|
18/8/14
| |||
தென்காசி சுப்பிரமணியன்
திருட்டு திராவிடக் கல் அடித்த
மூன்று மாங்காய்.
திராவிடக் கருத்தியல் திறனாய்வு மாநாடு,
திருப்பூர்,
செப்டம்பர் 17, 2014.
______________________________
ஆதி ஆந்திரர்கள் இன்றும் பதுக்கை அடக்க
முறையை கடைபிடிப்பவர்கள். ஆனால் சங்க
இலக்கியத்தில் வடுகர் புலி உண்டு துப்பிய
மான்மறியை உண்பவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.
அதாவது சங்ககாலத்தில் வேங்கட மலைக்கு வடக்கில்
வாழ்ந்தவர்கள் ஆதி ஆந்திரராக இருக்க வேண்டும்.
பதுக்கை அடக்கமுறை அடர்த்தி அங்கு தான் அதிகம்.
(Density of Megalaithic Dolmens) ஆனால்
அதே காலத்தில் வடுகர் வேட்டை ஆடக் கூட
வக்கில்லாமல் புலி உண்டு துப்பிய
மான்மறியை உண்டார்கள் என்றால் (1)
1. அவர்கள் போரும் தெரியாது
2. வேட்டையும் தெரியாது
3. வேளாண்மையும் தெரியாது எனப் பொருள்.
இவர்கள் பிற்காலங்களில் ஆரியரோடு கூட்டுச்
சேர்ந்து (2) ஆதி ஆந்திரரப்
போர்குடிகளை அடக்கி இருப்பார்கள்.
1. திராவிடக் கணக்கின் படி ஆதி ஆந்திரர்
வரலாறும் வெளிவந்து விடக்கூடாது.
2. அதேபோல் ஆதித்தமிழர்களான மருதநிலக்
குடிகளின் வரலாறும் வெளிவரக்கூடாது.
3. தங்களின் திருட்டு வரலாறும்,
வாந்தியெடுத்ததை உண்ணும் வரலாறும்
வெளிவந்துவிடக்கூடாது.
அதுக்கு என்ன செய்யனும்?
மாங்காய் நம்பர் ஒன்:
ஆதி ஆந்திரரை ஆதித்தமிழரெனச் சொல்.
மாங்காய் நம்பர் 2
ஆதித்தமிழரான மருதநிலக்குடிகள
ை ஆதி திராவிடர் எனச் சொல்.
மாங்காய் நம்பர் 3
தென்னிந்தியர் அனைவரும் திராவிடர் எனச்
சொல்லி அதுக்கு தலைமையாக வடுகர்களை வை. தன்
கோல் மூட்டித்தன வரலாற்றை வெளிப்படுத்த முயலும்
ஆதிக்குடிகளை சாதிவெறியன், ஆரிய
அடிவருடி எனச் சொல்லி அவனை கேள்வி கேட்க
முடியாமல் செய்.
மாங்காய் நம்பர் ஒன் ரிசல்டு:
ஆதி ஆந்திரர் தமிழகத்தில் தமிழரென
வரலாறு தேடினால் அவர்களின் வரலாறும்
கிடைக்காது.
மாங்காய் நம்பர் 2 ரிசல்டு
தமிழர் திராவிடர் என
நினைத்து வரலாறு தேடினால் அவர்களின்
வரலாற்றுப் பழமையை நிறுவவும் முடியாது.
மாங்காய் நம்பர் 3 ரிசல்டு
வடுகரின் சாதிவெறியை திராவிடம்
கொண்டு மறைத்து ஆதி ஆந்திரரை தமிழருக்கு எதிராகத்
திருப்பிவிட்டு அனைவரும் அழியும்
வரை அவர்களை அடிமையாக்கி ஆளலாம்.
என்ன வெங்காயப் பிளான்டா?
நாளை வடுகரின் ஆதிக்கத்தை வேரறுக்கப்
போகிரவர்கள் தமிழர்கள் அல்ல. ஆதி ஆந்திரர்கள்
தான். காரணம் வடுகர்களின் ஆதிக்கம் தமிழகம்
கடந்து தென்னிந்தியா ஏன் வெளிநாடுகள் கூட
வரை நீண்டு செல்கிறது. (3) தமிழர்களால் வடுகர்
ஆதிக்கத்தை தமிழகத்தில் மட்டுமே முறியடிக்க
இயலும். ஆனால் ஆதி ஆந்திரர் மட்டுமே கன்னட-
ஆந்திரப் பகுதிகளில் வடுகர்களின்
ஆதிக்கத்தை முறியடிக்க வல்லவர்கள்.
______________________________
மேற்கோள்கள்
வடுகர் புலி உண்டு வாந்தி எடுத்த
மான்கறி உண்ணும் பாலை நிலக்குடிகள்
என்பதை அகநானூற்றின் 107வது பாலை நிலப் பாடல்
கூறுகிறது.
1. வயிறுதின்று இரும்புலி துறந்த ஏற்றுமான்
உணங்கல் நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு ஆன்நிலைப்
பள்ளி அளைசெய்து அட்ட வால்நிணம் உருக்கிய வாஅல்
வெண்சோறு புகர்அரைத் தேக்கின் அகல்இலை மாந்தும்
கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர் வல்லாண்
அருமுனை நீந்தி, அல்லாந்து, உகுமண்ஊறு அஞ்சும்
ஒருகாற் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம்
கூர்ந்து, ஒருதனித்து ஒழிந்த
உரனுடை நோன்பகடு - அகநானூறு 107
வடுகர் பேசும் மொழியைத் தமிழர் 'கல்லா நீண்மொழி'
என்றனர். வேட்டைநாயுடன் அவர்கள் செல்வார்களாம்.
""புலி உண்டபின் மாறையில் போட்டுவிட்டுப் போன
மான்மறி,"" மூங்கில்நெல் அரிசி, பசு வெண்ணெய்
கலந்து சமைத்த புலவு உணவை விருந்தினர்களுக
்குத் தேக்கிலையில் பகிர்ந்து அளிப்பார்களாம்.
___
வடுகர் மோரியரின் தமிழகப்
படை எடுப்புக்கு உதவினர் என்கிறது சங்கப்பாடல்
ஒன்று.
2. மயில் ஒழித்த பீலி வான்போழ் வல்வில் சுற்றி,
நோன்சிலை அவ்வார் விளிம்பிற்கு அமைந்த
நொவ்வு இயல் கணை குரல் இசைக்கும் விரை செலல்
""கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற,
மோரியர் தென்-திசை மாதிரம் முன்னிய
வரவிற்கு,"" விண்ணுற ஓங்கிய பனியிருங்
குன்றத்து, ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர் - அகநானூறு 281
மாமூலனார்
புலி வாந்தி எடுத்த மான்மறி உண்ட வடுகர்
தனியாக அருந்ததியப் போர்குடிகளை வெல்ல
முடியாது. அதுக்காகத்தான் அவர்கள்
ஆதி ஆந்திரர்களை தோற்கடிக்க மோரியர்களின்
உதவியை நாடி இருக்க வேண்டும். அதனால்
பதுக்கை அடக்கமுறையை பின்பற்றிய அருந்ததியப்
போர்குடிகளை அடக்கி இருப்பர். அதற்கு பதிலாக
தமிழகத்துக்கு மோரியர் படை எடுத்து வர
வழிகாட்டினர் வடுகர் எனலாம்.
___
3. Type WWW. and paste youtube.com/
watch?v=_vBvExh7-QY
இன்னும் இதுபோல் பலவற்றை என அறிய
வருகை தாருங்கள்.
___
திராவிடக் கருத்தியல் திறனாய்வு மாநாடு,
திருப்பூர்,
செப்டம்பர் 17, 2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக