வியாழன், 13 ஜூலை, 2017

செல்லினம் தொழில்நுட்பம் திறன்பேசி மலேசியா உலகத்தமிழர் புலம்பெயர் திருத்தமிழ்

aathi tamil aathi1956@gmail.com

16/5/14
பெறுநர்: எனக்கு
செல்லினம் செயலியை ஐஓஎசு (IOS) மற்றும்
ஆன்டிரோய்டு (Android) மென்பொருள் தளங்களில்
வடிவமைத்தவர் நமது மலேசியத் தமிழரான
முத்து நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய வகை iOS 7 ஐ-போன்களிலும் தமிழ்
மொழியையையும் மற்ற இந்திய மொழிகளையும்
வடிவமைத்தவர் நமது முத்து நெடுமாறன்தான்
என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய தகவலாகும்.
ஐபோன்களின் தமிழ் மொழியும் இடம்
பெற்றுள்ளது குறித்து முத்து நெடுமாறன்
பின்வருமாறு கூறினார்:
“திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடு என்ற
முறையில் இது நமக்கெல்லாம் உற்சாகமூட்டக்கூடிய
ஒரு முன்னேற்றமாகும். தமிழ் 99 மற்றும்
முரசு அஞ்சல் விசைத் தட்டுக்களுடன், மிக அழகான
வடிவமைப்பில் தமிழ் எழுத்துக்கள் புதிய
ஐபோன்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தக்
கருவிகளில் தமிழைப் படிப்பதற்கும்,
எழுதுவதற்கும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும்
இருக்கின்றது.”
“உலகமெங்கும் உள்ள நமது தமிழ் பேசும் மக்கள் இந்த
அருமையான கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி
, தமிழைச் செல்பேசிகளிலும் தட்டைக்
கருவிகளிலும் அதிகமாகப் பயன்படுத்துவதோடு,
தமிழிலேயே தகவல்களையும், செய்திகளையும்,
உள்ளடக்கங்களையும் உருவாக்க வேண்டும்;
பரிமாற்றங்களும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்
கொள்ள விரும்புகின்றேன். அப்போதுதான், எதிர்வரும்
காலங்களில் இதுபோன்ற திறன்பேசிக் கருவிகளில்
தமிழின் பயன்பாடும், தமிழை உள்ளீடு செய்வதும்
மேலும் அதிக அளவில் வளர்ச்சி காணும்.
செல்லினம் மென்பொருளைப் பதிவிறக்கம்
செய்து பயனீட்டாளர்கள் இதுவரை செய்து வந்த
அனைத்து செயல்பாடுகளையும் இனி புதிய ஐ-
போன்களில் எந்தவித செயலிகளையும் பதிவிறக்கம்
செய்யாமலேயே நேரடியாகவே இனி பயன்படுத்த
முடியும் என்பதுதான் தற்பொழுது நிகழ்ந்துள்ள
புரட்சிகரமான மாற்றமாகும்; புதுமையான
முன்னேற்றமாகும்.
அதுமட்டுமல்லாது, இந்தப் புதிய வகை ஐ-போன்களில்
தமிழ் அகரமுதலியும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்வழி, தமிழில் பிழையின்றித்
தட்டச்சு செய்வதற்கு உதவியாகச் சொற்பட்டியும்
(predictive text) தானியங்கிப் பிழைதவிர்ப்பியும்
(autocorrect) இதில்
அடங்கியிருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க
வளர்ச்சி எனலாம்.

search நம் மொழிப்பற்றும் என்ன குறைச்சல் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக