வியாழன், 6 ஜூலை, 2017

கண்டி ஆங்கிலேயர் வைத்த பெயர்

aathi tamil aathi1956@gmail.com

23/9/14
பெறுநர்: எனக்கு
Letchuman Shanmuganathan
மிகவும் அருமை, இங்கே கண்டியை நுவர
ஆக்கி சிங்களவன் வைத்துக் கொண்டான் என்பது மிக
நீண்டதொரு ஆராச்சிக்கு உரிய விடயம். நுவர
என்பது நகரம். மாநுவர என்பது தலைநகரம். நகர
என்பதுததான் நுகர.... நுவர ஆகியிருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் குறிப்பிடும் கண்டி ஆங்கிலேயர்
வருகைக்கு பின்பு வந்த பெயர். அதாவது KANDAUDA
RATA கந்தஉட ரட (மலை நாடு)
என்பதை சுருக்கி கண்டி என்று அழைத்தனர்.
உண்மையிலேயே கண்டிக்கு முதல் பெயர் செங்கடகல
ஆகும். கம்பளை புவனேக பாகு மன்னன்
தனது தலைநகரை மாற்ற என்னி செங்கடகல
பகுதிக்கு செல்லும்போது அங்கே ஒரு சிவ ஆலயம்
இருந்ததாகவும் அது நாதன் தேவாலம் என்றும்,
இன்று அது நாத தேவாலய என்று அழைக்க படுகிறது.
அங்கு தவ முனிவர் இருந்ததாகவும், அவரிடம் மன்னன்
தான் அரண்மனை கட்ட நல்ல இடம்
ஒன்றை தெரிவு செய்து தருமாறு கேட்டதாகவும்
முனிவர் சிறுகல் ஒன்றை எடுத்து எறிந்த
போது அவ்விடத்தில் இருந்து முயல்
ஓன்று ஓடியதாகவும் அந்த இடத்தில் அரண்மனை கட்ட
சிறந்ததென முனிவர் கூறியதாகவும்
அரண்மனை கட்டி கண்டி மன்னனாக
முடிசூடியபோது செங்கடகல கைலபுர (ஷைலபுர-
கைலாசபுர) என்று பெயர் சூட்டபட்டதாக
இலங்கை தொல்பொருள் திணைக்களம் வெளியிட்ட நூல்
ஓன்று தெரிவிக்கிறது. அதோடு இலங்கையில்
இன்றுவரை அழியாமல் இருக்கும் அரண்மனை இந்த
கண்டி அரண்மனை மட்டுமே.
அதோடு நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமும்
இந்த கண்டி நகரமாகும். பின்பு இங்கு பெளத்த மத
ஆதிக்கம் மேலோங்கியது. இந்த கண்டி ராஜ்ஜியம்
பற்றி இரண்டு வருடங்களாக ஆய்வு செய்துள்ளேன்.
இது பற்றிய 200 பக்க நூல் ஒன்றை1998 ம்
ஆண்டு வெளியிட நினைத்து இருந்தேன்.
நிதியுதவி இல்லாததால் முடியாமல் போய் விட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக