aathi tamil<aathi1956@gmail.com> | 18 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:29 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
தமிழன் சுரேஷ் அகமுடையர் உடன்
Suresh N. தமிழ்தேசிய அகமுடையார் கூட்டமைப்பு # கம்மாளர்_(தச்சர்,பொற்கொல ்லர்,ஆசாரி, தட்டர்,கன்னார்,பத்தர்) தாலி கட்டும் போது, கட்டிலில் படுத்துறங்கும் போது, குழந்தையை தொட்டிலில் போடும் போது, குழந்தைக்கு நடை பழக்கும் போது, காது குத்தும் போது, கிடா வெட்டும் போது, ஏர் ஓட்டும் போது, பாத்தி கட்டும் போது, களையெடுக்கும் போது, அறுவடை செய்யும் போது, விளைந்ததை படியளக்கும் போது, வண்டியில் ஏற்றி வீடு சேர்க்கும் போது, வீட்டு வாயிலில் தலைவணங்கும் போது, காசை பூட்டி வைக்கும் போது, இவற்றின் பின்னுள்ள உழைப்பு பாடையில் போகும் போதாவது தெரியுமா? இல்லை, மின் மயானத்திற்கு வாகனத்தில் செல்வதால் மறந்துவிடுமா? # மதிகெட்டவர்களே ...... # சதிசு_குமார் ... பதிவிலிருந்து.. ... # தமிழர்_கம்மாளர் தமிழ் இனத்தின் தொண்மை குடிகள் ஆவர்... சதீசு குமார் ஆசாரி = தலைமை கம்மாளன் = கம்மாளர் குழந்தைகளுக்கான ஆசிரியன். தச்சன் = தைப்பவன் (மரத்தை மரத்துடனோ, கல்லுடனோ) கொல்லன் = பழைய இரும்பை கொன்று உருக்கி புதிய கருவியை ஆக்குபவன். தட்டான் = தங்கத்தை தட்டி ஆபரணமாக்குபவன். பத்தன் = செப்பு, வெள்ளி போன்றவற்றை பற்றவைத்து பாத்திரமாக்குபவன். கன்னார் = கல்லில் கலை பல செய்பவன். (சிற்பி) தமிழன் சுரேஷ் அகமுடையர் இலக்கிய குறிப்புகள் சில... தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல ஈமும் கம்மும் உரும் என் கிளவியும் ஆ மு பெயரும் அவற்று ஓர்_அன்ன (தொல். எழுத்து. 328) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் "கம்" எனும் சொல் தொழிற் பெயர் என குறிக்கப்பட்டுள்ளது. மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் தொழிற்பெயரியல." (எழுத். 345) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் கன்னாரத் தொழில் குறிக்கப் பட்டுள்ளது. "நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல" (தொல்.எழுத்து. 371) என்பதில் கொல்லத் தொழில் குறிக்கப்பட்டுளது. "ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த" (புறம்.353) "உலைக்கல் லன்ன பாறை யேறி" (குறுந். 12: 1) "பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும் கருங்கைக் கொல்லன் இருப்புவிசைத் தெறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ" (பெரும்பாண். 436-8) "நல்ல பெருந்தோ ளோயே கொல்லன் எறிபொற் பிதிரின் சிறுபல் காய வேங்கை வீயுகும்" (நற். 13 : 5-7) "வன்புல மிறந்த பின்றை மென்றோல் மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன கவைத்தான் அலவன்" (பெரும்பாண். 206-8) நல்லரா நடுங்க உரறிக் கொல்லன் ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகழும்"(நற். 125: 1-4) "கருங்கைக் கொல்லனை யிரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே" (புறம். 180: 12-3) என்னும் பகுதிகள், இற்றைக் கொல்லத்தொழில் நிலையாய் அன்றும் இருந்ததைக் காட்டும். "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல்" (குறள். 505) - கருமம் என்பது தொழிலை குறிக்கின்றது. "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" (குறள் 267) - "சுடச்சுட சுடரும் பொன்" பொற்கொல்லரை குறிக்கின்றது. "பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்" (பெரும்பாண். 220-1) "சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும் பொன்னுரை காண்மரும்" (மதுரைக். 512-3) "ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்கா சணிந்த அல்குல் ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ" (புறம். 353) "உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம் புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல ஒருகா சேய்க்கும் நிலங்கரி சுள்ளியங் காடிறந் தோரே" (குறுந். 67). என்பவை பொற்கொல்லரின் பணியைக் குறிப்பன. குறுந்தொகைச் செய்யுளில், பொற்கொல்லன் புதுக்கம்பியிற் கோக்குமாறு தன் உகிரால் (நகத்தால்) பற்றியிருக்கும் உருண்டையான பொற்காசிற்கு, வேப்பம்பழத்தைக் கவ்விக் கொண்டிருக்கும் கிளிமூக்கை உவமையாக கூறியுள்ளனர். தச்சு வேலையிற் சிறந்த வேலைப்பாடுள்ள செய்பொருள் தேராகும். "எம்முளும் உளனொரு பொருநன் வைகல் எண்டேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே" (புறம்) என்பது தேர்த்தச்சனைக் குறித்தது. தச்சனை மரங்கொல் தச்சன் என்பது இலக்கிய வழக்கு. கொல்லுதல் வெட்டுதல். "மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே" (புறம். 206: 11-2) தச்சுவேலை பெரும்பாலும் பல பலகைகளையும் கால்களை யும் ஒன்றாகத் தைத்தலாதலால், அப் பெயர் பெற்றது. தைச்சு - தச்சு. தைத்தல் இணைத்தல் அல்லது பொருத்துதல். #சதிசு_குமார்... |
உங்களின் பதிவு மிக அருமை
பதிலளிநீக்குஉங்களின் பதிவை காலதாமதக பார்த்தற்காக வருந்துகிறேன்.
ஐந்தொழிலில் கன்னாருடன் மற்ற பிரிவினர் திருமணம் செய்வார்களா
பதிலளிநீக்கு