தமிழ் மொழியின் அச்சு வரி வடிவ வரலாறு!
இப்போ கொஞ்சம் பழங்கதையும் பார்ப்போம்,
# இந்தியாவுக்கு கடல் வழி கண்டுப்பிடிச்சு வந்த முதல் ஐரோப்பியரான வாஸ்கோடகாமா கி.பி 1498 இல் கோழிக்கோட்டிற்கு வந்தார். வாஸ்கொட காமாவுக்கு வழி ஒன்னும் தானா தெரியலை ,அப்போ மலபார் பகுதியில் இருந்து ,அரேபியா வழியா போன ஒரு இஸ்லாமிய வியாபாரி தான் , எங்கோ நடுவில் கடல்பயணத்தின் போது ,வாஸ்கோடகாமை சந்தித்து வழிக்காட்டி உதவியபடியே சொந்த ஊருக்கும் திரும்பினார்னும் சொல்வாங்க.
எப்படியோ வந்து சேர்ந்த அவர் சும்மா ஒன்னியும் வரலை வரும் போதே மொழி வல்லுனர்கள் எல்லாம் கூட்டாந்தார் ,அவங்கலாம் இந்திய மொழிய ஆராய்ந்து கத்துக்க ஆரம்பிச்சாங்க ,அப்படிக்கத்துக்கிட்ட மொத இந்திய மொழியே "மலபார்" என அப்பொழுது சொல்லப்பட்ட மலபார் தமிழ் தான்.
அதுக்கு காரணம் கோழிக்கோடு பகுதில கரையேறியது,ஆனால் அதே நேரம் கோவாவிலும் ஒரு கூடாரம் போட்டாச்சு.
படம்:
St Francis Church கி.பி.1510 இல் கட்டப்பட்டது இங்கு தான் கி.பி.1524 இல் இறந்த வாஸ்கோட காமாவின் உடல் புதைக்கப்பட்டு, பின்னர்,கி.பி 1538இல் தோண்டியெடுக்கப்பட்டு போர்ச்சுகல்லுக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டது, இப்பொழுது ஒரு நினைவு மண்டபம் மட்டும் உள்ளது.
மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்:
சுட்டி:
http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church
Henrique Henriques (1520-1600) என்ற போர்ச்சுக்கீசிய மொழி ஆய்வாளர் , தமிழை கத்துக்கிட்டு , போர்ச்சுகல்- தமிழ் அகராதிய ,(Cartilha – First Tamil book 1554) லத்தின் வரிவடிவில் சிறு புத்தகமாக கி.பி 1554 இல் லிஸ்பனில் Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz ஆகியோர் மூலம் அச்சடித்தார். இவர் அப்பொழுது தூத்துக்குடி அருகே ஒரு தமிழ் பல்கலைகழகம் கூட அமைக்க வேண்டும் என ,போச்சுக்கல் அரசுக்கு பரிந்துறையும் செய்தாராம்.
இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சு வடிவம் கண்ட முதல் மொழி தமிழ் ஆகும்.
அதன் பின்னர்,கி.பி 1556 இல் இந்தியாவின் முதல் அச்சகம் , தற்போதைய கேரளாவில், கொல்லம் அருகே அம்பளக்காடு எனுமிடத்தில் அமைக்கப்பட்டது என்கிறார்கள். ஒரு சிலர் கோவாவில் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.
பின்னர் கி.பி 1557 இல் Juan Gonsalves. என்ற ஸ்பானிஷ் பாதிரி ,தமிழுக்கான முதல் "அச்சு எழுத்துக்களை செதுக்கி" உருவாக்கினார்.
இவ்வெழுத்துக்களை வைத்து Henrique Henriques கொல்லத்தில் உருவாக்கப்பட்ட அச்சகத்தில் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ் (மலபார் தமிழ்)அச்சு புத்தகத்தினை அச்சிட்டு வெளியிட்டார்.
இந்நூல் "‘Doctrina Christam en Lingua Malauar Tamul " என இலத்தின் வரிவடிவில் வந்த நூலின் மொழிப்பெயர்ப்பு, கிருத்துவ வழிப்பாட்டு பாடல்கள் பிரேயர்கள் கொண்டது.
அதன் பின்னர் 1559 இல் மலையாள மொழியும் தமிழும்(மலபார் மலையாளம்) கலந்த Doctrina Christam’ alias ‘Kiricittiyani vanakkam’ என்று மொழிப்பெயர்க்கப்பட்ட நூலும் அச்சடிக்கப்பட்டது.
பின்னர் 1586 இல் தூத்துக்குடி புன்னக்காயலில் ஒரு அச்சகம் அமைக்கப்பட்டு ‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages) புனிதர் வரலாறு என்ற நூல் அச்சடிக்கப்பட்டது, இந்நூல் தான் முதன் முதலில் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்ட நூல் ஆகும்.
(‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages,ஜெர்மானிய மொழிப்பெயர்ப்பு-1672)
நாடு பிடிக்க ,மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள் நினைச்சிருந்தால் இங்க இருக்கவங்களை தாஜா செய்து "லத்தின் வரி வடிவில்" எழுத,படிக்க சொல்லிட்டு போயிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யாமல் உள்ளூர் மொழியின் மொழி வரி வடிவத்தை மாற்ற விருப்பமில்லாமல் ,நம்ம ஊரு மொழிய கத்துக்கிட்டு,அதுக்கு "type casting " உருவாக்கி,புத்தகம் அச்சடித்து அப்புறமாத்தான் தன் சுயநலத்தையும் காட்டினான், ஆனால் நம்ம ஆசானோ இங்கனக்குள்ள குந்திக்கிட்டு 13 வருசமா டிரான்ஸ்லிட்டரேஷனில் டைப்படிக்கிறேன் நல்லாத்தான் இருக்கு , எல்லாரும் அப்படியே எழுதுங்கடானு "இவரே தமிழின் ஏகபோக பிரதிநிதி" போல தீர்ப்பு எழுதுறார் அவ்வ்!
என்ன கொடுமை சார் இது!
----------------------------
பின்குறிப்பு:
# தப்புத்தப்பா தமிழில் எழுதி தமிழைக்கொலை பண்ணிட்டேன் என பொங்கிட்டு ,பிழை திருத்தம் சொல்ல வராதிங்க ,ச்சும்மா தமாசுக்கு வேண்டும்னே மெட்ராஸ் பாஷைய கலந்துக்கட்டி எழுதினேன் :-))
# தகவல் மற்றும் படங்கள் உதவி,
# https://tidsskrift.dk/index.php/fundogforskning/article/view/1298/2076
# http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church
# http://karkanirka.org/2010/04/14/first_tamil_book/
# http://pazhayathu.blogspot.in/2009/11/first-printing-press-in-indiathe.html
# http://www.nathansholidayhome.com/sightseeing-in-and-around-fort-kochi/
மற்றும் தி இந்து, விக்கிப்பீடியா, & கூகிள் ,இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------
இப்போ கொஞ்சம் பழங்கதையும் பார்ப்போம்,
# இந்தியாவுக்கு கடல் வழி கண்டுப்பிடிச்சு வந்த முதல் ஐரோப்பியரான வாஸ்கோடகாமா கி.பி 1498 இல் கோழிக்கோட்டிற்கு வந்தார். வாஸ்கொட காமாவுக்கு வழி ஒன்னும் தானா தெரியலை ,அப்போ மலபார் பகுதியில் இருந்து ,அரேபியா வழியா போன ஒரு இஸ்லாமிய வியாபாரி தான் , எங்கோ நடுவில் கடல்பயணத்தின் போது ,வாஸ்கோடகாமை சந்தித்து வழிக்காட்டி உதவியபடியே சொந்த ஊருக்கும் திரும்பினார்னும் சொல்வாங்க.
எப்படியோ வந்து சேர்ந்த அவர் சும்மா ஒன்னியும் வரலை வரும் போதே மொழி வல்லுனர்கள் எல்லாம் கூட்டாந்தார் ,அவங்கலாம் இந்திய மொழிய ஆராய்ந்து கத்துக்க ஆரம்பிச்சாங்க ,அப்படிக்கத்துக்கிட்ட மொத இந்திய மொழியே "மலபார்" என அப்பொழுது சொல்லப்பட்ட மலபார் தமிழ் தான்.
அதுக்கு காரணம் கோழிக்கோடு பகுதில கரையேறியது,ஆனால் அதே நேரம் கோவாவிலும் ஒரு கூடாரம் போட்டாச்சு.
படம்:
St Francis Church கி.பி.1510 இல் கட்டப்பட்டது இங்கு தான் கி.பி.1524 இல் இறந்த வாஸ்கோட காமாவின் உடல் புதைக்கப்பட்டு, பின்னர்,கி.பி 1538இல் தோண்டியெடுக்கப்பட்டு போர்ச்சுகல்லுக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டது, இப்பொழுது ஒரு நினைவு மண்டபம் மட்டும் உள்ளது.
மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்:
சுட்டி:
http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church
(தம்பிரான் வணக்கம் அட்டை-வலப்பக்கமா குந்திக்கிறவர் தான் ஹென்றி)
(Cartilha – First Tamil book 1554)
அதன் பின்னர்,கி.பி 1556 இல் இந்தியாவின் முதல் அச்சகம் , தற்போதைய கேரளாவில், கொல்லம் அருகே அம்பளக்காடு எனுமிடத்தில் அமைக்கப்பட்டது என்கிறார்கள். ஒரு சிலர் கோவாவில் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.
பின்னர் கி.பி 1557 இல் Juan Gonsalves. என்ற ஸ்பானிஷ் பாதிரி ,தமிழுக்கான முதல் "அச்சு எழுத்துக்களை செதுக்கி" உருவாக்கினார்.
இவ்வெழுத்துக்களை வைத்து Henrique Henriques கொல்லத்தில் உருவாக்கப்பட்ட அச்சகத்தில் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ் (மலபார் தமிழ்)அச்சு புத்தகத்தினை அச்சிட்டு வெளியிட்டார்.
இந்நூல் "‘Doctrina Christam en Lingua Malauar Tamul " என இலத்தின் வரிவடிவில் வந்த நூலின் மொழிப்பெயர்ப்பு, கிருத்துவ வழிப்பாட்டு பாடல்கள் பிரேயர்கள் கொண்டது.
அதன் பின்னர் 1559 இல் மலையாள மொழியும் தமிழும்(மலபார் மலையாளம்) கலந்த Doctrina Christam’ alias ‘Kiricittiyani vanakkam’ என்று மொழிப்பெயர்க்கப்பட்ட நூலும் அச்சடிக்கப்பட்டது.
பின்னர் 1586 இல் தூத்துக்குடி புன்னக்காயலில் ஒரு அச்சகம் அமைக்கப்பட்டு ‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages) புனிதர் வரலாறு என்ற நூல் அச்சடிக்கப்பட்டது, இந்நூல் தான் முதன் முதலில் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்ட நூல் ஆகும்.
(‘Flos Sanctorum’ (Punitar varalaru -தமிழ்,of 669 pages)
நாடு பிடிக்க ,மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள் நினைச்சிருந்தால் இங்க இருக்கவங்களை தாஜா செய்து "லத்தின் வரி வடிவில்" எழுத,படிக்க சொல்லிட்டு போயிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யாமல் உள்ளூர் மொழியின் மொழி வரி வடிவத்தை மாற்ற விருப்பமில்லாமல் ,நம்ம ஊரு மொழிய கத்துக்கிட்டு,அதுக்கு "type casting " உருவாக்கி,புத்தகம் அச்சடித்து அப்புறமாத்தான் தன் சுயநலத்தையும் காட்டினான், ஆனால் நம்ம ஆசானோ இங்கனக்குள்ள குந்திக்கிட்டு 13 வருசமா டிரான்ஸ்லிட்டரேஷனில் டைப்படிக்கிறேன் நல்லாத்தான் இருக்கு , எல்லாரும் அப்படியே எழுதுங்கடானு "இவரே தமிழின் ஏகபோக பிரதிநிதி" போல தீர்ப்பு எழுதுறார் அவ்வ்!
என்ன கொடுமை சார் இது!
----------------------------
பின்குறிப்பு:
# தப்புத்தப்பா தமிழில் எழுதி தமிழைக்கொலை பண்ணிட்டேன் என பொங்கிட்டு ,பிழை திருத்தம் சொல்ல வராதிங்க ,ச்சும்மா தமாசுக்கு வேண்டும்னே மெட்ராஸ் பாஷைய கலந்துக்கட்டி எழுதினேன் :-))
# தகவல் மற்றும் படங்கள் உதவி,
# https://tidsskrift.dk/index.php/fundogforskning/article/view/1298/2076
# http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church
# http://karkanirka.org/2010/04/14/first_tamil_book/
# http://pazhayathu.blogspot.in/2009/11/first-printing-press-in-indiathe.html
# http://www.nathansholidayhome.com/sightseeing-in-and-around-fort-kochi/
மற்றும் தி இந்து, விக்கிப்பீடியா, & கூகிள் ,இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக