வெள்ளி, 6 அக்டோபர், 2017

விவசாயம் லாபமாக நடத்திய விவசாயி தொழில் புதுமுயற்சி உழைப்பு சாதனை

மேகநாதன் முனுசாமி
விவசாயிகளின் கூக்குரல் – ஆடியோ கிளிப்
இன்று இன்பாக்ஸில் ஒரு ஆடியோ கிளிப் வந்தது,. கத்தி திரைப்படத்தின்,
பின்னணி இசையுடன், உருக்கமாக ஒருவர் அன்னைக்கு வாத்தியாருக்கு எவ்வளவு
சம்பளம் வங்கி அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம், அன்னைக்கு நெல்லு ஒரு மூட்டை
எவ்வளவு
இன்னைக்கு வாத்தியாருக்கு எவ்வளவு சம்பளம் வங்கி அதிகாரிக்கு எவ்வளவு
சம்பளம், இன்னைக்கு நெல்லு ஒரு மூட்டை எவ்வளவு அந்த அளவுக்கு என்
நெல்லுக்கு விலை ஏறவில்லை என்று உருக்கமாக கதறி கதறி பேசியிருந்தார்.
அந்த ஆடியோ கிளிப் கேட்டவுடன், எனக்கு தெரிந்த ஒரு விவசாயின்
உண்மைக்கதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைபட்டதன் விளைவு தான் இந்த
பதிவு.
1900-ல், நெல்லை மாவட்டத்தில், களக்காடு என்னும் கிராமத்தில், சிதம்பரம்,
செல்லாயி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு
சொந்தமான ஒரு ஏக்கருக்கும் குறைவான சிறு நிலத்தில் வாழ்ந்து வந்தனர்.
அவர்களுக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். 1915-ல் சிதம்பரம் திடிரென மரணம்
அடைகிறார்.
செல்லாயியை, சிதம்பரத்தின் உறவினர்கள் ஏமாற்றி இருந்த சிறு நிலத்தையும்
பிடுங்கிக்கொண்ட
ு துரத்திவிடுகின்றனர்,
அப்பாவியான செல்லாயி என்ன செய்வது என்று அறியாமல், தன் 5 மகன்களையும்
கூட்டி கொண்டு ஊருக்கு வெளியே உள்ள குடிதாங்கி குளம் என்ற குளக்கரையில்
ஒரு ஓலை குடிசை போட்டு தங்குகிறாள்.
முதல் 3 மகன்களும், தந்தை சிதம்பரம் இருந்த போது திண்ணை பள்ளியில்
அரிச்சுவடி படித்ததோடு சரி.
செல்லாயி, இளைய மகன்களை திண்ணை பள்ளியில் விட்டு விட்டு முதல் 3
மகன்களுடன் வயல்களில் கூலி வேலை செய்து வந்தாள்.
அந்த 5 பிள்ளைகளில், மூன்றாம் மகனின் பெயர் நல்லமுத்து, இவரது வாழ்கையை
தான் நாம் இன்று பார்க்கபோகிறோம்.
நல்லமுத்து, தனது பத்தாவது வயதிலிருந்து வயல்களில் கூலி வேலை
பார்த்துவந்தான், தனது 15ஆவது வயதில், அந்த ஊரில் இருந்த ஒரு
பணக்காரரிடம், ஒரு சிறு பகுதி வயலை தனக்கு பண்ணையம்(குத்தகை) செய்ய
தருமாறு கேட்கிறான். நல்லமுத்துவின் தைரியத்தை பாராட்டி அந்த பண்ணையாரும்
ஒரு சிறு பகுதியை ஒதுக்கி தருகிறார்.
சுமார் 5 வருடங்கள் கடின உழைப்பு, சிக்கனம் என்று வாழ்ந்து பின், சிறுக
சிறுக பணம் சேர்த்த நல்லமுத்து, தனது 20 வயதில் தான் குத்தகைக்கு வேலை
செய்த நிலத்தை விலைக்கு தர முடியுமா என்று அந்த பண்ணையாரிடம் கேட்கிறார்,
பண்ணையாரும் இவரது அயராத உழைப்பை கண்டு பாராட்டி அந்த நிலத்தை விலைக்கு
கொடுக்கிறார்.
பின்னர், நல்லமுத்து, தனக்காக ஒரு சிறு வீடு கட்டிக்கொண்டு, தன் தாயுடன்,
வாழ்கிறார். அவரது முதல் அண்ணன் மட்டும் நடுவே இறந்து விடுகிறார்,
அவரது தாய் நல்லமுத்துவுக்கும் மற்ற சகோதரர்களுக்கும் திருமணம் செய்து
வைக்கிறார். அவர்கள் அனைவரும் ஒரே தெருவில் வேறு வேறு வீடுகள் அருகருகே
வாழ்ந்தனர். அனைவரும் விவசாயமே செய்தனர்.
களக்காடு என்பது காவேரி போல பெரிய அளவில் ஆற்று பாசனம், உள்ள ஊர் அல்ல,
பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யவேண்டும். நல்லமுத்து அப்படியும்
அருமையாக விவசாயம் செய்து வந்தார்,
எனக்கு சுமார் 10 வயது இருக்கும் போது நானே நேரில் பார்த்துள்ளேன்,
அப்போது நல்லமுத்து சுமார் 10 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்தார் தனது
வீட்டில் 2 பசுமாடுகளும், 15 எருமை மாடுகளும் வைத்திருந்தார்,
அவரது மனைவி சொர்ணத்தம்மாளுக்கு செலவுக்கு பன தரவே மாட்டார், நல்லமுத்து
ஊதாரி என்பதால் அல்ல, சொர்ணத்தம்மாளுக்கு அவரிடமிருந்து பணம்
தேவைப்படவேயில்லை, மாடுகளில் இருந்து வீட்டில் வைத்தே பால் வியாபாரம்
செய்வார்,
அருகில் இருந்த கூட்டுறவு பண்ணையில் சென்று பால் கறந்து கொடுத்து
மாதாமாதம் பணம் வாங்கிகொள்வார்.
நல்ல முத்துவின் வீட்டுக்கு பின் இரண்டு ஆள் ஆழத்துக்கு ஒரு மிகப்பெரிய
எருக்குழி இருக்கும். மாடுகளின் சாணம், சிந்தும் வைக்கோல், வீட்டில் உள்ள
குப்பை, மீதமான கெட்டுபோன உணவுகள் எல்லாம் அதில் தான் கொட்டுவார்கள்.
நல்லமுத்து, தனது வீட்டுக்கு, சமையல் எண்ணை, கடுகு போன்ற ஒருசில மளிகை
சாமான்கள் தவிர வேறு எதுவும் கடையில் வாங்கி நான் பார்த்ததில்லை.
தனது மொத்த வயலில் பெரும்பாலும், கேரளாவில் நேந்திரங்காய், என்று
சொல்லப்படும் ஏத்தன் என்ற வகை வாழையை மட்டுமே பயிரிடுவார்.
ஒரு சிறு பகுதி நிலத்தில் சுழற்சி முறையில், நெல், உளுந்து, தொவரை,
பருத்தி, போன்றவற்றை பயிர் செய்வார்
இவற்றில், வாழை, பருத்தியை தவிர மற்றவற்றை விற்க மாட்டார்,
நெல் மற்றும் பருப்பு வகைகளை தனது வீட்டுக்கு மட்டுமே பயன் படுத்துவார்,
அவருக்கு பிள்ளைகளே 7 ஆயிற்றே.
நான் பார்த்தபோது, வடக்குவீடு என்று அழைக்கப்படும் அவரது மற்றொரு
வீட்டில், நெல்லும், பருப்பும் மூட்டைகளில் அடுக்கி வைத்திருப்பதை
பார்த்திருகிறேன
். அந்த வீடு முழுவதும் நெல்லும் பருப்பு மூட்டைகளும் மட்டுமே இருக்கும்.
நீங்கள் ஏன் அரசு கொள்முதல் கூடங்களில் விற்பதில்லை என்று கேட்டால்
சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார்,
ரொம்ப அழுத்தி கேட்டால், அதுக்கு பதிலாக, நான் நெல்லை என் மாடுகளுக்கு
திவனமாக போடுவேன் என்பார்.
வாழைக்குலைகள் வெட்டும் நேரம் வரும் போது மற்ற விவசாயிகள் தரகர்களிடம்
விலை பேசிக்கொண்டிருப்பர்கள்
நல்லமுத்து மட்டும், அந்த தரகர்களின் லாரி ஓட்டுனர்களிடம், உங்கள்
லாரிகளில், மிச்சம் இருக்கும் காலி இடத்தில் என் வாழைக்குலைகளை ஏற்றி
செல்ல கூலி எவ்வளவு வேண்டும் என்று பேரம் பேசிக்கொண்டிருப்பார்.
தன் பிள்ளைகள், மற்றும் பேரன்கள் மூலம் தனது வயலில் வெட்டப்பட்ட
வாழைக்குலைகளில் காப்பியிங் பென்சிலால் "சி.நா" என்று அடையாளக்குறி
போட்டு, அந்த வாழைக்குலைகள் 5 – 6 லாரிகளில் பிரித்து ஏற்றி, பின் அந்த
லாரிகளில் ஒன்றிலே ஏறி திருவனந்தபுரத்துக்கு செல்வார்.
பின் தன் வாழைக்குலைகளை அங்குள்ள மொத்த வியாபாரிகளுக்கு நேரடியாக விற்று
விட்டு பணத்துடன் திரும்புவார், வந்தவுடன் அந்த பணத்தில் ஏதாவது நிலத்தை
விலைக்கு வாங்குவார்.
அவர் என்றுமே தங்கத்தில் முதலீடு செய்ததேயில்லை, வீட்டில் பெண்களுக்கு
திருமணம் என்றால் ஏதாவறு வயலை விற்றுவிடுவார் அந்த பணத்தில் திருமணம்
முடித்து அனுப்புவார்.
அவருக்கு 4 மகள்கள் மற்றும் 3 மகன்கள், எல்லோரையும் நன்றாக படிக்கவைத்தார்.
4 பெண்களுக்கும் அரசு அதிகாரிகளை மாப்பிள்ளையாக தேடி திருமணம் செய்து வைத்தார்.
பெரிய மகன் அரசுத்துறையில் வேலைக்கு சேர்ந்தார், அடுத்த மகன் BA
படித்துமுடித்து தன் தந்தையுடனே விவசாயம் பார்க்கிறார், கடைசி மகன்
மட்டும் சென்னை வந்து ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
அவரது விவசாய முறையே அலாதியானது,
1 .வயலில் உள்ள கழிவுகள், வீட்டில் உள்ள மாடுகளுக்கு,
2. வீட்டில் மாடுகளின் கழிவுகள் மீண்டும் வயலுக்கு, 3. உணவுக்கு நேரடியாக
வயலிலிருந்தே விழை பொருட்கள்,
4. வருமானத்துக்கு வாழை போன்ற பணப்பயிர்கள்,
5. விவசாயத்தில் வரும் வருமானத்தை மறுபடியும் விவசாயத்திலேயே முதலீடு செய்வது
6. எந்த காலத்திலும் தரகர்களிடம் போகாமல், தன் விளைப்பொருட்களை தானே
நேரடியாக விற்பது. 6.விவசாயத்தில் புதிதாக என்ன என்று தவறாமல் வானொலில்
கேட்பது, பின் அதை வயலில் செயல்படுத்தி பார்ப்பது, இப்படி பல.
நல்லமுத்து விவசாயத்தை ஒரு முழுநேர தொழிலாகவே செய்தார், அவர் எந்த
காலத்திலும் அரசாங்கத்தை எதற்கும் எதிர்பார்க்கவில்லை,
மழை பொய்த்துபோவது, சூறைக்காற்றில் வாழைகள் சரிந்து விழுவது, வெள்ளம்
என்று அவரும் பல இயற்க்கை சீற்றங்களை சமாளித்து தான் விவசாயம் செய்தார்.
நல்லமுத்து, 2003-ல் தனது 98ஆவது வயதில் இறந்தார், இறப்பதற்கு 3 மாதம்
முன்பு வரை தினமும் விவசாயம் செய்தே வந்தார்.
ஒரு விவசாய கூலியாக 10 வயதில் தன வாழ்கையை தொடங்கிய நல்லமுத்து, 98
வயதில் இறக்கும் போது தன் மகன்களுக்கு சொந்தமாக முதல் தளத்துடன் கூடிய
மூன்று கான்க்ரீட் வீடுகள், 20 ஏக்கர் விவசாயம் நிலம், இத்தனையும் விட்டு
சென்றார்.
அவர் செய்த ஒரே தொழில் விவசாயம், அவரது ஒரே முதலீடு அவரது உழைப்பு.
இன்றும் தேனி, கம்பம், போடி, கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் சும்மா
புலம்பிகொண்டிராமல், வெற்றிகரமாக விவசாயம் செய்பவர்கள் பலர்.
இன்னும் சொல்லப்போனால், நீர் ஆதாரங்கள் பெரிய அளவில், விழுப்புரம் போன்ற
பகுதிகளில் கூட வெற்றிகரமாக விவசாயம் செய்பவர்கள் பலர்.
எனக்கு தெரிந்து தஞ்சை பகுதி விவசாயிகள் மட்டுமே, அரசாங்கம்
கவனிக்கவில்லை என்று புலம்புவது என்று நினைக்கிறேன்.
விவசாயி சோறு போடுகிறான், குழம்பு ஊத்துகிறான் என்று செண்டிமெண்டாக
பேசாமல், அவர்கள் தங்கள் தொழிலை லாபகரமா செய்ய என்ன வழி என்று அவர்கள்
தான் கண்டுபிடிக்க வேண்டும்.
விவசாயிகளின் தற்கொலைகளை அவமானப்படுத்துகிறாய் என்று சொல்பவர்கள் ஒன்றை
கவனிக்க தவறுகிறார்கள்,
பெட்டிகடைகாரன் கூட தற்கொளை செய்கிறான், ஐடி-யில் வேலை செய்பவன் கூட
மனைவியுடன் சேர்ந்து மாடியில் இருந்து, குதிக்கிறான், தற்கொலை என்பது ஒரு
தனிமனிதனின் உளவியல் சார்ந்த்தது
நீ குப்புரப்படுத்துகொண்டு யோசித்து நல்லமுத்து என்று அழகாக ஒரு கதை
எழுதினால் நாங்கள் நம்ப முடியாது என்று சொல்பவர்களுக்கு,
அந்த நல்லமுத்துவின், முதல் மகளாக பிறந்த பெண் செல்லம்மாள் தான் என் தாயார்.
ஆம், என் பாட்டன், ஆண்டபரம்பரை எல்லாம் இல்லை, ஒரு விவசாய கூலியாகத்தான்
தன் வாழ்கையை தொடங்கினார், எழுதப்படிக்க தெரியாதவர் தான், ஆனால் அவர்
தான் இறக்கும் போது, தன் 17 பேரக்குழந்தைகளுக்கு உழைப்பின் அருமையை தன
வாழ்வில் மூலம் சொல்லிக்கொடுத்தார் என்று நான் எப்போதுமே பெருமை
கொள்வேன்.
-- Krishnavel T S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக