செவ்வாய், 10 அக்டோபர், 2017

அய்யா வைகுண்டர் விமர்சனம் முத்துக்குட்டி பெரிய சாதனை இல்லை

Vel Murugan, Gabriel Raja மற்றும் 29 பேருடன் இருக்கிறார்.
# நமது_நிலைப்பாடுகள்_என்பது_புதி
ய_தரவுகள்_கிடைக்கும்_போது_மாற்
றியமைக்கப்படவேண்டியவைகளே ....
அய்யா வைகுண்டர் என்கிற பிம்பத்தின் மீதான வெளிச்சம் :
1) "சாமுவேல் மேட்டிர்" எனும் ஆங்கிலேயர் எழுதி, 1870 - ல் வெளியான
"லேண்டாப் சாரிட்டி" எனும் புத்தகத்தின் பக்க எண்.222,223 - ல் "அய்யா
வைகுண்டர்" குறித்த பதிவு உள்ளது. 1930 - களிலிருந்து 40 ஆண்டுகளாக பல
ஆயிக்கணக்கான பின் தொடர்போர்களை "முத்துக்குட்டி" எனும் அய்யா வைகுண்டர்
வசீகரித்து வைத்திருந்திருக
்கின்றார் என்பது நிரூபணமாகின்றது.
2) இந்து மதக்கடவுள்களை "டெவில்" என்றும் இந்து மதக் கோவில்களை "டெவில்
டெம்பிள்" என்று வார்த்தைக்கு வார்த்தை அடையாளப்படுத்திய "சாமுவேல்
மேட்டிர்" முத்துக்குட்டி அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்றும்
பதிவு செய்கின்றார்.
3) 1930-1940 களுக்கு இடையில் "எல்.எம்.எஸ்" எனும் லண்டன் மிஷனரி
கிறிஸ்தவ மத சார்பு அமைப்பு "முத்துக்குட்டி" எனும் அய்யா வைகுண்டருக்கு
எதிராக "மோச முன்னுரைத்தல்" என்கிற தலைப்பில் சிறு கையேடுகளை அச்சிட்டு
பிரசுரித்த தகவலும் கிடைத்துள்ளது. அதன் பிரதி பெங்களுரில் உள்ள
"எல்.எம்.எஸ்" அமைப்பின் நூலகத்தில் உள்ளதாம்.
4) எனது ஊருக்கு அருகில் உள்ள "சாந்தபுரம்" கிறிஸ்துவ ஆலயத்தில்,
"முத்துக்குட்டி" எனும் அய்யா வைகுண்டர் கிறிஸ்தவத்துக்கு எதிராக
செயல்பட்டதாக தகவல் உள்ளதாக தகவல் கிடைக்கப்பெறுகிறதாம்.
5) "முத்துக்குட்டி" எனும் அய்யா வைகுண்டரை அரசனுக்கு எதிராக
பேசியதாகவும் , தலைப்பாகை தரித்ததாகவும் , மேலுடை அணிந்ததாகவும் ,
முட்டிக்கு கீழ் உடை உடுத்ததாகவும் , அரசு ஆணைக்கு எதிராக
செயல்பட்டதாகவும் கைது செய்து திருவனந்தபுரத்தில் சிறைப்படுத்திய தகவலை
சம காலத்தில் 20 ஆண்டுகளாக சிறைக்காவலராக பணியாற்றிய "தைக்காடு.குருசாமி
" என்பவரின் டைரிக்குறிப்பு எடுத்தியம்புகின்றதாம்.
5) "தைக்காடு.குருசாமி " என்பவரின் டைரிக்குறிப்பில் சிறைக்குள் ஒரு பறவை
தினந்தோறும் வருவதாகவும், அது முத்துக்குட்டியுடன் உறவாடியதாகவும் , அவர்
அதனுடன் பேசுவதாகவும் தகவலுள்ளதாம்.
எனவே ...
2௦15 ஜனவரியில் பதித்த எனது முகநூல் பதிவு திருத்தப்பட வேண்டியதே.
January 23, 2015 - ல் எனது முகநூல் பதிவு
//// அய்யா வைகுண்டர் புதிரா ? புனிதரா ?
அய்யா வைகுண்டர் என்கிற முத்துக்குட்டி அவர்களை யார் மறைத்தாலும் அவரைப்
பற்றிய அறிவிப்பு / அறிக்கை, அதாவது கிறிஸ்துவ வளர்ச்சிக்கு எதிராக
இருப்பதாக மதம் சார்ந்த ஒரு பதிவாவது லண்டன் போயிருக்கும். ஒரு கடிதமாவது
போயிருக்கும்.
முத்துக்குட்டியை கைது செய்து சுண்ணாம்புக்களவாயில் அடைத்தது....
புலிக்கூண்டுக்குள் போட்டது... நம்பிட இயலாதவை. நம்பிட எந்த ஆதாரமும்
இல்லை. கைது செய்யப்பட்ட நாள் கூட எந்தப்பதிவிலும் ஆதாரப்பூர்வமாக இல்லை.
ஒரே ஒரு பதிவு "சாந்தபுரம் ஊரில் உள்ள சர்ச்சில்" உள்ளதாக சொல்கிறார்கள்.
அதுவும் கிறிஸ்துவத்துக்கு எதிராக செயல்படுகிறான் என்று. உண்மையா என்று
தெரியவில்லை. எங்கள் முன்னோர்களின் குடும்ப சர்ச்சில்(அம்மா
ண்டிவிளை) 1820 களிலிருந்தே பதிவுகள் உள்ளது. சர்ச்க்கு எதிரான எல்லா
நடப்புகளும் ஆவணமாக உள்ளது. ஆனால் முத்துக்குட்டி குறித்து பதிவு இல்லை.
அவர் வாழ்ந்த சமிதோப்புக்கு அருகில் இருந்த இரண்டு சர்ச்களிலும் கூட
எந்தவிதமான பதிவுகளும் இல்லை.
குறிப்பிட்ட சாதி அடையாளத்துக்கு எதிரானவர்கள் வேண்டுமானால் கேரள
ஆவணக்காப்பகத்திலிருந்து அழித்திருக்கலாம். ஆனால் எங்குமே பதிவு இல்லை
என்றால்... ? அய்யாவைப்பற்றி பல ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர். பல
தளங்களில் இயங்கி உள்ளனர். எந்த ஆவணங்களையும் மீட்டெடுக்க முடியலயே... ?
கேரள ஆவணக்காப்பகத்தில் பதவி வகித்த பல இயக்குநர்கள் அய்யாவின்
சாதியினர். கண்டிப்பாக அவர்கள் ஒரு பதிவையாவது பத்திரப்படுத்தி
இருப்பார்கள்.
இரண்டு மாதம் முன்பு நான் கேரள ஆவணக்காப்பகம் சென்று நீதிபதி "சத்திய
நேசனின்" இருப்பு குறித்து ஆய்வு செய்து பல ஆவணங்களை நகல் எடுத்தேன்.
1880 முதல் அவரது பதிவு இருக்கையில்.... அதற்கும் முந்தைய தோள்சீலை கலக
ஆவணம் இருக்கும் போது... ஒரு ஆன்மீக வழியை உருவாக்கியவருடைய ... அரசுக்கு
எதிரான கலகக்காரரை (நான் சொல்லலை) பற்றிய ஒரு பதிவுமே இல்லை என்றால்
எப்படி ஏற்பது... ? ///
#நமது_நிலைப்பாடுகள்_என்பது_புத
ிய_தரவுகள்_கிடைக்கும்_போது_மாற
்றியமைக்கப்படவேண்டியவைகளே....

Gabriel Raja
ஓ.
நான் கூட ஒரு செய்தி கூறினேன் அவர் நாராயண குருவின் குரு என்றும் ஐயா
வைகுண்டர் போராட்டத்தை பாதியில் கைவிட்டு விட்டார்.
இன்றைய தலைமை பதி இருப்பது திருவிதாங்கூர் அரசர் ஐயாவுக்கு கொடை கொடுத்த இடம்.
பட்டயம் பால பிரஜாபதி குடும்பத்தினரிடம் உள்ளது.
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Gabriel Raja
நாராயண குரு போராட்டம் வெற்றி பெறும் வரை மிகுந்து போராடியவர்.
காரணம் ஈழவர், புலையர், பறையரில் அனைவரும் ஒடுக்கப்பட்ட நிலை.
ஆனால் நாடார் அப்படி இல்லை.

நாடார் குமரி திருவிதாங்கூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக