|
மார். 26
| |||
அகநானூறு – அரிய செய்தி -21 -22-23
அகநானூறு – அரிய செய்தி -21
அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப்
பகலும் அஞ்சும் சுரனே
ஊட்டியார், அகநா. 68: 20,21
அகன்ற வாயினையுடைய பாம்புச் செடியினையுடையதும் ஆகிய, பகற்பொழுதினும் மிக்க நடுக்கத்தினைச் செய்யும் சுரநெறியில்..
பாந்தள் படார் = பாம்புபோலும் இயல்பினையுடைய ஒரு செடி.(Arisaema Leschenaulti பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,1967, ப. 75. )
அகநானூறு – அரிய செய்தி -22
அசுணம் ( முழு விளக்கம் முன்னே இடம் பெற்றுள்ளது )
பாம்பு யானையை உண்ண வல்லது என்பதை – இடிகொள் வேழத்தை யெற்றொடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம் “ கம்ப. சித்திரக் ; 35 மாசுணம் = பெரும்பாம்பு – (Rock Snake, Phythonidac)
acuṇam-அசுணம்
n.
A creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death;இசையறிவதோர்விலங்கு. (நற்.304.)
n.
A creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death;இசையறிவதோர்விலங்கு. (நற்.304.)
US scientists have announced the discovery of a new species of dinosaur. Its fossils offer further clues to how the dinosaurs became extinct 66 million years ago.
Anzu wyliei is a strange, bird-like creature that has a bony crest on top of a beaky head and a long tail like a lizard.
The animal was identified from the partial remains of three skeletons collected in North and South Dakota.
It is reported in PLoS ONE journal.
அகநானூறு – அரிய செய்தி -23
88 – அசுணம் - பன்றி - பல்லி - சகுனம்
கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ் செத்து
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
ஈழத்து ப் பூதன்சேந்தனார், அகநா.88: 10 – 12
கன்னத்திலிருந்து பெருகி வழியும் அழகிய மத நீரில் கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, யாழிசை எனக் கருதி பெரிய மலையின் பிளப்பாய குகையிலுள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும். பன்றி, பல்லி நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து செழுந்தினை உண்ண வரும். நற்.98காண்க. காழியர்– வ ண்ணார்89 ( ஓடுதேர் - பேய்த் தேர் – கானல் நீர் – பேயும் இருப்பதுபோல் இருக்கும் ஆனால் இருக்காது என்று பொருள்படுமோ?89) மேலும் காண்க – கலித் -143 ; 10-12 – நற். -244; 1-4 – நற். 304 ; 8.9 – சீவக 1402 .
யானை விழுங்கும் பாம்பு பாந்தள் ஆனைகொன்றான் இலக்கியம்
|
மார். 26
| |||
யானையை வீழ்த்திய பாம்பு
ஞால்வாய்க் களிறு பாந்தள் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப்பூசல்
தொங்குகின்ற வாயையுடைய களிற்றுயானை பெரும்பாம்பின் வாய்ப்பட்டதாக, சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிரும் பேரொலியானது... யனையைத் தாக்குமா பாம்பு –ஆய்க. பாந்தள் – பாம்பு.
இலக்கியம் விலங்கு சங்ககால பாம்பு நாகம் kalappal.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக