‘இஸ்ரேலின் விவசாயப் புரட்சி’: இந்தியாவை விட 10 மடங்கு விளைச்சல் எப்படி?

Web Team உலகம் 05 Jul, 2017 08:45 AM
0 0
பாலைவனத்தையும், உப்பு நீர் ஏரியையும், சீரற்ற
பருவநிலையையும் கொண்ட
இஸ்ரேல் வெற்றிகரமாக
விவசாயம் செய்து வருகிறது. பாரம்பரிய விவசாய முறைகளைப் பின்பற்றி வரும்
இந்தியாவும் இஸ்ரேலியத் தொழில்நுட்பங்களை நாடி இருக்கிறது.
இஸ்ரேலில் மண் இல்லை, தண்ணீர் இல்லை, ஆட்கள் இல்லை, சீரான
பருவநிலை இல்லை. ஆனால், இந்தியாவைப் போல, 10 மடங்கு அதிகமாக பொருட்கள்
விளைகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான காய்கறி, பழங்களை
ஆண்டு முழுவதும் விளைவித்து தருவது, இஸ்ரேல் . இந்தியாவை விட, 10 மடங்கு
அதிகமாக வேளாண் உற்பத்தியை இஸ்ரேலில் செய்கின்றனர். இது சாத்தியமா என
நினைக்கலாம். ஆனால் 1 ஏக்கரில் நாம், 5 டன் தக்காளி விளைவிக்க முடிகிறது
என்றால் அவர்களால், 50 டன் தக்காளி விளைவிக்க முடிகிறது.
இஸ்ரேலில் விவசாயம் செய்யும் யாருக்கும், சொந்தமாக நிலம் கிடையாது.
அரசின் நிலத்தை தான் குத்தகைக்கு எடுத்து
விவசாயம் செய்கின்றனர். விவசாயத்திற்கு முதல் மூலப்பொருள் நீர்.
இஸ்ரேலில் மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். தண்ணீர் ஆதாரத்திற்கு
இஸ்ரேல் மக்கள் நம்புவது கலிலியோ ஏரியை தான்.
இஸ்ரேலிய விவசாயத் தொழில்நுட்பங்களில் முக்கியமானது சொட்டு நீர்
பாசனமும், பாதுகாப்பான பண்ணை விவசாயமும்தான். ஒவ்வொரு நிலத்திலும் இரண்டு
தண்ணீர் இணைப்புகள் இருக்கின்றன. எதற்குமே பயன்படாத பாலைவன மண்ணில்தான்
விவசாயம் செய்யப்படுகிறது. மிக மிக எளிமையான தேங்காய் நார் போன்ற
அங்குள்ள கழிவுகளே உரமாக பயன்படுத்தப்படுகின்றன. கணினி சிப் மூலமாக
அறுவடை கண்காணிக்கப்படுகிறது. ஒரே மாதிரி திட்டமிடல், இயற்கையான உரங்கள்,
கூட்டுப் பண்ணை திட்டம் போன்றவற்றால் இந்தியாவை விட பல மடங்கு
விளைச்சல்களை தரமாகவும், நேர்த்தியான விலையிலும், விளைபொருட்களை அங்குள்ள
விவசாயிகளால் விற்க முடிகிறது.
பசுமைக் குடில், மண் போர்வை, நிழல் வலை, சொட்டு நீர் பாசனம் போன்ற
இஸ்ரேலிய தொழில்நுட்பங்களை இந்தியாவிலும் பின்பற்றினால் விவசாயத்தில்
புதிய சாதனையை படைக்க முடியும் என்பது வேளாண் ஆய்வாய்வாளர்களின் கருத்தாக
உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக