புதன், 20 செப்டம்பர், 2017

சீமைக்கருவேலமரம் போல இன்னொரு நல்ல மரம் நுணா

அப்பாடா கிடைச்சாச்சு.. சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம்..
வறட்சியைத் தாங்கி, வளத்தை அளிக்க கூடியது..

தமிழகத்தின் வறட்சிக்கு காரணம் என்று கூறப்படும் சீமை கருவேல மரத்தை
அழிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம்
முழுக்க சீமை கருவேல மரத்தை அழிக்கும் பணி நடந்து வருகிறது. இதில்
இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சீமை கருவேல மரங்களை அழித்த இடம் தற்போது கட்டாந்தரையாக மாறி உள்ளது.
மேலும் தற்போது கோடை காலம் என்பதால் அந்த இடத்தில் என்ன மரத்தை வைப்பது
என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சீமை கருவேல மரம் வறட்சியையும்
தாங்க கூடியது.

அதோடு பொதுமக்களுக்கு விறகு, எரிகரி போன்றவற்றுக்கும் பயன்பட கூடியது.
சீமை கருவேல மரத்திற்கு மாற்று என்ற பட்டிமன்றமே நடந்து வருகிறது. மேலும்
மாற்றாக ஒரு மரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
,சீமைக் கருவேலமரங்களுக்கு இணையாக வறட்சியைத்தாங்கி வளரக்கூடியதும், பல
நன்மைகளைக் கொடுக்கக்கூடிய மூலிகைத்தாவரமுமான 'மஞ்சணத்தி' எனப்படும் நுணா
  மரத்தை பெரும்பாலானோர் பரிந்துரைக்கின்றனர். இது அடுப்பெரிக்க மற்றும்
பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது.
சீமை கருவேல மரத்தை போலவே மஞ்சணத்தி மரமும் மனிதர்களால் விதையிட்டு
வளர்க்கப்படுவதில்ல. தானாக முளைத்து பசுமையாக இருக்கக்கூடியது.

இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த
மருந்தாகும். வேள் நிறுவனம் விற்கும் அகத்தியர் மூட்டுவலி மருந்தின்
இரகசியம் இம்மரத்தின் பாகங்கள்தான்.
இன்னும் ஒன்றை கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு நேரத்தில்
படுவிற்பனையில் இருந்த “நோணி” எனும் மருத்துவ குடிப்பு இம்மரத்தின்
பழச்சாறுதான்.  ஆனால் அவை வணிகத்திற்காக செயற்கை முறையில் வளர்த்து,
இராசயனம் மூலம் கெடாமல் பாதுகாக்கபடுவதால் மட்டுமே நோணி மருந்தினை
பரிந்துரை செய்ய முடியவில்லை.

இம்மரத்தினைப் பயன்படுத்தி அடுப்பெரித்தால் வெளிப்படும் புகை உங்கள்
இல்லத்தில் கிருமிநாசினியாக செயல்படும்.  அதன் இலைகளை ஆடுகள் உண்டால்
நோயின்றி வாழும். காற்றைக் குளிர்வித்து மழைவளத்தை பெருக்கும்.

பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழும்.  பழங்கள் பறவைகள், மனிதர்கள்
விரும்பி உண்ணும் சுவையுடையது. மருத்துவக் குணம்வாய்ந்தது.  இலைகளை
தண்ணீரில் கொதிக்கவைத்து மூட்டு, முழங்காலில் ஒத்தனம் கொடுத்தால் வலி
சரியாகும்.  இதன் வேர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை தொடும்போது நீரின் தன்மை
மருத்துவ குணமுள்ளதாக மாறுகிறது.

சீமைக் கருவேலமரம் ஒரு பாலைவன தாவரம். அதன் இயற்கையான குணங்கள் நம்
மண்ணுக்கு ஏற்றதல்ல. விரைவில் சீமைக் கருவேலமரங்களை அழித்துவிட்டு அந்த
இடங்களை  5 வருடங்களுக்கு பராமரிப்பது நமது கடமை. சீமைக் கருவேலமரம்
ஒழிப்பு இயக்கம் மேற்கொண்ட இடங்களில் மீண்டும் முளைக்காமலிருப்பதற்கு
காரணம், முறையான பராமரிப்புதான்.
சீமைக் கருவேலமரம் இல்லாவிட்டால் எப்படி அடுப்பெரியும் என்று கூப்பாடு
போட்டவர்கள் வரிசையாக வாருங்கள்… நுணா மரத்தை பாதுகாப்போம், நடுவோம்,
விதையிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக