மயான சூழலில் கீழடி அகழ்வாய்வு மையம்" - கொதிக்கும் திரைப்பட இயக்குநர்கள்...!
மதுரையை அடுத்துள்ள கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் நகரம்
கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வாளர்கள்
நடத்திய அகழ்வாய்வில் சுடுமண் பாண்டங்கள், கரண்டி, கிண்ணம், யானை
தந்தத்தில் செய்த தாயக்கட்டை, கழிவு நீர் செல்ல வாய்க்கால், பெரிய
அளவிலான சதுர செங்கல்கள் என்று 500-க்கும் மேற்பட்ட பொருட்கள்
கண்டுபிடிக்கப்பட்டன. கீழடிதான் பழமையான மதுரை என்றும், உலகில் தொன்மையான
இனம் தமிழினம்தான் என்றும் இதுவரையில் பாடல்களில், கட்டுரைகளில், பேச்சு
வழக்கில் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவற்றை மெய்ப்பிக்கும் வகையிலான
வரலாற்று ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இதனை வரலாற்று ஆய்வாளர்கள்,
மொழி ஆய்வாளர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கீழடியில் இன்னும் முழுமையாக ஆய்வினை மேற்கொள்ளாமல் தோண்டிய அகழ்வாய்வு
குழிகளை திடீரென்று மூடும் பணி கன ஜரூராக நடைபெற்றது.இதைக் கேள்விப்பட்ட
பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என்று சிலர் கீழடிக்கு வந்து சென்றார்கள்.
அக்டோபர் 24-ம் தேதியோடு அகழ்வாய்வு குழிகள் மூடப்பட்டதால், கடைசி நாளான
நேற்று சினிமா இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், அமீர், கரு. பழனியப்பன்
ஆகியோர் கீழடிக்கு திடீரென்று ஆஜர் ஆனார்கள்.
"தென் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அகழ்வாய்வுப் பணியை
முழுமையாக நிறைவு செய்யாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மூடுவது என்பது
ஏற்புடையது அல்ல. இது இன்னொரு ஆதிச்சநல்லூர் போன்று இருக்கிறது" என்று
வெடிக்கிறார் ஜன நாதன்.
"இது ஒரு திட்டமிட்ட வரலாற்று ஒழிப்பு. உச்ச நீதிமன்றம் தோன்றுவதற்கு
முன்பே ஜல்லிக்கட்டு நடந்தது. அதை எப்படி ஒழித்தார்களோ, அதைப்போல இதையும்
மறைத்து ஒழிக்க பார்க்கிறார்கள். இங்கு இந்நேரம் தங்க புதையல்
கிடைத்திருந்தால் அரசு இப்படி அலட்சியமாக இருக்குமா?" என்று சீறினார்
அமீர்.
"மறுபடியும் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? மைசூரில் கண்ணகி சிலையை
கோணிப்பையில் மூடியதைப் போல, இங்கு கிடைத்த பொருட்களையும் மைசூருக்குக்
கொண்டு சென்று ஒரு மூலையில் போடப்போகிறார்களா? டாஸ்மாக்-ஐ விட இதுதான்
நிஜமான செல்வம் " என்று கொந்தளித்தார் கரு.பழனியப்பன். இப்படி மூன்று
இயக்குநர்களும் அகழ்வாய்வு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, "இதுவரை
கீழடிக்கு அமைச்சர்கள், எம்.பி.கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இவ்வளவு
ஏன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட வந்து பார்க்கவில்லை. அவ்வளவு மோசமான
சூழலில் நாம் வாழ்கிறோம்" என்று கருத்துகளை பறிமாறிக் கொண்டனர். அந்த
இயக்குநர்கள் மூவரிடமும் பேசினோம்.

"என்ன திடீர் ஆய்வு? நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்கள் ?மற்ற
இயக்குநர்கள் வரவில்லையா?"
" திட்டமிட்டு வரவில்லை, நாங்க ஒரு வேலையாக மதுரைக்கு வந்தபோது, இந்த
அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடுவதை கேள்விப்பட்டு இங்கு
வந்தோம். இந்த அகழ்வாய்வுப் பணி நடந்த செய்தியும், இங்கு கிடைத்த
பொக்கிஷமும் இன்னும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. கிடைத்த செய்தியும்
மூடும் செய்தியும் தெரியல. எங்கள் நோக்கம் மக்களிடம் தமிழர்களின்
நாகரிகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான்"
"தொடர் அகழ்வாய்வுப் பணி தொய்வில்லாமல் நடக்க என்ன நடவடிக்கை எடுக்கப்
போகிறார்கள்?"
" இந்தியாவில் இதுபோன்ற வாய்ப்பு எந்த மாநிலத்துக்கு கிடைத்திருக்கி றது?
இதை அரசு சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் "
"இதை ஒரு இனப்படுகொலை போல பார்க்கிறீர்களா?"
"அதில் என்ன சந்தேகம்? நாங்கள் ஐயப்படுகிறோம். இந்த இடத்தில் இரண்டு
தங்கப்பானையோ, குடம் நிறைய தங்க காசுகளோ கிடைத்திருந்தால் இந்நேரம் இந்த
அரசு சும்மா இருந்திருக்குமா? இந்நேரம் இந்த இடத்தை எப்படி கையகப்படுத்தி
இருக்கும்?
அப்போ, வெறும் தங்கமும்,வெள்ளியும் மட்டும்தான் தமிழர்கள் வரலாறா? 2
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்கள் என்பதே மிகப்பெரிய சொத்து
.இங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலும் மிகப்பெரிய சொத்து. பல கோடி
கிடைத்தாலும் இதை வாங்க முடியாது. அரசு இதை இப்படித்தான் பார்க்க
வேண்டும். இந்த மண், இந்த விவசாயிக்கு சாதாரண மண்ணாக இருக்கலாம். ஆனால்
அரசுக்கு இது மிகப்பெரிய சொத்தாக பார்க்க வேண்டும்".
"தமிழர் பிரச்னை, தமிழர் உரிமை சார்ந்த பிரச்னை என்று பேசும் திராவிடக்
கட்சிகள் கீழடி விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதில் ஏன்
அவர்களின் கவனம் மழுங்குகிறது?"
"அத்தனையும் ஏமாற்று வேலை. இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில்
அவர்களின் கவனம் முழுவதும் இருக்கிறது. வேட்பாளர்களை
வெளியிடுவதில்அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிஸியாக இருக்கிறார்கள்.
ஓட்டு அரசியல்தான் அவர்களுக்கு முக்கியம். எனக்கு யார் ஆட்சியாளர் என்பது
முக்கியம்மில்லை. என்னுடைய வரலாறு முக்கியம். நான் எங்கிருந்து பிறந்து
வந்தேன் என்பது முக்கியம். தேர்தலை விட முக்கியமானதாக இதை கருதுகிறேன்.
"பல தலைவர்கள் இன்னும் கீழடிக்கு வரவில்லையே?"
"நாங்கள் அரசியல் கட்சித் தலைவர்களை நம்பி இல்லை. நல்லாட்சி கொடுத்த
காமராஜரே போய் சேர்ந்து விட்டார். அவரது ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்
என்கிறார்கள். அப்படியென்றால் இடைப்பட்ட ஆட்சி சரியில்லை என்று டிக்ளேர்
செய்கிறார்களா? அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை நம்பி இல்லை. 50
ஆண்டுகளுக்கு பிறகு நாம் இருப்போம் என்பது தெரியாது. அடுத்த தலைமுறைக்கு
எதை வைத்து விட்டுப் போகிறோம் என்பதுதான் முக்கியம்".
" தொன்மையான மதுரைக்கு சாட்சியாக கீழடி இருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த
தொன்மையை இந்திய அரசு மறைக்கப் பார்க்கிறதா? இதில் உள்நோக்கம்
இருக்கிறதா? "

"அதுதான் உண்மை. உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். பொய்யாக புனையப்பட்ட
கதைகளைக் கொண்டு வர இந்த உண்மையை மறைக்கிறார்கள். உலகில் தோன்றிய முதல்
மனிதன் பேசிய மொழி தமிழ் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. முதல் மனிதன்
தோன்றிய இடமாக கீழடி இருக்கிறது. 500 ஆண்டுகளில் உருவான நாடுகள்
நாங்கள்தான் நாகரிகத்தை உருவக்கியவர்கள் என்று சொல்லுகிறார்கள். உண்மையை
மறைக்க திட்டமிட்ட முயற்சியாக நாங்கள் இதைப் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டு
என்பது நீதிமன்றங்கள் உருவாவதற்கு முன்பே இங்கு
நடைபெற்றிருக்கிறது.தமிழர்களின் அடையாளங்களை தொலைக்கிறார்கள்.
இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நினைக்க வேண்டாம். என்னுடைய உரிமையை
கேட்பது இறையாண்மைக்கு எதிரானது இல்லை. நான் சொல்வது பொய் இல்லை.
உண்மையில் தமிழன் என்பவன் ஒருவன் இல்லை என்கிறார்கள். அதுதான் அவர்களின்
நோக்கம்.ஆஸ்திரேலியாவில் தமிழை மூன்றாவது தேசிய மொழியாக அறிவித்துள்ளனர்.
கனடாவில் ஒரு மாதத்தை தமிழ் மாதமாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால்
இங்கு நிலைமை வேறு! "
"இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? யாரை குறிப்பிட்டு சொல்லுகிறீர்கள்?"
"தமிழினத்தை வெறுக்கும் அதிகார வர்க்கம், அரசியல் கட்சி,முதலாளிகள் என்று
அவர்கள் எந்த முகச் சாயத்திலும் இருக்கலாம்."
"கீழடி சினிமாவாக உருவாகுமா?"
"கண்டிப்பாக சினிமாவாக வரும். சர்வதேச சதி இதில் இருக்கிறது.மொகஞ்சதாரோ,
ஹரப்பா ஆய்வுக்கு முன்பே ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தார்கள். ஒரு
சதவிகித ஆய்வுதான் அங்கும் நடந்தது. அந்த ஆய்வை இன்னும் வெளியிடவில்லை.
அங்கு எடுக்கப்பட்டது மாடு சின்னம். அது நம்முடைய அடையாளம். அதுபோல
கீழடியும் ஆகிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. 140 ஏக்கரில் ஒரு சிறிய
பகுதியை மட்டும் தோண்டி மூடும்போது பெரும் அச்சம் எழுகிறது. தமிழர்
வரலாறு வெறும் பாட்டாக இருக்கிறது. ஆதாரம் இல்லை என்கிறார்கள். இப்பொழுது
ஆதாரம் கிடைத்திருக்கிறது. தண்ணீர் செல்லும் வழி, செங்கல் வைத்து கட்டிய
கட்டடங்கள் சாட்சி. இதை மூடும் காட்சி சினிமா படக்காட்சி போல இருக்கிறது.
இது உலக வரலாறு சொல்லும் இடமாக இருக்கிறது. 30 ஆண்டுகள் பழமையான குடும்ப
கல்யாண புடவையைப் பாதுகாக்கிறோம். ஆனால் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நம்
முன்னோர் வாழ்ந்த நகரத்தை பாதுகாக்கத் தவறுகிறோம்".
"உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் கவனத்துக்கு இதை எப்படி கொண்டு
சேர்க்கப் போகிறீர்கள்?"
"இதை பத்திரிகையாளர்கள்தான் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 50
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசியல் தலைவர் பயன்படுத்திய கண்ணாடி ,
துணி, செருப்பு என்று மியூசியம் அமைக்கும் பொழுது 2 ஆயிரம் ஆண்டுகள்
பழமையான பொருட்கள் கிடைத்திருக்கிறது. இதுக்கு மியூசியம் வைக்க
வேண்டாமா? கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. இன்னும் இந்திய
அரசு இதை பாதுகாக்க வேண்டுமா? இல்லையா? என முடிவு எடுக்கவில்லை. யார்
முடிவு எடுப்பது? எப்பொழுது முடிவு எடுப்பது?"
"இதற்கு ஒரு நல்ல இயக்குநர்களாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"
" சுவாதி வழக்கை விவாதம் செய்தது போல கீழடியை நீங்கள் இதுவரை ஏன்
விவாதங்கள் செய்யவில்லை. தாத்ரி சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது.
கீழடியை பெரிய அளவில் ஊடகங்கள் ஏன் எழுதவில்லை?
சமூகப் பிரச்னையை நீங்கள் செய்ய வேண்டிய வேலையை, செய்யத் தவறியதை, ஏன்
கூத்தாடிகள் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? இது தவறான போக்கு.
ஒரு சமூக பிரச்னையை சினிமாக்காரன் செய்ய வேண்டும் என்றால் எதுக்கு
எங்களுக்கு 234 எம்.எல்.ஏ. 39 எம்.பி.க்கள் ? சைரன் வைத்த காரில்
சுற்றுவதுதான் அவர்களது வேலையா? தமிழ் பண்பாட்டுத்துறையில் இருந்தாவது
யாராவது வந்தார்களா? இதுவரை யாருமே வரவில்லை என்கிற பொழுது நீங்க
யாருக்காக ஆட்சி நடத்துறீங்க? இலவசமாக ஓட்டுக்கு காசு கொடுப்பதும், ஆடு,
மாடுகள் கொடுப்பதும்தான் மக்களாட்சியா? இப்பொழுது மக்களாட்சி
நடக்கவில்லை. கார்பரேட் கம்பெனிகளின் ஆட்சிதான் நடக்கிறது."
"இவ்வளவு பெரிய அலட்சியத்துக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? "
"அலட்சியத்தின் பின்னால் மக்களுக்கான அரசு இல்லை. மக்களால்
தேர்ந்தடுக்கப்படும் அரசு மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே
பார்க்கிறது. அடுத்த தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இயங்கி வருகிறது.
பொறுப்பில் இருப்பவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். மக்களை கேளிக்கையாக,
சந்தோஷப்படுத்தும் நாங்கள் களத்துக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது.
ஆட்சிப்
பொறுப்பில் இருப்பவர்கள், அவர்களின் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதிலேயே
கவனமாக இருக்கிறார்கள்" என்று இயக்குநர்கள் தெரிவித்தனர்.
"அரசுக்கு அருங்காட்சியகம் அமைக்க இடம் கிடைக்கவில்லை என்றால் இந்த
அமீர் இடம் தருகிறேன்" என்றார் அமீர்.
"தோண்டிய இடங்களை மண்ணைப்போட்டு மூடும் காட்சிகளை பார்க்கும்பொழுது இந்த
இடத்தை விட்டு நகரும் பொழுது ஒரு மயானத்தில் இருந்து எனது 2 ஆயிரம்
பழமையான பண்பாட்டு நாகரிகத்தை புதைத்து விட்டுச் செல்வது போல இருக்கிறது"
என்கிறார் எஸ்.பி. ஜனநாதன்.
கீழடியை மீட்கப்போகும் வரலாற்று நாயகன் யார்

" இந்தியாவில் இதுபோன்ற வாய்ப்பு எந்த மாநிலத்துக்கு கிடைத்திருக்கி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக