புதன், 20 செப்டம்பர், 2017

இலங்கை தமிழருக்கும் உரிமையானது பாரதிதாசன்

Kathir Nilavan
இலங்கையின் உரிமை செந்தமிழர்க்கும் உண்டு
சிங்களருக்குள்ள இலங்கையின்
உரிமை செந்தமிழர்க்கும் உண்டு!
செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்
சிங்களர் பெரும்பான்ம யோரனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலைகவிழ்க்க எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்
மானங் காப்பதில் தமிழ் மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது
இவைகள் இலங்கைத் தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க! வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே!
(இலங்கை 'தினகரன்' சிறப்பு மலருக்கு 11.7.1959 இல் புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன் எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக