புதன், 20 செப்டம்பர், 2017

வயல் நிலத்தில் வெடிப்பு குப்பை தானே சேர்ந்து மூடி உரம் ஆகிறது இயற்கை வேளாண்மை விவசாயம்

Madhu India நண்பரைச் சேர்
அக்னி நட்சத்திரத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின்
காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.
அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி
நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி
குளிரும்.
அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை
"கர்ப்ப ஓட்டம்' என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல
உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக