புதன், 20 செப்டம்பர், 2017

தேசியத்தலைவர் அம்மா கருணாநிதி ஐ எழுப்ப பயந்ததால் திருப்பி அனுப்பினர் சுப.வீ சமாளிப்பு

ஒரு நள்ளிரவில், தோழர் தியாகு என்னைத் தொடர்புகொண்டு, தேசியத் தலைவரின்
அம்மா மலேசியாவிலிருந்து சென்னை வந்துள்ளதாகவும், நுழைவிசைவுச் சீட்டு
(விசா)இருந்தும் அனுமதி மறுக்கின்றனர் என்றும் கூறினார்.'முதலமைச்சரைத்
தொடர்பு கொண்டு ஏதேனும் செய்ய முடியுமா?' என்று கேட்டார்.
'கண்டிப்பாக முடியும் தியாகு, ஆனால் இந்த நள்ளிரவில் அவரை எப்படித்
தொடர்பு கொள்வது? எனக் கேட்டேன். வரப்போகும் செய்தியை மாலையாவது
சொல்லியிருக்கக் கூடாதா என்றேன்.
தனக்கும் இப்போதுதான் தெரியும் என்றார். செய்தியறிந்த வைகோவும்,
நெடுமாறனும் விமான நிலையத்தில் உள்ளனர் என்றும் கூறினார். நாடாளுமன்ற
உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள எண்ணினேன். அதற்குள்ளாக, இரவிலேயே அம்மாவை
மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
மறுநாள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், விடுதலைச்
சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், நான் மூவரும் கலைஞரை அவரது
இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
தனக்கு ஏன் நேற்றே செய்தி சொல்லவில்லை என்று கேட்டார். எங்களுக்கும்
தெரியாது எனக் கூறினோம். மறுமுறை வரச் சொல்லலாமா என்று கேட்டோம். தாரளமாக
வரச் சொல்லுங்கள், மத்திய அரசிடம் நான் பேசுகிறேன் என்றார். முசிறி
நண்பர் மூலமாக மலேசியாவிற்குத் தொடர்பு கொண்டு, அம்மாவைத் திரும்ப
வரும்படி கூறினோம்.
முதல் அமைச்சரும் தான் சொன்னபடி, மத்திய அரசிடம் பேசி ஒப்புதல் பெற்றார்.
அதனைச் சட்டமன்றத்திலும் அறிவித்தார். அம்மாவின் மருத்துவச் செலவுகள்
அனைத்தையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிப்புச் செய்தார். அதே நேரத்தில்,
மருத்துவ சிகிச்சைக்காக இங்கு தங்கியுள்ள நாள்களில் அரசியல்வாதிகள்
யாரும் அவரைச் சந்திக்க அனுமதியில்லை என்றார்.
அம்மாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தன் மகிழ்வையும்,
நன்றியையும் தெரிவித்து முதல்வருக்கு ஒரு மடல் எழுதியிருந்தார். அதில்
'உங்களின் உடன்பிறப்புகளில் ஒருவர்' என்று எழுதிக் கீழே கைரேகை
வைக்கப்பட்டிருந்தது. அதனை நான்தான் கொண்டுபோய்க் கொடுத்தேன்.
ஆனாலும் அதற்குப் பின் அம்மா இங்கே வரவில்லை. ஏன்? அரசியல் தலைவர்கள்
அம்மாவைச் சந்திப்பதற்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு இங்குள்ள தலைவர்கள்
சிலருக்குப் பிடிக்கவில்லை.
அம்மா உடல்நலம் பெறவில்லை என்றாலும் குற்றமில்லை, சிகிச்சை அளித்தவர்
கலைஞர் என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர்கள் எண்ணினர். அதனால்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மலேசியா அனுப்பி, அம்மாவைக்
கிளிநொச்சியில் கொண்டுபோய் விட்டுவிட்டனர்.
நடந்த உண்மைகள் அனைத்தையும் அப்படியே நான் பதிவு செய்துள்ளேன். அம்மாவின்
மரணத்திற்கு யார் காரணம் என்பதை இனிக் காலம் முடிவு செய்யட்டும்..
நன்றி - பேரா.சுபவீ

Vignesh L Nathan
கலைஞருக்கு தெரியாது எனில் எப்படி போலீஸ்க்கு தெரிந்து அவர்கள்
நெடுமாறனையும் வைக்கோவையும் விமானநிலையத்தில் உள்ளெ செல்லவிடாமல்
தடுத்தார்கள். இதெல்லாம் ஒரு காரணமா. ஒரு நாட்டு முதல்வர் கு தெரியாம
இருக்குமா? இதென்ன சாதாரண விஷயமா ? அவங்க அங்க கிளம்பும் போனதே
உளவுத்துறைக்கு தெரிய வந்திருக்கும். சும்மா எல்லாத்துக்கும் வெள்ளை
அடிக்காதிங்க. சுப வீ மேல ஒரு மதிப்பு இருந்தது ஒரு காலம். அவர் எப்போ
அவரை திமுகவிற்கு விற்றாரோ அன்றே அது போய் விட்டது.

Aathimoola Perumal Prakash
ஏன் நடுராத்திரில மகாராசாவ எழுப்பியிருந்தா இந்த பஞ்சுமிட்டாய் தலயன
தூக்குல போட்ருவாங்களா?
நடுராத்திரில எழுப்பமுடியாதாம
்.
இதெல்லாம் ஒரு காரணமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக