|
மார். 26
| |||
அகநானூறு – அரிய செய்தி -47
தீக்கடை கோல்
புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை
ஞெலிகோற் சிறுதீ மாட்டி ஒலிதிரைக்
கடல்விளை அமிழ்தின் கணம்சால் உமணர்
சுனைகொள் தீம்நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
பாலை நிலத்தே – புலி கொன்று உண்டு கைவிட்டுப்போன பெரிய யானை ஊனை- ஆறலை கள்வர் தம் கோலில் கோத்து கொண்டு செல்வர்.உப்பினைக் கொண்டு செல்லும் உமணர் கூட்டம் தீக்கடை கோலால் உண்டாக்கிய சிறு தீயில் வாட்டி சுனை நீர் உலையில்போட்டு ஊன்சோறு ஆக்குவர்.
kalappal.blogspot.com சங்ககால இலக்கியம்
சிக்கிமுக்கி உமணர் அறிவியல் நெருப்பு உண்டாக்குதல் மற்றொரு குறிப்பு இலக்கியம் தொழில்நுட்பம்
தீக்கடைகோல் இடையன் சீழ்க்கை சிக்கிமுக்கி இலக்கியம் இடையர்
தீ கடையும் கோல்,சீட்டி அடித்தல்
இடைக்காடனார், அகநா. 274: 3 – 11
சிக்கிமுக்கி உமணர் அறிவியல் நெருப்பு உண்டாக்குதல் மற்றொரு குறிப்பு இலக்கியம் தொழில்நுட்பம்
|
மார். 26
| |||
257-யாமரப்பட்டை –யானை - கரடி - உணவு
பகைமிகு கவலைச் செல்நெறி காண்மார்
மிசை மரம் சேர்த்திய சுவைமுறி யாஅத்து
நார்அரை மருங்கின் நீர்வரப் பொளித்து
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்
துன்புறு தகுவன ஆங்கண் புன்கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ
வெள் அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயினானே
உறையூர் மருத்துவன் தாமோதரனார், அகம். 257 : 14 – 21
ஆறலை கள்வர் மிகுந்த கவர்த்த வழிகளில், பின்வரும் வழிப்போவார் தாம் செல்லுதற்குரிய வழி இதுவெனக் காணும் பொருட்டு, முன்செல்வார் யாமரத்தின் மேலே ஏணியைச்சார்த்தி விட்டுச் செல்வார். யானை, யாமரத்தின் அடிப் பகுதியில் நாரினை நீர் வருமாறு உரித்துச் சுவைத்துப் போட்ட சக்கையாகிய சிதைந்த மரப்பட்டைகள் , அவ்வழிவரும் கல்லா உப்பு வணிகர்களுக்குத் தீ மூட்டும் சுள்ளிகளாகப் பயன்படும்.துன்பம் மிகுந்த அவ்விடங்களில் இரவில் இரை பெற விரும்பிய கரடிக் குட்டிகள் சிறு தூறுகள் படர்ந்த புற்றின்கண், வெண்ணிறப் பாம்புகள் நெளியும் படியாகப் புற்றாஞ் சோற்றினை அகழ்ந்தெடுக்கும்.
|
மார். 26
| |||
அகநானூறு – அரிய செய்தி -94
பருவம் செய்த பானாட் கங்குல்
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்ப
கடைகோல் சிறுதீ அடைய மாட்டி
திண்கால் உறியன் பானையன் அதளன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்ப
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவிடு வீளை கடிதுசென்று இசைப்ப
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள்ளுடைக் குறுந்தீறு இரியப் போகும்
கார்காலப் பருவத்து நள்ளிரவில் திண்ணிய தாம்புக் கயிற்றினைக் கொண்ட உறியினையும் பானையையும் தோற்படுக்கையையும் கொண்டு, நுண்ணிய பலவாய மழைத்துளிகள் தனது காலின் ஒரு பக்கத்தே நனைக்க கோலினைக் காலுடன் சேர்த்தி நிற்கும் இடையன் செம்மறியாட்டின் கூட்டம் பாதுகாவலினைப் பெறுமாறு தீக்கடையும் கோலாலே கடைந்தெடுத்த சிறுதீயை விறகிற் சேர்த்து மிக்கு எரியுமாறு செய்தான்
பின்னர் வாயை மடித்து சீழ்க்கை ஒலி எழுப்ப, ஆட்டுக்குட்டியைக் கவரவந்த குள்ள நரி அஞ்சி ஓட..
அகநானூறு சங்ககால இலக்கியம்
களப்பாள் இணையம்
சிக்கிமுக்கி தீக்கடைகோல் கூரையில் செருகிவைத்தல்
ஒளவையார், புறநா. 315 : 4
|
மார். 26
| |||
தீக்கடை கோல்
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல
தீக்கடை கோல் பயன்படுத்தபடாத காலங்களில் வீட்டின் இறப்பில் செருகிவைக்கும் வழக்கம் சுட்டப்பட்டுள்ளது. புறநானூறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக