புதன், 20 செப்டம்பர், 2017

வேளாண்மை தோன்றிய வரலாறு புல்வளர்ப்பு பயிர்வளர்ப்பு ஆனது முளைப்பாறி வெள்ளம் வடிந்த வண்டல் நெல் தானாக முளைத்தது பார்த்து விவசாயம் குமரிமைந்தன் -1

ஹஹஹ அப்ப அம்புட்டு பேருமே வந்தேரிதானா...? ஐயகோ,இன்றைய தமிழகம்
பறையருடையதா..?? இராசராசன் காலம் முன்பு பள்ளரே கிடையாதா...?????
@# குமரிமைந்தன் ....
மதிப்புக்குரிய # குருசாமிச்_
சித்தர் அவர்களுக்கு வணக்கம். இடையில் நெஞ்சுவலி காரணமாகப் பண்டுவம்
செய்ய வேண்டியிருந்ததால் தங்களுக்கு மடல் எழுதுவதில் காலத்தாழ்ச்சி
ஏற்பட்டுவிட்டது.பொறுத்தருள்க.
துடிசைக் ‌‌‌கிழாரின் தமிழ்ச் சங்கங்களின் வரலாறு நூலைப் படியெடுக்கவும்
அஞ்சல்(கூரியர்) செலவுக்காகவும் உரூ 115/-(உரூபாய்கள் நூற்றுப்
பதினைந்து)க்குப் பணவிடை விடுக்கிறேன் தனியாக.
தாங்கள் கூறிவரும் # மள்ளர் குறித்த வரலாற்று அணுகலில் எனக்குச் சிறிதும்
உடன்பாடு கிடையாது. தமிழகத்தின் எந்தச் சாதிக்கும் இடைமுறிவு இல்லாத
வரலாறோ தொடக்கத்திலிருந்தே நேர்கோடாகத் தடம் பிடிக்கத்தக்க சாதியோ
கிடையாது என்பது என் துணிவு. அதுவும் மள்ளர் என்ற சொல்லுக்குப்
பொருளாகத் தரப்பட்டுள்ள உழவர், மறவர் என்ற இரு சொற்கள் ஒரே மக்கள்
குழுவினரைக் குறிக்கிறது என்று உறுதிபடக் கூற முடியுமா என்பது கேள்விக்
குறியே.
இன்னும், நெல் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் பள்ளர்களே என்பதற்கும்
எந்தச் சான்றுமில்லை. ஆனால் நெல் பயிராயினும் சரி வேறு எந்தப்
பயிராயினும் சரி தமிழகத்தில் வேறாகவும் குமரிக் கண்டத்தில் வேறாகவும்
மக்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.
தென் கிழக்காசியப் பகுதியில் தோன்றி இங்கு பரவிய சம்பா நெல்வகைகளும்
அதற்கு முந்திய உள் நாட்டு நெல்வகைகளும் அதற்குச் சான்று கூறுகின்றன.
மனிதன் காய்கனிகளைப் பறித்துண்டும் வேட்டையாடியும் பின்னர் கால்நடைகளை
வளர்த்துண்டும் புல்வெளி தேடி அலைந்தும் புல் வளர்ப்பதற்கென்ற
ு புல்லையே விதைத்து வளர்த்தும் பின்னர் புன்செய்ப் பயிர்களை அதிலிருந்து
இனங்கண்டு இறைச்சிக்குத் துணை உணவுகளாக உண்ணத் தொடங்கியதும் ஒரு கட்டம்.
இன்னொரு பக்கம் ஆறுகள் மலையடிவாரத்திலும் அதைத் தொடர்ந்த முல்லை, பாலை
நிலங்களில் நிலமட்டத்தை விடத் தாழ்வான மட்டத்தில் ஓடி, பாலை முடிந்து
மருத நிலம் வந்த போது நிலமட்டத்தை விட உயரமான மட்டத்துக்கு வந்து புரண்டு
ஓடும் போது மழைக் காலங்களில் வண்டலுடன் மலை நெல் போன்ற நன்செய்ப்
பயிர்களின் கன்றுகளாகிய நாற்றுகளைச் சுமந்து ஆற்றங்கரைகளில் படியும்
சேற்றோடு விட்டுப்போக, அங்கு அவை வேர்கொண்டு விளைய, அங்கு வாழ்ந்த மக்கள்
அறுவடை செய்து உண்டனர்.
பின்னர் இயற்கையைப் போலச்செய்து தவசங்களைக் கலன்களில் முளைக்க வைத்து மழை
வெள்ளம் வரும் போது ஆற்றோட்டத்தில் கரைத்து விட்டுக் கூடுதல் தவசங்கள்
விளைய வழியமைத்தனர்.இத
ு இன்று முளைப்பாரி விழாவாக, வரலாற்று எச்சமாக நிற்கிறது.
பின்னர் விதைகளை நேரடியாகவே சேற்றில் விதைத்தனர். இதன் தொடர்ச்சியாக
முல்லை நிலத்தில் ஆற்றுநீரைத் திருப்பி, கலப்பை மூலம் உழுது செயற்கையாகச்
சேற்றை உருவாக்கி அதில் நன்செய்ப் பயிர்களை வளர்க்கும் தொழில்நுட்பத்தை
உருவாக்கினான் வெள்ளையன் என்றும்வாலி என்றும்(வால்=வெ
ள்ளை) பலதேவன்என்றும் பலராமன் என்றும் அழைக்கப்படுபவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக