|
25/3/14
| |||
நளிகட லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
5. ஒளிறிலைய வெஃகேந்தி
அரைபட வமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை யடுப்பாகப்
புனற்குருதி யுலைக்கொளீஇத்
10. தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய
15. வேள்வி முத்திய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்ற ரென்னும் பெயர்பெற்
றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே (26)
கிரீடம் அணிந்த அவர்களின்
தலைகளை அடுப்பாகக் கொண்டு புனலாகப்
பெருகும் குருதியை அடுப்பை எரிக்கும்
உலையில் பெய்து வீரவளை அணிந்த
அவர்களின் தோள்களைத் துடுப்பாக ஆக்கித்
துழாவி சமைக்கப்பட்ட உணவால்
போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும்
போர் புரியும் செழிய!
தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய
மனவலிமையோடு, நான்கு வேதங்களையும்
கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற
மன்னர்கள் உன்
சொற்படி கேட்டு பணிவிடை செய்ய,
நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச்
செய்து முடித்த பெருமை வாய்ந்த
வாளினை யுடைய வேந்தே!
உன்னோடு வேறுபட்டவர் என்னும் பெயரைப்
பெற்று உன்னை எதிர்த்த உன் பகைவர்களும்
யாவரும் அறியும்படித் தவம்
செய்தவர்களாகவே கருதப்படுவர். அவர்கள்
உன்னோடு போர் செய்தற்கு மாட்டாராயினும்,
அவர்களும் சொர்க்கத்தில் வாழ்பவர்கள்
ஆவார்கள்.
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
5. ஒளிறிலைய வெஃகேந்தி
அரைபட வமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை யடுப்பாகப்
புனற்குருதி யுலைக்கொளீஇத்
10. தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய
15. வேள்வி முத்திய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்ற ரென்னும் பெயர்பெற்
றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே (26)
கிரீடம் அணிந்த அவர்களின்
தலைகளை அடுப்பாகக் கொண்டு புனலாகப்
பெருகும் குருதியை அடுப்பை எரிக்கும்
உலையில் பெய்து வீரவளை அணிந்த
அவர்களின் தோள்களைத் துடுப்பாக ஆக்கித்
துழாவி சமைக்கப்பட்ட உணவால்
போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும்
போர் புரியும் செழிய!
தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய
மனவலிமையோடு, நான்கு வேதங்களையும்
கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற
மன்னர்கள் உன்
சொற்படி கேட்டு பணிவிடை செய்ய,
நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச்
செய்து முடித்த பெருமை வாய்ந்த
வாளினை யுடைய வேந்தே!
உன்னோடு வேறுபட்டவர் என்னும் பெயரைப்
பெற்று உன்னை எதிர்த்த உன் பகைவர்களும்
யாவரும் அறியும்படித் தவம்
செய்தவர்களாகவே கருதப்படுவர். அவர்கள்
உன்னோடு போர் செய்தற்கு மாட்டாராயினும்,
அவர்களும் சொர்க்கத்தில் வாழ்பவர்கள்
ஆவார்கள்.
search பழந்தமிழர் போர்க்குற்றம் வேட்டொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக