1998 வருடம் என்று நினைவு. நாங்கள் பொள்ளாச்சியில் கல்லூரியில்
படித்துக்கொண்டிருக்கிறோம். என் நண்பன் ஒருவன் ஜக்கியின் தீவிர பக்தன்.
இன்றளவும் அவன் அப்படித்தான் இருக்கிறான் என்பதை இந்திய நதிகளை காக்க
மிஸ்ட் கால் கொடுங்கள் என்ற ஜக்கியின் அறைக்கூவலை ஏற்று அதன் பதாகைகளை
அவன் ஏந்தி நிற்பது போன்ற புகைப்படங்களை பார்த்து தெரிந்து கொண்டேன்.
சரி விஷயம் அதுவல்ல. 98 காலகட்டங்களில் ஜக்கி வாசுதேவ் ஒரு குட்டிச்
சாமியார். இந்த குட்டி என்பதன் பொருள் அவருடைய இந்த அசுர வளர்ச்சியடையாத
நிலையை குறிக்கிறது. பணம், புகழ், ஆடம்பரம், செல்வாக்கு போன்ற
எல்லவற்றிலும் அப்போதுதான் வளர்ந்து வருகிறார்.
எனக்கும் என் நண்பனுக்கும் ஜக்கி குறித்து நிறைய கருத்து மோதல்கள்
நடப்பதுண்டு. அப்போது நக்கீரன் பத்திரிக்கை ஜக்கியின் அந்தரங்கங்கள் என
குறிப்பிட்டு ஒரு கட்டுரையை பிரசரித்தனர். அதில் ஜக்கியின் ஆசிரம
நிகழ்வுகளில் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும்,
அவருடைய மனைவியின் மர்ம மரணம் போன்றவற்றை குறிப்பிட்டும் அக்கட்டுரை
வந்தது. இதே நக்கீரன் தான் பின்னாளில் ஜக்கியின் கட்டுரைகளை வெளியிட்டு
அதை இன்றளவும் அவர்களுடைய பதிப்பகத்தில் புத்தகமாக வெளியிடுகின்றனர்
என்பது வேறு விஷயம். இந்த ஜக்கி வாசுதேவை எலைட் சமூகத்திடம் கொண்டு போய்
நிறுத்தியதால் பெரும் பங்கு ஆனந்த விகடன் இதழுக்கு உண்டு என்பதையும்
இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
அப்போது அந்த நக்கீரன் கட்டுரைகளை மேற்கோள்காட்டி அவனிடம் நிறைய பேசி
வாதிட்டேன். ஆனால் அவன் ஜக்கியின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை விடுவதாக
இல்லை.
கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கடந்து விட்டன. ஜக்கி இப்பொழுது
அடைந்திருக்கும் நிலை அனைவரும் அறிந்ததே. தன் ஆசிரம விழாவிற்கு இந்திய
பிரதமரையே அவரால் வரவழைத்துவிட முடியும். இந்திய நதிகள் என்ன உலக நதிகளை
காக்க கூடிய வல்லமை கூட இப்போது அவரிடம் உண்டு என்று அவரது பக்தர்கள்
நம்புகின்றனர்.
ஈஷா யோகா மையம் தனது ஆசிரம தேவைகளுக்காக காடுகளை அழித்தது, யானை செல்லும்
வழித்தடங்களை மறித்து கட்டடங்களை கட்டியது மற்றும் விரிவாக்கம் தொடர்பான
சர்ச்சைகள் என நீண்ட காலமாக சிக்கியுள்ளன. மாநில அரசும் கூட சென்னை
உயர்நீதி மன்றத்தில் ஜக்கியின் ஈஷா மையம் விதிமுறைகளை மீறி
செயல்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது.
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு செய்தி இந்த நதிகளை காப்போம்
பிரச்சாரத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தின் ஒரு அதிகாரபூர்வ ஸ்பான்சர்
அதானி குழுமம்.
இந்த அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் & செஸ் லிமிடெட் குஜராத்தில் பல
விதிமீறல்கள் புரிந்து, சுற்றுச்சூழல் அழிவு மற்றும் நிலம்
கையகப்படுத்தப்படுதல் ஆகியவற்றின் முக்கிய குற்றவாளியாக
குற்றஞ்சாட்டப்பட்டது. இவற்றிற்காக இந்நிறுவனம் மிக அதிகபட்ச தண்டனையை
சுமத்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு இட்டுச் சென்றது. அது சுமார் 200
கோடி ரூபாய் அபராத தொகையை விதித்தது. பின்னர் மையத்தில் மாற்றம்
ஏற்பட்டபோது அவை கைவிடப்பட்டது.
நதிகளை பாதுகாப்பதின் பிண்ணனியில் நாம் ஆராய வேண்டியது அதிகளவில்
கட்டப்படும் அணைகள், மணல் கொள்ளை, சுற்றுச்சூழல் மாசடைதல் , காடழிப்பு
மற்றும் ஆறுகள் ஒன்றிணைப்பதற்கும் அவற்றின் மீது நீர்வழிகளை
உருவாக்குவதுமே உண்மையான அச்சுறுத்தல்களாக உள்ளன.
ஆனால் அவரோ விவசாய நிலங்களில் பழ மரங்களைக் நடச்சொல்லி குறிப்பிடுவதன்
மூலம், நதிகளை பாதுகாப்பதில் இருந்து விலகி வேறு திசையில் செல்கிறார்.
விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பலனளிக்கும் முன் இந்த மரங்கள் நீண்ட
கருவூட்டல் காலங்களைக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே இதற்கு துறையினூடாக
நல்ல நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது, இதனால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட
நீர்வாழ் உயிரினங்களை மேலும் வலுவாக்குகிறது.
இந்த ஆன்மீக நிறுவனங்கள் அனைத்துமே நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர
விரும்புவதாக கூறுகின்றன. அப்படியானால் அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து
செயல்பட்டு இன்னும் சரியான பிரச்சாரத்தை வடிவமைப்பதில் இருந்து அவர்களை
எது தடுக்கிறது?
நீண்ட காலமாக களப்பணியாற்றும் மேத்தா பட்கருடனோ, வந்தன சிவா போன்றோருடனோ
இணைந்து வேலை செய்வதை இவர்கள் ஏன் விரும்புவதில்லை. மாறாக
பெருநிறுவனங்களுடனும் ஊடக சேனல்களுடனும் மட்டுமே அவர்கள் ஏன் கூட்டு
முயற்சியை கொள்கிறார்கள்?
துறைசார்ந்த எந்த வல்லுனராவது ஜக்கியின் இந்த திட்டத்திற்கு துணை
நிற்கிறார்களா? அல்லது அவர்களின் ஆலேசனைகளையாவது இவர் பெறுகிறாரா?
வெறும் ஊடாக வெளிச்சம் பெற்ற திரைப்பட நடிகர்கள், அவரின் ஆஸ்தான
எழுத்தாளர்கள், ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள், கொழுத்த தொழிலதிபர்கள் என
ஒரு வட்டம் விளம்பரங்களின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க
முயற்சிக்கின்றனர்.
இத்தகைய ஒரு குறுகிய பார்வையுடன் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள இந்த
நதிகளை காக்கும் பேரணி, திருடன் கையில் சாவியை கொடுத்து காவலுக்கு நிற்க
வைப்பதற்கு ஒப்பானது. அது நிச்சயம் தொடங்கிய இடத்திலேயே முடிவடையும்.
அவர் சொல்லும் மிஸ்ட் கால் போல.
ஐக்கியை நம்பாதீர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக