ஞாயிறு, 23 ஜூலை, 2017

உலகம் அழியப்போவது பற்றி இலக்கியம் விண்வெளி வானியல் வால்மீகி

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
பரிதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம்
                                                               வான்மீகியார், புறநா. 358 : 1
சூரியனால் சூழப்பெற்ற, பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்.
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது
                                                            கல்லாடனார், புறநா. 371 : 1
அகன்ற இடத்தை உடைய இந்நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் புரவலரைக் காணப்பெறாமையான்

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
                                                   ஐயாதிச் சிறுவெண்டேரையர், 363 : 1
கரிய கடல் சூழ்ந்த இப்பெரிய நிலவுலகத்தை.
 மயங்குஇருங் கருவிய  விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
                                               மார்க்கண்டேயனார், புறநா. 365 : 1-3
தம்மிற் கலந்து மழை, மின்னல் முதலியவற்றின் தொகுதியை உடைய விசும்பை முகனாகவும் விசும்பின்கண் இயங்கும், ஞாயிறும் திங்களும் ஆகிய இருசுடர்களைக் கண்ணாகவும் கொண்ட , பலவகையாலும் மாட்சிமைப்பட்ட நிலமகள், இடம்விட்டு இடம் பெயரும்காற்று இயங்காத உயிர்களின் இயக்கம் அற்ற விசும்பைக் கடந்து.,.. நிலமகளுக்கு விசும்பு முகம் ; இருசுடர்கள் கண்.

ஊழிகள் தோற்றம்
தொல்முறை இயற்கையின் ……
                                                              கீரந்தையார், பரிபா. 2
ஒன்றற்கொன்று மாறிவரும் இயல்புடைய திங்களும் ஞாயிறும் கெட்டு,விண்ணுலகமும் வெறும் பாழாகி விடப் பின்னர் வானமும் கெட்டு இல்லையாகச் சிதைந்து ஒடுங்கிய ஊழிக் காலங்கள் பற்பல முறை முறையாக்க் கழிந்தனவாக.
உலகம் ஒடுங்குங்கால் திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் ஒளியிழந்து துகளாகி வான வெளியிலே சிதறிப் போக நிலமுதலிய உலகங்கள் சத்தி கெட்டு நொருங்கித் துகள் பட்டு ஒழியும்.

புறநானூறு சங்ககால இலக்கியம் குறிப்பு 
களப்பாள் இணையம் வான்மீகி வால்மீகி ஊழி அறிவியல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக