சபரி நாதன்
கர்சிஃப் கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மெரினாவில்
கலந்துக் கொண்டது,
மெர்சல் படத்தில் தமிழன் ஆளனும், தமிழன் பெருமை போன்றவற்றையும்
குறிப்பிட்டு வெளிப்படையாகவே காட்சிகளை வைத்து இருக்கிறார், (கேரளா போன்ற
மாநிலங்களில் ரசிகர் வட்டம் இருப்பினும் தமிழ் என்பதில் வியபார ரீதியாக
சுருங்கிவிடுவோமோ என்று நினைக்காமல் தன் தாய்மொழியான தமிழை தூக்கி
பிடித்து பேசியது வரவேற்கதக்கது)
மெர்சல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் விஜயின் பேச்சு மாற்ற
ரசிகர்களையும் ரசிக்கவே வைத்தது என்பதையும் மறுக்க முடியாது,
இதற்கு முன்பும் விவசாயிகள் பிரச்சனை, ஊழல் போன்றவற்றிற்கு எதிராக குரல்
கொடுத்து இருக்கிறார்,
தற்போது நீட் விவகாரத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் வீட்டிற்கு
சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்திருக்கிறார்.
இதையெல்லாம் விளம்பரம் மற்றும் அரசியலுக்காக செய்கிறார் என கூறிவிட்டு
நாம் கடந்திட முடியாது. ஏனெனில் கொஞ்சம் பெரிய நடிகர்கள் எது செய்தாலும்
இது அதற்காக இருக்குமோ? இதற்காக இருக்குமோ? ஏதோ ஒரு ஆதாயம் இல்லாமலா
இதையெல்லாம் பேசுகிறார்? என்று பலரையும் சிந்திக்கவே வைக்கும். ஆனால்
அவரது மேற்கண்ட செயல்கள் உண்மையான உணர்வால் தான் வெளிப்பட்டது என்றால்
அதை நாம் பாராட்டாமல் கடப்பதும், அதை கொச்சைப்படுத்துவதும் கூட தவறு
தான்.
தமிழர் பிரச்சனைகளில் கமலை போல அரசியல்வாதிகளுடன் நேரடியாக
மோதாவிட்டாலும், ரஜினி போல திரைப்படத்தில் மட்டுமே பேசாமல் அதை
களத்திலும் விஜய் வெளிப்படுத்துகிறார் என்பது பாராட்டக்கூடிய ஒன்றே!
இந்த விஷயத்தில் விஜயோடு அஜித்தை ஒப்பிட நான் விரும்பவில்லை. ஏனெனில்
இதையெல்லாம் தமிழ்நாட்டில் நீ ஏன் செய்கிறாய்? உன் வேலையை மட்டும் பார்
என்று எவரும் சொல்லாத அளவிற்கு அவர் நடந்துக் கொண்டு தான் இருக்கிறார்.
அவரும் நடிகராக மட்டும் தான் இருப்பார், அவரையும் நடிகராக மட்டுமே
பார்ப்போம் கொண்டாடுவோம் என்பதால்....
குறிப்பு :
நான் விஜய் ரசிகனல்ல.
திங்கள், 09:21 PM ·

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக