புதன், 20 செப்டம்பர், 2017

நீட் தெலுங்கு வடயிந்திய கூட்டு வழக்கு தீர்ப்பு ஹிந்தியா NEET

மாணவர்களின் சட்டையை கிழிக்க வைத்த சங்கல்ப் டிரஸ்ட்...

இந்த கட்டுரைக்கான தலைப்பாய் மாணவிகளின் உள்ளாடையை உருவிய சங்கல்ப்
டிரஸ்ட் என்றும் வைத்திருக்கலாம்.. உண்மையாக இருந்தாலும் அது கொஞ்சம்
கொச்சையாக இருக்கும் என்பதால் தவிர்த்தேன். ஆந்திர மாநிலம்
காக்கிநாடாவில் இருக்கும் சங்கல்ப் ட்ரஸ்டுக்கும் நீட் தேர்வில்
மாணவர்கள் சட்டை கிழிப்பிற்கும் என்ன தொடர்பு என நீங்கள் யோசிக்கலாம்.
இதன் பின்னணியை நாம் பார்க்கலாம்..

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இந்திய மருத்துவ கவுன்சிலின் அப்போதைய
தலைவர் குஜராத்தை சேர்ந்த கேத்தன் தேசாய் தனியார் மருத்துவக்
கல்லூரிகளிடமிருந்து லஞ்சம் பெற்ற குற்றச்ச்சாட்டில் சிபிஐயால்
கைதுசெய்யப்படுகிறார். (https://goo.gl/hNwQQM) அவர் வீட்டிலிருந்து
கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான பணமும், கிலோ கணக்கில் தங்கமும், இந்தியா
முழுக்க 400 இடங்களில் அவர் வாங்கிய சொத்துக்களின் ஆவணங்களும்
கைப்பற்றப்படுகின்றன. பல்வேறு குற்றசாட்டுகளையடுத்து 2010 ஆம் ஆண்டு மே
மாதம் 15 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் இந்திய மருத்துவ கவுன்சில்
கலைக்கப்படுகிறது. அன்றே இந்த கேத்தான் கைதின் பின்னணியில் சில மருத்துவ
கல்லூரிகளின் முதலாளிகள் இருப்பாதாக செய்திகள் கசிந்தன. மேலும் இந்த
வழக்கில் சிக்கவைத்தவர்கள் தன்னால் பலன் அடைந்த தனியார்
மருத்துவக்கல்லூரி அதிபர்கள் என்பதை அறிந்த கேத்தன் தேசாய்
அதிர்ச்சியடைந்தார்.

2012 ஆம் ஆண்டு தலைவர் இல்லாத இந்திய மருத்துவ கவுன்சிலும் இந்திய
பல்மருத்துவ கவுன்சிலும் இந்தியா முழுக்க ஒரே மாதிரியான நுழைவு தேர்வை
அறிமுகப்படுத்தின. கேத்தன் தேசாய் இருக்கும் பொழுதே நீட் தேர்வு பற்றியான
ஆலோசனை இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்தது. இந்த நுழைவு தேர்வை
எதிர்த்து வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி உச்சநீதிமன்றத்திற்கு
சென்றது. வழக்கு நீதியரசர்கள் அல்தாமாஸ் கபீர், AR தவே, விக்ரம்ஜித் சென்
ஆகியோர் அடங்கிய மூன்று நபர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு, பலநாட்கள்
விசாரித்து neet அவசியமில்லை என்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில்
நீதியரசர்கள் அல்தாமாஸ் கபீரும் விக்ரம்ஜித் செனும் நீட் தேர்வு வேண்டாம்
என்றும் அதில் மாறுபட்டு AR தவே நீட் தேர்வு வேண்டுமென்றும் 10 ஜூலை 2013
தேதி தீர்ப்பளிக்கிறார்கள். இரண்டு நீதிபதிகள் வேண்டாம் என்றதால் நீட்
தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் மீண்டும் இந்திய மருத்துவ
கவுன்சில் நியமிக்கப்படுகிறது. அதன் தலைவராக அதே குஜராத்தை சேர்ந்த
ஜெயஸ்ரீபன் மேத்தா நியமிக்கப்படுகிறார். கவுன்சில் உறுப்பினர்களில்
ஒருவராக தமிழ்நாட்டிலிருந்து சசிகலா உறவினர் மருத்துவர் சிவகுமார்
நியமிக்கப்படுகிறார். (https://goo.gl/nlTYuq) (எல்லா இடத்திலும் இவனுங்க
உள்ள வந்துடறானுங்க). கேத்தான் தேசாய்க்கு தனியார் கல்லூரிகளை
பழிவாங்கவு\ம், ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையை குளிர்விக்கவும் NEET ஒரு
வாய்ப்பாக அமைந்தது. அதற்கு வாய்ப்பாக கேத்தன் தேசைய்க்கு அமைத்த ஆயுதமே
சங்கல்ப் என்ற டுபாக்கூர் அறக்கட்டளை.

2013 நீட்டுக்கு எதிரான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்திய
மருத்துவ கவுன்சில் உச்ச நீதி மன்றத்தை அணுகுகிறது. அந்த வழக்கு மீண்டும்
எந்த நீதிபதி மூவர் வழங்கிய தீர்ப்பில் நீட் தேர்வு வேண்டுமென்றாரோ அந்த
நீதிபதி AR தவேவை தலைமையாக கொண்ட 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கே கொண்டு
வரப்படுகிறது. 11.04.2016 அன்று நீதிபதி AR தவேயின் விருப்பபடியே 2013
தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, வழக்கு இறுதி விசாரணைக்காக
ஒத்திவைக்கபடுகிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட
சங்கல்ப் ட்ரஸ்ட் என்ற தனியார் அறக்கட்டளை 2016-2017 ஆண்டுக்கான நீட்
தேர்வு வேண்டும் என்று ஒரு வழக்குப்போடுகிறது. அந்த வழக்கும் அதே நீதிபதி
AR தவேயிடமே கொண்டுவரப்படுகிறது. 28.04.2016 அன்று சம்பந்தமில்லாத
விஷயத்தில் தலையிட்டு உள்நோக்கத்தோடு செயல்படும் சங்கல்ப் அறக்கட்டளை
தொடுத்த வழக்கில் பல மாநில அரசாங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி
2016-2017 நீட் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. குறுகிய
தேர்வு காலத்தை மேற்கோள்காட்டி, அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது
என்று போர்க்கொடி தூக்கிய மாநிலங்களை சமாதனப்படுத்தும் முயற்சியாகவே
மத்திய அரசு, 2016-2017 ஆண்டுக்கு மட்டும் விலக்கு என்ற மருத்துவ
கவுன்சில் சட்டத்தில் ஒரு திருத்த வரைவை முன்மொழிந்தது. மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பொருட்படுத்தாமல், அந்த
சிறப்பு சட்டத்தின்படி 2016-2017 விடுத்து மற்ற ஆண்டுகளில் neet கட்டாயம்
நடத்தப்படும் என்பதை உறுதிசெய்தது.

இந்த சங்கல்ப் அறக்கட்டளை ஆந்திர பிரதேச காக்கிநாடாவை தலைமையிடமாக கொண்டு
செல்படுகிறது. இலவச கல்வி தான் எங்கள் குறிக்கோள் என்று சொல்லும் இந்த
அறக்கட்டளை 2007 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவில்
எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை என்றாலும் இப்படியான வழக்குகளில்
மூக்கை நுழைத்து கலகம் செய்யும் வேலையை தொடர்ச்சியாக செய்துவருகிறது.
இப்படி தான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு டெல்லி மாநில
அரசிற்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கை தள்ளுபடி செய்த
உயர்நீதிமன்றம் மனுதாரர் தனக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் தலையிட்டு
உள்நோக்கத்தோடு வழக்கு தொடுத்திருக்கிறார் என்று கூறி நீதிமன்ற நேரத்தை
வீணடித்ததாக குற்றம்சாட்டி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது
(https://goo.gl/tGliKB).

ஆக, கேத்தன் தேசாய் தான் நினைத்ததை சங்கல்ப் அறக்கட்டளையை வைத்து
நீதிமன்றம் மூலமாக சாதித்துக்கொண்டார். அதற்கு அவரின் நண்பர் அருண்
ஜெட்லீயும் (https://goo.gl/e5uLXS) மத்திய அரசும் துணை நின்றனர்.
கேத்தன் தேசாயை போன்ற நேர்மையாளனுக்கு, தேசப்பற்றாளனுக்கு துணை நிற்பது
தானே மத்திய அரசின் பிறவிகடன் மாணவர்களின் எதிர்காலமாவது
மண்ணாங்கட்டியாவது. யார் சட்டையை கிழித்தால் என்ன உள்ளாடையை உருவினால்
என்ன கேத்தன் தேசாய் போன்றவர்கள் உருவ உருவ ஏதாவது வந்துகொண்டே இருக்க
வேண்டும்.

# லஞ்சம் கேட்டதற்காக மாட்டிவிட்டு கேவலப்படுத்திய தனியார் மருத்துவ
கல்லூரிகளை பழிவாங்க வேண்டும் என்று ஒரு குஜராத்தி நினைத்தால்  சமூகநீதி
அழிந்தாலும் பரவாயில்லை.. மாணவர்களை எல்லாம் சட்டையை கிழிக்க வைத்து
மாணவிகளின் உள்ளாடையை உருவி கை காது மூக்கிலிருப்பதை எல்லாம் கழட்டி
மூளியாக்கி நிறுத்தினாலும் பரவாயில்லை. அதை நிறைவேற்றித்தருவது தானே
நீதிமன்றத்தின் வேலையும் மத்திய அரசின் வேலையும்.. அதை விட பெரிய நீதி
வெங்காயம் என்ன இருக்கு சொல்லுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக