இராச்குமார் பழனிசாமி
மங்கல்யான் என்று பெயரிடப்பட்ட செவ்வாய்க்கலம்
வெற்றிகரமாக செவ்வாய்கோளின் சுற்றுப்பாதையில்
செலுத்தப்பட்டதற்கு 8 முக்கியமான
அறிவியலாளர்கள் காரணமாக அமைந்துள்ளனர். அதில்
மூன்று அறிவர்கள் மயில்சாமி அண்ணாதுரை,
அருணன், எம்,எஸ். பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழர்கள்.
மீதமுள்ளவர்கள் கேரளா, ஆந்திரா,
கர்நாடகாவை சேர்ந்தவர்கள். மொத்தத்தில்
தென்னிந்திய அறிவர்கள் மூலமாகத்தான் இந்த
செவ்வாய்க்கலன் வெற்றி பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, விண்வெளியில்
செலுத்தப்படும் எந்தவகையான கலன்களுக்கும்
தமிழிலோ வேறு தென்னிந்திய
மொழிகளிலோ பெயரிடுவதில்லை இந்திய அரசு.
இதை ஒரு கொள்கையாகவே வைத்து செயல்படுகிறது இந்திய
அரசு. வேலை செய்து வெற்றிகரமாக விண்ணில்
செலுத்துவது தமிழர் உள்ளிட்ட தென்னிந்திய
மக்கள். ஆனால் விண்வெளி ஓடத்திற்கு பெயர்
வைப்பது மட்டும் வடமொழியில். இது என்ன நியாயம்
என்று நாம் கேட்காத வரை நமக்கு மொழி சம
உரிமை கிடைக்கப் போவதில்லை.
மாநில முதல்வர்கள் தங்கள் மொழியிலும்
விண்வெளி ஓடங்களுக்கு பெயர்சூட்ட வேண்டும் என்ற
கோரிக்கையை வைக்க வேண்டும்.
ஒருமுறை தமிழிலும், இன்னொரு முறை தெலுங்கு,
கன்னடம், பெங்காலி போன்ற அனைத்து மொழிகளுக்கும்
ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் இந்திய
விண்வெளித்துறை. இந்தியை எல்லா இடங்களிலும்
திணிப்பது போலவே சமஸ்கிருத மொழியையும்
எல்லா இடங்களிலும் அரசு திட்டங்கள், செயல்கள்,
படைப்புகள் மூலமாக இந்திய
அரசு திணித்து வருகிறது. இத்தகைய
திணிப்பை எதிர்த்தும் தேசிய இனங்கள் குரல்
கொடுக்க வேண்டும். அடுத்து விண்ணில்
செலுத்தப்படும் இந்தியாவின் விண்கலம்
இந்தியாவின் மூத்த மொழியான தமிழில்
பெயரிடப்பட வேண்டும் என தமிழர்கள் நாம்
கோரிக்கை வைப்போம்.
வெற்றி பெற்ற செவ்வாய்க்கலன் குழுவில் பங்களித்த
மூன்று தமிழர்களுக்கும் நம் வாழ்த்துகள்!
10 மணிகளுக்கு முன்பு. · Chennai · பொது
வானியல் செயற்கைகோள் அறிவியல் சாதனை தமிழன்டா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக