ஞாயிறு, 8 அக்டோபர், 2017

போலி சான்றிதழ் 150 கேரளா மாணவர் நீட் மூலம் நுழைவு கல்வி மருத்துவம் டாக்டர் மலையாளி

போலி இருப்பிடச் சான்று விவகாரம்: நீலகிரி, நெல்லை அதிகாரிகள் நேரில்
விளக்கம் தர உத்தரவு
 Aug 30, 2017  செய்திகள், தமிழகம்
மருத்துவக் கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்று கொடுக்கப்பட்ட
விவகாரத்தில் நீலகிரி, நெல்லை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில்
விளக்கம் அளிக்கும்படி சென்னை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஒய்.அம்ஜத் அலி. இவர் தமிழகத்தில் நீட்
அடிப்படையில் நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலியான இருப்பிடச்
சான்று கொடுத்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநில மாணவர்கள் தமிழகத்தில் சட்ட
விரோதமாக மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளதாக 150 பேர் மீது
புகார் தெரிவித்தார். 9 பேரின் பட்டியலையும் காவல் ஆணையரிடம்
அளித்திருந்தார்.
இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வில் மோசடியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்கள் பங்கேற்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த விக்னய்யா என்பவர் சென்னை காவல்
ஆணையரிடம் புகார் தெரிவித்தார். இந்த 2 புகார் மனு மீதும் நடவடிக்கை
எடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, கூடுதல்
காவல் ஆணையர் கணேச மூர்த்தி, உதவி ஆணையர் கபிலன் தலைமையிலான போலீஸார்
விசாரணையில் இறங்கினர். முதல் கட்டமாக, குற்றம் சாட்டப்பட்ட 4 மாணவர்களை
நேரில் அழைத்து விசாரித்தனர். மற்றவர்கள் உரிய விளக்கம் அளிக்கும்படி
தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தனிப்படை போலீஸார் தமிழக மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து
இருந்த அனைத்து மாணவர்களின் பட்டியலையும் சேகரித்துள்ளனர். குறிப்பாக
குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து வந்துள்ளனர்.
அவர்களுக்கு இருப்பிடச் சான்று, சாதிச் சான்று கொடுத்த கிராம நிர்வாக
அதிகாரி, தாசில்தார் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக திருநெல்வேலி, நீலகிரியைச் சேர்ந்த வருவாய்த்துறை
அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளிக்க தனிப்படை போலீஸார்
உத்தரவிட்டுள்ளனர்.
Source: The Hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக