ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (ஐயர்) : ஜூனியர் விகடன் நூலகம்
தலைவர் பிரபாகரனைப்பற்றி பலருக் கும் தெரியும். பல புத்தகங்கள், பதிவுகள் உண்டு. ஆனால் ‘தம்பி’யாக இருந்த பிரபாகரனைப்பற்றி முழுமையாய் அறிய வந்திருந்திருக்கும் புத்தகம் இது. ‘தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக்கொண்ட அமைப்பின் மத்தியக் குழுவில் நானும் ஒருவன்’ என்ற தகுதியுடன் இதனை எழுதி இருக்கிறார் கணேசன். அவரை ‘ஐயர்’ என்றால்தான் பலருக்கும் தெரியும்!
‘எங்கோ தெருக்கோடியில் உள்ளூரிலேயே அறியப்படாத மூலையில் கால்படாத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும் உலகின் மிகப் பெரிய கொரில்லா இயக்கமாகவும் பேசப்படுகின்ற சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில் இருந்தே கட்டி அமைக்கப்பட்டது எனலாம். பல தடவை தனித்து யாருமற்ற அனாதை ஆகியிருக்கிறார். நண்பர் களை இழந்து தனி மரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும் உறங்க இடமுமின்றி தெருத்தெருவாக அலைந்திருக்கிறார். இவை எல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி விடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்துக்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்’ என்று எழுதும் கணேசன், 17 வயது முதல் பிரபாகரனைக் கவனித்த சிலரில் ஒருவர்.
முதலாவது வங்கிக் கொள்ளையை நடத்திய பிரபாகரன், செல்வச் சன்னதி கோயிலில் ஒரு அன்னதானம் கொடுக்கச் சொல்லும் அளவுக்கு பக்திமானாக இருந்துள்ளார். ‘கொலை செய்து பழக்கப்பட்டால்தான் மனத்தில் உரமேறும்’ என்று சொல்லும் கத்திமானாகவும் இருந்துள்ளார்.
தமிழ்ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் கொலை கருணாநிதி என்ற போலீஸ் அதிகாரியின் மரணம். வேவு பார்த்துத் தமிழ் இளைஞர்கள் பற்றிய தகவலை மேலிடத்துக்குச் சொல்பவராக அந்த அதிகாரி இருந்தார். தன் கையில் கிடைத்தவர்களைக் கொடூரமாகச் சித்ரவதையும் செய்வாராம். கலாபதி என்ற இளைஞரின் காதைச் சிதைத்து சித்ரவதை செய்துள்ளார் கருணாநிதி. அவரைச் சுட்டுக் கொன்றார் பிரபாகரன். கருணாநிதி இறந்துபோனபிறகும் அவரது காதைப் பார்த்து மறுபடி சுட்டாராம் பிரபாகரன். இப்படிப்பட்ட தகவல்கள் பக்கத்துக்குப் பக்கம் இறைந்து கிடக்கின்றன.
அதற்காக இது பிரபாகரனைத் துதி பாடும் புத்தகம் அல்ல! ‘இயக்கத்தில் இருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ அல்லது வேறு அமைப்புகளை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்’ என்று ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட விதிமுறை… சக தோழர்களைப் பழிவாங்கும் வழிமுறையாக மாறிப்போன கதைகளை கணேசன் விவரிப்பதைப் படிக்கும்போது நெஞ்சு படபடக்கிறது. அரசியல் வழிமுறைகளைத் திட்டப்படுத்தாமல் ராணுவ சாகச வாதத்தில் மூழ்கிய இளைஞர்களின் சேர்க்கையாக அனைத்து போராளிக் குழுக்களுமே திரண்டன. ‘எங்கிருந்து தொடங்கி இருக்கலாம் என்ற ஞானோதயம் உருவானபோது எல்லாமே முடிந்து விட்டன’ என்று வருத்தப்படுகிறார் கணேசன். மக்கள் திரள் அமைப்புகளில் இருந்து ஆயுதப்போராட்டம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக மக்களிடம் அன்னியப்பட்டு அமைப்பைத் தொடங்கி, அதன் பிறகு ஆயுதத்தைப் பார்த்து மக்கள் ஆதரித்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றே புரிந்துகொள்ள முடிகிறது. உயிரைப்பற்றி கவலைப்படாத உறுதிகொண்ட மனிதர்களாக அணி திரண்டவர்கள் வழிமுறைக் கோளாறு காரணமாக தோல்வியைத் தழுவிய தொடக்க கால நிகழ்வுகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் அல்ல… அனைவருக்குமான பாடம்!
– புத்தகன்
மேலே குறித்த கட்டுரை ஜூனியர் விகடனின் புத்தகன் பார்வையில் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூல். மார்ச் மாதம் 10ம் திகதி பிரித்தானியாவில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.
இனியொரு வெளியீடான இந்த நூலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் ஐயர் தனது சாட்சியத்தைக் கூறுகிறார்.
32 அத்தியாயங்களாக வெளிவந்திருக்கும் நூல் குறித்த விமர்சனங்களை பல அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
32 அத்தியாயங்களாக வெளிவந்திருக்கும் நூல் குறித்த விமர்சனங்களை பல அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
குறித்துக்கொள்ளுங்கள்:
இடம் : Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ (நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்)
காலம்: 10:03:2012 (சனி)
நேரம் : மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை
inioru@gmail.com
நூல் அறிமுகம் விமர்சனம் என்பவற்றுடன் ஆரம்பமாகும் நிகழ்வு இரவு உணவு, கலந்துரையாடலோடு நிறைவுறும். அனைவரும் நட்புடன் அழைக்கப்படுகின்றனர்.
ஐயர் எழுதிய நூல் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகிறது : ரகுமான் ஜான்
ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூலின் வெளியீட்டு விழா மாசி 25,2012ல்ஸ்காபரோ சிவிக் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நூலை கணேசன் எழுதியிருந்தார். ஐயர் என்றபெயரால் அழைக்கப்படும் இவர் தமிழ்த் தேசிய போராட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களுள்ஒருவர். நூல் வெளியீட்டினை தமிழர் வகை துறை வள நிலையத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.சுமார் 125 பேரளவில் கலந்து கொண்ட இந் நிகழ்விற்கு ரதன் தலைமை தாங்கினார்.ஈழப் போராட்டத்தின் ஆரம்ப நிலைகளை நூலாக உருவாக்க முயன்று அதற்காகவே பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் அவர்களின் நினைவஞ்சலியோடு ஆரம்பமான நிகழ்வில்செழியன், குமரன், அருண்மொழி வர்மன், ரகுமான் ஜான் ஆகியோர் கருத்துரைகள்வழங்கினர். இதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பலர் ஆர்வத்துடன் கலந்து கருத்துக்களைஷகூறினார்கள். இந் நூலை இனியொரு இணையத்தளம் வெளியிட்டிருந்தது.நூலின் முதலாவது பதிப்பில் இன்னும் சில பிரதிகளே எஞ்சியுள்ள நிலையில் கனடாவில் அதனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 416-450-6833 என்ற அலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கனடாவில் நிகழ்வுற்ற நூல் அறிமுத்தில் உரையாற்றிய ரகுமான் ஜான் ஐயருடைய காலப்பகுதியில் திருகோணமலைப் பகுதியில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளோடு தன்னை இணைத்துக்கொண்டவர். ரகுமான் ஜானின் உரையின் முழுமையான பகுதி இங்கே தரப்படுகிறது.
போராட்டத்தின் வரலாறு பற்றிய விரிவான அறிவு இல்லாதவர்களிடையே புலிகள் கட்டமைத்துள்ள ஒற்றைப்பரிமான கதையாடலை இந்த நூல் மறுப்பது மாத்திரமன்றி, போராட்டம் பற்றிய ஓரளவு விபரம் தெரிந்தவர்களுக்குக் கூட, புலிகள் அமைப்பினுள் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்களை, அதன் ஆரம்பகால வளர்ச்சிநிலையில், எவ்வித பாசாங்குத்தனமும் இன்றி உண்மையாக, நேர்மையாக முன்வைக்கிறது. இந்த வகையில் ஐயர் இந்த வரலாற்றை நேர்மையாக பதிவு செய்வதன் மூலமாக, தன்னளவில் ஒரு முக்கியமான வரலாற்பாத்திரத்தை ஆற்றியுள்ளார். இந்த நூலானது இப்போதும், எதிர்காலத்திலும் எமது போராட்டம் தொடர்பாக உண்மையான அக்கறையுடன் தேடல்களை நிகழ்த்துபவர்களுக்கு ஒரு ஒப்பற்ற ஆதாரமாக அமையும் என்பதில் சந்தேகத்திறகு இடமில்லை.
இந்த நூலானது மேலே கூறியது போன்று முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகின்ற போதிலுங்கூட, இன்னமும் இதன் முழுமையாக உள்ளாற்றலும் (potential) கைவரப்பெறாத நிலையில், இதிலுள்ள பலவேறு விடயங்களும், வெறும் தகவல்களாக, உணர்வுகளாக முறையாக கோட்பாட்டாக்கம் செய்யப்படாததாகவே இருக்கிறதன. ஆதலால் இந்த படைப்பின் முழுமையான potential ஐ நாம் கைவரப்பெற வேண்டுமாயின், இந்த நூலானது சரியான கோட்பாட்டு சாதனங்களின் உதவியுடன் அனுகப்பட, பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளது. அந்த பாத்திரத்தை நான் எனது உரையில் மூலமாக ஆற்ற முனைகிறேன்.
வரலாற்றில் தனிநபரது பாத்திரம் குறித்து…
தலைவர் பிரபாகரன் சூரியதேவன் என்றும் முருகனின் அவதாரம் என்றும், அந்த தனிமனிதனது சாதனைகளே தமிழீழ விடுதலைப்போராட்டம் என்று துதிப்பவர்களது கருத்துக்கள் எவ்வளது அபத்தமானவையோ, அதேயளவு அபத்தமானவை தேசியவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அத்தனை இடர்பாடுகளுக்கும் பிரபாகரன் என்ற தனிமனிதனே என்ற குற்றச்சாட்டுமாகும். அதிலும் முன்னையவர்கள் மிகவும் சாதரமாணவர்கள், விரிவான அரசியல் ஞானமற்றவர்கள். இதனால் இவர்களது தவறுகள், அவை எவ்வளவுதான் பாரதூரமானவையாக இருப்பினுங்கூட மன்னிக்கத்தக்கவை. ஆனால் இரண்டாவது தரப்பினர், தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையை காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது.
வரலாற்றில் தனிநபர்களது பாத்திரம் குறித்த விடயமானது மிக நீண்டகாலமாக கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு உரிய ஒரு விடயமாகும். வரலாற்றை தீர்மானிப்பதில் சமுதாயத்தின் கட்டுமானங்களாக பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், மற்றும் அந்த சமூக்தின் குறிப்பான வரலாற்று நிலைமைகள் எவ்விதமான பாத்திரம் வகிக்கின்றன என்பதில் பல்வேறு தத்துவஞானிகளும் பலவிதமாக நிலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறே அந்த வரலாற்று இயக்கங்களில் முதன்மையான பாத்திரம் வகிக்கும் தனிநபர்களது பாத்திரம் பற்றியும் பலவிதமான நிலைப்பாடுகள் இருக்கின்றன. மார்க்சியமானது வரலாற்றில் பொருள்வகை அம்சங்களது பாத்திரத்தை வலியுறுத்துகின்ற போதிலுங்கூட, அது தனிநபர்களது பாத்திரங்களை முற்றாக நிராகரித்துவிடுவதில்லை. இந்த பொருள்வகை காரணிகள் ஏற்படுத்தும் வரையறுத்த எல்லைக்குள் இந்த தனிநபர்களது தனிச்சிறப்பம்சங்களான அவரது வர்க்க-சமூக பின்னணி, அவரது பிரக்ஞை மட்டம், அறிவாற்றல், அவர் தேர்ந்தெடுக்கும் அரசியல் மற்றும் அவரது உளவியல் குணநன்கள் கணிசமான பாத்திரம் ஆற்றவே செய்கிறது. இந்த வகையில் சமூக கட்டமைப்புகளுக்கும், தனிநபர்களது பாத்திரத்திற்கும் இடையிலான இயங்கியல் உறவை சரிவர கருத்திற்கொள்ளாத எந்தவிதமான ஆய்வுகளுமே விஞ்ஞானபூர்வமானாக அமையமாட்டாது.
இந்தவகையில் பார்த்தால் தமிழ் சமுதாயமானது மிகவும் ஒரு பிற்போக்கான சமூகமாகும். யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க சிந்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருப்பதாகும். இதனைவிட விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூகமாகும். அரசாங்க உத்தியோகம், சிறு அளவிலான விவசாயம், மீன்பிடி மற்றும் உள்ளூர் சில்லறை வர்த்தகம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ள ஒரு பொருளாதார வளர்ச்சியற்ற ஒரு சமுதாயம். எமது சமுதாயத்தில் உயர்கல்வியை நாடுபவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமே என்றபோதிலும் அந்த கற்றலானது வெறுமனே நிபுணத்துவம் சார்ந்த கற்றல் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்டதாக அமையவில்லை என்பது வெளிப்படையானது.
இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் சாதியரீதியில் உயர்நிலையில் இல்லாத ஒரு சமூகப்பிரிவிலிருந்து, உயர்கல்வியையோ, விரிவான அரசியல் போதமோ ஊட்டப்படா, வெறும் பதினேழு வயதான இளைஞனாக பிரபாகரன் போராட்டத்திற்கு வருகிறார். அவர் இந்த சமூகத்தையும், போராட்டத்தையும் முகம் கொடுத்த விதமே இந்த நூலின் முக்கிய கருப்பொருளாகிறது. அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவது, இந்த அரசினதும், ஏனைய போராட்டத்திற்று ஊறு விளைவிக்கும் சக்திகளது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பிழைப்பது என்பதே இந்த நூலின் பொருளாகிவிடுகிறது.
இந்த இடத்தில் முக்கியமான இன்னொரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். புலிகளது அரசியல் வறுமை பற்றி விமர்சிப்பவர்கள் எவருமே மாற்றாக ஒரு விரிவான திட்டத்தை வகுத்து முன்வைத்து, ஒரு பலமான அமைப்பை ஒழுங்கமைக்க முடியாதவர்களாகவே உள்ளோம் என்பது ஒரு வேதனையான உடன்நிகழ்வாகும். இந்த குறைபாட்டிற்கு வெறுமனே புலிகளது தடை நடவடிக்கைகளை மாத்திரம் காரணமாக கூறி யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. புரட்சிகர இயக்கங்கள் எதுவுமே எதிரியினதும், எதிர்ப்புரட்சிகர சக்திகளதும் அனுமதியுடன் போராட்டத்தை திட்டமிடுவதோ, முன்னெடுப்பதோ கிடையாது. எதிர்ப்புரட்சிகர சக்திகள் அரங்கிற்கு வருகையில் அவற்றை எவ்வாறு முகம் கொடுப்பது என்பதும் புரட்சிகர திட்டமிடலில் அமைந்திருக்க வேண்டும். தீப்பொறி, என்எல்எப்ரி போன்ற அமைப்புகளின் சிதைவில், அந்த அமைப்புக்களது அகக் கூறுகளே, உள்முரண்பாடுகளே பிரதான பாத்திரம் வகித்தன என்பது மிகவும் முக்கியமான உண்மையாகும். இந்திய – இலங்கை அரசுகளின் கால்களில் சரணடைந்துவிட்டவர்கள், ஜனநாயகத்தை பற்றிப் பேசுவதற்கு இலாயக்கற்றவர்களாவர். இது இன்றுவரையிலான இவர்களது நடவடிக்கைகள் மூலமாகவே தெளிவாகிறது.
தன்னியல்புவாதம்
புலிகளது ஆரம்பகால சிந்தனைகளை பரிசீலிக்கும் எவருக்கும் சில உண்மைகள் தெளிவாக தெரியும். புலிகளிடம் தெளிவான, திட்டவட்டமான அரசியல் கருத்துக்கள் இருக்கவில்லை. இவர்கள் தம்மை தமிழர் விடுதலை கூட்டணியின் இராணுவ வடிவமாகவே கண்டார்கள். இது தவிகூ உடன் நேரடியான தொடர்புகள் இல்லாத காலத்திலும் சரி, பின்னர் நேரடியான தொடர்புகள் உருவாகிவிட்ட பின்னருங்கூட இப்படிப்பட்டதொரு கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.
புலிகளைப் பொருத்தவரையில் விடயங்கள் மிகவும் இலகுவானவையாகவும், தெளிவானவையாகவும் இருக்கின்றன. தமிழ் மக்களை சிறிலங்கா அரசு ஒடுக்கிறது. இந்த அரசுக்கு எதிராக போராடுவதற்காக ஒரு படையை அமைப்பது: எதிரியை தாக்குவது: அதற்குத் தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளவும், போராளிகளை பராமரிப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது. அதனால் வங்கிகளில் கொள்ளையிடுவது: தம்மைத் தேடிவரும் எதிரிகளையும், எதிரிக்கு துணைபோகும் துரோகிகளையும் வேட்டையாடுவது: இந்த நடவடிக்கைகளினூடாக ஒரு பலமான படையை கட்டியமைத்தால் எமது தாயகத்தை எதிரியிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும். ஒரு தனியரசை நிறுவுவதன் பின்பு அமைப்பை கலைத்துவிடுவதாக முடிவு செய்கிறார்கள்.
இங்கே நாம் தன்னியல்புவாதத்தின் அசலான வகைமாதிரியை (classical example) காண்கிறோம். இங்கே சமூகமானது அதன் அத்தனை சிக்கலான பிரச்சனைகளுடனும் கோட்பாட்டு மட்டத்தில் புரிந்து கொள்ளப்படாமல், வெறுமனே அனுபவவாத மட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால் விரிவான கோட்பாட்டு மட்டத்திலான ஆய்வுகள், எதிரிகள் – நண்பர்களை சரிவர வரையறுத்துக் கொள்வது: அரசியல் திட்டம், மூலோபாயம் – தந்திரோபாயம் போன்றவற்றை வரைந்து கொள்வது: அமைப்பு விதிகள்: இராணுவ மூலோபாயம் – தந்திரோபயம் பற்றிய அறிதல் எதுவுமின்றி போராட்டம் தொடங்கிவிடுகிறது. தமது கண்ணுக்கு எதிரே தெரியும், தொட்டுணரத்தக்க இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்துவதும், அந்த தாக்குதல்களுக்கு வரும் எதிர்தாக்குதல்களைமுகம் கொடுத்து முறியடிப்பதும் என்று போராட்டம் தீவிரமாக முன்னேறுவதான ஒரு தோற்றப்பாட்டை அதில் ஈடுபடுபவர்களுக்கும், மக்களுக்கும் உருவாக்குகிறது. ஆனால் இந்த தேனிலவு நீடிக்கவில்லை. நெருக்கடிகள் அமைப்பினுள், அதுவும் அமைப்புத்துறை மற்றும் போராட்ட வழிமுறை தொடர்பாக உருவாகி, கடைசியில் பிரபாகரன் தனிமனிதனாக விடப்படுகிறார். தன்னை ரெலோ இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறார்.
தன்னியல்பு அல்லது தன்னெழுச்சி என்பது தானாக, இயல்பாக குறிப்பிட்ட சமூகப்பிரிவினருக்கு கைவரப்பெறும் நடைமுறைகள் என்று அர்த்தம்பெறும். மாணவர்கள் பாடசலையை பகிஸ்கரிப்பதும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதும், இளைஞர்-யுவதிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்வதும், இந்த ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச்சொத்துக்களுக்கு, அவை அரசின் சொத்துக்கள் என்ற எண்ணத்தில் சேதமிழைப்பதும், சில ஆயுத தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் அரசுக்கு ஆதரவானவர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்துவதும் இந்த சமூகப்பிரிவினருக்கு மிகவும் இயல்பாக ஏற்படும் தன்னியல்பின், தன்னெழுச்சியின் வெளிப்பாடாகும்.
தன்னியல்பு மற்றும் பிரக்ஞை ஆகியவற்றிற்கு இடையிலான உறவென்பது இயங்கியல்ரீதியானது. பிரக்ஞை என்பது தாம் பற்றியும், தமது சூழல் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனையுடன், திட்டவட்டமான இலக்குகளை வகுத்து, அவற்றை அடைவதற்கான மூலோபாயம் – தந்திரோபயம் அடிப்படையில், சரியான சக்திகளை அணிதிரட்டி அவர்களது போராட்டத்திற்க தலைமை தாங்குவதைக் குறிக்கிறது. இதற்கு மாறாக, தன்னியல்பு என்பது இந்த வகையான ஆளமான பார்வை, திட்டமிடல், மற்றும் தயாரிப்பு போன்றவை இன்றி, தமக்கு கண்முன்னே தெரிகின்ற இலக்குகளுக்கு எதிராக, தொட்டுணரத்தக்க விளைவுகளை நோக்கி, இங்கேயே, இப்போதே, இப்படியே என்றவகையில் செயட்படுகிறது. முறையான தயாரிப்புக்களோ, அல்லது சரியான திட்டமிடலோ இன்மையானல் தன்னியல்பான போராட்டங்கள் அடிக்கடி நெருக்கடிக்குள்ளாகின்றன. போராட்டத்தில் ஏற்படும் தவறுகளை மதிப்பிடுவதற்கும், பரிசீலனை செய்வதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. சுக்கான் இல்லாத, திசையறி கருவியல்லாத படகுபோல எப்போதும் முன்னோக்கிச் செல்வதான ஒரு தோற்றப்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது தான் சொல்லிக் கொண்ட இலக்கை அடைவது மிகவும் அறிதானது. முப்பது வருட போராட்டத்தில் புலிகளது முடிவு அதனை தெளிவாக காட்டுகிறது.
நாம் முன்னரே பார்த்தவாறு தன்னியல்பிற்கும் பிரக்ஞைக்கும் இடையிலான உறவானது இயங்கியல்ரீதியானது என்றான பின்னர், தன்னில்பையும், பிரக்ஞையையும் ஒன்றிற்கு ஒன்று எதிரானதாக காட்டுவது அபத்தமானது. மக்கள் மிகப்பெரும்பாலன சந்தர்ப்பங்களில் தன்னியல்பாகத்தான் செயற்படுகிறார்கள். சாதாரண மக்களது அன்றாட வாழ்வியல் சுமைகளும், அவர்கள் மீது ஆதிக்க சித்தாந்தங்கள் செலுத்தும் ஆதிக்கமும் இந்த நிலைமையைக் கடந்து முன்னேற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் தலைமை என்பது வழிகாட்டுதல் என்று அர்த்தப்படும். இது கட்டாயமாக பிரக்ஞைபூர்வமானதாக அமைந்திருப்பது அவசியமானது. தான் எங்கே செல்கிறேன் என்பதை சரிவர தெரிந்தவரினால் எடுத்தவருக்க வழிகாட்டுதல் சாத்தியமாகும்.
இங்கு காணப்படும் ஒரு முக்கியமான முரண்உண்மை (paradox) யாதெனில், தலைமையானது, தனது குறிப்பான வர்க்க நிலைமை மற்றும் புரட்சியின் நெருக்கடியான நிலைமைகள் காரணமாக, தவிர்க்க முடியாதவாறு யதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்படும் நிலைமை ஏற்படுகிறது. மாறாக, மக்கள், தமது அன்றாடமான, மிகவும் அற்பமான சாதாரண விடயங்களில் மூழ்கிப் போகும் சமயங்களில் கூட சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு, அதனை அதன் அத்தனை அன்றாட சின்னத்தனங்களுடனும் முகம் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்கள் தலையைவிட யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் பிரக்ஞைபூர்வமான தலைமையானது சில சமயங்களில் கண்டறியத் தவறும் பல விடயங்கள் இந்த சாமாண்யர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. இதன் பிரச்சனைகளுக்கான தீர்வுகளுங்கூட, இந்த மக்களிடம் இருந்து தன்னியல்பாக வெளிப்படுகிறது.
உதாரணமாக, பிரெஞ்சுப் புரட்சியின்போது அதன் தலைவர்களது அக்கறையானது ஆரம்பத்தில் ஒரு வரம்பிற்குட்பட்ட முடியாட்சியை அமைப்பது என்பதைத் தாண்டியதாக இருக்கவில்லை. ஆனால் பாரிஸ் மக்களது தன்னியல்பான செயற்பாடுகள் நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டது. உதாரணமாக, பாஸ்டீல் சிறையுடைப்பு, பிரெஞ்சு மன்னன் லூயியை வெர்சேயிலிருந்து பாரிசிற்கு அழைத்து வந்தது, கிராமப்புறங்களில் நடைபெற்ற பிரபுக்களுக்கு எதிரான போராட்டம் என்பன தவிர்க்கமுடியாதவாறு புரட்சியின் தலைவர்களை குடியரசை பிரகடனப்படுத்தும்படி நிர்ப்பந்தித்தது. அவ்வாறே ரஷ்ய புரட்சியிலும் தொழிலார் மற்றும் படைவீரர்களது சோவியத் அமைப்பும் இவ்வாறு தன்னியல்பாக தோன்றியதே. போல்சேவிக் கட்சியானது இந்த தன்னியல்பான எழுச்சியை பற்றிக்கொண்டு அதற்கு வழிகாட்டி தலைமை தாங்கினார்கள். இப்படியாக தன்னியல்பான மக்களது போராட்டங்களில் இருந்து கற்றுக்கொள்வதும், அவற்றில் கலந்து கொள்வதன் மூலமாக படிப்படியாக அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு போதமூட்டி, வழிகாட்டுவதன் மூலமாக மக்களது பிரக்ஞை மட்டத்தை உயர்த்துவதுமே புரட்சியாளர்களது கடமையாகும். உண்மையில் மக்களது மாபெரும் சக்தியை தட்டியெழுப்பி, அதற்கு தலைமை தாங்குவதன் மூலமாகவே புரட்சியாளர்கள் தம்முன்னுள்ள மாபெரும் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
மாறாக எமது போராட்டத்தில் புலிகள் அமைப்பானது மக்களை அணிதிரட்ட முயலாதது மட்டுமல்ல, மாறாக மக்களது தன்னியல்பான போராட்டங்களை முற்றாக நசுக்கினார்கள். ஒரு கட்டத்தில் மக்களது பேச்சு சுதந்திரத்தை அங்கீகரிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது என்று அதன் தலைவர்கள் பகிரங்கமாகவே குறிப்பிட்டனர். உண்மையில் அதுவேதான் இறுதியில் நடந்து முடிந்தது. முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மாபெரும் தற்கொலைதான்.
இலக்கும் வழிமுறையும்
போராட்டம் தொடர்பான ஒரு முழுமையான பார்வையின்றி முன்னெடுக்கப்படும் புலிகளது போராட்டமானது ஒரு கட்ட்தில் தனது இலக்கிற்கும், அதனை அடைவதற்கான வழிமுறைக்கும் இடையில் வேறுபாடுகளை காணத்தவறிவிடுகிறது. தமிழ் மக்கள் தமது தேசிய ஒடுக்குமுறையில் இருந்து விடுவித்துக்கொள்வது என்பதே போராட்ட்தின் இலக்காக அமைகிறது. அந்த இலக்குதான் தமிழீழ அரசை அமைப்பதாக வரையறுக்கப்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றே ஆயுத போராட்டமாகும். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே புலிகள் அமைப்பானது உருவாக்கப்படுகிறது. ஆனால் படிப்படியாக அமைப்பு, அதன் பாதுகாப்பு என்பன முக்கியப்படுத்தப்படத் தொடங்குகிறது. இறுதியில் இது மக்களை பலிகொடுத்தாவது அமைப்பையும், அதன் தலைமையையும் பாதுகாப்பது என்பதாக மாறிவிடுகிறது. இதன் போக்குகள் ஆரம்பத்திலேயே தென்படத் தொடங்குகின்றன. சகபோராளிகளது ஜனநாயக உரிமைகள், கருத்துச் சுதந்திரங்கள் அமைப்பை பாதுகாப்பது என்ற பெயரால் மறுக்கப்படுகின்றன. இந்த போக்கின் மிகவும் வளர்ந்த போக்குத்தான் மக்களை பலிகொடுத்து அமைப்பை பாதுகாக்க முனைந்தததை முள்ளிவாய்காலில் காண்கிறோம்.
உட்கட்சிப் போராட்டமும், அதில் வெளிப்பட்ட போக்குகளும்
இயக்கத்தினுள் தலைமையினது தன்னிச்சையான போக்குகளுக்கு எதிராக தொடங்கிய சாதாரண முனுமுனுப்புகள், பின்னர் மார்க்சியத்தின் அறிமுகத்துடன் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட உட்கட்சிப் போராட்டமாக உருப்பெருகிறது என்பதை ஐயர் சிறப்பாக விளக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக பெரும்பான்மையானது இயக்கத்தின் போராட்ட வழிமுறைகள் தொடர்பான பிரச்சனைகளில் தீவிரமாக கவனத்தைக் குவிக்கும்போது, சில தனிநபர்கள் அதனை வெறுமனே தலைமை பற்றிய பிரச்சனையாக குறுக்குவதும், இந்த பார்வை உண்மையான போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதும் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுந்தரம், மாறன், மனோ மாஸ்டர் போன்றோர் தத்தமது வீரப் பிரதாபங்களை பிரகடனப்படுத்த முயற்சிப்பது எவ்வாறு ஆரம்ப அணிசேர்க்கைகளை மாற்றியமைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் புதியபாதை குழுவினருடன் செயற்பட்ட சுந்தரம், கண்ணன் ஆகியோர் உமா மகேஸ்வரன், சந்ததியார் போன்றோரை உள்வாங்கியதில் காட்டும் அவசரம், தன்னிச்சை போக்கும், பின்னர் கழகத்தின் மத்திய குழுவானது, போராட்டம் தொடர்பாக அரசியலையும், இராணுவ செயற்பாடுகளையும் ஒருங்கே முன்னெடுப்பது என்ற முடிவும், கழகத்தின் மத்திய குழுவிற்கு தெரியாமலேயே இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காட்டும் தீவிரமும், புதிய அமைப்பினுள் புலிகள் அமைப்பில் நேர்மையாக போராடிய முற்போக்கு சக்திகளது நோக்கங்கள் அடிபட்டுப் போவதைக் காட்டுகிறது. கழகத்தின் பிற்கால வளர்ச்சியானது அதனை அப்படியே வெளிப்படுத்தியது.
உண்மையில் புதியபாதை குழுவினர் தம்முன்னிருந்த கோட்பாட்டு, அரசியல் மற்றும் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு கோட்பாட்டு மட்டத்தில் இயன்றவரையில் தீர்வுகாண முயன்றிருக்க வேண்டும். இதுவொரு மாபெரும் பணியாகும். இதனை எடுத்த எடுப்பிலேயே முழுமையாகவும், திருப்தியாகவும் தீர்த்திருக்க முடியாது என்பது உண்மையே என்றபோதிலும், இவற்றை தீர்வு காண்பது தொடர்பான அக்கறைகளும், அதற்கு அமைப்பு வழங்கும் முக்கியத்துவமும் சற்று காலம் கடந்தாவது இந்த நோக்த்தை நிறைவு செய்ய உதவியிருக்கும். ஆனால் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகள் முதன்மை பெறுவது, மற்றும் சுந்தரம் தன்னிச்சையாக உமா மகேஸ்வரன், சந்ததியார் போன்றோரை உள்வாங்குவதில் காட்டும் அவசரம் போன்றவை இந்த வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகிறது. இதனால் புலிகள் அமைப்பினுள் உட்கட்சிப் போராட்டத்தை உளசுத்தியுடன் முனனெடுபித்தவர்கள் கழகத்தில் இருந்து ஒதுங்கி வெளியேறுகிறார்கள். இவர்களது முடிவு சரியானதே என்பதை பின்னர் வரலாறு நிரூபித்ததை நாம் காண்கிறோம்.
விடுபட்ட சில விடயங்கள்
இந்த நூலில் விடுபட்டுப் போன ஒரு விடயமாக நான் பார்த்த அம்சத்தை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். சந்ததியாருக்க மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரபாகரன் முன்மொழியும் கட்டத்தை ஐயர் குறிப்பிடும் போது அந்த முன்மொழிவுக்கும், அதுவரையில் சொல்லப்பட்டு வந்த கதையோட்டத்திற்கும் இடையில் ஒரு இடைவெளியிருப்பதை வாசிப்பவர்கள் கவனித்திருக்க முடியும். சந்ததியார் வெறுமனே உமா மகேஸ்வரனின் ஆதரவாளர் என்ற காரணத்திற்காக பிரபாகரன் அவருக்க மரண தண்டனை விதிக்க வேண்டும் என முன்மொழிவதான ஒரு தோற்றப்பாடு இங்கு உருவாகிறது. ஆனால் சந்ததியாருக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான முரண்பாட்டிற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. ஐயர் இதனை நேரில் பார்க்கவில்லை. ஆனால் அறிந்திருந்தார். ஆனால் எவ்வாறோ அது தவறி விட்டுள்ளது. ஆதலால் அதனை இங்கு குறிப்பிடுவது அவசியமானது என்று நினைக்கிறேன்.
இளைஞர் பேரவை சார்பாக புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சந்ததியார் இந்தியாவுக்கு சென்று சிலகாலம் அங்கு புலிகளது வீட்டிலேயே தங்கியிருக்கிறார். அப்போது இந்தியாவில் தங்கியிருந்த புலிகளது அங்கத்தவர்களில் பலர் போதியளவு அரசியல் விழிப்புணர்வு இன்றி இருப்பதைப் பார்த்துவிட்டு, புலிகளது அங்கத்தவர்களுக்கு சந்ததியார் ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து முன்வைக்கிறார். இதில் இருந்த கேள்விகள் எல்லாம் சாதரணமான அரசியல் விவகாரங்கள் பற்றியவையே. உதாரணமாக நாம் ஏன் போராடுகிறோம்? எமது இலக்குகள் என்ன? அதனை எவ்வாறு அடையப்போகிறோம்? அடையப்போகும் ஈழத்தில் நாம் தமிழர் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் எவ்வாறு தீர்வு காணப்போகிறோம்? என்பது போன்ற அடிப்படையான கேள்விகளாகவே
இந்த கேள்விகளும் இது தொடர்பான கருத்தாடல்களும் புலிகளது வீட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. பிரபாகரன் இந்திய சென்றபோது இந்த சலசலப்பை பார்த்து, அமைப்பினுள் தேவையில்லாத குழப்பங்களை சந்ததியார் ஏற்படுத்துவதாக கடிந்து கொள்கிறார். இந்த பிரச்சனையுடன் கூடவே உமா மகேஸ்வரனது பிரச்சனையும் சேர்ந்துவிடவே அது அவர் மீதான மரண தண்டனை முன்மொழிவாக மாறுகிறது.
அடுத்த ஒரு பிரச்சனை புலிகள் அமைப்பினுள் தோன்றிய உட்கட்சிப் போராட்டத்தில் எமது பாத்திரம் குறித்த ஒரு விடயமாகும். 1978 இன் பிற்பகுதியில் திருகோணமலையில் இருந்த பயஸ் மாஸ்டர் என்பவரின் மாணாக்கராக இருந்த இளைஞர்கள் சிலர் ஒரு சிறு குழுவாக செயற்பட்டு வந்தார்கள். பயஸ் மாஸ்டர் மூலமாக இவர்களுக்கு மார்க்சியம் பரிச்சயமானது. அத்தோடு இவர்களது சுயமான தேடல்களுமாக இவர்கள் ஒரு தீவிரமான அரசியல் அக்கறையுள்ள ஒரு குழுவாக உருப்பெற்றார்கள். பிற்காலத்தில் இந்த குழுவானது புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டது. ஆரம்பத்தில் புலிகள் அமைப்பிலிருந்து திருகோணமலைக்கான தொடர்பாளராக குமணன் என்பவரே விளங்கினார். இந்த குமணன் திருகோணமலைக்கு வரும் சமயங்களில் எல்லாம் இந்த குழுவினருடன் கலந்துரையாடல்களை நடத்துவார். பிற்காலத்தில் மனோ மாஸ்டர் இந்த பாத்திரத்தை ஆற்றினார். மனோ மாஸ்டருக்கும் இந்த குழுவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் உருவாகத் தொடங்குகின்றன. குறிப்பாக மனோ மாஸ்டர் தனக்கான விசுவாசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்குவதாக இந்த குழுவினர் கருதியதால் அவருடன் கருத்து மோதல்கள் உருவாகின. பின்னர் இந்த குழுவில் இருந்த பெரும்பான்மையானவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட, சார்ல்ஸ் அன்ரனியும், புலேந்திரனும் மாத்திரமே மனோ மாஸ்டருடன் இணைந்து கொண்டார்கள்.
என்னைப் பொருத்தவரையில் இது என்றே நடந்து முடிந்த ஒரு விடயமாகவே கருதியிருந்தேன். ஆனால் ஐயர் இந்த வரலாற்றை எழுதும்போது புலிகள் அமைப்பினுள் மார்க்சிய நூல்களை வாசிப்பதற்கான ஆர்வம் எவ்வாறு குமணன் ஊடாக வந்தது என்பதை விபரிக்கிறார். இந்த பகுதியை படித்தபோது நான் மிகவும் humbled (இதனை தமிழ் அகராதியானது கர்வநீக்கம் பெருவதாக மொழிபெயர்க்கிறது.) ஆகிப்போனேன். இதனை இப்போது குறிப்பிடுவதுகூட நான் ஏதோ பகட்டாரவாரம் செய்வதற்காக அல்ல. மாறாக, வரலாறு எவ்வாறு எங்களை மதிப்பிடப்போகிறது என்பதை நினைவு படுத்துவதற்காகவேயாகும். நாம் அன்றாடம் செய்யும் காரியங்களின் உண்மையான பெருமதிகளை நாம் அவற்றை செய்யும்போது அறிந்து கொள்வதில்லை. ஒருவேளை அறிந்திருந்தால் அவற்றை நாம் இன்னமும் சிறப்பாகவும், அந்த வரலாற்று பொறுப்புணர்வுடனம் செய்திருக்கலாம் என்று நாம் பிற்காலத்தில் நினைத்துப்பார்க்க நேரும் அல்லவா? அதனால் ஏற்படும் கர்வநீக்கம்தான் இதுவாகும்.
இத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஐயருக்கும எனக்குமான தொடர்பானது சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் வாய்ந்ததாகும். இந்த காலகட்டத்தில் நாம் பல்வேறு நிலைமைகளில் ஒருவரையொருவர் எதிர்கொண்டுள்ளோம். நான் புலிகள் அமைப்புடன் இணைந்தபோது அவர் பொரறுப்பில் இருந்தார் நான் சாதாரண அங்கத்தவனாக இணைந்து கொண்டேன். பின்னர் நாம் கழகத்தில் இணைந்தபோது அவர் ஏற்கனவே வெளியேறியிருந்தார். பின்னர் சென்னையில் அவரை சந்தித்தபோது நான் கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தேன். அவர் சாதாரணமாக ஒரு சிவிலியனாக இருந்தார். பின்னர் கழகத்தில் இருந்து வெளியேறியபோது அவர் NLFT யில் இருந்தார். எமக்கு அடைக்கலம் தந்து பாதுகாத்தார். இன்னும் நான்கு வருடத்தின் பின்னர் அவர் எம்மைத் தேடிவந்தபோது நாம் தலைமறைவு அமைப்பாக இருந்தோம். அவர் NLFT யை விட்டு வெளியேறியிருந்தார். எம்மை சந்தித்தபோது எம்மோடு இணைந்துகொண்டார். பின்னர் தீப்பொறி அமைப்பில் சில வருடங்கள் நெருக்கமாக பணியாற்றினோம். இப்போது கடந்த பதினான்கு வருடங்களாக அவருடன் எந்த தொடர்பும் கிடையாது. பரஸ்பரம் செய்திகள் பரிமாறப்படுகின்றன. ஏனோ பேசிக்கொள்ளவில்லை. இப்போது அவரது நூலுக்கு நான் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறேன். இதனை இவ்வளவு விபரமாக நான் குறிப்பிடுவதற்கு ஒரு குறிப்பான காரணம் இருக்கிறது. அதாவது எமது தேசம், அதிலும் உள்ள முற்போக்கு வட்டாரம் என்பது மிகவும் சிறியது. நாம் எவ்வளவுதான் தவிர்க்க விரும்பினாலுங்கூட, முற்போக்கு சிந்தனை உடையவர்கள் ஒருவரை ஒருவர் தவிர்க்கமுடியாமல் சந்தித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஆகவே அன்று ஒருவர் இருக்கும் பலமான அல்லது பலவீனமான நிலைமைகளை நிலையானதான நினைத்துக்கொண்டு அடுத்தவரை ஏறி உழக்காமல் நிதானமாக நடந்துகொள்வது நல்லது. ஏனென்றால் நாளை யார் யாரை, எப்படிப்பட்ட நிலையில் நாம் முகம்கொடுக்க நேரும் என்பதை யாருமே முன்னனுமானிப்பது என்பது முடியாத காரியமாகும். ஆகவே எப்போதும் செருக்கில்லாமல் இருப்து நல்லது.
உதிரிக்கூறுகளின் பாத்திரம் குறித்து…
இந்த நூலில் அடிக்கடி கள்ளக்கடத்தல் பற்றிய பிரச்சனைகள் வந்து போகின்றன. அதனை ஒருதடவை தொட்டுச் செல்வது அவசியமானது என்று நினைக்கிறேன். இது ஒட்டுமொத்தத்தில் புரட்சியில் உதிரிப்பாட்டாளிகளின் பாத்திரம் குறித்த பிரச்சனையாகவும் பார்க்கப்பட வேண்டிதொன்றாகவே நான் கருதுகிறேன். எமது போரட்டத்தில் உரும்பிராயும், வல்வெட்டித்துறையும் வகித்த பாத்திரம் கவனிக்கத்தக்கது. தேசிய அலையானது இந்த பகுதிகளை எட்டியபோது வன்முறை வடிவத்தை எடுத்தது. சமூகத்தில் விழிம்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் பிரிவினர், நடப்பில் உள்ள சமூக ஒழுங்கமைவிற்கு வெளியில், அதன் அதிகாரத்தை எதிர்த்து செயற்பட நேர்கிறது. அதிகாரத்திற்கு எதிராக நேரடியான மோதல்களில் ஈடுபடும் இவர்களிடம் உள்ள போர்க்குணாம்சமும், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தலைமறைவு வாழ்க்கை போன்றவற்றடனான தொடர்புகளும் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் மிகவும் அவசியமான அம்சங்களை அதற்கு வழங்குகிறது. ஆனால் எமது சமூகத்தில் உள்ள மத்தியதர வர்க்க மனோபாவம் காரணமாக நாம் இந்த சக்திகள் பற்றி பேசும்போது ஒருவித “சட்டவாதம்” பேசுகிறோம். இந்த விதத்தில் நாம் அதிகாரத்தில் இருப்பவர்களை விட சட்டவாதத்திற்கு மிகவும் விசுவாசமானவர்களாக நடந்துகொள்கிறோம் அல்லவா? “கள்ளக் கடத்தல்” “கசிப்பு காய்ச்சுவது” என்பவை உண்மையில் அரசாங்கத்தின் வரிவிதிக்கும் ஏகபோக உரிமையை மீறுவதுதானே? இதில் இத்தனை தூய்மைவாதம் பேசுவது எமது வர்க்க மிச்ச சொச்சங்களின் அடையாளமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்றாகவே நான் கருதுகிறேன்.
இப்போதுங்கூட சிலர் கேபியை பற்றி குறிப்பிடும்போது அவர் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டவர் என்று குற்றஞ்சாட்டும் தொனியில் குறிப்பிடுவதை காண்கையில் சிரிப்புத்தான் ஏற்படுகிறது. இவர்கள் குறிப்பிடும் ‘துப்பாக்கிக் குழலில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்பது வாசகம் உண்மையானால், அந்த துப்பாக்கிகளை ஏதாவது ஐநா அமைப்பில் சட்டரீதியாக அல்லது இலவசமாக பெறலாமா என்று சம்பந்தப்பட்டவர்கள் விசாரித்துக் கூறினால் எதிர்காலத்தில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கலாம் அல்லவா?
கோழைத்தனம் பற்றிய பிரச்சனை குறித்து…
ஐயர் இந்த நூலில் ஒரு இடத்தில் “கருத்துக்களைக் கண்டு பயப்படும் கோழைகளாக இருப்பதாக” பிரபாகரனை விமர்சிக்கின்றார். இது தொடர்பாக பார்வையாளர்கள் எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். சாதாரணமாக புலிகளின் அரசியலுடன் அறவே உடன்பாடு இல்லாதவர்கள் கூட புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஒரு வீரனாகமே மதிப்பார்கள். முள்ளிவாய்க்காலில் நடைபெற்றதாக கூறப்படும் சரணடைவு பற்றிய விடயங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் புலிகள் வன்முறையைக் கண்டு பயந்தது கிடையாது. எவ்வளவு பெரிய சக்தியானாலும் அதனுடன் மோதித்தான் வாழ்ந்தார்களேயொழிய சரணடைந்து பாதம்தாங்கி வாழவில்லை. இதனை வைத்து மாத்திரம் இவர்களை வீரர்கள் என்று கூறிவிட முடியுமா? அப்படியானால் இவர்கள் மாற்றுக் கருத்துடையவர்களை அழித்தது ஏன்? அவர்களது கருத்துக்களைக் கண்டு பயந்ததனால்தானே? என்றும் நாம் வாதிடலாம். பாம்பு கடிப்பது பயத்தினால்தான் என்பது எமது பழமொழி அல்லவா? இங்கே ஐயர் சொல்லும் கோழை என்ற கருத்து சரியாகத்தான் அமைகிறது. மாறாக, கருத்துப் போராட்டங்களைக் கண்டு சிறிதும் பயப்படாத சிலர் யுத்த களதில் முதலாவ வெடி தீர்க்கு முன்னரே பயந்தோடிய கதையும் எமக்குத் தெரியும்தானே?
அப்படியானால் வீரம், கோழை போன்ற பதங்களை நாம் ஒற்றைப் பரிமாணத்தில் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
முடிவாக…
முடிவாக…
ஐயரது முயற்சி மிகவும் சிரப்பானது. இதனை ஒரு தொடராக அவர் எழுதியபோது தவிர்க்க முடியாதவாறு வரும் கூறியது கூறல்களை, இதனை நூலாக்கம் செய்யும் போது கட்டாயமாக தவிர்த்திருக்க வேண்டும். இது வலிந்து திணிக்கப்பட்டது போல நூலில் துருத்திக் கொண்டு நிற்கிறது. இதனை அடுத்த பதிப்புக்களிலாவது கட்டாயம் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன். இதனை தொடராக வெளியிட்டதிலும், நூலாக்கம் செய்வதிலும் ‘இனியொரு” வலைத்தளம் வகித்த பாத்திரம் பாராட்டுக்குரியது. அவர்கள் மேலும் இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அத்துடன் இன்னும் பல போராளிகளும் தமது அனுபவங்களை வெளிக்கொணர்வதன் மூலமாக இந்த முயற்சியை தொடர்வது அவசியமானது என்று கேட்டு எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.
லண்டனில் கணேசன் (ஐயர்) எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீடு : 10.03.12 சனி 4 மணிக்கு
வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்துவோர்:
– தினேஷ் – ஊடகவியலாளர் – ஜீ.ரி.வி.
– சத்தியசீலன் – தலைவர் தமிழ் மாணவர் பேரவை.
– சத்தியசீலன் – தலைவர் தமிழ் மாணவர் பேரவை.
– பிரசாத் – அரசியல் விமர்சகர்
– தயானந்தா – ஊடகவியலாளர்
– இந்திரன் சின்னையா -மனித உரிமைச் செயற்பாட்டாளர்(நெதர்லாந்து)
– பாலன் -புதிய திசைகள்.
– சபா நாவலன் -பதிப்பாளர்கள் சார்பில்
– சஷீவன் – நூலகம்
– பி.ஏ.காதர் – சமூக அரசியல் ஆய்வாளர்.
நூலாசிரியர் ஐயர் ஸ்கைப் இன் ஊடாகக் கலந்துகொள்வார்.
காலம்: 10:03:2012 (சனி)
நேரம் : மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை
இடம் : Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ (நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்)
(உரையாடலிலும் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொள்வோர் முன்கூட்டியே அறியத்தந்தால் இரவு உணவு ஒழுங்குபடுத்தலுக்கு வசதியானதாக அமையும்.)
தொடர்புகள் : inioru@gmail.com
அனைவரும் நட்புடன் அழைக்கப்படுகின்றனர்
தொடர்புகள் : inioru@gmail.com
அனைவரும் நட்புடன் அழைக்கப்படுகின்றனர்
தொடர்புடைய பதிவுகள் :
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (6) -ரெலோவில் இணைந்துகொள்ளும் பிரபாகரன்
ஒபரோய் தேவனின் நாட் குறிப்பிலிருந்து என்ற அச்சுப் பதிவு அவரின் மறைவிற்குப் பின்னர் 80 களின் ஆரம்பத்தில் அவரது இயக்கத்தினரால் வெளியிடப்பட்டது. அவர் தனது நாட்குறிப்பில் எழுதியவற்றை திருத்தங்கள் எதுவுமின்றி அச்சுப் பதிவாக குறைந்த எண்ணிக்கையில் ஆர்வமுள்ளவர்களின் வாசிப்பிற்காக வழங்கினர். இயக்கங்களை இந்திய அரசு கையாள ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலப்பகுதியில் பதியப்பட்ட இத்தரவுகள் விடுதலை இயக்கங்களின் தோற்றுவாய் குறித்த பொதுவான தகவல்களைத் தருகின்றது. ரெலா(TELA) இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராகத் திகழ்ந்த ஒபரோய் தேவன் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆயுதப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப காலம் மக்களை அணிதிரட்டுவதிலிருந்தோ, ஆயுதப் போராட்டத்திற்கு புரட்சிகர மக்கள் பிரிவுகளை ஆதார சக்திகளாக இணைத்துக் கொள்வதிலிருந்தோ ஆரம்பிக்கவில்லை. தனி நபர் படுகொலைகள், இலங்கை அரச பெரும்பான்மைக் கட்சிகளை அழித்தல் போன்ற தனி நபர் இராணுவ வன்முறைகளிலிருந்தே ஆரம்பமானது. ஒரு புறத்தில் பலமான மக்கள் அணிகளைக் கொண்டிருந்த கம்யூனிச இயக்கங்கள் தேசிய விடுதலைப் போராட்டம், தேசிய இன முரண்பாடு குறித்து கோட்பாட்டுரீதியான தவறான முடிவுகளை முன்வைத்து போராட்டத்திலிருந்து அன்னியப்பட்டிருந்தன. உணர்ச்சிவயப்பட்ட சாகசவாத இளைஞர் குழாமின் தன்னிச்சையான தாக்குதல்கள் மக்களைப் பார்வையாளர்களாக்கியது. போராடப் பயிற்றுவிக்கப்பட வேண்டிய மக்கள் வேடிக்கை பார்க்கப் பழக்க்கப்படுத்தப்பட்டனர். மக்கள் பலத்தில் தங்கியிருக்க வேண்டிய இயக்கங்கள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த காலம் இது. ஒபரோய் தேவனின் நாட்குறிப்பு ஒளிவு மறைவற்ற வரலாற்று ஆவணம்.
மகேஸ்வரன் என்னும் இளைஞர் 1972 இல் இங்கிலாந்து சென்று பிரபல்ய வளாகத்தில் பொறியியலாளராக 2 வருடத் தேர்ச்சி பெற்று இறுதியில் நாட்டு விடுதலையே எனப் போராட நாட்டிற்கு வந்தார். பனாகொடை, மட்டக்களப்பு ஆகிய சிறைகளிலிருந்து தைரியமாகத் தப்பி வரலாறு படைத்தார்.
தமிழ் ஈழம் விதலை அடைய வேண்டும் என்பதில் மிக உறுதியாயிருந்தார்.குலசிங்கம் போல் வேகமாக செயற்பட வேண்டுமெனும் எண்ணம் கொண்டவர். நான் வாங்கிக் கொடுத்த கருவிகளோடு செயலில் இறங்கி அரசால் கைது செய்யப்பட்டு இன்றும் மீண்டும் கைதாகி பனா கொடை இராணுவ முகாமில் காவலில் உள்ளார், அவரோடு சேர்ந்து ஜவர் அதே முகாமில் காவலில் உள்ளனர்.இவர் எந்த ஒரு இயக்கத்தோடும் சேர்ந்து கட்டுப்பாட்டோடு இயங்காததாலேயே மிகக் குறிய காலத்தில் கைது செய்யப்பட்டார், தொடர்ந்து 2 வருடங்கள் சிறையில் இருப்பதால் அவர் சிறிது மனத் தளர்வடைந்திருப்பதாக தெரிகிறது.
அரசு தற்போது தமிழ் ஈழப் புரட்சியாளர்களை நசுக்க பல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இப்போது தமிழீத்தில் உள்ள சூழ்நிலையைச் சரியாக ஆராய்ந்து செயலில் இறங்குவது விவேகமில்லை என நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் அதைக் கேட்கவில்லை.
1980 ஆம் ஆண்டு கொழும்பு சட்டக் கல்லூரியில் தமிழ் மன்ற இயக்குனர் குழு தேர்தல் நடந்தது. அதில் ஜ.தே.க. கூட்டணி என இருகோஸ்டிகளாகப் தமிழ் மாணவர் பிரிந்து தேர்தலில் நின்றனர். த. கூட்டணி சார்பில் நின்ற தலைவர் எனது நண்பர். எம் அமைப்பில் உறுப்பினராகைருந்தவர். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். தோத்ததும் பத்தாதென ஜ.தே. க. ஆதரவு இளைஞர்களால் (குடிபோதையில்) தாக்கப்பட்டார். அந்நண்பர் தேர்தல் முடிவு வெளியாகும் போது ஏதும் பிரச்சினைகள் வரலாமென என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அதனால் நான் வேறு நான்கு தோழர்களோடு பிரச்சனை வந்தால் சமாளிக்கும் ஆயத்துடனே அங்கு செய்ன்றேன்.
எதிபார்த்தபடி தாக்குதல் நடக்கையில் நான் எவ்வளோ எடுத்துச் சொல்லியும் ஜ.தே. க. செவி சாய்க்காத்தால் நாம் எம்மிடருந்த கருவிகளைக் கையிலேந்தி களத்தில் இறங்கினோம். ஏறத்தாழ 40 பேரோடு 4 பேர் நாம் போராடினோம்.
அவர்கள் தரப்பில் மூவர் கத்திக் குத்துக்கு ஆளாகினர். அவ்வளவுதான். இரத்தத்தைக் கண்டதும் அத்தனை பேரும் மாயமாய் மறைந்தனர் . அதிலிருந்து சட்டக் கல்லூரியில் அரசியல்ரீதியாக தமிழ் மன்றம் என்ன முடிவெடுத்தாலும் நான் முறுக்கிட்டு வேறு கருத்தைக் கூறினால் பெரும்பாலனவர்கள் அதை ஏற்றுக் கொள்வர். சட்டமன்ற (தமிழ்) விழாக்களுக்கும், தமிழ்மன்ற கூட்டங்களுக்கும் நான் அழைக்கப்பட்டேன். அங்கு படிக்கும் யாழ் மாணவர்கள் பலருக்கு நான் விடுதலை இயக்கத்தோடு தொடர்புள்ளவன், எனத் தெரியுமாதலாலேஎயே எனக்கு அழைப்பு கிடைத்தது.
அவ்றோ விமானம் விடுதலை இயக்கத்தினரால் தாக்கப்பட்டதும் கொழும்பில் பதட்டநிலை ஏற்பட்டது. வெள்ளவத்தை. வத்தளை,ஜாஎல, இரத்மலானையில் அங்காங்கே தமிழர் வீடுகள் தாக்குதலுக்குள்ளாகின. அப்போ எனது இயக்க உறுப்பினரோடும் வேறு தமிழ் இளைஞர்களையும் சேர்த்து பல முக்கிய எமக்கு ஆதரவாளர் வீடுகளில் சில நாட்கள் முழு இரவும் நித்திரை இல்லாது ஆயுதபாணியாக காவல் காத்தோம்.
இப்படியிருகையில் நவம்பர் மாதமளவில் சிறி,குட்டிமணி ஆகியோர் யாழ் வந்தனர். தாம் பல திட்டங்களோடு வந்திருப்பதால் பிரச்சாரம் ,உறுப்பினர் சேர்த்தல் ஆகிய வேலைகளை விட்டு. தரும் வேலைகளைச் செய்யச்சொன்னார்கள். தை மாதம் தங்கண்ணாவும் வந்துசேர்ந்தார். அந்நாட்களில் செட்டி சுதந்திரமாக உலாவுவதை அறிந்து( அரசிற்கு தகவல்கொடுப்பவர் , தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவராக இருந்தார்) 18- 3- 81 அன்று அவரை கல்வியங்காடு சந்தையில் வைத்து சுட்டுக் கொன்றோம்.
அடுத்து முழு இலங்கையையே கலக்கிய, முழு இலங்கையையே அதிசயிக்க வைத்த, தமிழ் இளைஞர்களால் இப்படியும் செய்ய முடியுமா என தமிழ் ஈழ மக்களைத் திகைக்க வைத்த (82 இலட்சத்தொகை) 25 – 3- 81 அன்று நீர்வேலி வங்கிக் கொள்ளையை நடத்தினோம்.(வழக்கு தற்போது நடப்பதால் பாதுகாப்பை முன்னிட்டு அதை விவரிக்க விரும்பவில்லை).
இந்நாட்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பிளவுகள் , தனிப்பட்ட பூசல்கள் காரணமாக ) கலைக்கப்பட்டு அதை வழிநடத்திய பிரபாகரன் எம்மோடு வந்து சேர்ந்தார். அவர் எமது இயக்க தலைவரோடு என்ன என்ன பேசினார் என்பதை இயக்க உறுப்பினர் அனைவரும் அறிவர்.
அண்ணா! நான் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டேன் . நீங்கள் என்னை உங்களோடு சேர்த்து இயங்க அனுமதிக்கா விட்டால் நான் தற்கொலை செய்வேன். நான் ஒரு சாதாரண உறுப்பினராகவேஇருந்து செயல்பட விரும்புகிறேன்,நான் மீண்டும் எனது தாய் இயக்கத்திலேயே சேர விரும்புகிறேன் எனக்கூறியே எம்மோடு வந்து சேர்ந்தார். அவர் எமது இயக்கத்தில் சேர்க்கப்படுவதை சிறி, இராசுப்பிள்ளை ஆகியோர் வன்மையாக எதிர்த்தனர். ஆனால் இறுதியில் தலைவரின் முடிவிற்கு கட்டுப்பட்டு அவர்கள் இம்முடிவை ஏற்றனர்.
11.08.1982
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – ஐயரின் நேர்காணல்
இனியொருவில் விடுதலைப் புலிகளின் முன்பகுதி வரலாற்றை எழுதிய ஐயரின் பதிவுசெய்யப்பட்ட நேர்காணலின் முதலாவது பகுதி இங்கு தரப்படுகிறது. சில நாட்களின் முன்னர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐயர், இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை தேறி வருகிறார். மிகவும் நேர்மையாக வாழ்ந்த ஐயர் தனக்காக சொத்துக்களை வைத்திருந்ததில்லை. தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய இனம் சார்ந்த விடுதலைப் போராட்டத்தில் உங்களின் ஈடுபாட்டிற்கு அடிப்படையாக அமைந்த காரணங்கள் என்ன?
நான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன். ஐயர் என்ற எனது பெயர் கூட அதன் அடிப்படையிலேயே அனைவராலும் அறியப்பட்டிருந்தது. சிறு வயதில் எனது பள்ளிப்பருவ நண்பர்களில் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே அமைந்திருந்தனர். இது குறித்துப் எனது குடும்பம் சார்ந்தவர்கள் பல தடவை என்னைக் கண்டித்திருந்தனர். அவை ஏன் எனது நட்பைக் கண்டிக்கிறார்கள் என்பது எனக்குப் புதிராகவே பல சந்தர்ப்பங்களில் தென்பட்ட்டது.
பின்னர் நான் கோவிலில் பூஜை செய்வதற்காக நியமிக்கப்பட்டேன். அப்போதெல்லாம் கோவிலுக்கு வருகின்ற தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கொட்டும் மழையில் கூட அர்ச்சனைத் தட்டுகளோடும் பூக்களோடும் பூஜைக்காக கோவிலுக்கு வெளியிலேயே அவர்கள் காத்திருப்பார்கள்.
இந்த அவலம் அவர்களுடனான எனது நெருக்கத்தையும் நட்பையும் ஆழப்படுத்தியது மட்டுமன்றி சமூகத்தின் மீதான கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. சில காலங்களில் இதுவே கடவுள் மறுப்பாக என்ன்னுள் உருவானது.
ஆக, சமூகத்தின் விதி முறைகளுக்கும் வரம்புகளுக்கும் எதிராக உழைக்கும் வலுவை எனக்கு வழங்கியிருந்தது. இதன் மறு பகுதியாகத் தேசிய இன அடக்கு முறை உச்சத்தை அடைந்த வேளையில் நான் சார்ந்த சமூகத்தின் வரம்புகளைக் கடந்து அதற்கு எதிரான போராட்டத்தில் முழுமையாகப் பங்காற்றும் உறுதியை எனக்கு வழங்கியிருந்தது. ஆக, பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பதாகவே எதிர்ப்புப் போராட்டங்களில் பல வகைகளில் பங்களிக்க ஆரம்பித்திருந்தேன்.
பிரபாகரனை முதலில் சந்தித்த போது விடுதலை இயக்கத்தை ஆரம்பிப்பதாகத் தீர்மானித்துவிட்டீர்களா?
பிரபாகரனை ராகவன் தனது தொடர்புகளூடகவே முதலில் அறிமுகம் செய்தார். ராகவன் அப்போது பாடசாலை மாணவன். நாம் போராட்டங்களில் நம்பிக்கை உடையவர்கள் என்ற அடிப்படையிலேயில் தனது தலைமறைவு வாழ்க்கைக்கு உதவி கோரியே அவர் எம்மைச் சந்தித்தார். முதலில் செட்டியுடன் தொடர்புடையவர் என்பதால் அவருக்கு உதவிசெய்ய மறுத்துவிட்டோம்.
பின்னதாக செட்டியுடன் அவர் தொடர்புகளைக் துண்டித்துவிட்டதாகக் கூறியதும் அவருக்கு உதவிசெய்யச் சம்மதம் தெரிவித்தோம். நானும் குலம் என்ற எனது பால்ய நண்பனும் அவரின் தலைமறைவு வாழ்க்கைக்கான உதவிகளைச் செய்து வந்தோம்.
தவிர, அவ்வேளையில் பிரபாகரன் தன்னோடு சார்ந்திருந்த எவருமற்றுத் தனித்திருந்தார். முதலில் பல நாட்கள் சரியாக உணவருந்தாமல் களைப்புற்ற நிலையிலிருந்தார்.
யாழ்ப்பாண மேயர் துரையப்பாவைக் கொலைசெய்திருந்த காரணத்தால் இலங்கை அரச படைகள் எப்போதும் அவரைக் கைது செய்யலாம் என்ற நிலையே காணப்பட்டது. தவிர, மீசை கூட அரும்பாத பதினேழு வயது இளைஞனான பிரபாகரன் இலங்கை அரச படைகளுக்கு எதிராக இன்னும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற துடிப்புடன் காணப்பட்டார்.
இவை அனைத்தும் பிரபாகரன் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் அவர் மீதான அனுதாபத்தையும் மதிப்பையுமே ஏற்படுத்தியிருந்தது.
(இன்னும்வரும்..)
நோர்வேயில் வாசித்தலுக்கான உரையாடல் வெளியில் கணேசன் (ஐயரின்) ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ : நோர்வே நக்கீரா
இனியொருவின் வெளியீட்டான ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஏனும் கணேசன் ஐயரின் நூலில் தான் கடந்துவந்த போராட்டப்பாதையில் தொடர்ந்து வந்த அனுபவங்களையும், மறைந்திருந்த உண்மைகளையும், தவறுகளையும், சுயவிமர்சனமாகயும், பிரபாகனுடன் புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள் பற்றியும் இப்புத்தகத்தினூடு திரும்பிப்பார்க்கிறார்.
உண்மையுடன் கூடிய இப்படியான புத்தகங்கள் வெளிவருவதனூடாக மட்டுமே எமது போராட்டத்தில் விட்டதவறுகளை, மறைந்து கிடக்கும் உண்மைகளை மறுபரிசீலனை செய்துகொண்டு எம்மக்களின் எதிர்காலவாழ்வையோ, போராட்டத்தையோ செப்பனிடமுடியும். இப்புத்தகங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்போதும், வாதம் பிரதிவாதங்களூடும் உண்மைகளைக் கண்டறிவதுடன் புத்தகத்தின் நேர்மைத்தன்மையும் புலனாகும். இன்றும் புலிகள் அமைப்பினுள் என்ன நடந்தது, முள்ளிவாய்கால் எப்படி முடிந்தது என்பன யாருக்கும் புரியாத புதிராகவே இன்றும் இருக்கிறது. இதன் காரணமாகவே இன்று உயிர்த்தெழும் ஜனநாயகப்போராட்டம் சாண் ஏற முளம் சறுக்குவதுபோல் மீண்டும் 1958ல் இருந்து ஆரம்பமாகிறது. காரணங்கள் பலவாக இருந்தாலும் மறைக்கப்பட்ட, தெளிவற்ற புலிகளின் போராட்ட வரலாறு வெறும் இராணுவமாகவே கட்டியெழுப்பப்பட்டது. மாற்றுவழிப்போராட்டம் பற்றிப்பேசியவர்களும் இந்த இராணுவமயமான புலிகளால் பாதிக்கப்பட்டதாலும், தற்காப்பு நோக்கியும் இராணுவத்தையே கட்டி எழுப்பினர். இராணுவமாயை பொய்கள், மிகைப்படுத்தல்களினூடாக வளர்ச்சியும் பெற்று இறுதியில் முற்றாக நிர்மூலமாக்கப்படும் போது மக்களினதும், அரசியல்வாதிகனதும் தன்னம்பிக்கையும், போர்குணமும் அழிக்கப்பட்டது என்பதே தெளிவு. இராணுவமைப்பு மட்டும் கட்டியெடுப்பப்பட்டதன் விளைவை மக்கள் போராட்டம் என்று பிரிந்துவந்தவர்கள் கூட இராணுவத்தைக் கட்டியமைப்பது பற்றியும் ஐயர் சுயவிமர்சனம் செய்து கொள்கிறார்.
புலிசார்ந்த, சாராத அமைப்புக்களின் இப்புத்தகத்தை அறிமுகம் செய்ய முயன்றபோது விடைகள் இல்லாத கேள்விகளுடன், புலிப்புத்தகம் என்றும், புலியை விமர்சிக்கும் புத்தகம் என்றும், குழுக்களின் பதில் தேவை என்ற தட்டிக்களிப்புக்களுமே மீதியாயின. புலிமுத்திரையின் பின்னால் புலியெதிர்ப்பு நடவடிக்கைகளை உணரக்கூடியதாகவும், அன்று தம்மைப்புலிகளாகக் காட்டிக் கொண்டவர்களே இன்று நேரடியாக புலியெதிர்ப்புபாளிகளாகவும், அரசஆதரவாளர்களாக இருப்பதையும் இப்புத்தகவெளியீட்டு முயற்சியின்போது கண்ணுற்றேன். பதிலில்லாக் கேள்விகளாலும், கேள்வியற்ற பதில்களாலும், காரியமறுப்புக்கான மௌனங்களாலும், பயக்கெடுதியாலும், முதுகில் முத்திரை குற்றப்படும் என்ற எண்ணங்களாலும் புத்தகத்தை அறிமுகம் காலதாமதமானது.இதைத்தீர்க்கும் முகமாக ஒருதிறந்த உரையாடல்வெளியை அமைப்பதனூக மட்டுமே முடியும் என்பதை என்நண்பர் சஞ்சயனும் நானும் உணர்ந்தோம். இப்புத்தகம் இதற்கு ஒருவடிகாலாக அமைந்தது மகிழ்ச்சிக்குரியதே.
இதனால் 2.12.2012 ஞாயிற்றுக்கிழமை ஐயரின் புத்தகத்துடன் காலஞ்சென்ற புஸ்பராஜாவின் ஈழவிடுதலைப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள் என்று புத்தகத்தையும், 11.11.2011 நோர்வே அரசால்வெளியிட்ட நோவேயின் அனுரசணைப் பதிவில் தனது பார்வை என்ற பொருளடக்கத்தில் லிமானின் உரையையும், செல்வினின் 13திருத்தப்பற்றி தெளிவான விளக்கவுரையும் நடந்தேறியது. இங்கே ஐயரின் புத்தகவறிமுகம் பற்றிய பதிபை மட்டம் தற்போது பிரதிசெய்கிறேன்.
எனது தொடர்பில் இப்புத்தகத்தை அறிமுகம் செய்பதற்காக ஆயுதப்போராட்டத்தின் பிதாமகனான சத்தியசீலண்ணரும், வெளியீட்டாளரும் இனியொருவின் பிரதம ஆசிரியருமான சபா நாவலனும் நோர்வேக்கு விஜயம் செய்திருந்தார்கள். இப்புத்தகத்தின் முதலில் நான் அறிமுகம் செய்தபோது, வெளியிடுவதற்கான காரணம், போராட்டப்பங்களிப்புப், புத்தம் பற்றிய எனது சிறுபார்வை, முக்கியமாக உயிருடன் இருப்பவர்களின் வாழ்வியல் காரணங்களால் மறைக்கப்பட்ட விடயங்கள்;, இப்படியான புத்தகங்கள் வெளிவரவேண்டிய அவசியம், என்னுடன் தொடர்பான, அறிந்த, செவிமடுத்த விடயங்களில் நான் காணும் உண்மைகளையும், முதலாவது புதியபாதை எழுதும்போது குமணனின் வீட்டில் ஐயரை சந்தித்த விடயங்களையும் குறிப்பிட்டிருந்தேன்.
என்னைத்தொடர்ந்து நாவலன் சபைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஐயரின் உழைப்புப்பற்றியும், போராட்ட குணம்கொண்ட நோவேயியர்கள்;, புரட்சி என்றும் எற்றுமதி செய்யப்பட முடியாது என்றும், போராட்டத்தில் கொலை என்பது தற்காப்பு மட்டுமே என்றும் கூறியிருந்தார்.
நாவலனின் உரையை சிறியவிரிவாக்கம்:
நோவேயியர்கள் போராட்டங்களினூடு வளர்ந்ததால் போர்குணமும், இடதுசாரித்தியப்பண்பியலையும் காணக்கூடியதாக உள்ளதாகவும், ஒரு மக்கள் கூட்டம் அடக்கு முறைக்கு உள்ளாகும் போது அது தனக்கான போராட்டவடிவத்தை தானே தெரிவு செய்யும் என்பதையும், உதாரணமாக உப்பு விலைஉயரும் போது அதற்காக நாம் இங்கு போராடமுடியாது. போராட்டம் ஏற்றுமதி செய்யமுடியாதது என்றும், போராடவேண்டியவர்கள் தேவையுள்ளவர்களே என்பதையும் சுட்டிக்காட்டினார்.
போராட்டங்கள் என்றும் முடிந்துவிடுவதில்லை உதாரணமாக குறுடிஸ் இனத்தவர்களின் ஆயுதப்போராட்டம் அவர்களின் தலைவன் பிடிபட்டதும் அழிந்துவிடவில்லை. அது வேறுமுறையில் புதியவடிவம் பெற்று வெற்றியைக் கண்டுள்ளது. அதேபோல் பாலஸ்தீனப்போராட்டமும் அழிந்துவிடவில்லை. இன்று இலங்கையில் பாதிக்கப்படும் மாணவ, தொழிலாளவர்க்கப் போராட்டங்கள் தெற்கில் முனைப்புக் கொள்வதைக் காணலாம். எமது போராட்டத்தையும், போராட்டவடிவங்களையும் திரும்பிப்பார்த்தல் எமது புதியபோராட்டகளைச் செப்பனிடும் என்பதையும் அறிவுறித்தினார்.
இதனைத்தொடர்ந்து சபையின் கேள்விகள், கருத்துக்கள், பதில்கள் என்பன இடம்பெற்றது. இவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. தொடர்ந்து இடைவேளையின் போது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன ஏறக்குறைய வந்த அனைவருமே வாங்கினார்கள். இதனைத் தொடர்ந்து மாணவர்பேரவை ஸ்தாபகரும் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகர்த்தாவுமான சத்தியசீலன் அவர்கள் தனது போராட்ட அனுபவத்தையும் ஐயரின் புத்தகம் பற்றியும் பேசினார்.
மாணவர்பேரவையிள் தோற்றமும் தேவையும், அதுபற்றிய வெளிவந்த குறிப்புகளாக நெடுமாறன், குப்புசாமி, எஸ் சிவஞானம், தந்தைசெல்வாவின் அரசியல் பற்றி சபாரட்ணம் எழுதிய குறிப்புக்கள், பெரதேனியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞன் அமைப்பு, 1970 தரப்படுத்தலுக்கெதிரான போராட்டம், 23.11.1970 ல் நடைபெற்ற 10000 போருக்கு மேல் பங்குபற்றிய பகிஸ்கரிப்பு என்பன பற்றி விளக்கமாக விபரித்தார். மாணவர்பேரவையின் முடிவும் இளைஞர்பேரவையின் ஆரம்பமும், 1973களில் இளைஞர்பேரவையின் பிரிவும், புலோலி வங்கிக்கொள்ளை (ஈழவிடுதலை இயக்கம் ரெலோ அல்ல) பற்றியும் விபரித்தார். தொடர்ச்சியாக தான் கைது செய்யப்பட்டு 77 மார்கழியில் சிறையில் இருந்து வெளிவந்தபோது ஐயர், பிரபா சந்தித்தமை பற்றியும், இயக்கப்பெயர்மாற்றம், கொள்கை போன்றவற்றின் விளங்கங்களையும், வரலாற்றுக்குறிப்புகளையும், சேலத்தில் ஐயருடனான சந்திப்புப்பற்றியும் குறிப்பிட்டார். இங்கே சத்தியசீலனின் குறிப்பானது தொ.பேசியில் எடுக்கப்பட்டது.
போராட்டங்கள் என்றும் முடிந்துவிடுவதில்லை உதாரணமாக குறுடிஸ் இனத்தவர்களின் ஆயுதப்போராட்டம் அவர்களின் தலைவன் பிடிபட்டதும் அழிந்துவிடவில்லை. அது வேறுமுறையில் புதியவடிவம் பெற்று வெற்றியைக் கண்டுள்ளது. அதேபோல் பாலஸ்தீனப்போராட்டமும் அழிந்துவிடவில்லை. இன்று இலங்கையில் பாதிக்கப்படும் மாணவ, தொழிலாளவர்க்கப் போராட்டங்கள் தெற்கில் முனைப்புக் கொள்வதைக் காணலாம். எமது போராட்டத்தையும், போராட்டவடிவங்களையும் திரும்பிப்பார்த்தல் எமது புதியபோராட்டகளைச் செப்பனிடும் என்பதையும் அறிவுறித்தினார்.
இதனைத்தொடர்ந்து சபையின் கேள்விகள், கருத்துக்கள், பதில்கள் என்பன இடம்பெற்றது. இவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. தொடர்ந்து இடைவேளையின் போது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன ஏறக்குறைய வந்த அனைவருமே வாங்கினார்கள். இதனைத் தொடர்ந்து மாணவர்பேரவை ஸ்தாபகரும் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகர்த்தாவுமான சத்தியசீலன் அவர்கள் தனது போராட்ட அனுபவத்தையும் ஐயரின் புத்தகம் பற்றியும் பேசினார்.
மாணவர்பேரவையிள் தோற்றமும் தேவையும், அதுபற்றிய வெளிவந்த குறிப்புகளாக நெடுமாறன், குப்புசாமி, எஸ் சிவஞானம், தந்தைசெல்வாவின் அரசியல் பற்றி சபாரட்ணம் எழுதிய குறிப்புக்கள், பெரதேனியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞன் அமைப்பு, 1970 தரப்படுத்தலுக்கெதிரான போராட்டம், 23.11.1970 ல் நடைபெற்ற 10000 போருக்கு மேல் பங்குபற்றிய பகிஸ்கரிப்பு என்பன பற்றி விளக்கமாக விபரித்தார். மாணவர்பேரவையின் முடிவும் இளைஞர்பேரவையின் ஆரம்பமும், 1973களில் இளைஞர்பேரவையின் பிரிவும், புலோலி வங்கிக்கொள்ளை (ஈழவிடுதலை இயக்கம் ரெலோ அல்ல) பற்றியும் விபரித்தார். தொடர்ச்சியாக தான் கைது செய்யப்பட்டு 77 மார்கழியில் சிறையில் இருந்து வெளிவந்தபோது ஐயர், பிரபா சந்தித்தமை பற்றியும், இயக்கப்பெயர்மாற்றம், கொள்கை போன்றவற்றின் விளங்கங்களையும், வரலாற்றுக்குறிப்புகளையும், சேலத்தில் ஐயருடனான சந்திப்புப்பற்றியும் குறிப்பிட்டார். இங்கே சத்தியசீலனின் குறிப்பானது தொ.பேசியில் எடுக்கப்பட்டது.
பிரபாகரன் யார்? : பரம் ஜீ
கேள்விகள் பிறப்பது பதில்கள் வேண்டியே. அப்பதில்களே பாடங்களாகி மனிதவர்க்கத்தின் மனங்களில் தெளிவினை தருவதுடன் அடுத்த முயற்சிகளுக்கும்ஆதாரங்களாகவும் அவை அமைகின்றன. ஆனால், எவ்வளவுதான் நாம் முயன்றாலும்சில கேள்விகளுக்கான சரியான பதில்களை பெறுவதென்பது இயலாத காரியமாகவே இருந்துவிடுகிறது. அவ்வகையில், ஆயுதப்போராட்டம் பற்றிய விடைகள் தெரியாத பல கேள்விகளால், மாறாத சோகத்தில் ஆறாத மனக்காயங்கள் தரும் வேதனைகளில் தமிழ் இனம் இன்று அல்லல் படுகின்றது. காரணம், பரிசாக கொடுத்திருக்கும் பாரிய தமிழின அழிவுகள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் ஆரம்ப காலங்களில், சேகுவெரா இயக்கம் சிறீலங்கா அரசுக்கு எதிராக திட்டமிட்டிருந்த சதிப்போராட்டத்தை ஒடுக்க எண்ணி அதற்கு ஆதரவு கொடுத்த பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர் யுவதிகளை, முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்களை, சிறிமாவோவின் சிங்கள இராணுவம் கொன்றொழித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அங்கு நடந்திருந்தும் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தையே தேர்ந்தெடுத்தன் காரணம் என்ன? அறியாமையா? அல்லது தமிழர்க்கு விதியாக வந்த கேடு மதி கெடுத்து வந்ததா?
முப்பது வருடகாலங்களுக்கு மேலாக, பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் உடமைகளின் அழிவுகளுக்கும் மத்தியில் தமிழீழ விடுதலை வேட்கை கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகளை பாடுபட்டு ஒன்று திரட்டி பல கட்டுப்பாடுகள் கொண்ட தரைப்படை கடற்படை வான்படைகள் அமைத்து சிறீலங்கா இந்தியா என இரு நாட்டு அரச இராணுவங்களின் தாக்குதல்களை உறுதியாக நின்று சமாளித்து, சில சமர்களில்; வெற்றியும் பெற்றிருந்தும், இரண்டாயிரத்து ஒன்பது மே மாத காலப்பகுதிகளில் திடீர் என முள்ளி வாய்க்காலில் புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததன் காரணம் என்ன? என்பனவே தமிழர்களை இன்று ஆட்டிப் படைக்கும் கேள்விகளாகும்.
புலிகளின் பூச்சிய அரசியல் ஞானமும் போதிய சூழ்ச்சி தந்திரோபாயங்கள் இல்லாமையும் கண்மூடித்தனமான கொலைவெறி வீரமும்தான் காரணங்கள் என்கின்றனர் சிலர், ஆலோசகராக இருந்த காலம்சென்ற அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களது தவறான பரிந்துறைகள்தான் காரணம் என்கின்றனர் சிலர், முக்கிய பொறுப்புகளில் இருந்த கருணா, மாத்தயா, கிட்டு, பொட்டம்மான், போன்றவர்களின் தான்தோன்றி தனமான, தலைமைக்கு அடங்காத நம்பிக்கைத்துரோக செயற்பாடுகள்தான் காரணம் என்கின்றனர் இன்னும் சிலர், தலைவர் பிரபாகரனின் பாசிசவாத, அதாவது சர்வாதிகார, மற்றவர் கருத்துக்களை மதிக்காத, தீவிரவாத, தேசியவாத அரசியல் சித்தாந்தங்கள் தான் காரணங்கள் என்கின்றனர் பலர். இவ்வாறாக போராட்ட தோல்விக்கு பலரும் பல காரணங்களை சொல்வதால் நிச்சயமாக அவ்வியக்கத்தினுள் இருந்த மேற்சொன்ன அத்தனை குறைபாடுகளும்தான் தமிழர் அழிவுகளுக்கு காரணங்களாக இருந்திருக்க வேண்டும்.
ஆனாலும் அக்கேள்விகளுக்கான சரியான பதில்களை சரியான இடங்களில், அதாவது விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஆரம்ப காலம் முதல் இறுதிவரையில் நெருங்கிய தொடர்புடன் இருந்தவர்கள் யாரிடமாவது இருந்து அறிந்து கொள்வதுதான் சரியான வழி. அவற்றை தருபவர்களும் சுயநலமற்றவர்களாக, நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருப்பதும் மிக அவசியம். அப்படிப்பட்டவர்கள் யாரும் இருக்கின்றனரா? என அங்கலாய்த்து தாவித்திரியும் பரம் ஜியின் குரங்கு மனத்தின் இம்சைகளை ஓரளவிற்கு அடக்க உதவும் வகையில் வெளிவந்திருந்தது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினனாக பிரபாகரனுடன் இருந்து ஒன்றாக செயற்பட்ட ஜயர் என அழைக்கபடும் கணேசன் எழுதியிருந்த “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”; எனும் புத்தகம். அப்புத்தகம் கையில் கிடைத்த நாள் முதல் தனது முயற்சிகளில் என்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல பரம் ஜியும் ஆயுத விடுதலைப்போராட்ட ஆரம்பம் மற்றும் தோல்விகளுக்கான உண்மை காரணங்கள் தேடி அதனுள் மூழ்கினான்.
பதிவுகளில் முதல் சில பகுதிகளை கடந்து செல்லு முன்னமேயே, டொரோண்டோவில் நடைபெற்ற அப்புத்தகத்தின் அறிமுக விழாவில் பேசிய பலர் புலிகள் உட்பட்ட பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்தும் அப்புத்தகத்தின் ஆசிரியரான ஜயரைப்பற்றி உயர்வாக பேசி, பரம் ஜியின் மனதில் அப்போதிருந்த ஜயர் பற்றிய சந்தேகங்களை, அவர் நேர்மையானவர்தான என்பன போன்ற, தீர்த்திருந்தமையை உறுதி செய்யும் வகையில் அவரது எளிமையான எழுத்து நடையும், நடந்தவற்றை பற்றி அவர் எடுத்து சொன்ன பாணியும் காணப்பட்டன.
முக்கியமாக அன்று இளவயதில் அறியாப்பருவத்தில் விடுதலை வேட்கையின் உந்துதல்களால் தான் உட்பட இயக்கம் சார்ந்த பலரும் செய்த தவறுகள் குற்றங்கள் காரணமாக தமிழ் மக்கள் அனுபவித்த தீராத துயரங்களுக்காக இன்று இதய சுத்தியுடன் மன்னிப்பு கேட்பது போன்று, சுயவிமர்சனமாகவே பதிவுகள் அமைந்திருந்தன.
அது, அப்புத்தகத்தினதும் எழுதியவரினதும் நம்பகத்தன்மையை அதிகமாக்கியது. ஜயரின் பதிவுகளும் எமக்கு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஆயுதப் போராட்டத்தின் விபரங்கள் பற்றி முழுமையாக எடுத்து சொல்லாத போதிலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் அடித்தளத்தை அறிந்து கொள்ளும் வகையில், அவ்வியக்கத்தின் ஆரம்பகாலமான ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இருந்து எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதி காலம் வரையில் நடைபெற்ற பல முக்கிய விடயங்கள் பற்றி எடுத்து சொல்லுகின்றன.
இயக்கத்தில் ஒருவர் இருவராக சேர ஆரம்பித்து பின் சிறுகச்சிறுக பெருகி சேர்ந்தவர்கள் மத்தியில் ஈழவிடுதலை வேட்கையினை விவசாயப்பண்ணைகளில் வைத்து வளர்த்தெடுக்க முனைகையில் சந்தித்த மனித இயல்புகள் சார் பிரச்சனைகள், அவற்றால் உருவான தொல்லைகளை சமாளிக்க பட்டபாடுகள் என்பவை பற்றி விரிவாகவும், அக்காலங்களில் நடைபெற்ற பல வராலாற்று முக்கியத்துவங்கள் வாய்ந்த நிகழ்வுகள், இயக்கத்தின் முதல் கொலை, முதல் வங்கி கொள்ளை, முதல் அரசியற்படுகொலை, முதல் இராணுவ வெற்றி என பல முக்கிய விடயங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கின்றன.
புத்தகத்தை முடித்தபோது, விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிக்க நாவல் ஒன்றினை படித்தது போன்ற உணர்வினை கொடுத்தது. அதிலும் விடுதலைப்புலிகளின் முதல் இராணுவ ரீதியான தாக்குதலாக சொல்லப்படும் மடுப்பகுதி பண்ணையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு ஏப்ரல் மாதப்பகுதியில் நடை பெற்ற, ஒரு சாரதி உட்பட்ட நான்கு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலைகள், அதாவது பஸ்தியாம்பிள்ளை படுகொலை சம்பவம் பற்றி சொல்லுகையில் அதனை நேரே பார்த்தது அல்லது ஒரு விறுவிறுப்பான மர்ம திரைப்படத்தை பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றது.
இயக்கக்கட்டுப்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வந்த முகுந்தன் அல்லது உமா மகேஸ்வரன் ஊர்மிளா ஜோடியினரின் காதல் கொடுக்கல் வாங்கல் தொடர்புகள் பற்றி சொல்லும் போது விரசமற்ற விதத்தில் அதனை சொல்லியிருக்கின்றார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஜயர் வெளியேறி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உருவாகும் வரையில் நடைபெற்றவற்றின் பதிவுகள்வரையில் மட்டும் சொல்லப்பட்டுள்ள அப்புத்தக பதிவுகள் எண்பத்து மூன்று இனக்கலவர காலப்பகுதிகள் வரையில்கூட செல்லவில்லை என்பதுதான் கவலைக்கிடம்.
ஜயரின் பதிவுகளை வாசித்தபின் பரம் ஜி தேடிய பதில்கள் கிடைத்தனவா என எண்ணிப்பார்க்கையில் ஞாபகத்தில் வருவது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த “சிறு பிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது” என்னும் பழமொழி மட்டுமே.
சிறீலங்கா அரசுக்கு எதிராக என ஆரம்பிக்கப்பட்ட ஆயுத போராட்டம் திசை மாறி அதற்கு தேவையான மக்கள் சக்தியை மழுங்கச்செய்யும் வகையில் சிறுபிள்ளைதனமான, மன முதிர்ச்சி மற்றும் உணர்ச்சிக்கட்டுப்பாடுகள் குன்றிய போக்குகளான, சுயநலங்கள், பதவியாசைகள், போட்டிகள,; பொறாமைகள,; போட்டுகொடுத்தல்கள், காட்டி கொடுத்தல்கள், வஞ்சகங்கள், வால்பிடித்தல்கள், சந்தேகப்பயங்கள், போட்டி இயக்கங்களால் பாதகங்கள் உண்டாகாது பாதுகாத்தல் கருதி ஆரம்பித்த, மண்டையில் போடும் கலாசாரத்தால் தமிழர்களே தமிழர்களை பலிஎடுத்து தமிழினம் தற்கொலைக்கு ஒப்பாக சிறீலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட காரியங்களை இலகுவாக்கி கொடுத்திருந்தனர் என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத விடலைகளின் கைகளில் தமிழர்கள் தலைவிதி சிக்குப்பட்டமைதான் கவலைக்கிடம். பேரினவாத அரசியல் சக்திகளால் தூண்டிவிடப்பட்ட சிங்களவர்களின் கைகளில் காலத்திற்கு காலம் சித்திரவதைப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்ட தமது இனத்தின் அழிவுகள் கண்டு வெகுண்டெழுந்திருந்த தமிழ் இளைஞர்கள் மனங்களில் போராட்ட ஆசைகள் விதைத்து கைகளில் ஆயுதங்கள் கொடுத்து அரசியல் வஞ்சம் தீர்க்க எண்ணிய வெளிநாட்டு சக்தியின் வலையில் விழுந்ததன் பலனாக தமிழ் இனத்தின் இரத்தம் அந்த மண்ணில் முப்பது வருட காலங்களுக்கு மேலாக ஆறாகப்பெருகி ஓடியது.
ஓடிய இரத்த ஆறு இறுதியில் முள்ளிவாய்க்கால் கடலில் சங்கமித்து அமைதி கண்டது. வேண்டுமானால் அம்மண்ணில் நடைபெற்ற அனர்த்தங்கள் அனைத்திற்கும் காரணம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என எவரும் சுலபமாக பழியினை அவர்மீது போட்டுவிடலாம.; காரணம், விடுதலைப்போராட்டம் அவரது தலைமையின் தோல்வியே.
ஆனால் இன்று எல்லாம்முடிந்துவிட்ட நிலையை கடந்து இன்னும் ஒரு ஜம்பதுவருட காலங்களின்பின்பிரபாகரன் யார்? எனில், வெள்ளையரை எதிர்த்து மடிந்த தமிழ் நாட்டின் வீரபாண்டிய கட்டப்பொம்மன் மற்றும் வாஞ்சிநாதன் போல, சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஆயுதப்போரிட்டு தமிழீழ தனிநாடு அமைக்க புறப்பட்ட மாவீரன் பிரபாகரன் என்றுதான் சரித்திரம் சொல்லும்;. ஆனால் வீரம் என்ற பெயரில் நாம் தமிழர், வீர மறவர். தமிழ் உணர்வு கொம்புகள் என மார்தட்டி காடைத்தனங்களை பேச்சிலும் செயலிலும் காட்ட எத்தனிப்பவர்கள் பற்றி தமிழர்கள் இனி விழிப்புடன் இருத்தல் அவசியம்.
ஓவ்வொரு தமிழனும் வாசிக்கவேண்டிய புத்தகம் ஜயரின் “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”. டொரோன்ரோ தமிழர் வகை துறை நிலையம் அல்லது தொலைபேசி இலக்கம் 416-450-6833 றுடன் தொடர்பு கொண்டு பிரதிகளை பெற்று கொள்ளலாம். ஜயரின் பதிவுகளில் சொல்லப்பட்டுள்ள பேபி சுப்பிரமணியம்,
கணேஸ் வாத்தி, நாகராஜா, சந்ததியார், காலம் சென்ற திரு. தா. திருநாவுக்கரசு பா. உ. போன்றவர்களில் சிலர் காங்கேசன்துறையில் பரம் ஜியின் இளமைக்கால வாழ்க்கையில் மிக நெருங்கிய அறிமுகம் கொண்டிருந்தவர்கள். போராட்ட ஆரம்பகால நடவடிக்கைகள் பற்றி அறிந்திருந்தும் ஈடுபட்ட பலரின் தொடர்பிருந்தும்;
பரம் ஜி ஏன் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை என்பது பற்றி பின்பு.
பார்க்கலாம்.
பார்வைகள் தொடரும்
உங்கள் கருத்துகளுக்கு 416-230-1107
உங்கள் கருத்துகளுக்கு 416-230-1107
“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்…ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய « ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் » என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை « வரலாறு » என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”
விமர்சன ….கருத்தாடல்
இசிதோர் பெர்ணான்டோ
சஷீவன்
வாசுதேவன்
சத்தியசீலன்
அசோக் யோகன்மற்றும்
சத்தியசீலனோடு ஓர் உரையாடல்…
) தலைவர் ; தமிழ் மாணவர் பேரவை (
காலம்: 29.04.2012. ஞாயிறு.
பிற்பகல் 2. 30 மணி தொடக்கம் 8.00மணி
இடம்: SALLE POLONCEAU
25 , RUE POLONCEAU
75018 PARIS.
மெற்றோ: LA CHAPELLE
பாதை: place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU
அசை – சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் – பிரான்ஸ்
06 19 45 02 76
asai.marx@gmail.comசென்னையில் நூலைப் பெற்றுக்கொள்ள
கீழைக்காற்று புத்தகநிலையம், 10, ஒளலியா தெரு, எல்லீஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-2, விலை 130.
பிரித்தானியாவில் பெற்றுக்கொள்ள தொடர்புகள்:
inioru@gmail.com
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – லண்டன் விமர்சனக் கூட்டத்தில் சஷீவன்
நிகழ்விற்குத் தலைமை தாங்கியதனால், நூல் தொடர்பான எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆயினும், பேச்சாளர்களின் கருத்துக்களிடையே அவர்களை மறுத்தும் ஏற்றுக்கொண்டும் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். கட்டுரை என்ற வடிவத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அதற்கான தொடர்ச்சித்தன்மையையும் இப்பதிவில் எதிர்பார்க்க முடியாது. - சசீவன்
– மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தேரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்து நேரடியாக வந்து சேர்ந்த, கொடுக்கபப்ட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்குகிறார்கள். – கார்ல் மார்க்ஸ்
== பகுதி 1 ==
ஈழப்போராட்டம் – ஆயுதம் தாங்கிய ஈழப்போராட்டம் அண்ணளவாக 30 ஆண்டுகால தொடர்ச்சியாலானது. விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இயக்கங்களின் பங்களிப்புக்களும் ஏராளமான சிறிய இயக்கங்களின் பங்களிப்புக்களுமாக – மிகப்பெரிய பொருண்மையுடையது. ஒரு சில எழுத்துப்பிரதிகளைக் கொண்டு அதனை அளவிட்டுவிடவும் முடியாது. பல்வேறுபட்ட செயற்பாட்டாளர்கள் – எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாத சாதாரண மக்களுடைய விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட கருத்து வெளிப்பாடுகளின் தொகுப்பின் மூலமே – அதன் பொருண்மையான வடிவத்தை ஓரளவுக்கேனும் கற்பனை செய்து கொள்ளலாம். அமைப்பிற்கு வெளியேயிருந்தான பார்வைகளும் – அமைப்பை விட்டு வெளியேறியவர்களுடைய காய்தல் உவத்தலற்ற விமர்சனப் பாங்குமே வரலாற்றை ஓரளவிற்கேனும் முழுமைப்படுத்த எத்தனிக்கின்றது. கடந்த காலம் தொடர்பான மோகத்திற்கப்பாலிருந்து பதிவு செய்யப்படும் சம்பவங்கள் தனியே வரலாறாக எஞ்சிப்போவதில்லை. அவை, எதிர்காலத்திற்கான நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடியவையாகவும் – அவற்றிற்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன என்ற புரிதலிலிருந்தே இப்பிரதியை அணுக வேண்டியுள்ளது. எமக்கு முன்னைய தலைமுறையினருக்கு – போராட்டத்தை உருவாக்கியவர்களுக்கும் – பங்கு கொண்டவர்களுக்கும் – பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கும் இவை வெறும் சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், அதனை அறியாதவர்களுக்கும் அதன் பின்னைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கும் அவை வரலாறுகள். தமது வாழ்க்கைக்காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அடிப்படையான ஆதாரங்கள்.
ஈழப்போராட்ட வரலாற்றில் இயக்கங்களின் தோற்றம், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணப்பதிவுகள் என்று பார்த்தால் கீழ்வரும் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் (சி. புஸ்பராஜா), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர்), சுதந்திர வேட்கை (அடேல் பாலசிங்கம்), புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள் (நேசன்), புளொட்டில் நான் (சீலன்), தேசிய விடுதலைப்போராட்டம் – ஒரு மீளாய்வை நோக்கி (அன்னபூரணா), ஒரு போராளியின் டயறி (அலியார் மர்சூஃப்). இவை நான் ஆங்காங்கே வாசித்தவை. எனது ஞாபகப்பரப்பில் உள்ளவை. இவை தவிர உதிரிகளாக எழுதப்பட்ட ஏராளமான பிரதிகளும் இவ்வகைக்குள் வரக்கூடியன. இவற்றில் புஸ்பராஜனுடைய நூலும் கணேசன் ஐயரின் நூலுமே நூலுருவில் வெளிவந்திருக்கின்றன. 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் ஏராளமான போராளிகளின் அனுபவமுமாக மொத்தம் 10 இற்குக் குறைவான விடயங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை போராடிய இயக்கங்களின் எண்ணிக்கையை விடக் குறைவானவை என்பதுதான் சோகம். இவற்றில் கூட ஆரம்பகாலப்பதிவுகள் அல்லது ‘உள்வீட்டு விடயங்களை’ப் பதிவு செய்தவை என்று பார்த்தால் இன்னும் குறைவானவையே.
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் (சி. புஸ்பராஜா), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர்), சுதந்திர வேட்கை (அடேல் பாலசிங்கம்), புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள் (நேசன்), புளொட்டில் நான் (சீலன்), தேசிய விடுதலைப்போராட்டம் – ஒரு மீளாய்வை நோக்கி (அன்னபூரணா), ஒரு போராளியின் டயறி (அலியார் மர்சூஃப்). இவை நான் ஆங்காங்கே வாசித்தவை. எனது ஞாபகப்பரப்பில் உள்ளவை. இவை தவிர உதிரிகளாக எழுதப்பட்ட ஏராளமான பிரதிகளும் இவ்வகைக்குள் வரக்கூடியன. இவற்றில் புஸ்பராஜனுடைய நூலும் கணேசன் ஐயரின் நூலுமே நூலுருவில் வெளிவந்திருக்கின்றன. 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் ஏராளமான போராளிகளின் அனுபவமுமாக மொத்தம் 10 இற்குக் குறைவான விடயங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை போராடிய இயக்கங்களின் எண்ணிக்கையை விடக் குறைவானவை என்பதுதான் சோகம். இவற்றில் கூட ஆரம்பகாலப்பதிவுகள் அல்லது ‘உள்வீட்டு விடயங்களை’ப் பதிவு செய்தவை என்று பார்த்தால் இன்னும் குறைவானவையே.
இவை தவிர பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் அற்புதன் எழுதிய ‘துரையப்பா முதல் காமினி’ வரை என்ற தொடரும் மணியம் எழுதிக்கொண்டிருக்கும் ‘புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள்’ என்ற தொடரும் ‘வதைமுகாமில் நான்’ என்ற ரயாகரன் என்ற தொடரும் கூட முக்கியமான பதிவுகளென்பேன். இன்னும் ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோருடைய ‘முறிந்த பனை’ என்ற நூலும் அதனைத்தொடர்ந்த மனித உரிமை நோகிலிருந்து பதிவாக்கப்பட்ட அறிக்கைகளும் கூட பிறிதொரு தளத்தில் முக்கியமான பதிவுகளே. இதுதவிர புலிகளால் வெளியிடப்பட்ட ஏராளமான அனுபவக்குறிப்புக்கள், புனைவுகள் போன்றவை எவ்விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல. புலிகளால் உட்சுற்றுக்கு விடப்பட்ட ஏராளமான முக்கிய ஆவணங்களும் ஏனைய பிரதிகளும் பல இன்று அழிக்கபப்ட்டுவிட்டன. எஞ்சியவற்றை முறையாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய பொறுப்பு எம் சமூகத்திற்கு உண்டு. ஒரு சமூகம் கடந்து வந்த பாதையையும் அனுபவத்தையும் பின்னொருக்கால் நின்று தேட முடியாது.
இதே யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட ‘தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும்’ என்ற நூல் ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப்போராட்டங்கள் கருக்கொள்வதற்கு முன்னரும் கருக்கொண்டு தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்ட காலப்பகுதி வரைக்குமான பிறிதொரு மாற்று வரலாற்றை எழுதிச் செல்வதையும் அவதானிக்க வேண்டும். சாதியொழிப்புடன் கூடிய இடதுசாரி அரசியல் செயற்பாடுகளையும் அவற்றை முதன்மைப்படுத்திய போராட்டங்களையும் ஆவணப்படுத்திய மிக முக்கிய நூலாகக் கருத வேண்டும்.
இவை தவிர நாவல் வடிவில் சில விடயங்கள் புனைவுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்நாவல்கள் கூட சமூகத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியவையே. உதாரணமாக புதியதோர் உலகம் நாவலைப் படித்த போது எனக்கு 10 வயதிருக்கும். அப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் நீண்டகாலம் மறக்காமல் அலைக்கழிக்கபப்ட்டிருக்கின்றேன். இடையில் மடித்துக் கட்டப்பட்ட சாரமும், பெரும்பாலான பட்டன்களைத் திறந்து விட்டபடியான தோரணையும், தலைநிறைந்த கலைந்த கேசமும் சேர்ந்து உருவாக்கிய சிறுவயதுக் கதாநாயக படிமங்கள் – சிறுவயது முதல் தேடியலைந்த கதாநாயகர்கள் தோல்வியால் துவண்டு போவதை என்னால் எப்போதும் ஜீரணிக்க முடிவதில்லை. சீருடைகள் ஏதுமற்ற போராளிகள் கதாநாயகர்களாக எமது தலைமுறையை ஆகர்சித்திருப்பார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பட்டன்களைத்திறந்துவிட்ட கலைந்த முடியுடைய சாரக்கட்டுடன் உலாவந்த கதாநாயகர்கள் எம்மண்ணையும் மக்களையும் சிக்கிச் சின்னாபின்னமாக்கிச் சென்றுள்ளார்கள்.
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்நாவல்கள் கூட சமூகத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியவையே. உதாரணமாக புதியதோர் உலகம் நாவலைப் படித்த போது எனக்கு 10 வயதிருக்கும். அப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் நீண்டகாலம் மறக்காமல் அலைக்கழிக்கபப்ட்டிருக்கின்றேன். இடையில் மடித்துக் கட்டப்பட்ட சாரமும், பெரும்பாலான பட்டன்களைத் திறந்து விட்டபடியான தோரணையும், தலைநிறைந்த கலைந்த கேசமும் சேர்ந்து உருவாக்கிய சிறுவயதுக் கதாநாயக படிமங்கள் – சிறுவயது முதல் தேடியலைந்த கதாநாயகர்கள் தோல்வியால் துவண்டு போவதை என்னால் எப்போதும் ஜீரணிக்க முடிவதில்லை. சீருடைகள் ஏதுமற்ற போராளிகள் கதாநாயகர்களாக எமது தலைமுறையை ஆகர்சித்திருப்பார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பட்டன்களைத்திறந்துவிட்ட கலைந்த முடியுடைய சாரக்கட்டுடன் உலாவந்த கதாநாயகர்கள் எம்மண்ணையும் மக்களையும் சிக்கிச் சின்னாபின்னமாக்கிச் சென்றுள்ளார்கள்.
கணேசன் ஐயரால் எழுதப்பட்ட ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற நூலில் மேற்கூறிய பதிவுகளுக்கு மேலதிகமான தனித்துவமான அம்சங்கள் உண்டு. ஈழப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய விடுதலைப்புலிகளின் தோற்றம் தொடர்பான பதிவு என்பதும் அமைப்பு விட்டு வெளியேறி சுய விமர்சனத்துடன் கூடியதாக அமைந்திருப்பது பிரதான அம்சங்கள். இந்நூலைப்பற்றிய பார்வையை ஒரு சில சொற்கள் மூலமோ கட்டுரை மூலமோ தெளிவுபடுத்திவிட முடியாது. அச்சூழலில் புலிகளின் தோற்றம் தொடர்பாக அக்கால மனநிலையில் பதிவு செய்யும் அதேநேரம் புலிகள் அமைப்பை விட்டு விலகி அதன் அடிக்கட்டுமானம் தொடர்பான விமர்சனத்தையும் சமாந்தரமாகப் பதிவு செய்வதில் கணேசன் ஐயர் வெற்று பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். அதாவது, அக்காலப்பகுதிய்யில் – அக்காலச்சூழலில் நிகழ்ந்த சம்பவங்களை – அதன் உண்மைத்தன்மையுடன் பதிவு செய்வது மற்றும் அதன் பின்பான அச்சூழல் தொடர்பான விமர்சனம் என்ற ஒரு விடயங்களுக்கிடையிலான போராட்டமே இப்பிரதி என்று சுருக்கமாகச் சொல்லலாம். இவ்விரண்டு நோக்குநிலைகளுக்கிடையில் நூலாசிரியர் போராடியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனை நூலாசிரியரால் நிராகரிக்கவும் முடியவில்லை. அதே நேரம் போராட்டத்தில் அவரது பாத்திரத்தினாலான விளைவுகளையும் ஏற்றுக்க்கொள்ளவும் முடியாமல் பல இடங்களில் நூலாசிரியர் திணறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
== பகுதி 2 ==
பிரபாகரன் மீது முன்வைக்கப்படும் இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயங்கள் சார்ந்து நாம் சில விடயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது தலைமைப் பதவியின் மீதான பற்றுதலும் தனிநபர் வழிபாடும் என்ற விமர்சனம். சில ஆண்டுகளாக தானும் நண்பர்களும் கட்டி வளர்த்த இயக்கத்திற்கு புதிதாக வெளியில் இருந்து வந்த ஒருவரை தலைவராக்கிப் பார்க்கும் சந்தர்ப்பத்தைக் குறிப்பிடலாம். உமாமகேஸ்வரனே விடுதலைப்புலிகளின் முதலாவது தலைவர் என்ற விடயமும் – அச்சந்தர்ப்பம் ஏற்பட்ட சூழலும் முக்கியமாகக் கவனப்படுத்தப்பட வேண்டிய புள்ளிகள். இவ்விடயத்தை இன்னும் ஆழமாகப் பார்ப்போமேயானால் – தீவிர இராணுவப் பார்வையுடைய போராளி – தனது அனுபவம் சார்ந்த முடிவுகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததும் – அதன் தொடர்ச்சியில் தலைமைப் பொறுப்பை கையெலெடுப்பதும் நிகழ்கின்றதெனவே கருதவேண்டியுள்ளது. மத்தியகுழு – செயற்குழு தொடர்பான விடயங்களின் போது இயக்கத்தில் தனது பிடி தளர்கின்றதே என்பதைவிட – தனது சிந்தனை முறையின் பால் விடயங்கள் நகராதோ என்ற ஆற்றாமையின் வெளிப்பாடாகவே பல விடயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. உட்கட்சி ஜனநாயகம் என்ற நிலைப்பாடு – தனது தலைமைப்பதவிக்கு தீங்காக அமைந்துவிடும் என்பதிலும் பார்க்க தனது சிந்தனை முறையிலான நகர்வுப் பொறிமுறைக்குத் தீங்காக அமைந்துவிடும் என்ற மனநிலை மேவி நிற்பதாகவே பார்க்கின்றேன். கணேசன் ஐயர் தவிர்ந்த தற்போது உயிரோடிருக்கும் பிற போராளிகள் – தமது நோக்குநிலையில் இருந்து இவ்விடயத்தை எழுதும் போது இவ்விடயம் சார்ந்த மேலதிக தெளிவிற்கு வர முடியும்.
பிரபாகரன் தொடர்பான பிறிதொரு விமர்சனம் தொடர்பாகவும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். அதாவது, பிரபாகரனின் சிந்தனை முறை முற்றுமுழுதாகத் தூய இராணுவவாதச் சிந்தனையின்பாறபட்டது என்ற விமர்சனம். கணேச ஐயர் பல இடங்களில் வலியுறுத்திச் செல்லும் விடயமொன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முற்படும் ஆரம்ப காலப்பகுதியில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் இராணுவமாகவே விடுதலைப்புலிகளைக் கட்டியெழுப்பும் நோக்கம் பிரபாகரனுக்கு இருந்திருக்கின்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி அரசியல் அமைப்பாகவும் இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பாகவும் விடுதலைப்புலிகள் ராணுவ அணியாகவும் செயற்படும் என்ற எண்ணமே அவர் மனதில் இருந்திருக்கின்றது. இதனை நூலாசிரியர் பல இடங்களில் வலியுறுத்த முற்படுகின்றார். அதுமட்டுமன்றி, தமிழர் விடுதலைக்கூட்டணியீன் அரசியலை பிரபாகரன் அக்காலத்தில் ஏற்றுக் கொண்டுமிருந்தார். ஆக, ஆரம்ப காலங்களில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் தான் கண்ட போதாமையான அல்லது தமிழ்மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கான அமைப்பொன்று உள்ளது – ஆனால், அதனைப் பலப்படுத்துவதற்கான இராணுவ அமைப்பே இல்லை என்ற குறையே அவர் மனதில் இருந்திருக்கின்றது. அப்புள்ளியில் நின்றே யாரும் சிந்திக்கவில்லை – அதுவே தனது முதன்மைப் பணியென நினைத்திருக்கக்கூடும். இக்காரணங்களாலேயே அவரது தூய இராணுவதாகச் சிந்தனை முறை கட்டியமைக்கபபட்டிருக்கலாம். இதில் இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். 2002 இன் பின்பான வரலாற்றைக் கவனித்தால், விடுதலைப்புலிகள் – தமிழர் விடுதலைக்கூட்டணியை மையப்படுத்திய கூட்டமைப்பை தமது அரசியல் முன்னணியாக ஆக்கிக்கொண்ட சந்தர்ப்பத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அதாவது 72 இல் தான் கண்ட கனவை சரியாக 30 வருடங்களின் பின்னர் 2002 இல் நடைமுறைப்படுத்தியதை நாம் கவனப்படுத்த வேண்டியது அவசியமானது.
இவ்விடங்கள் நிச்சயமாக மேலும் மேலும் பேசப்பட வேண்டியது அவசியமானது. ஏனெனில் அண்மையில் டயான் ஜெயதிலக கொழும்பு டிலிகிராப் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை பிரபாகரனை ஹிட்லரின் வாரிசாக நிறுவுவதிலேயே கவனத்தைக் குவிக்கின்றது. அதுமட்டுமன்றி, அவர் தனது நிறுவலுக்கு கபீலாவில் பிரசுரமான ராகவனுடைய நேர்காணலொன்றையும்ம் கணேச ஐயருடைய இத்தொடரையும் ஆதாரமாக முன்வைக்கின்றார். இங்கே, உட்கட்சி ஜனநாயகம் – ஜனநாயகம் – மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடி வரும் ஒருவர் இதே விடயத்தைக் கூறுவதற்கும், இனப்படுகொலை என்று வர்ணிக்கப்படூம் ஒரு யுத்தத்தைச் சர்வதேச ரீதியாக அரசின் பிரதிநிதியாக நியாயப்படுத்திய ஒருவர் கூறுவதற்கும் நிச்சயம் வேறுபாடுண்டு.
பிரபாகரனை மையப்படுத்திய தமிழ் மக்கள் போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என்ற நிறுவலுக்கு தயான் ஜெயதிலக துணைக்கிழுக்கும் இருவர்கள் கணேச ஐயரும் ராகவனும். இதில் கணேச ஐயர் உடகட்சி ஜனநாயகம் – போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது என்ற புள்ளியில் நின்று நீண்ட காலம் இயங்கியவர். நான்கு வெவ்வேறு முக்கியமான இயக்கங்களின் (எல்.டி.டி.ஈ, புளொட், என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி) மத்திய குழு உறுப்பினராகச் செயற்பட்டவர். அவ்வாறே ராகவனும் இயக்கத்திற்குள் மிதவாதியாகக் கருதப்பட்டவர். பிளவுகளின் போது இருதரப்பினர் மீதும் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணியவர். பிளவுகளைச் சரிக்கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டவர். பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். இயக்க காலத்தின் பின்னரும் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இவ்விருவருக்கும் பிரபாகரன் தொடர்பாகவும் விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் முழு உரிமையும் உண்டு. இவ்விருவரின் கூற்றுக்களையும் – நிலைப்பாடுகளையும் அடித்தளமாகக் கொண்டு இனப்படுகொலையை நியாயப்படுத்திய அரசின் பிரதிநிதி போகின்ற போக்கில் பயன்படுத்திவிட்டுப் போக முடியாது. இவ்விருவரும் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்களை – தமிழ்மக்களின் எதிர்காலப் போராட்டங்களையும் எழுச்சிகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கோடு முன்வைக்கும் போது, அதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
== பகுதி 3 ==
ஜனநாயம் தொடர்பாக நாம் நீண்டகாலம் பேசி வருகின்றோம். ஜனநாயகமின்மையால் நாம் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும் – எதிர்காலச் சந்ததியாவது ஜனநாயகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தும் எமது உரையாடல்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், சில அடிப்படையான விடயங்களை மறந்து விடுகின்றோம். முதலாவது, இந்த ‘ஜனநாயகம்’ என்ற எண்ணக்கரு எதனைக் குறிக்கின்றது. எம்மை ஆளும் நிறுவனங்கள் – அரசு உட்பட – அவற்றின் ஜனநாயகம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது. ஜனநாயகம் என்பது வெறுமனே அரசியல் கோட்பாடோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாராரால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விடயமோ அல்ல. அதனை வெறுமனே கோட்பாடாக வரித்துக் கொண்டும் உரையாடல்கள் மூலமாகவும் அமுல்படுத்திவிட முடியாது. ஜனநாயகம் என்பது வாழ்வியல் நடைமுறையுடன் முக்கியமாகத் தொடர்புபட்டுள்ளது. அரசு அல்லது இயக்கங்கள் போன்றவற்றில் ஜனநாயகத்தைச் சடுதியாக ஏற்படுத்திவிட முடியாது. அதன் நடைமுறைச் சாத்தியப்படுத்தல்களை நாம் எம்மில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. இன்று, தமிழ் பேசும் சமூகங்களில் குடும்பம் என்ற நிறுவனம் சார்ந்து ஜனநாயகம் எவ்வகையில் நடைமுறையில் உள்ளது என்பதிலேயே பல்வேறு மக்கள் இணைந்து உருவாக்கும் நிறுவனத்தில் ஜனநாயகம் எந்தளவு தூரம் நடைமுறையில் இருக்கும் என்பது தங்கியுள்ளது. நாம் அன்றாடாம் ஊடாடும் பாடசாலைச் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கோயில் நிர்வாக சபை போன்றவற்றில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போது – இவை எல்லாம் அடங்கிய அரசு அமைப்பிலும் இயக்கங்கள் கட்சிகளிலும் ஜனநாயகம் நடைமுறையில் சாத்தியமாகும். தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த எத்தனிக்கின்ற ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த ஒவ்வொரு சமூக நிறுவனங்களிலிருந்தும் தொடங்க வேண்டிய பணியிது.
ஈழப்போராட்டத்தில் அமைப்பாகிய – நிறுவனமாகிய இயக்கங்களும் அதிலிருந்தான மறுத்தோடிகளுமாக ஏராளமான விடயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. புதியதோர் உலகம் என்ற கோவிந்தனின் நாவல், சமூகத்தின் மீது முகத்திலறைந்து கேட்ட முதல் பிரதியெனலாம். அதனைத் தொடர்ந்து இன்றுவரைக்கும் இவ்விவாதங்கள் ஓயாமல் துரத்திக் கொண்டேயிருக்கின்றது. ஒரு கட்டத்தில் மறுத்தோடிகள் என்ன்னும் மரபே தனகான அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டதையும் ஜனநாயகமின்மைகளுடன் இயங்கியதையும் கண்டுள்ளோம். அதிகார அமைப்பாக நிறுவனமயமாகிய அலகுகளுக்கெதிரான மறுத்தோடிகளது பாத்திரத்தை நாம் வரலாற்றில் எவ்விடத்தில் வைத்துப் பார்ப்பது என்ற தெளிவிற்கு வர வேண்டிய தவிர்க்க முடியாத தருணமிது. மிதவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் நிகழ்காலத்தில் ஒரேமாதிரியாகவே தோற்றம் காட்டுவார்கள். அவர்களை வரலாற்று ஓட்டத்தின் போது – நீண்டகாலச் செயற்பாடுகளின் பின்னணியில் வைத்தே வேறுபடுத்தி அறிய முடியும். ஏராளமான ஜனநாயகப் போராளிகள் நிறுவனமாகிய அதிகாரத்தின் சேவகர்களாகச் செயற்பட்டு – ஜனநாயகத்தின் தேவையை உணர்த்திக் கொண்டிருப்பதை சமகாலத்தில் கண்டுகொண்டிருக்கீன்றோம். இவ்விடத்தில் தான் நூலாசிரியர் வலியுறுத்தும் உட்கட்சி ஜனநாயகம் தொடர்பான விடயத்தைப் பொருத்திப் பார்க்க முடியும்.
ஒரு கட்டத்தில் கணேசன் ஐயர் தாம் செல்லும் பாதை தவறென்பதை உணர்ந்து கொள்கின்றார். அதற்கான மாற்றீடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அவரால் இயக்கத்திற்குள் முன்வைக்க முடியாத போதிலும் தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார். ஒரு கட்டத்தில் இயக்கத்தில் இருந்து வெளியேறிச் செல்கின்றார். அதன் அடுத்த கட்டமாக, தான் சரியெனக் கருதும் போராட்ட முன்னெடுப்புக்களில் ஈடுபடுகின்றார். இதன் தொடர்ச்சியிலேயே புளொட்டிலும் என்.எல்.எஃப்.ரி இலும் தீப்பொறியுடனுமான அவரது செயற்பாடுகள். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து மறுத்தோடுவதில் ஆரம்பித்த அவர் பயணம் இதர இயக்கங்களில் பங்களிப்பதிலும் அதிருப்தியுடன் விலகுவதிலும் முடிவடைகின்றது. கணேசன் ஐயர் இறுதிவரை போராட்டத்திற்கான தேவையை மறுதலிக்கவும் இல்லை – அதேநேரம் தொடர்ச்சியாக வெகுஜன மக்கள் இயக்கங்களின் தேவையை வலியுறுத்திக் கொண்டூம் இருந்திருக்கின்றார் என்பதை நாம் பதிவு செய்தே ஆகவேண்டியுள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களை அவர் ஈடுபட்ட எந்த இயக்கங்களிலும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இங்கே தான் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் – ஒரு சமூகம் வகிக்க வேண்டிய வகிபாகம் குறித்தும் எமது சிந்தனையைத் திசை திருப்ப வேண்டியுள்ளது. இயக்கங்களைக் குற்றம் சாட்டுவதுடன் எமது பணி முற்றுப்பெறவில்லை என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.
== பகுதி 4 ==
இடதுசாரியப் பாரம்பரிய அரசியல் தொடர்பாக இந்நூலாசிரியர் கணேசன் சில விமர்சனங்களை முன்வைக்கின்றார். அக்காலப்பகுதியில், இடதுசாரிப் பாரம்பரிய அரசியல் – ‘சிறுபான்மை தமிழர் மகாசபை’ மற்றும் ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ ஆகியவை சாதிய ஒழிப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருந்தன. இவ்விடயங்கள் சார்ந்து எவ்விடத்திலும் எக்குறிப்புக்களும் இல்லை. அதேநேரம், கணேச ஐயர் முன்வைக்கும் விமர்சனங்களைப் பார்ப்போமேயானால் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை என்பதும் தேசிய இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பதும். இடதுசாரிய அரசியல் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியாக தேசிய இன முரண்பாட்டை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை. தேசியம், தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன. இன ரீதியான முரண்பாடுகளை முதன்மையான முரண்பாடுகளாகக் கொள்ள முடியாது என்ற வாதத்தில் இருந்து மாறி, இன ரீதியான முரண்பாடுகளையும் கவனிக்கத்தான் வேண்டும் என்று கட்டத்திற்கு இடதுசாரிகள் வந்தபோது, நிலமை தலைகீழாக மாறிப்போயிருந்தது.
கொலைகளில் நல்ல கொலை / தீய கொலை என்ற பாகுபாடு எவ்வளவு அபத்தமானதோ, அதேபோன்று ஒடுக்குமுறைகளில் நல்ல ஒடுக்குமுறை / தீய ஒடுக்குமுறை என்ற வாதமும் அபத்தமானதே. நாம் ஒடுக்குமுறைகளை வகைப்படுத்தும் போதும், தரவரிசைப்படுத்தும் போதும் நிச்சயமாக ஒடுக்கப்படுபவர்கள் என்ற திரட்சியையும் – ஒடுக்கப்படுபவர்களுக்கு இருக்கக்கூடிய தார்மீக நியாயத்தையும் இழந்துவிடுவோம். இன ரீதியான ஒடுக்குமுறையோ / மத ரீதியான ஒடுக்குமுறையோ / சாதிய ரீதியான ஒடுக்குமுறையோ / வர்க்க ரீதியான ஒடுக்குமுறையோ / பால் ரீதியான ஒடுக்குமுறையோ அனைத்து ஒடுக்குமுறைகளும் சமாந்தரமாக எதிர்கொள்ளப்பட வேண்டியவை. அதைத்தான் அடையாள அரசியல் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அடையாள அரசியலின் தீமையான பக்கங்கள் குறித்து நாம் கவனப்படுத்தாமல் விட முடியாதுதான். அடையாள அரசியலின் நியாயங்களை தார்மீக ரீதியில் உணர்ந்து கொள்ளும் போது – அதன் தீமையான பக்கங்களிலிருந்து விலகிச்செல்ல முடியும். அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான திரட்சியை உருவாக்குவதே உண்மையான இடதுசாரிய அரசியலாக இருக்க முடியும். பிரதிநித்துவ அரசியலாகச் சுருங்கிப் போய், முதலாளித்துவ ஜனநாயக கட்சி அரசியலாக எஞ்சிப்போன இடதுசாரிய அரசியலே ஒடுக்கப்பட்டவர்களுடைய திரட்சியை அசாத்தியமாக்கியது. இடதுசாரிய அரசியல் வெகுஜன அரசியல் தளத்திற்கு அப்பால் நகரும் போது, அதுவும் இதர கட்சி அரசியல் போன்று எஞ்சிப்போகும் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
மேற்கூறிய காரணங்களே, ஒடுக்கப்பட்டவர்கள் இணைந்த முற்போக்கு அரசியலைச் சாத்தியமாக்க விடவில்லை. இன ஒடுக்குமுறையை உணர்ந்திருந்தால் – அதனை இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் முதலில் கையெலெடுக்க வேண்டும். அல்லாது போனால் மக்கள் சார்ந்து அரசியல் செய்ய அனுபவமில்லாதவர்கள் கைகளில் அவ்வொடுக்குமுறை சிக்கிக்கொள்ளும் என்ற ஏக்கத்தில் இருந்தே ஐயருடைய இடதுசாரிகள் தொடர்பான விமர்சனத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. உண்மையில் இதனை ஒரு விமர்சனமாகப் பார்க்க முடியாது. பிணங்களின் மேல் நின்று விரக்தியில் கூறும் கூற்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – லண்டனில் நிகழ்ந்த நூல் விமர்சனம் தொடர்பான குறிப்பு : ஐக்கிய முன்னணியின் ஆரம்பம்
இனியொரு வெளியீடாக உருவான “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற நூல் 10.03.2012 அன்று லண்டனில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில் பிரித்தானியாவைச் சேர்ந்த பல அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தமது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கலந்துகொண்டனர். முரண்பாடுகளுக்கு மத்தியிலான ஐக்கிய முன்னணி போன்ற ஒன்று கூடலில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட பலர் நூலை விமர்சனம் செய்தனர்.
பல்வேறு அரசியல் கருத்துக்களையும் கொண்ட ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் சக்த்திகளின் ஒன்று கூடல் போன்று இந்த நிகழ்வு அமைந்திருந்ததாக உரையின் பின்னர் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
விமர்சகர்களின் குறிப்பான கருத்துக்கள் சிலவற்றைப் கீழ்வரும் குறிப்புக்களில் காணலாம். அவர்களின் முழுமையான உரைகள் இனிவரும் காலங்களில் வெளிவரும்.
முதலில் நூலை விமர்சனம் செய்த புதிய திசைகள் அமைப்பைச் சார்ந்த மாசில் பாலன், விடுதலைப்புலிகள் அமைப்பின் உள் செயற்பாடுகளை நன்கு புரிந்துள்ள ஐயர் அவர்கள் அதன் உள்ளே காணப்பட்ட உள் முரண்பாடுகளை நன்கு விபரித்துள்ளதாகவும், குறிப்பாக அரசியல் கருத்து வேறுபாடுகள், தனி மனித ஆதிக்கம், அதனால் இயக்கத்தில் காணப்பட்ட மக்களிலிருந்து அந்நியமாகும் போக்குகள் என்பவற்றை அடையாளம் காண முடிந்ததாக குறிப்பிட்டார். அரசியல் தவறுகள் குறித்த தேடலில் நூலாசிரியர் ஐயரைத் தனிப்பட சந்தித்தாகக் கூறிய பாலன் எதிர்காலத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது தவறுகள் குறித்த விமர்சனத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றார்.
ஊடகவியல்லாளரும் விமர்சகருமான தயானந்தா உரையாற்றும் போது, விமர்சன நிகழ்விற்கு முன்னதாக ஐயரிடம் பேசியதாகவும் புஷ்பராஜா போன்றவர்களின் வரலாற்று நூலில் தவறான தகவல்கள் தரப்பட்டிருப்பதாகவும் அதனால் தனது நேரடி அனுபவத்தைப் பதிவுசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் ஐயர் குறிப்பிடதாகக் கூறினார்.
மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்ட இராணுவமாக அன்றி இராணுவத்தைப் பாதுகாப்பதற்காக மக்கள் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே போராட்டக் குழுக்கள் உருவானதாகவும் அதன் வெளிப்பாடாகவே தோல்வி வரை அழைத்துச் சென்றதாகவும் கூறினார். இடதுசாரிகளின் அரசியல் தவறுகளே போராட்டம் தவறாக வழி நடத்தப்பட்டமைக்குக் காரணம் என்று நூலாசிரியர் கருதுவதக அவர் குறிப்பிட்டார்.
பிரசாத் பேசும் போது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்த அல்பிரட் துரையப்பாவின் கொலை குறித்து நூலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி கொலைசெய்யப்பட்டதை நியாயப்படுத்தும் மனோபாவம் பின்னதாக நீண்ட பட்டியலாக விரிந்தபோது மக்கள் மௌனமாக இருந்தார்கள். இவ்வாறான நடவடிக்கைகள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவசியமானது என்ற கருத்துப் படிமம் மக்கள் மத்தியில் உளவியலாக உருவாக்கப்பட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் தொடர்ச்சி பல அழிவுகளை ஏற்படுத்தி இறுவரை அழிவிற்கு வித்திட்டது என்றார்.
நெதர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த மனித உரிமைச் செயற்பாட்டளாரான இந்திரன் சின்னையா அவர்கள் ஓர் போராட்ட அமைப்பினை கட்டி அமைத்து வழி நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை நூல் தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்ட அவர் போராட்டத்தின் தோல்விக்கு காரணம் அது சார்ந்திருந்த சமூகமா? அல்லது போராளிகளா? ஏன்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும் எனக் குறிப்;பிட்டார்.
ஜி.ரி.வி ஊடகவியலாளரும் கருத்தாளருமான தினேஷ் கருத்துக்களை முன்வைத்தபோது, நூலில் கூறப்பட்டுள்ள ஆரம்பகாலத் தவறுகளை அளவு கோலாக முன்வைத்து புலிகள் என்ற அமைப்பை விமர்சிக்க முடியாது என்றார். ஆரம்பகாலத்தில் அரசியலை நிராகரிக்கும் போக்கைக் கொண்டிருந்த பிரபாகரன் பின்னதாக அன்டன் பாலசிங்கத்தின் ஊடாக அரசியலை முன்வைத்தார் என்று குறிப்பிட்டார். தனித மனித கொலைக்கான காரணங்களை அக் காலகட்டத்தின் உணர்வுகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஒரு மனிதனின் வளர்ச்சி போன்றே புலிகள் இயக்கமும் வளர்ச்சியடைந்து தனக்கென ஒரு அரசியலைப் பிற்காலத்தில் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். புலிகள் தவறிழைத்தார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் செயற்பட்டார்கள் என்பது தான் எனக் குறிப்பிட்டார்.
நான் 17 வயதில் எனது பாடசாலையில் ஒரு அச்சமூட்டும் ரௌடியாக இருந்தேன். 21 வயதை அடைந்த போது நான் சந்தித்த அனுபவங்களும் உலகமும் என்னை மாற்றி அமைத்தன. பிரபாகரனும் பதினேழு வயதில் செயற்பட தொடங்குகிறார். அந்த வயது வேகம் உணர்ச்சிகள் இவற்றை வைத்துக் கொண்டு அவரது செயல்களை முடிவு கட்டக் கூடாது. படிப்படியாக(என்னைப் போல) அவர் திருந்திக் கொண்டு வந்திருப்பார்.
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் முன்னோடியும் ஐயர் பிரபாகரன் ஆகியோருக்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவருமான தமிழ் மாணவர் பேரவையின் தலைவரான சத்தியசீலன் பேசும் போது, ஐயரின் நூலில் கூறப்படவற்றில் 90 சதவீதத்திற்கும் மேலான உண்மைச் சம்பவங்களைக் கொண்ட்ருப்பதாகக் குறிப்பிட்டார். ஐயரை இரண்டுதடவைகள் சந்தித்ததாகக் குறிப்பிட்ட சத்திய சீலன், முதல் தடவை தமிழ்ப் புதிய புலிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரபாகரனோடு தன்னை வந்து சந்தித்தாகக் குறிப்பிட்டார்.அச்சந்திப்பின் போது தமிழ்ப் புதிய புலிகளின் இராணுவ ஒழுக்கம் குறித்த விதிகளைப் பிரபாகரன் வாசித்துக் காட்டிய வேளையில் ஐயர் அவருடன் வந்திருந்ததாகவும் குறிப்பிட்டர்.
பிரபாகரன் பல தடவைகள் தனிமைப்பட்ட போதும் அனைத்தையும் இழந்து ரெலோ இயக்கத்தோடு இணைந்துகொண்ட போதும், உறுதிமிக்க தலைவராகக் காணப்பட்டார் என்றார்.
இறுதியில் எழுத்தாளரும், அரசியல் சமூகச் செயற்பாட்டாளருமான காதர் உரை நிகழ்த்திய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததாகப் பலர் குறிப்பிட்டனர். நூல் குறித்த அவதூறுகளைப் பரப்பியவர்களை விமர்சித்த காதர், பல குறிப்பான போராட்ட சூழ் நிலைகளை சீனப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். இறுதியில் இராணுவ ஒழுக்கம் குறித்து செஞ்சேனையின் ஒழுங்கு விதிகள் குறித்துப் பேசிய காதர், “நாங்களும் ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறோம் அதனைச் செஞ்சேனையின் போராட்டத்தோடு ஒப்பு நோக்குங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். ஐயர் நூலில் தவறுகளுக்கான காரணங்களைத் தேடுவதாகக் குறிப்பிட்ட பின்னர் அவற்றைற்கான தீர்வை முனவைக்கவில்லை என்றார். தவறுகளுக்கான காரணம் குறித்தும் மக்கள் போராட்டம் என்றால் என்ன என்பது குறித்தும் மிகத் தெளிவான கருத்துக்களைக் காதர் முன்வைத்தார்.நாங்கள் தவறுகள் புரிந்திருக்கிறோம் அந்த தவறுகளை சுயவிமர்சன அடிப்படையில் ஏற்றுக் கொள்ள துணிச்சல் பெற்றிருக்கிறோம் என்பதை இந்த உலகுக்கு பிரகடனம் செய்யுங்கள். தவறுகளை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் செய்யாதவரை எமது போராட்டத்தை ஒரு அடி கூட இனி எம்மால் நகர்த்த முடியாது.
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – சில குறிப்புகளும் கருத்துக்களும் : அருண்மொழி வர்மன்
ஒரு புத்தகம் அது உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல். அது வெளிவரும், எழுதப்படும், வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் ஈழப்போராட்டம் மிகப்பெரியதோர் இனப்படுகொலையுடன் ராணுவ ரீதியாக முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற கணேசன் என்கின்ற, ஈழப்போராட்ட வரலாற்றில் ஐயர் என்று அறியப்பட்டவர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்கிற நூலை முக்கியமானதாகவே நான் உணர்கின்றேன். மிகப் பெரியதோர் அழிவிற்குப் பின்னரும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கையில், இன ரீதியிலான ஒடுக்கல் இன்னமும் அதிகரித்து வருவதாக அவதானிக்கப்படுகின்ற காலப்பகுதியில், தமிழ்த் தேசிய உணர்வு இன்னமும் கூர்மை அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்ற இந்நாட்காளில் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் அது முன்னெடுக்கப்பட்ட விதத்தையும் ராணுவ, அரசியல் ரீதியிலான அணுகுமுறைகளை சுய பரிசோதனை செய்வதற்கும், மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும் அதிகரித்தே இருக்கின்றது. மேற்குறித்த பார்வைகள் மற்றும் கூறுகள் தொடர்பான முழுமையான பிரக்ஞையுடன் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வையை இங்கே பதிவாக்குகின்றேன்.
இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகி பின்னர் இனியொருவின் முதலாவது அச்சு வடிவ வெளியாடாகி இருக்கின்ற இந்நூல் தொடர்பான இந்நிகழ்வினை தேடகம் ஒருங்கமைத்திருக்கின்றது. இனியொருவிற்கும், தேடகத்திற்கும் இந்த முயற்சிக்கு நன்றி சொல்லிக்கொள்ளுகின்ற அதேவேளை அவை இரண்டின் அரசியல் தொடர்பாக இருக்கின்ற விம்பத்தில் இருந்து விடுபட்டு இந்நூலில் சொல்லப்படுகின்ற காலப்பகுதியில் பிறந்தவன் என்கிற முறையில் எனது தலைமுறையின் பார்வையை இயன்றவரை இதில் பதிய முனைகின்றேன்.
இந்நூலில் 1972ல் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களைத் தொடங்கிய காலப்பகுதிகளில் இருந்து அதில் ஈடுபட்டு பின்னர் தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலும் ஆரம்பகால மத்திய குழு உறுப்பினர்களுல் ஒருவரான ஐயர் பின்னர் புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்தமை, பின்னர் புளொட் இயக்கத்தின் தோற்றம் வரையான காலப்பகுதிகளிலான தனது அனுபவங்களை பதிவாக்கியுள்ளார். இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் இயன்றவரை தான் சார்ந்திருந்த அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற போது, அந்தத் தவறுகளில் இருந்து தன்னை விடுவித்து பிறர் மீது பழி சுமத்துவதைத் தவிர்த்து அந்நாட்களில் மேற்குறித்த முடிவுகள் எடுத்தபோது அதிலிருந்த தன்து வகிபாகத்தையும், தனது நிலைப்பாட்டையும் ஒத்துக்கொண்டே ஐயர் எழுதிச்செல்லுகின்றார். அதே நேரம், புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 25 வருடங்களின் பின்னர் அன்றைய புலிகள் இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளாக எவை அமைந்திருந்தன, அவற்றை எவ்வெவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஐயருக்கின்ற சலுகை புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இருந்தவர்களுக்கு அதன் தலைமை உட்பட இருந்திருக்காது என்றே சொல்ல விரும்புகின்றேன்.
இதனை சிந்தனைக்கும் அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கும் இடையில் இருக்கின்ற நடைமுறைப்பிரச்சனைகள் சார்ந்தே இங்கே குறிப்பிடுகின்றேன் அதுவும் குறிப்பாக தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குகின்ற ஒரு குழுவினர் எதிர்கொள்ளக் கூடிய புற அழுத்தங்களின் மத்தியில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.
குறிப்பாக இந்த நூலிலும், இன்னும் நிறைய இடங்களிலும் பிரபாகரனின் தூய ராணுவ நோக்கு தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டுகின்றது. அதே நேரத்தில் வரலாற்றில் பிரபாகரனின் பாத்திரத்தை அணுக முற்படும்போது அன்றைய அரசியல் சமூக சூழல், அவர் எதற்காக போராட முன்வருகின்றார், தனது போராட்டத்தை அவர் ஆரம்பிக்கின்ற போது அதற்கான தேவை எப்படி இருந்து, என்ன தேவையாக இருந்தது என்று அவர் கருதினார், அவரைப் பாதித்த தலைமைகள் போன்ற காரணிகளையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கின்றது. அதன் தேவை கருதி தனது ஆரம்ப கால நேர்காணல்களில் பிரபாகரன் தெரிவித்த சில கருத்துக்களை அவதானிப்போம்,
1984 ல் சண்டே (இந்தியா) இதழில் வெளியான அனிதா பிரதாப்பிற்கு வெளியான நேர்காணலில்,
“இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா? “
என்கிற கேள்விக்கு
என்கிற கேள்விக்கு
“நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இன வெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒரு முறை சந்தித்த போது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள். அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்று கேட்கும்போதெல்லாம் எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள் இருந்து எம்மக்களை மீட்கவேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ளமுடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்” (மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – பக்கம் 254-255)
என்று பதிலளிக்கின்றார் பிரபாகரன். இதை ஒத்த கருத்துக்களையே இதே கருத்தையே பின்னர் 30/12/1985 ஃப்ரொன்ட்லைன் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும், பின்னர் 23/மார்ச்/1986 ல் வீக் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்துள்ளார்.
என்று பதிலளிக்கின்றார் பிரபாகரன். இதை ஒத்த கருத்துக்களையே இதே கருத்தையே பின்னர் 30/12/1985 ஃப்ரொன்ட்லைன் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும், பின்னர் 23/மார்ச்/1986 ல் வீக் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ்மக்கள் மீது இலங்கை அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட ஆயுத மற்றும் அரசியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்வதற்கு தமிழர்களுக்கென ஒரு ராணுவம் தேவை என்பதே பிரபாகரன் உள்ளிட்ட பலரின் கருத்தாக அந்நாட்களில் இருந்தது. இதனையே ஐயரும் குறிப்பிடுகின்றார்,
“பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க, தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை” (பக்கம் 62)
என்றும்
என்றும்
“பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக் கொள்வதே. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாம் போதுமானதாக எண்ணியிருந்தோம்” (பக்கம் 65)
என்றும் குறிப்பிடுகின்றார். தவிர இன்னோரிடத்தில்
என்றும் குறிப்பிடுகின்றார். தவிர இன்னோரிடத்தில்
“நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்திய குழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு வந்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும் புலிகள் இவற்றிற்கான ராணுவ அமைப்பு என்றும் முடிவிற்கு வருகின்றனர்” (பக்கம் 56).
இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட 77ல் நடக்கின்றது. எனவே புலிகள் ஆரம்பகாலத்தில் இருந்தே தம்மை ஒரு ராணுவக் குழுவினராகவே வளர்ந்து வந்தனர். ஏற்கனவே இருந்த தமிழர் விடுதலை கூட்டணியை தமக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாகவே அவர்கள் அன்று நம்பி இருந்தனர். அந்த அடிப்படையிலேயே தமிழ்ப் புதிய புலிகளின் முதலாவது அமைப்பு விதிகளும் தூய ராணுவ நோக்கிலேயே அமைந்திருந்தன. தமிழர்களுக்கென வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே முதன்மையான தேவை என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரன் அவ்வாறு கட்டியெழுப்பபப்படும் ராணுவம் ராணுவ ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுனும் இருக்கவேண்டும் என்று கருதினார். 1986ல் நியூஸ் வீக் இதழிற்காக தீபக் மஷூம்தாரிற்கு வழங்கிய நேர்கானலிலும் இந்தக் கருத்தையே பிரதிபலித்துள்ளார் பிரபாகரன். இந்தப் புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் பிரபாகரன் செலுத்திய ராணுவப் போக்குப் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றபோதும், அவற்றை மேற்குறித்த நிபந்தனைகளுடன் சேர்த்து ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.
அது போல அன்றைய சூழலில் ஐயர் உள்ளிட்ட இளைஞர்கள் தமது அரசியல் பாதையைத் தீர்மாணிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளையும் பார்ப்போம். 1970ல் லங்கா சம சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறீமாவோ தலைமையிலான சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைந்திருந்த காலப்பகுதியில் இனவாரியான தரப்படுத்தல், பௌத்த மதச்சார்பான அரச கொள்கை, சிங்களம் அரச கரும மொழி ஆக்கப்படல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இக்காலப்பகுதி பற்றி ஐயர் சொல்வதைப் பார்ப்போம்,
“இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துகளுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை காட்டவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” (பக்கம் 8)
இங்கே கருணாநிதி, தமிழரசுக்கட்சிகளை ஐயர் சுட்டிக்காட்டியிருப்பது இன்று நகைப்பிற்கு உரிய ஒன்றாகக் கருதப்படலாம் என்றாலும், அவர்களின் அன்றைய காலப்பகுதியிலான பங்களிப்புகளை அவர்களின் பின்னைய அரசியல்களைக் காரணங்காட்டி மறுத்துவிடமுடியாது. ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலப்பகுதியில் அதன் எல்லாப் பலவீனங்களையும் தாண்டி எவ்வாறு தமிழரசுக்கட்சி போன்றவற்றின் செயற்பாடுகள் மிகுந்த ஆதரவாக இருந்தன என்று அண்மையில் “தமிழர்களின் நாடு கடந்த அரசியல்” என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் செழியனும் குறிப்பிட்டிருந்தார்.
தவிர இக்காலப்பகுதி இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கம் தமிழர்கள் மீது இன ரீதியிலான ஒடுக்குதல்களை மீகத் தீவிரப்படுத்தியிருந்த, அதே நேரம் இடது சாரிக்கட்சிகள் இனப் பிரச்சனை பற்றிய கரிசனைகளை தமது நிகழ்சி நிரலில் இருந்து அகற்றியிருந்த காலம். இந்தச் சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற அரசியல் ரீதியான தலைமை அமையவில்லை என்றே கருதவேண்டும். புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் அதன் ஆளுமை செலுத்தியவராக இருந்த போதும் அதன் தலைவர் என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்ற போது அவர் உமா மகேஸ்வரனையே பிரேரிப்பதையும் இங்கே அவதானிக்கவேண்டும். பிரபாகரனைப் போலவே வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டமைக்கவேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தபோதும் ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், தம்மை விட அதிகம் தொடர்புகளைக் கொண்டிருந்தவரும் உமா மகேஸ்வரன் என்றும், ஏற்கனவே அரசியல் போராட்டங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் என்றும் ஐயர் குறிப்பிடுவதையும் இங்கே சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் உமா மகேஸ்வரனுக்குப் புலிகள் இயத்துடன் ஏற்பட்ட பிளவே பிரபாகரனை அதிகம் இறுக்கமானவராக்கியது என்று ஐயரும் (பக்கம் 211) குறிப்பிடுகின்றார். அது போல பின்னர் புலிகளில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதைக் காரணம் காட்டிப் புலிகளில் இருந்து சுந்தரம் போன்றோர் பிரிந்து செல்கின்ற போது அவ்வாறான குற்றச்சாற்றுகள் இயக்கத்தை இரண்டாக உடைக்கும் நோக்குடையவை என்றே பிரபாகரன் மறுக்கின்றார். அதன் பின்னரும் சுந்தரம் தலைமையில் சிலர் பிரிந்துசெல்கின்ற போதும் உடனடியாகவே உமா மகேஸ்வரனும் சுந்தரம் போன்றோருடன் இணைந்து கொள்வதுடன் அந்நிகழ்வு பற்றி ஐயர் தொடர்ந்து,
“ஊர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமா மகேஸ்வரனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களில் சுந்தரமும் ஒருவர். அவ்வேளையில் இருந்தே உமா மகேஸ்வரனுடன் சுந்தரத்துக்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்று எம்மில் பலருக்கிருந்த சந்தேகம் இப்போது உறுதியானது போலிருந்தது.
சுந்தரத்தின் அனுசரனையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமா மகேஸ்வரன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் (இங்கே அவர்கள் என்று ஐயர் குறிப்பிடுவது கண்ணன் மற்றும் சுந்தரத்தை – அருண்மொழிவர்மன்) எமக்குத் தெரிவிக்கின்றனர்” (பக்கம் 210).
சுந்தரத்தின் அனுசரனையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமா மகேஸ்வரன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் (இங்கே அவர்கள் என்று ஐயர் குறிப்பிடுவது கண்ணன் மற்றும் சுந்தரத்தை – அருண்மொழிவர்மன்) எமக்குத் தெரிவிக்கின்றனர்” (பக்கம் 210).
இதைத் தொடர்ந்து நடைபெற்ற PLOTE மத்திய குழு விவாதங்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தது போலவே ராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்தை உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் முன்வைப்பதுடன் உமா மகேஸ்வரன், சுந்தரம் போன்றோரால் பணத் தேவைகளை நிவர்த்தி செய்ய கொள்ளைகளில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. தவிர PLOTE இயக்கத்திலும் உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் அதிகம் செல்வாக்கு செலுத்தியதாகத் தாம் உணைர்ந்ததாகவும் ஐயர் இங்கே பதிவுசெய்கின்றார். அதாவது எந்தக் குற்றச்சாற்றுகளை முன்வைத்து புலிகள் இயக்கத்தை விட்டுப் பிரிந்து புளொட் இயக்கம் உருவாக்கப்படுகின்றதோ அதே செயற்திட்டங்களையும், அரசியலையுமே புளொட் இயக்கத்தினரும் தமது மிகத் தொடக்க கால மத்திய குழு விவாதங்களில் இருந்தே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகின்றது. தவிர சுந்தரம் முதலானோர் மீதான் தனது சந்தேகம் சரியானதுதான் என்பதில் பிரபாகரன் உறுதியடைந்திருக்கவும் முடியும்.
இவற்றை நான் இங்கே பதிவுசெய்வது புலிகளை முழுக்க பழி நீக்கம் செய்யவேண்டும் என்கிற முனைப்போடு அல்ல. புலிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அவர்களுக்காக நியாயங்களைப் பரிசீலனை செய்வதில்லை என்பதே எனது வாதம். இந்தப் புத்தகத்தில் புலிகள் மக்கள் அமைப்புகளை உருவாக்கவில்லை என்பதுவும், அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபடவில்லை என்பதுவும் இந்தப் புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கின்றது. அதே நேரம் 83ல் இருந்த அதே புலிகளை அமைப்பாகவே 2008 வரை இருந்த புலிகள் அமைப்பைப் பார்ப்பது ஏற்புடையதல்ல. 90களிற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிறைய அமைப்புகள் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்தன. எத்தனையோ நூலகங்கள், படிப்பகங்கள், மாணவர் அறிவியல் கழகம் போன்ற அமைப்புகள், இது தவிர நிறைய வெளியீடுகள் என்று பல்வேறு தளங்களிலும் அதன் பின்னர் புலிகளின் செயற்பாடுகள் இருந்தன. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka என்கிற Kristian Stokke எழுதிய ஆய்வறிக்கையினை இது பற்றிய முக்கியமான பதிவொன்றென்று குறிப்பிடவிரும்புகின்றேன்.
இங்கே எனது கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ அல்லது புலிகளைப் பாவ நீக்கம் செய்வதோ அல்லது பழியை பிறர் மீது சுமத்திச் செல்வதோ அல்ல. ஈழத்தில் மிக மோசமாக அடக்கப்பட்டிருக்கின்ற தமிழர்களின் தேசிய உரிமைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க, எமது கடந்த கால போராட்டங்களை சுய விமர்சனம் செய்யவும், மறு பரிசீலனை செய்யவும் வேண்டி இருக்கின்றது. ஆனால் மறு பரிசீலனை என்பது எல்லாத் தவறுகளையும் ஒரு தரப்பில் சுமத்தி விடுவதல்ல. இன்று பல்வேறு கட்டுரைகளிலும், விவாதங்களிலும் புலிகளை வெறும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதையும், அடையாள அரசியல் என்ற பெயரால் நிராகரிப்பதையும், பாசிஸ்டுகள் என்று கடந்து போவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலில் அரச பயங்கரவாதத்தையும் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்திற்குமான வேறு பாட்டை இவர்கள் உணர்ந்து இது போன்ற வாதங்களை முன்வைக்க வேண்டும். பாசிஸ்டுகள் என்று கூறும்போது எதனால் புலிகள் பாசிஸ்டுகள் என்று சொல்கிறோம் என்பதை முன்வைக்க வேண்டும். பாசிஸ்டுகள் என்ற வார்த்தையை பொதுவாக தம்மை அடையாளபடுத்துவதை விட தமக்கு எதிரானவர்களை களங்கம் கற்பிக்கவே பிரயோகிக்கின்றனர் என்கிற Samanth Power ன் கூற்றையே இங்கே குறிப்பிடவிரும்புகின்றேன். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினை பாசிஸ்டுகள் என்று குறிப்பிடுவதில் இருக்கின்ற அபத்தத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.
இங்கே என்னுடன் பேச அல்லது கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருக்கும் மற்றையவர்கள் அனேகம் வெவ்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர்கள், 90களின் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு வெளியேறியோர். அவர்களின் பார்வையிலிருந்து, 90 களின் பின்னர் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பின்னர் சில காரணம் ராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் வாழ்ந்த எனது பார்வை நிச்சயம் வேறுபட்டே இருக்கின்ற அதே வேளை, இந்தக் காலப்பகுதியில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் காவல்துறை, நீதி மன்றம், அரசியல் துறை, வைப்புழி என்று பல்வேறு நிர்வாக அலகுகளுடன் கூடிய நிகர் அரசாங்கமே நிகழ்ந்தது. புத்தகம் உள்ளடக்கும் காலப்பகுதியைத் தாண்டி இவற்றை நான் சுட்டிக் காட்டக் காரணம், புலிகள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவில்லை, அரசியலில் அக்கறை காட்டவில்லை என்று இந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டப்படுகின்ற போதும் அதன் பின்னர் தமது பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் செய்த திறமையான நிர்வாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை என்பதே. அதே நேரத்தில் புலிகளில் அரசியல் பிரிவினரைவிட ராணுவப் பிரிவினரே அதிகம் செல்வாக்குச் செலுத்தியவர்களாக இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அறிவுஜீவிகளுடன் புலிகள் இணைந்து செயற்பட விரும்பவில்லை, அவர்களின் கருத்துக்களை புலிகள் செவிமடுக்கவில்லை என்பதில் ஓரளவு உண்மை இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறிய அனேக அறிவு சீவிகள் புலிகள் மீதான தமது கசப்புணர்வினை தொடர்ந்து புலிகளை நிராகரிப்பதன் மூலமாகவே வெளிக்காட்டினர். மேற்கத்திய சட்டகங்களுக்குள் நின்று புலிகளை மதிப்பிடுவதும், அரச தரப்பு, புலிகள் தரப்பு வன்முறைகள் போன்றவற்றை ஒரே சட்டகத்தில் வைத்து மதிப்பிடுவதுமாகவே அவர்களின் செயற்பாடு அமைந்தது, அது போலவே புலிகள் தரப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற இவர்கள் ஒரு போது புலிகள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், அரச தரப்பு தவறுகளில் சில சமயங்களில் கள்ள மௌனம் சாதித்ததுடன், பல சமயங்களில் அது எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனவே நாம் அது பற்றிக் கூறவேண்டியதில்லை என்றும் விலகிக் கொண்டனர். புலிகள் மீதான காழ்ப்புணர்வினால் ஒட்டு மொத்த போராட்டத்திற்கான நியாயங்களையும் நிராகரிப்பதும் எதிர்ப்பதும் முறையாகாது.
நான் அறிந்து இதுவரை ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகளாக புதியதோர் உலகம், முறிந்த பனை, அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை, புஷ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் வானத்தைப் பிளந்த கதை, எல்லாளனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பு, ஐயரின் ஈழப் போராட்டத்தின் எனது பதிவுகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இவற்றிற்கிடையே சில முரண்கள் இருந்தாலும் இவை அனைத்துமே ஈழப்போராட்டத்தில் அக்கறை கொண்டோர் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்றே சொல்வேன். இவர்களிலும் இவர்கள் சார்ந்து நின்ற இயக்கங்களிலும் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் எல்லாருமே களமிறங்கிப் போராடியவர்கள். எனவே இவர்களின் அனுபவங்களும் இவர்கள் கூறும் வரலாறுகளும் முக்கியமானவை.
அதே நேரம், ஐயர் தொடர்ந்து PLOTE மற்றும் NLFT தொடர்பான தனது அனுபவங்களையும் பதிவாக்கவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக முன்வைக்கின்றேன். இன்றைய சூழலில் ஈழம் மற்றும் தமிழ்த் தேசியம் தொடர்பான வாசிப்புகளிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றேன்.
உதவிய புத்தகங்கள்
1. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன், இனியொரு வெளியீடு
2. மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – தோழமை பதிப்பகம்
3. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka –
குறிப்பு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் புத்தகத்தில் 1970 தேர்தல் பற்றிக் குறிப்பிடும்போது நவ சமாஜக் கட்சி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அன்று கூட்டணி வைத்திருந்தது லங்கா சமசமாஜக் கட்சி.
1. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன், இனியொரு வெளியீடு
2. மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – தோழமை பதிப்பகம்
3. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka –
குறிப்பு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் புத்தகத்தில் 1970 தேர்தல் பற்றிக் குறிப்பிடும்போது நவ சமாஜக் கட்சி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அன்று கூட்டணி வைத்திருந்தது லங்கா சமசமாஜக் கட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக