலக்கமாகத் தோன்றி விட்டது. அப்படியானால் அடுத்து வரும்
முழுநிலவு 15 நாட்களைத் தாக்குப் பிடிக்காமல் முந்திவிட வாய்ப்பு
இருக்கிறது.
இதுவரை இவ்வாண்டில் இரண்டு முழுநிலவுகள் நாள் குறைவு பட்ட படியால்
இரண்டு நாட்கள் இழப்பில் நாட்காட்டி நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த
முழுநிலவுக்கு எதுவும் நேரலாம். காத்திருந்து பார்க்க வேண்டும். அடுத்த
பதிவில் உண்மை புலப்படும். 08-08-2017-ல் வர வேண்டிய முழுநிலவு முன்னும்
பின்னும் கூட வரலாம்.
மறைநிலவு:-
கடந்த மூன்று ஆண்டுகளில் மறை நிலவுகள் பிழையானதே இல்லை. ஆனால் இந்தப்
பஞ்சாங்கத்தார் மட்டும் சில தேய்பிறைகளில் 14-நாட்களில் மறைநிலவு வருவதாக
முன்கூட்டியே கணக்கிட்டு விடுகின்றனர். அது முழுநிலவுகள் தடுமாறும்
உண்மையை மறைக்க மேற்கொள்ளும் உத்தியே என்று தெரிகிறது. ஓர் உண்மையை
மறைப்பதால் யாருக்கும் இந்தப் பயனும் விளையாது. சிக்கலைத் தீர்க்காமல்
நீட்டுவதும் நேர்மையற்ற செயலே.
ஆடி மாத மறைநிலவு:-
கடந்த 24-07-2017-ல் ஆடி மாத மறைநிலவு அமைந்தது.
பஞ்சாங்கத்தின்படியும் அது ஆடி அமாவாசை என்றே கொண்டாடப்பட்டது.
17-07-2017-ல் பஞ்சாங்க ஆடி பிறந்தது. அதாவது தேய்பிறையில். பிறந்த
எட்டாம் நாளில் கூட இல்லை, சரியாக ஏழாம் நாளில், அதாவது 23-07-2017-ல்
கருமாதி செய்து தீர்த்து விட்டார்கள்.அத்தனையும் தவறு.
உண்மையில் மறைநிலவுக்கும், முன்னோரது நினைவலைகளுக்கும் எந்த உறவும்
தமிழ் மரபில் இல்லை. இருக்கவும் முடியாது. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள
திருக்கோயில்கள், ஆறுகள், மலை கள் அப்படி ஒரு செயலுக்கு
ஆட்படுத்தப்படுகின்றன. அது ஒரு துன்பச் செயல்.
மறைநிலவு பற்றிய அறிவு:-
மறைநிலவு நாளைத் தத்தமது மூச்சுவிடும் முறையால் அறிந்து கொள்ளும்
ஆற்றல் தமிழர்களிடம் இருந்தது. இன்றும் இருக்கிறது என்றே நம்பலாம்.
தமிழர் அல்லாதாரிடமும் அத்தகைய ஆற்றல் இருக்கலாம். மறுப்பதற்கில்லை.
ஆனால் எவரும் வெளிப்பட பேசுவது இல்லை என்பதே களநிலை உண்மை.
பேசியிருந்தால் தவறாகக் குறிப்பிடும் பஞ்சாங்கத்தாரைச்
சாடியிருப்பர்.சாடவில்லை. மாறாக பஞ்சாங்கத்தின் பிழையைக் கட்டிக்
காப்பாற்றவும் பாடுபடுகின்றனர்.
பிற உயிர்களின் மறைநிலவு பற்றிய அறிவு:-
மாந்தர்களைத் தவிரப் பிற உயிர்களும் சரியான மறைநிலவு நாளை நன்றாகவே
உணர்ந்து செயல்படுகின்றன என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது. முயல்
குட்டியிடுவதும், தேனீக்கள் இடமாற்றம் செய்வதும் நிகழ்வது போலவே மழை
கருக்கொள்வதும் மழை தரை இறங்குவதும் நிகழ்வதாகக் கருதலாம்.
குறிப்பாகக் கோள் ஒழுக்கம் உடைய,பெண்மைப் பண்புடைய உயிர் வகையின
அனைத்தும் அந்த நாளில் ஆற்றலுடன் இயங்குவதாகக் கருத இடம் இருக்கிறது.
விளக்கேற்றும் தகுதி:-
மறைநிலவு நாளில் விளக்கேற்றுதலும், விளக்கேற்று ம் தகுதியில் மனையுறை
மகளிர் ஒதுங்கல் செல்லாது இருத்தலும், ஓர் அளவு கோலாகவே
பார்க்கப்பட்டிருக்கிறது.விதிவி லக்காக அந்நாளில் தலைப்பூப்பூ எய்தும்
பெண்களைச் செவ்வாய் தோசம் உடையோர் என்று சுட்டுவது கருதத்தக்கது.
மறைநிலவும் செவ்வாயும்:-
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி அனைத்து மறைநிலவு நாட்களும்
செவ்வாய்க் கிழமைகளில் அமையும். அனைத்து முழுநிலவு நாட்களும் வெள்ளிக்
கிழமைகளில் அமையும்.
முழுநிலவு தடுமாறினால் வெள்ளிக்கிழமை இடம் மாறும். மறைநிலவு
தடுமாறாது. அதனால் செவ்வாய்க் கிழமையைச் செவ்விதாகக் கணக்கிட்டு கிழமை
முறையை ஈட்டி விடலாம்.
‘நாள் ஈண்டும் அகவர்’ என்போர் இதனைச் செய்திருக்க வேண்டும். நாளும்
கிழமையும் பொருந்த வேண்டும் என்பது மரபுவழி நம்பிக்கை. இன்றையக்
காலக்கட்டத்தில் செவ்வாய்க்கிழமையைச் செவ்விதாகப் பொருத்தி நாள் முறையை
மீட்கும் பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது. பேணும் பொறுப்பு ஆண்களுக்கும்
அறம் சார்ந்த அரசுக்கும் இருக்கிறது.
ஆளாதல்:-
வளர்பிறையில் நடு நாளில் வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய ஆளும்
கிழமையில் தலைப் பூப்பு எய்துதல் என்பது நாட்காட்டியின்படி திருமகளிர்
இயல்பாகையால் ‘ஆளானவள்’ என்ற சொல், ஆளும் கிழமையில் திருத்தகுதி பெற்றவள்
என்ற பொருளில் அழைக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறான செய்திகள் அகஇலக்கியங்களில் பரந்து பேசப்பட்டுள்ளன. அவற்றை
உயர் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். சான்றாக ஒரு செய்தி, அகநானூற்றுப்
பாடல் 32-ல் காணக் கிடைக்கிறது.
தினைப் புனம் காவல் செய்யும் பெண் தன் தோழியிடம் கூறுகிறாள், நேற்று
இரவு காட்டுப் பன்றி வந்தது. அதைத் தொடர்ந்து திருமணி ஒளிரப் பூண்
புனைந்த ஒருவன் வந்தான். புரவலன் போன்ற தோற்றத்தில் இருந்தான். ஆனால்
இரவல் மாக்கள் போலப் பணிவாகப் பேசினான்.
இங்கே இருந்து கிளிவிரட்டும் நீங்கள் சூரர மகளிர் போன்று
தோன்றுகிறீர்கள், எனது மனதையும் அணங்கச் செய்து விட்டீர், யார் நீங்கள்
என்று கேட்டபடி எனது சிறுபுறம் அணைத்தான்.
மழைபெய்தால் மண் நெகிழ்வது போல என் மனம் இளகியது. அதை அவன் அறிந்து
விடக் கூடாது என்று அஞ்சி மருண்டு எனது முழுவலிமையையும் பயன்படுத்திப்
பறித்துக் கொண்டு அவனை விட்டு விலகி நின்றேன். அவனால் எதுவும் சொல்ல
முடியவில்லை. ஏமாந்தபடியே போய் விட்டான். இனத்திலிருந்து தீர்ந்து தனியே
செல்லும் களிறு போலப் பிரிந்து சென்றான்.
எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. தகுதியான இந்த நாளில் நான்
தகுதியற்று இருப்பதாகக் கருதிக் கொண்டான் போலும்!
சாய் இறைப் பணைத் தோள் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான்....
அங்கணாளனை நகுகம் யாமே ! - (அகம்-32)
நாட்காட்டி பற் றிய அறிவுஇருபாலருக்கும் பொதுவா னது
போன்றேபூப்பு ஒழுங்கு பற்றிய அறிவும் இருபாலருக்கும் பொதுவா னது என்று
புரியும்படியாகப் பழந்தமிழ்ச் சான்றுகள் உள்ளன. (காண்க மாநாகன் இணமணி 3.)
‘அல்குல்நலம் பாராட்டிய வருமே தோழி’

இன்று அந்த அறி வைத் தொலைத்துவிட்டு நிற்கிறது மாந்த
இனம். பெருந்தச்சுநிழல் நாட்கா ட்டி அத்தகைய அறிவைத்தமிழின் து ணையோடு
புதுப்பிக்க முயற்சிசெய்யும்.
மணி மணி :-
மணி என்றாலே அது அறுபதின்சுழற்சி என்று வி ளக்கம் தந்து
பெருந்தச்சுநிழல் நாட்காட்டியை 2013-ல் திருச்சியில்வெளியிட்டு ப்
பேசினார் முதுபெரும்தமிழறிஞர் ஐயா இளங்குமரனார்.
தமிழ் மணிகள் ஏராளம். மணியுடன்தொடர்புள்ள சொ ற்பயன்பாடும்
ஏராளம். சான்றாகச் சில: அருமணி, அரிமணி, ஆய்மணி, இருள்திருமணி, இனமணி,
எறிமணி, ஒலிமணி, ஒண்மணி, கண்மணி, கணமணி, கவிழ்மணி, கறங்குமணி, கடைமணி,
கருமணி, கொடுமணி, கோலமணி, சுடர்மணி, செழுமணி, பழுமணி, படுமணி, பாம்புமணி,
பொன்மணி, பெய்ம்மணி, மாமணி, மான்மணி, மண்ணுறுமணி, திருமணி, தேர்மணி,
தனிமணி, நன்மணி, நிரைமணி, நீலமணி, நவமணி, வயிரமணி, விரவுமணி, மத்தகமணி.
இவ்வாறாகப் பட்டியல் நீள்கிறது.
அதன் பண்பு கருதியும் நிறம் கருதியும் கிளைத்த சொற்கள், மணிமுடி,
மணிப்பூண், மணிமுலை, மணிவரை, மணிமழை, மணிநீர், மணி மண்டபம், மணிக்கலம்,
மணிப்புறா, மணிக்குழல், மணி மார்பம், மணித்தேர், மணிக்கால், மணித்தூண்,
மணியூசல், மணிமாலை, மணிமேகலை, மணிமலை, மணிமயில், மணிச்சிரல், மணிச்சிகை,
மணிநிறம், மணிவண்ணன் இவ்வாறாக விரிகிறது.
மணியின் ஊடாகத் தமிழ் மொழி ஒலி நிலையிலிருந்து உறை நிலை வடிவம்
பெற்று கொடுவரி ஏற்றி வெளியில் உலவுகிறது. அது கொள்கையாக விளங்கிக்
கொள்ளப் பட்டிருக்கிறது. கோட்பாடாகவும் விதி செய்யப் பட்டிருக்கிறது. அது
அறுபதின் சுழற்சி. பாவை வடிவினது. பெண்ணியல்பானது.
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின் அடுத்தடுத்த படிநிலை வெளியீடுகள்
மணி மணியாக அறிவுத்துறைகளைத் தொகை வகை செய்திட அறிஞர்களுக்கு உதவும்.
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் மணியான வல்லுநர்களைத்
தொடர்ந்து தேடி வருகிறது.
மணிக் கணக்குடன் நாள் கணக்கையும் கூறு கூறாக இணைப்பதன் மூலம், நிலவு
புரையேறிக் கொள்வதைத் தீர்க்கும் கற்பு தமிழுக்கு இருக்கிறது என்று நாட்ட
இயலும்.
மணியின் சுழற்சி:-
மணியின் சுழற்சி ஒரு வாய்ப்பாடாக விதி செய்யப் படும்போது உறைநிலை
ஒலி கேளா ஒலியாக, வடிவ ஆற்றலாகச் செயல்படுகிறது என்று கருத இடம்
இருக்கிறது.
அதே அறுபதின் சுழற்சி நுண்ம நிலையில் நவில்வது போலவே பரு நிலையிலும்
இயங்குமானால் அல்லது கேளா ஒலியாகிய அரவு அரச முயற்சியால்
அணைக்கப்படுமானால் அது கொற்றம் பெறும். அந்த ஆற்றலை உடைய அண்ணல் யானைகள்
தைப்பத யானைகளாக இருந்திருக்கலாம். முன்னோன் முருகனின் பிணிமுகம் என்ற
யானை ஒரு தைப்பத யானையாக இருந்திருக்கலாம்.
சமற்கிருதத்தில் எழுதவே முடியாத ‘தெய்வானை’ பிறகு எங்கிருந்து
வந்திருக்கும் என்று ஐயப்படலாம்.
ஆசிவகம், சமணம், சைவம் இவற்றின் ஊடாக நகர்ந்த நகரத்தார் வள்ளியையும்
விடவில்லை, தெய்வானையையும் விடவில்லை. தமிழை விட்டு விட்டனர். மணி
‘மாணிக்யம்’ என்றானது. தமிழின் தூய்மையை எந்த வடிவத்திலும் விட்டுத் தர
இயலாது. அது மணித் தமிழ்.
தனிப்பட்டியல்:-
இவ்வளவு மணிகள் தமிழில் இருக்கும் போது, உறுத்தலே இல்லாமல் தினமணி
என்ற சொல்லைத் தமிழ்ச் சொல் என்று உலவ விடும் மேதைகளைத் தனிப்
பட்டியலில்தான் வரிசைப் படுத்த வேண்டும்
இது மரபு வழித் தமிழ்த் தேசி யத் தக்கார்அவையத்தின் வெளியீடு
___---ooo000OOO000ooo---___
9-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் - 43 நாள்: 27.07.2017
தொடர் நாள்: 208
------------------------------
பெருந்தச்சு நிழல் நாட்கா
மறைநிலவு கணக்கிடப்பட்டது. 27-07-2017 அன்றுடன் ஆடி மாதம் முழுமையாக
நிறைவு பெறுகிறது. இன்று மாலை மேற்கு வானில் மூன்றாம் பிறை தோன்ற
வேண்டும். ஆனால் 25-07-2017 அன்
மாலையிலேயே பிறை துலக்கமாகத் தோன்றி விட்டது. அப்படியானால் அடுத்து வரும்
முழுநிலவு 15 நாட்களைத் தாக்குப் பிடிக்காமல் முந்திவிட வாய்ப்பு
இருக்கிறது.
இதுவரை இவ்வாண்டில் இரண்டு முழுநிலவுகள் நாள் குறைவு பட்ட படியால்
இரண்டு நாட்கள் இழப்பில் நாட்காட்டி நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த
முழுநிலவுக்கு எதுவும் நேரலாம். காத்திருந்து பார்க்க வேண்டும். அடுத்த
பதிவில் உண்மை புலப்படும். 08-08-2017-ல் வர வேண்டிய முழுநிலவு முன்னும்
பின்னும் கூட வரலாம்.
மறைநிலவு:-
கடந்த மூன்று ஆண்டுகளில் மறை நிலவுகள் பிழையானதே இல்லை. ஆனால் இந்தப்
பஞ்சாங்கத்தார் மட்டும் சில தேய்பிறைகளில் 14-நாட்களில் மறைநிலவு வருவதாக
முன்கூட்டியே கணக்கிட்டு விடுகின்றனர். அது முழுநிலவுகள் தடுமாறும்
உண்மையை மறைக்க மேற்கொள்ளும் உத்தியே என்று தெரிகிறது. ஓர் உண்மையை
மறைப்பதால் யாருக்கும் இந்தப் பயனும் விளையாது. சிக்கலைத் தீர்க்காமல்
நீட்டுவதும் நேர்மையற்ற செயலே.
ஆடி மாத மறைநிலவு:-
கடந்த 24-07-2017-ல் ஆடி மாத மறைநிலவு அமைந்தது.
பஞ்சாங்கத்தின்படியும் அது ஆடி அமாவாசை என்றே கொண்டாடப்பட்டது.
17-07-2017-ல் பஞ்சாங்க ஆடி பிறந்தது. அதாவது தேய்பிறையில். பிறந்த
எட்டாம் நாளில் கூட இல்லை, சரியாக ஏழாம் நாளில், அதாவது 23-07-2017-ல்
கருமாதி செய்து தீர்த்து விட்டார்கள்.அத்தனையும் தவறு.
உண்மையில் மறைநிலவுக்கும், முன்னோரது நினைவலைகளுக்கும் எந்த உறவும்
தமிழ் மரபில் இல்லை. இருக்கவும் முடியாது. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள
திருக்கோயில்கள், ஆறுகள், மலை
ஆட்படுத்தப்படுகின்றன. அது ஒரு துன்பச் செயல்.
மறைநிலவு பற்றிய அறிவு:-
மறைநிலவு நாளைத் தத்தமது மூச்சுவிடும் முறையால் அறிந்து கொள்ளும்
ஆற்றல் தமிழர்களிடம் இருந்தது. இன்றும் இருக்கிறது என்றே நம்பலாம்.
தமிழர் அல்லாதாரிடமும் அத்தகைய ஆற்றல் இருக்கலாம். மறுப்பதற்கில்லை.
ஆனால் எவரும் வெளிப்பட பேசுவது இல்லை என்பதே களநிலை உண்மை.
பேசியிருந்தால் தவறாகக் குறிப்பிடும் பஞ்சாங்கத்தாரைச்
சாடியிருப்பர்.சாடவில்லை. மாறாக பஞ்சாங்கத்தின் பிழையைக் கட்டிக்
காப்பாற்றவும் பாடுபடுகின்றனர்.
பிற உயிர்களின் மறைநிலவு பற்றிய அறிவு:-
மாந்தர்களைத் தவிரப் பிற உயிர்களும் சரியான மறைநிலவு நாளை நன்றாகவே
உணர்ந்து செயல்படுகின்றன என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது. முயல்
குட்டியிடுவதும், தேனீக்கள் இடமாற்றம் செய்வதும் நிகழ்வது போலவே மழை
கருக்கொள்வதும் மழை தரை இறங்குவதும் நிகழ்வதாகக் கருதலாம்.
குறிப்பாகக் கோள் ஒழுக்கம் உடைய,பெண்மைப் பண்புடைய உயிர் வகையின
அனைத்தும் அந்த நாளில் ஆற்றலுடன் இயங்குவதாகக் கருத இடம் இருக்கிறது.
விளக்கேற்றும் தகுதி:-
மறைநிலவு நாளில் விளக்கேற்றுதலும், விளக்கேற்று
மகளிர் ஒதுங்கல் செல்லாது இருத்தலும், ஓர் அளவு கோலாகவே
பார்க்கப்பட்டிருக்கிறது.விதிவி
பெண்களைச் செவ்வாய் தோசம் உடையோர் என்று சுட்டுவது கருதத்தக்கது.
மறைநிலவும் செவ்வாயும்:-
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி அனைத்து மறைநிலவு நாட்களும்
செவ்வாய்க் கிழமைகளில் அமையும். அனைத்து முழுநிலவு நாட்களும் வெள்ளிக்
கிழமைகளில் அமையும்.
முழுநிலவு தடுமாறினால் வெள்ளிக்கிழமை இடம் மாறும். மறைநிலவு
தடுமாறாது. அதனால் செவ்வாய்க் கிழமையைச் செவ்விதாகக் கணக்கிட்டு கிழமை
முறையை ஈட்டி விடலாம்.
‘நாள் ஈண்டும் அகவர்’ என்போர் இதனைச் செய்திருக்க வேண்டும். நாளும்
கிழமையும் பொருந்த வேண்டும் என்பது மரபுவழி நம்பிக்கை. இன்றையக்
காலக்கட்டத்தில் செவ்வாய்க்கிழமையைச் செவ்விதாகப் பொருத்தி நாள் முறையை
மீட்கும் பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது. பேணும் பொறுப்பு ஆண்களுக்கும்
அறம் சார்ந்த அரசுக்கும் இருக்கிறது.
ஆளாதல்:-
வளர்பிறையில் நடு நாளில் வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய ஆளும்
கிழமையில் தலைப் பூப்பு எய்துதல் என்பது நாட்காட்டியின்படி திருமகளிர்
இயல்பாகையால் ‘ஆளானவள்’ என்ற சொல், ஆளும் கிழமையில் திருத்தகுதி பெற்றவள்
என்ற பொருளில் அழைக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறான செய்திகள் அகஇலக்கியங்களில் பரந்து பேசப்பட்டுள்ளன. அவற்றை
உயர் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். சான்றாக ஒரு செய்தி, அகநானூற்றுப்
பாடல் 32-ல் காணக் கிடைக்கிறது.
தினைப் புனம் காவல் செய்யும் பெண் தன் தோழியிடம் கூறுகிறாள், நேற்று
இரவு காட்டுப் பன்றி வந்தது. அதைத் தொடர்ந்து திருமணி ஒளிரப் பூண்
புனைந்த ஒருவன் வந்தான். புரவலன் போன்ற தோற்றத்தில் இருந்தான். ஆனால்
இரவல் மாக்கள் போலப் பணிவாகப் பேசினான்.
இங்கே இருந்து கிளிவிரட்டும் நீங்கள் சூரர மகளிர் போன்று
தோன்றுகிறீர்கள், எனது மனதையும் அணங்கச் செய்து விட்டீர், யார் நீங்கள்
என்று கேட்டபடி எனது சிறுபுறம் அணைத்தான்.
மழைபெய்தால் மண் நெகிழ்வது போல என் மனம் இளகியது. அதை அவன் அறிந்து
விடக் கூடாது என்று அஞ்சி மருண்டு எனது முழுவலிமையையும் பயன்படுத்திப்
பறித்துக் கொண்டு அவனை விட்டு விலகி நின்றேன். அவனால் எதுவும் சொல்ல
முடியவில்லை. ஏமாந்தபடியே போய் விட்டான். இனத்திலிருந்து தீர்ந்து தனியே
செல்லும் களிறு போலப் பிரிந்து சென்றான்.
எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. தகுதியான இந்த நாளில் நான்
தகுதியற்று இருப்பதாகக் கருதிக் கொண்டான் போலும்!
சாய் இறைப் பணைத் தோள் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான்....
அங்கணாளனை நகுகம் யாமே ! - (அகம்-32)
நாட்காட்டி பற்
போன்றேபூப்பு ஒழுங்கு பற்றிய
புரியும்படியாகப் பழந்தமிழ்ச்
‘அல்குல்நலம் பாராட்டிய வருமே

இன்று அந்த அறி
இனம். பெருந்தச்சுநிழல் நாட்கா
புதுப்பிக்க முயற்சிசெய்யும்.
மணி மணி :-
மணி என்றாலே
பெருந்தச்சுநிழல் நாட்காட்டியை
பேசினார் முதுபெரும்தமிழறிஞர்
தமிழ் மணிகள்
ஏராளம். சான்றாகச் சில: அருமணி, அரிமணி, ஆய்மணி, இருள்திருமணி, இனமணி,
எறிமணி, ஒலிமணி, ஒண்மணி, கண்மணி, கணமணி, கவிழ்மணி, கறங்குமணி, கடைமணி,
கருமணி, கொடுமணி, கோலமணி, சுடர்மணி, செழுமணி, பழுமணி, படுமணி, பாம்புமணி,
பொன்மணி, பெய்ம்மணி, மாமணி, மான்மணி, மண்ணுறுமணி, திருமணி, தேர்மணி,
தனிமணி, நன்மணி, நிரைமணி, நீலமணி, நவமணி, வயிரமணி, விரவுமணி, மத்தகமணி.
இவ்வாறாகப் பட்டியல் நீள்கிறது.
அதன் பண்பு கருதியும் நிறம் கருதியும் கிளைத்த சொற்கள், மணிமுடி,
மணிப்பூண், மணிமுலை, மணிவரை, மணிமழை, மணிநீர், மணி மண்டபம், மணிக்கலம்,
மணிப்புறா, மணிக்குழல், மணி மார்பம், மணித்தேர், மணிக்கால், மணித்தூண்,
மணியூசல், மணிமாலை, மணிமேகலை, மணிமலை, மணிமயில், மணிச்சிரல், மணிச்சிகை,
மணிநிறம், மணிவண்ணன் இவ்வாறாக விரிகிறது.
மணியின் ஊடாகத் தமிழ் மொழி ஒலி நிலையிலிருந்து உறை நிலை வடிவம்
பெற்று கொடுவரி ஏற்றி வெளியில் உலவுகிறது. அது கொள்கையாக விளங்கிக்
கொள்ளப் பட்டிருக்கிறது. கோட்பாடாகவும் விதி செய்யப் பட்டிருக்கிறது. அது
அறுபதின் சுழற்சி. பாவை வடிவினது. பெண்ணியல்பானது.
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின் அடுத்தடுத்த படிநிலை வெளியீடுகள்
மணி மணியாக அறிவுத்துறைகளைத் தொகை வகை செய்திட அறிஞர்களுக்கு உதவும்.
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் மணியான வல்லுநர்களைத்
தொடர்ந்து தேடி வருகிறது.
மணிக் கணக்குடன் நாள் கணக்கையும் கூறு கூறாக இணைப்பதன் மூலம், நிலவு
புரையேறிக் கொள்வதைத் தீர்க்கும் கற்பு தமிழுக்கு இருக்கிறது என்று நாட்ட
இயலும்.
மணியின் சுழற்சி:-
மணியின் சுழற்சி ஒரு வாய்ப்பாடாக விதி செய்யப் படும்போது உறைநிலை
ஒலி கேளா ஒலியாக, வடிவ ஆற்றலாகச் செயல்படுகிறது என்று கருத இடம்
இருக்கிறது.
அதே அறுபதின் சுழற்சி நுண்ம நிலையில் நவில்வது போலவே பரு நிலையிலும்
இயங்குமானால் அல்லது கேளா ஒலியாகிய அரவு அரச முயற்சியால்
அணைக்கப்படுமானால் அது கொற்றம் பெறும். அந்த ஆற்றலை உடைய அண்ணல் யானைகள்
தைப்பத யானைகளாக இருந்திருக்கலாம். முன்னோன் முருகனின் பிணிமுகம் என்ற
யானை ஒரு தைப்பத யானையாக இருந்திருக்கலாம்.
சமற்கிருதத்தில் எழுதவே முடியாத ‘தெய்வானை’ பிறகு எங்கிருந்து
வந்திருக்கும் என்று ஐயப்படலாம்.
ஆசிவகம், சமணம், சைவம் இவற்றின் ஊடாக நகர்ந்த நகரத்தார் வள்ளியையும்
விடவில்லை, தெய்வானையையும் விடவில்லை. தமிழை விட்டு விட்டனர். மணி
‘மாணிக்யம்’ என்றானது. தமிழின் தூய்மையை எந்த வடிவத்திலும் விட்டுத் தர
இயலாது. அது மணித் தமிழ்.
தனிப்பட்டியல்:-
இவ்வளவு மணிகள் தமிழில் இருக்கும் போது, உறுத்தலே இல்லாமல் தினமணி
என்ற சொல்லைத் தமிழ்ச் சொல் என்று உலவ விடும் மேதைகளைத் தனிப்
பட்டியலில்தான் வரிசைப் படுத்த வேண்டும்
இது மரபு வழித் தமிழ்த் தேசி
___---ooo000OOO000ooo---___
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக