Nirmal Rajapandi
தமிழ்நாடு தவற விடும் மழை மேகங்கள், பயன்படுத்தும் கர்நாடக அரசு : ஷாஜு சாக்கோ
மழையை கொண்டு வர க்ளவுட் சீடிங் (Cloud seeding) நல்ல வழிமுறை. கர்நாடக
அரசு இந்த முறையில் மேகங்களைக் கண்டறிந்து cloud seeding முறையில் மழையை
கொண்டு வர கடந்த ஜூலை மாதமே ரூ.30 கோடி ஒதுக்கி இப்போது கர்நாடகாவில்
மழையை வெற்றிகரமாக பெய்ய வைத்திருக்கிறார்கள்.
பெங்களூர் ஜக்கூர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறு விமானங்கள்
சில்வர் அயோடைட், பொட்டாசியம் க்ளோரைட் மற்றும் சோடியம் க்ளோரைடைக்
கொண்டு சென்றன. அவை மழை மேகங்கள் மேல் பறந்து சரியான மழை மேகங்களை
கண்டறிந்து கெமிக்கல் தூவி மழையை தூண்டின. இதனால் மாண்டியாவில் 45
நிமிடங்கள் பலத்த மழை பெய்தது..
நான் சென்ற முறை Fx16tv இணையதளத்தில் எழுதிய போது தமிழகமும் இதே
வழிமுறையை பின்பற்றி மழையை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று
கேட்டுக் கொண்டேன்.. தமிழகத்தில் ஒரு வேளை அப்படி ஒரு முயற்சி எடுத்து
வெள்ளம் வந்து விடுமோ என்று அச்சப்படுகிறதோ தெரியவில்லை. அல்லது மழை
பெய்யாமல் போனால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று சப்பை காரணங்களை
சொல்வார்களோ தெரியவில்லை. சென்னை வெள்ளம் வந்த போதும் ஒரே நாளில் இன்ச்
கணக்கில் மழை பெய்தால் எங்களால் என்ன செய்ய முடியும் என்றுதானே
சொன்னார்கள் ?
கர்நாடகாவில் நான்கு வருடங்களாக சராசரி அளவை விட குறைவாகவே மழை
பெய்கிறது.. இந்த வருடமும் ஜூனில் இருந்து ஆகஸ்ட் 22 வரை 23%
சராசரிக்கும் குறைவாகவே மழை கிடைத்திருக்கிறது. அதனால்தான் அரசாங்கம்
இந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. அவர்களே 23% குறைவான மழையை
பெற்றிருக்கும் போது காவிரியில் தமிழகத்திற்க்கு இந்த வருடம் தண்ணீர்
திறந்து விடுவார்களா என்று நாம் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இதை
வைத்து அரசியல் நடப்பதும் கலவரம் மூளுவதும் நாம் காணாததல்ல. கர்நாடகாவில்
அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் வருகிறது என்பதை நினைவில் கூறுங்கள்.
ஏராளமான மழை மேகங்கள் மழையை தராமல் தமிழ்நாட்டை கடந்து போகிறது.
முக்கியமாக டெல்டாவிலும் தென் தமிழகத்திலும் மழை குறைவு. சென்னைக்கு
தண்ணீர் தரும் ஏரிகளும் காலியாகத்தான் இருக்கிறது. ஏராளமான மழை தேவை.
சென்ற ஆண்டு மழை பொய்த்து விட்டது. இந்த வருடம் இரண்டு வருடங்களுக்கு
தேவையான மழை பெய்யவேண்டும். மழை மேகங்கள் அவ்வளவு இருந்தும் ஏன் மழை
பெய்யவில்லை என்ற கேள்வி தான் நம் அனைவருக்கும் உள்ளது. மரங்கள் குறைந்து
விட்டது. மழையும். விவசாயியும் வானத்தை அண்ணாந்து பார்த்தவாறே உள்ளார்.
நாம் இந்த வழிமுறையை பின்பற்றாமல் கண்மூடி இருப்பது கர்நாடகா
ஆந்திராவுக்கு தான் சாதகம். மழை மேகங்கள் நம்மை கடந்துதான் போகிறது. நீர்
மேலாண்மை, மரங்கள் நடுவதும்தான் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும்
என்றாலும், தெர்மாகோல் திட்டங்களை பரிசோதிப்பதைவிட இது போன்ற அறிவியல்
முறைகளை நம் அண்டை மாநிலத்தை பார்த்தாவது செயல்படுத்தலாமே.
Shaju Chakko

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக