திங்கள், 10 ஜூலை, 2017

இலக்கியம் சுற்றளவு கணிதம் அறிவியல் விட்டமோர்

aathi tamil aathi1956@gmail.com

1/7/14
பெறுநர்: எனக்கு
இன்று நாம் அனைவரும் வட்டத்தின்
சுற்றளவை கணிப்பதற்கு 2πr அல்லது πd
எனும் சூத்திரங்களை பாவிக்கின்றோம்.
இது தமிழரின்
கண்டுபிடிப்பு என்று சொன்னால் உங்களால்
நம்ப முடியுமா??? கீழே பாருங்கள் நிச்சயம்
ஆச்சரியப்படுவீர்கள்.
வட்டத்தின்
சுற்றளவை கணிப்பதற்கு கணக்கதிகாரம்,
காக்கை பாடினியம் போன்றவற்றில் சூத்திரம்
அமைக்கப்பட்டுள்ளது.
காக்கை பாடினியம்
****************************
பாடல் :-
"விட்டமோர் ஏழு செய்து
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின்
திகைப்பன சுற்றுத்தானே"
நிறுவல் :-
(பரிதி - ப, விட்டம் - வி, ஆரை - ஆ என
வைத்தால்)
= (விட்டமோர் ஏழு செய்து) = வி/7
= (திகைவர நான்கு சேர்த்து) = வி+4வி/7
= (சட்டென இரட்டி செயின்) = 2[வி + 4வி/7]
(திகைப்பன சுற்றுத்தானே)
= 2[வி + 4வி/7
= 2[11வி/7]
= 2x11வி/7
= 22/7 x வி
தற்காலத்தின் படி 22/7 = π எனவும் வி=d
(விட்டம்) எனவும் கொண்டால்...
வட்டத்தின் சுற்றளவு = 22/7 x வி
= πd
(d = 2r ஆக) சுற்றளவு = 2πr
ஆக இன்று வட்டத்தின் சுற்றளவு காண
பயன்படுத்தப்படும் சூத்திரங்களை தமிழன் π
பயன்படுத்தாமலே கணித்துள்ளான்
என்பது தமிழருக்கு பெருமையே.....
அடுத்த பதிப்பில் கணக்கதிகாரத்தில் உள்ள
சூத்திரத்தின் படி வட்டத்தின்
சுற்றளவை நிறுவி பெருமைப்படுவோம்.—

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக