திங்கள், 18 செப்டம்பர், 2017

சாரணர் ஒற்றர் ஸ்கௌட் வேர்ச்சொல் சொல்லாய்வு

Logan K Nathan
சாரணர்.
"சர சர" என்பது தமிழில் இரட்டைக் கிளவி. இது ஊர்தல்/ஏறுதல் இயக்கத்தைக் குறிக்கும்.
'சர்' னு ஏறியது என்று இப்போதும் பேச்சு வழக்கில் கூறப்படுகிறது.
சர - அசைவு. அசர - அசையாத.
அசர வைத்தல் - ஆடாமல், அசையாமல் வியக்க வைக்கும் செயல்.
அண்ட சராசரங்கள் என்றால் பிரபஞ்சத்தில் உள்ள அசையும், அசையா பொருட்கள்.
"சாரை" என்பது சர எனும் சொல்லிலிருந்து வந்தது. எ. கா. சாரைப் பாம்பு.
சாரை சாரையாக - வரிசையாக செல்லுதல்.
"கோள்சாரம்" (கோச்சாரம்) என்றால் கோள்களின் (கிரகங்களின்) இயக்கம்.
"சாரணர்" என்பதற்கு ஓரிடத்தில் தங்காமல் திரிந்து கொண்டிருப்பவர்கள்
(நாடோடி) என்பது நேரடி பொருள். அக்காலத்தில் ஒற்றர்கள் சாரணர்
எனப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக